அத்தியாயம் 52

 
Admin
(@ramya-devi)
Member Admin

“உள்ள வாடா” என்ற சிங்கன் தன் கையில் இருந்த பெண்ணவளின் இடையை யாரும் கவனிக்க வண்ணம் இலை போல கசக்கி எடுக்க அதிர்ந்துப் போனாள். மடிப்பு எடுத்து பின் பண்ண நேரம் இல்லாததால் இரண்டு மடிப்பு வைத்து அவசரமாக அள்ளி போட்டு இருந்தாள் தோளில். அது அவளின் இடையை முற்றிலும் மூடி இடது கையின் மணி கட்டுக்கு சற்று மேலே வரை மூடி இருக்க அது அவளின் கணவனுக்கு தோதாக போய் விட்டது போல...

யாரும் அறியா வண்ணம் அவளின் இடையில் தன் கையை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டே கதிரிடம் பேசினான்.

“விடுங்க ங்க” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மும்மரமாக கதிரிடம் பேசிக் கொண்டு இருந்தான். ஆனால் அவனது ஒரு கை மட்டும் அவளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது.

கணவனின் தொடுகையில் அவள் நெளிய,

“ப்ச் நெளிஞ்சு காட்டி குடுக்காதடி” என்று அவளின் காதோரம் சொன்னவன் மீண்டும் அவளின் இடுப்பில் கையை அழுத்தமாக ஓட்டி நறுக்கென்று கிள்ளியும் வைத்தான். போததற்கு அவனது ஒரு கால் பின் பக்கமாய் வளைந்து அவளின் பின் பக்க சேலையை லேசாக தூக்கி அவளின் கணுக்காலை உரசி எடுக்க நிலை தடுமாறிப் போனாள் பெண்ணவள்.

“இதென்ன இப்படி எல்லாம்... ப்ச் விடுங்கங்க” என்று குரலே வராமல் அவனிடம் மல்லுக்கு நின்றாள் இழை.

“டு மினிட்ஸ்டி இவனை அனுப்பிட்டு வந்திடுறேன்” என்றான்.

“எதுக்கு வரணும்?” என்று அவள் புரியாமல் அவனை பார்க்க,

“அதுக்கு தான்” என்று சொல்லி அவன் கண்ணடிக்க அதிர்ந்துப் போனாள்.

“எத மறுபடியுமா?” என்று அலறியவள் அவனது கையை தட்டி விட்டு அடுப்படிக்கு ஓடினாள்.

“ஆத்தாடி என்ன இது இவரு இப்படி மோசமா பண்றாரு” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டவளின் முகம் அப்பட்டமாய் சிவந்து போனது.

இருவருக்குள்ளும் ஒரு இணக்கம் மெல்ல மெல்ல மலர்ந்தது... அவளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை ராசசிங்கன். ஆனால் அவளே அவனுக்கு எதெல்லாம் பிடிக்காதோ அதையெல்லாம் கடுகளவு கூட செய்ய விரும்பவில்லை.

குறிப்பாக இவள் எங்காவது வெளியே சென்றால் அவளின் வீட்டு ஆட்களை சந்திக்க நேரிடும். ஆனால் ஒரே ஒரு கணம் அவர்களை பார்பதோடு சரி. அதன் பிறகு அவர்கள் இருக்கும் பக்கம் கூட அவளின் தலை திரும்பாது.

அவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாள் ஏந்திழையாள். இவள் லவலேசாக சிங்கனின் கட்டுப்பாட்டை மீறி வெளியே சென்றால் கூட அவள் வீட்டு ஆட்களின் நிலை கவலை கிடமாகி விடும். எனவே அவ்வளவு கவனமாக இருப்பாள்.

ஆனால் அவளது வீட்டி இருப்பவரால் அப்படி இருக்க இயலாதே. இவளை வெளியே பாத்து விட்டு, அவளை நெருங்கி, தொட்டு, தடவி விட்டு, பாசத்தோடு அணைத்துக் கொள்ள துடிக்கும் தவிப்புகள் ஏராளம்.

ஆனால் அதற்கு ஏந்திழையாள் இடம் கொடுக்கவே இல்லையே.. பிறகு எங்கிருந்து அவர்களின் தவிப்பு குறையும்.

“கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நடந்துக்குறதை பாரேன். அது சரி அவ வாழ்ந்துக்கிட்டு இருக்கிற பவுசுக்கு நம்மளை எல்லாம் திரும்பி பார்ப்பாளா அந்த மகாராணி” என்று சின்ன அத்தை சொல்ல,

“அப்படி சொல்லாதடி.. அவ நமக்காக தான் ஒதுங்கி போறா” என்று பெரிய அத்தை சொன்னார்.

