Notifications
Clear all

அத்தியாயம் 10

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்னப்பா எதுவும் பேசுனியா?” மெய்யப்பன் தன் மூத்த மகன் பொன்னனிடம் போனில் கேட்டார்.

“எங்கய்யா கேட்க.. முதல்ல கதிரவன் என்னை பேசவே விடலயே.. கேள்வி மேல கேள்வி கேட்டு என்னையவே தலை குனிய வச்சுட்டான். இந்த ட்வல்ஸ் பஸ் விசயத்துல.. அதுவும் நாமலே கொண்டு போய் விடணும்னு சொன்னவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சுட்டான். இதுல நான் எங்க இருந்து கேட்க..” என்றார் பெருமூச்சு விட்டு.

“சரி விடு.. குடோனுக்கு போவாப்ல ல்ல. அப்போ தம்பியை விட்டு கேட்க சொல்லிகிறேன்” என்றார் பெரியவர்.

“ப்பா எனக்கு தெரிஞ்சு இந்த விசயத்தை அவன் கிட்ட கேக்காம இருக்குறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது..”

“என்ன பொன்னா இப்படி சொல்லிட்ட”

“இல்லப்பா எனக்கு என்னவோ தம்பி காரணம் இல்லாம எதையும் செய்ய மாட்டான். அதுவும் தங்கச்சி கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த மாதிரி ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து இருக்கான்னா அதுல இருக்குற ரிஸ்க் எதுவும் தெரியாம செய்ய அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்லையே.. பத்து வயசுலையே வீட்டோட நல்லது கெட்டதை பார்த்து பக்குவமா கத்துக்கிட்டவன். அதனால அவனை கேள்வி கேட்டு தலை குனிய வைக்க என்னால முடியாதுப்பா” என்றார்.

“உன்னாலையே முடியலன்னா என்னால மட்டும் முடியுமா என் அய்யாவை கேள்வி கேட்டு தலை குனிய வைக்க” பெருமூச்சு விட்டவர்,

“ஆனா இந்த விசயத்தை இப்படியே விட முடியது பொன்னா” தளர்ந்துப் போனார் மெய்யப்பன்.

“இதுக்கு என்ன தான் ப்பா பண்ண முடியும்? தம்பி போய் கேட்டான்னா கதிரவன் வேற மாதிரி எடுத்துக்கிட்டா என்ன பண்ண முடியும் சொல்லுங்க?” கவலை பட்டார் கதிரவனின் அப்பா.

“ஒன்னும் சொல்றதுக்கு இல்ல பொன்னா.. பேசாம ரேவதியை கேட்க சொல்லவா?”

“வேணாம் ப்பா.. இப்போதைக்கு கதிரவன் கிட்ட எதுவும் பேசவேண்டாம்.. அவனை அவன் போக்குல விடுவோம். ஆற விட்டு பேசிக்கலாம்” என்று முடித்து விட்டார் பொன்னன். “சரிப்பா” என்று அவரின் தந்தையும் போனை வைத்து விட்டார்.

டெப்போவில் இந்த பஸ் பிரச்சனையை தீர்த்த பிறகு இன்னொரு போன் கால் வர, எடுத்து பேசியவனுக்கு ஏகத்துக்கும் கடுப்பு வந்தது.

“ரெண்டு நாள் தான் இல்ல.. ஆனா அதுக்குள்ள ஏகப்பட்ட குளறுபடி பண்ணி வச்சு இருக்காங்க” கடுப்படித்துக் கொண்டவன்,

“ப்பா குடோன்ல ப்ராப்ளம் நான் அங்க போறேன்” என்று கிளம்பி விட்டான் ஜீப்பில்.

புயலாய் கிளம்பி செல்லும் மகனை கண்ட பொன்னனுக்கு நெஞ்சில் சின்னதாய் ஒரு வலி.. எப்பொழுதும் வீட்டின் மூத்த ஆண் மகனாய் எல்லோரிடமும் ஒன்றாக மகிழ்ச்சியாக வளம் வந்த மகனை சிறு வயதிலே தொலைத்து விட்டோமே என்று கவலை கொண்டார்.

அவன் இறுகிப் போனதற்கான காரணம் அறிந்தவர் ஆயிற்றே.. அதிலிருந்து இன்னும் அவன் மீளவே இல்லை. பச்சை மரத்தில் அடித்த ஆணியாய் ஆகிப் போனது அவனது உள்ளம்.

இதோ இப்பொழுது பெரிய விருட்சமாய் வளர்ந்து உயர்ந்து இறுகி நிற்கிறான். அந்த ஆணியை பிடுங்க ஒருவராலும் முடியவில்லை. முயன்ற பொழுது யாரையும் அருகில் விடவில்லை.

“இது என் காயம் நான் பார்த்துக்குறேன்” என்று எல்லோரையும் தள்ளியே நிறுத்தி விட்டான். முற்றிலும் இறுகி போய் இருக்கிறான் அவனுக்குள். அந்த இறுக்கத்தை ஒருவராலும் தளர்த்த முடியவில்லை. முயற்சி செய்ய கூட அவன் அனுமதிக்கவில்லை.

அதை எல்லாம் எண்ணி பெருமூச்சு விட்டவர் வேலையில் கவனமானார்.

இங்கே தோட்டத்திற்கு வந்த மேய்யப்பனுக்கும் தன் பேரனை பற்றிய சிந்தனை தான்.

ஜீப்பில் வேகமாய் சென்று கொண்டு இருந்த கதிரவனுக்கு ஏகத்துக்கும் கடுப்பு வந்தது..