“அதெல்லாம் சரி தான். ஆனா இங்க தான் யாருமே இல்லையே. அப்புறம் என்னவாம். என்னவோ மூணாவது மனுசங்க மாதிரி எப்படி ஒதுங்கி போறா பாரு. அதை தான் என்னால தாங்கிக்கவே முடியல க்கா. நம்ம பார்த்து வளர்த்த பிள்ளை. நம்ம கைக்குல்லையே இருந்தவ... இன்னைக்கு அவக்கூட ஒரு சொல்லு பேச முடியாம பேச்சே அந்த ஆதங்கத்துல கொட்டிட்டேன்” என்றான் கலங்கிய கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டே.

அவரின் கையை ஆறுதலாக பற்றிக் கொண்ட தேவகி,

“அண்ணி அவ என்ன சூழ்நிலையில இருக்காளோ... இல்லன்னா நம்பலை பார்த்தும் பாராம போவாளா” என்று சொல்ல,

“தேவகி சொன்னது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை சின்ன அண்ணி... அவ எங்க இருந்தாலும் நம்ம பொண்ணு.. உங்க பொண்ணு. நம்மளை விலக்கி நிறுத்தி அவளுக்கு சிந்திக்க தெரியாது” என்று பெரியம்மா சொல்ல சின்ன அத்தையும் ஆமோதித்தார்.

“எப்படியாவது அந்த ராசசிங்கன் கிட்ட இருந்து நம்ம மகளை மீட்டிடனும்” என்று நால்வரும் சேர்ந்து ஆலோசனை செய்து அதற்கான வேலையில் ஈடுபட்டார்கள்.

பாட்டிகள் இருவரும் அவளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டு இருக்க இங்க தந்தைமார்களோ எப்படி புலி வாயில் சிக்கிய மானை மீட்பது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருந்தார்கள்.

“அந்த பசி கொண்ட புலியை வீழ்த்த முதல்ல அந்த எடுபிடி கதிரை முதல்ல வீழ்த்தணும்” என்று சுந்தரம் சொல்ல,

அதை இரண்டு மாமனுங்களும் ஆமோதித்தார்கள்.

“பெரிய மச்சான் நீங்க ஓகே சொல்லுங்க. அந்த கதிரை ஒட்டு மொத்தமா இல்லாம செய்துடலாம்” என்று பெரிய மாமா ஆவேசம் கொண்டார்.

கண்ணனோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தார். “என்ன மச்சான் அமைதியா இருக்கீங்க... அண்ணன் சொன்னது தான் எனக்கும் சரின்னு படுத்து” என்று சின்ன மாமா சொல்ல,

சுந்தரம் யோசனையாக தன் அண்ணன் கண்ணனை பார்த்தார்.

“அண்ணா” என்று அவரின் சிந்தனையை கலைத்தார்.

“ம்ம்ம்” என்ற கண்ணன், “அப்படியே செய்திடுங்க” என்றார். சுந்தரம் மாமனுங்க இருவருக்கும் கண்ணை மூடி சம்மதம் கொடுக்க,

இந்த பக்கம் தமையன்மார்களோ ராசசிங்கனை தொழில் ரீதியாக அவனை வீழ்த்த எல்லா ஏற்பாடும் செய்துக் கொண்டு இருந்தார்கள்.

அதை வேல்முருகன் கைவிடுமாறு சொல்ல அதை யாரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. இதற்கு துணை போனது சின்ன தாத்தா... சின்ன தாத்தா தலைமையில் ஏந்திழையாளின் தமையன்மார்களும் அத்தை பிள்ளைகளும் செயல்பட ஆரம்பித்தார்கள்.

ஆளாளுக்கு பிரிஞ்சி நின்று ராசசிங்கனை வீழ்த்த தருணம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இது எதுவும் தெரியாத ஏந்திழையாள் ராசசிங்கனுடன் மனம் ஒன்றி வாழத் தொடங்கினாள். ஆனாலும் பிறந்த வீட்டு பாசம் இல்லாமல் இல்லை.

அது அவளின் உடல் மெலிவிலே நன்கு தெரிந்தது. அங்கு நேரத்துக்கு ஊட்டி விட அன்னைமார்களும், செல்லம் கொஞ்சி மடியில் படுக்க அத்தைமார்களும், ஓடியாடி விளையாட அண்ணன், அக்கா, தங்கைமார்களும் வம்பிழுக்க அத்தை மகன்களும் என வீடே நிறைந்துப் போய் இருக்க இங்கு இவள் மட்டுமே... பல நேரம் மூச்சு முட்டிப் போகும் தனிமை.

அணைத்து ஆறுதல் கூற தாத்தா பாட்டி இல்லாமல் ஒற்றையில் வாடி நிற்கிறாள். வேலைக்காரர்களை தவிர வேறு யாரும் மருந்துக்கும் இல்லை. மன உணர்வுகளை கொட்டி கவிழ்க்க எந்த சொந்தமும் இல்லை.

இருக்கவே இருக்கிறான் ஒருவன். ஆனால் அவனுக்கு இவளுடைய கதைகளை எல்லாம் கேட்க நேரமே இல்லை. இருந்தாலும் அவன் கேட்டுக்க மாட்டான் எனபது வேறு கதை.

Loading spinner

Quote
Topic starter Posted : April 16, 2026 9:59 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top