தலைமுறை தலைமுறையாக ட்ரான்ஸ்போர்ட் பிசினெஸ் செய்துக் கொண்டு இருக்கிறார்கள் கதிரவனின் குடும்பத்தார்கள்.

முதல் முதலாக எப்பொழுது ப்ரைவேட் பஸ்கள் விடப்பட்டதோ அப்போதே இவர்கள் நிறுவனமும் தொடங்கப்பட்டு விட்டது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்டது.

அப்பொழுது எல்லாம் ஒரே அரசு  பேருந்து மட்டும் தான் ஊருக்குள் வந்து செல்லும். மக்கள் திண்டாடி தவித்துப் போன பொழுது இவர்களின் பேருந்து ஊருக்குள் வர, மக்களுக்கு ஏக கொண்டாட்டமானது. அதுவும் அதிலிருக்கும் நடத்துனர் ஓட்டுனர் எல்லாமே அந்த அந்த ஊரை சேர்ந்தவர்களாகவே அதிகம் இருப்பார்கள். மிதமான வேகம் தான். எந்த தவறும் பேருந்துக்குள் நடந்தது இல்லை. அதில் கவனமாக இருப்பார்கள் நடத்துனர். அது  இப்பொழுது வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இப்பொழுது பல பேருந்துகள் வந்தாலும் இந்த கதிரவன் பஸ்ஸுக்கு இன்று வரை பொது மக்களிடம் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.

சுற்று வட்டாரத்திலே கதிரவன் பஸ் செர்வீஸ் தான் டாப்பில் இருக்கிறது. மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கொண்டு உள்ளது. ஊருக்குள் போய் வரும் பல பேருந்துகளை தவிர்த்து டூரிஸ்ட், கல்யாண வீட்டுக்கு, என பல பேருந்துகள் எப்பொழுதுமே தயார் நிலையில் இருக்கும்.

பல ஊருக்கு செல்லும் பேருந்துகள் எப்படியும் ஒரு ஐந்து ஆறு பேருந்துகளாவது பேருந்து முனையத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வராமல் போகாது.. 

அந்த அளவுக்கு அந்த சுற்று வட்டாரத்தில் இவர்களின் பேருந்து உலா வந்துக் கொண்டு இருக்கிறது.

இதை இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டு இருக்கிறான் கதிரவன். ஆம்னி பஸ்களையும் விட்டு வைக்கவில்லை. கடந்த பத்து வருடங்களாக ஆம்னி பஸ்ஸிலும் கொடி கட்டி பறந்துக் கொண்டு இருக்கிறது இந்தா கதிரவன் ட்ரான்ஸ்போர்ட்.

எஸ் அப்போதே பஸ் நிறுவனம் கதிரவன் என்ற பெயரில் தான் இருந்தது. கதிரவன் என்ற பெயர் வழி வழியாக வரும் அவர்களது குடும்பப் பெயர். வீட்டின் முதல் ஆண் வாரிசுக்கு இந்த பெயர் சூட்டப்படும்.

பல ஊர்களுக்கு இவர்களின் பஸ் தான் இன்று வரை இன்றியாமையாததாக இருந்ந்து வருகிறது. ஒரு நாள் கூட நேரம் தவறாது. பேருந்து மட்டும் இல்லாது சொகுசு கார், சொகுசு வேன் என எல்லாவற்றிலும் கால் பதித்து இருக்கிறான்.

இவன் பள்ளியில் படிக்கும் பொழுதே பஸ் அலுவலகத்துக்கு வந்து விடுவான் மாலை நேரமானால். அப்பொழுது இருந்தே தொழிலின் நேர்த்தியை கற்றுக் கொண்டவன், அதோடு பார்ஸல் செர்வீசையும் நடத்த பெரியவர்களுக்கு ஆலோசனை சொல்லி அவர்களை ஏற்க வைத்தவன்.

அதிக திறமை கொண்டவன் கதிரவன். எண்ணி திட்டம் போடும் முன்பே அதை செயலாக்கி இருப்பான்.

அடுத்த பத்து நிமிடத்தில் பெரிய குடோன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு பாய்ந்து அதிலிருந்து இறங்கியவன்,

“இங்க என்ன தான் சித்தப்பா நடந்துக்கிட்டு இருக்கு? ரெண்டு நாள் தானே ஊர்ல இல்ல.. அதுக்குள்ள என்னென்ன வேலையெல்லாம் நடந்து இருக்கு? என்று வாசலிலே கையை பிசைந்துக் கொண்டு நின்ற அவனின் சித்தப்பாவை கண்டு கேள்வி மேல் கேட்டு திணறடித்தவன், அவரோடு குடோவுனுக்குள் வந்தான்.

அவன் வந்ததை பார்த்த அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த அத்தனை பேருக்கும் மூச்சே நின்றுப் போனது.

“சின்னவரு ஊருக்கு போயிட்டு வந்துட்டாரா? தொலைஞ்சோம் நாம” என்று அச்சத்துடன் கதிரவனை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

“கதிரவன் அது வந்து” என்று அவர் தயங்க,

“முதல்ல உள்ள போகலாம்” என்று சொன்னவன்,

“யார் வாங்கி வச்சது?” சிம்ம குரலில் அவனது குரல் மட்டுமே அங்கு ஒலித்துக் கொண்டு இருந்தது. அந்த குரலே அவர்களை எல்லாம் அச்சுறுத்தியது. குடோனில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த அத்தனை பேரையும் கூர் பார்வையால் சுழற்றி எடுத்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 23, 2026 9:04 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top