அவளின் இருபத்தி நாலு மணி நேரமும் ராசசிங்கனை மட்டுமே சுற்றி வரும்படி ஆனது. அதனால் அவளுக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் போனது. அவளது குடும்பம் அவளுடைய நட்பு வட்டம் என எதுவுமே அவளுக்கு கருத்தில் பதியவில்லை. பதிய ராசசிங்கன் விடவில்லை என்பதே உண்மை.
தன் மனைவி தன்னை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்கிற குறுகிய மன நிலைக்கு எப்பொழுதோ அவன் வந்து விட்டான். அதனால் தான் அவள் மீது இவ்வளவு கட்டுப்பாடுகள்.
அதை பெண்ணவள் உணரவே இல்லை... வெறும் மாயை மீது கட்டிய கோபுரம் அடியோடு புரண்டு சரியும் நாளும் வரும் என்று இருவரும் அறியாமல் போனார்களோ என்னவோ...
இடை பட்ட நாளில் ஏந்திழையாளின் வீட்டில் இருந்து யாராவது ஒருவர் தினமும் அவளை சந்திக்க அவளது வீட்டு வாசலில் காத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை மிக சாமார்த்தியமாக அவளுக்கே தெரியாமல் அவர்களை நாயை துரத்துவது போல துரத்தி விடுவான்.
அவனது மிகப் பெரிய பங்களாவை சுற்றி அடர்ந்த பூந்தோட்டமும் சின்ன சோலை போல அடர் விருட்சங்களும் இருப்பதாலும் வீட்டுக்கும் வெளி வாயிலுக்குமே ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் வாசலில் யார் வந்து நின்றாலும் உள்ளே இருக்கும் ஆட்களுக்கு தெரியாது. கேட் காவலாளி போன் பண்ணி சொன்னால் மட்டுமே யார் வந்து இருப்பது என்று தெரியும்.
அதனால் ஏந்திழையாளுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாமல் போனது. தெரிந்தாலும் அவளால் ஒன்றும் செய்து இருக்க முடியாது.
தன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் வேல்முருகனின் குடும்பத்தாரை ஏளனமாக பார்த்தவனின் கண்களில் அன்றைக்கு தன்னை அவமானம் செய்தது நிழல் போல தோன்றி மறைய,
“அந்த குடும்பத்துல ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தணுமே” என்று சிந்தித்தவன் அதற்கு அடுத்த நாளில் இருந்து அந்த வேலையை மேற்கொள்ள ஆரம்பித்தான்.
நெஞ்சில் இருந்த வன்மத்தை அழகாக மறைத்துக் கொண்டு அவர்கள் வீட்டு பெண்ணிடம் குடும்பமும் நடத்திக் கொண்டான். அவனது நஞ்சு மனதை தெரிந்து தான் ஏந்திழை அவனை திருமணம் செய்துக் கொண்டாள்.
அவனது நஞ்சு தன்னை மட்டும் பாதித்தால் போதும். தன் குடும்பத்தை அவனிடம் இருந்து காத்துக் கொள்ள தன்னை பலியாக்க எண்ணியே அவனிடம் துணிந்து இல்லறத்தில் ஈடுபட்டாள்.
ஆனால் அவள் கொண்ட முயற்சிக்கு பலன் ஏதும் இல்லை என்பது போல ராசசிங்கனின் ஆட்டம் அதிரடியாய் தொடங்கியது.
காலையில் எழுந்ததில் இருந்து ராசசிங்கனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து அவனது முகத்தை பார்த்து நிற்பாள்.
அவன் இதழ்களை பிதுக்கி விட்டு போக மனம் கொஞ்சம் சோர்ந்துப் போனாலும் அவனுக்காக அவள் பார்த்து பார்த்து செய்வதை மட்டும் நிறுத்தவே இல்லை.
அடிப்படையில் நல்லவன் தான் இவன் என்ன ஒன்று தங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் லூஸ் டாக் விட்டதால் கொஞ்சமே கொஞ்சம் இறுகி போய் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால் அவன் கொண்ட வன்மத்தின் வீரியம் புரியாது காட்டு அரசனோடு பெண் மானாய் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறாள் ஏந்திழையாள்.
ஏந்திழையாளின் முந்தானையை பிடித்து இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் காலையிலயே அவளிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்தான்.
சிங்கத்தின் பசியை முற்றிலும் போக்கிக்கொள்ள பற்களை கொண்டு மெல்ல அவளை பதம் பார்க்க “அவுச்” என்று அலறினாள்.
“ப்ச் கத்தாதடி...” என்று அவளின் காதோரம் முணகியவன்,
“ஐ வான்ட் பெயின்” என்று சொல்லி தன் நெஞ்சை அவளிடம் காட்டினான். அவள் புரியாமல் பார்க்க,
“நீயும் கடிச்சு வை” என்று அவளிடம் வலியை யாசித்தான்.
“போங்க நான் மாட்டேன்” என்று அவனிடம் சிக்கி இருந்த புடவையை உருவிக்கொண்டு விலகி ஓடப் பார்க்க, தொகையென நீண்டு இருந்த அவளின் முடியை பிடித்து இழுத்தவன் தரையில் அவளை அப்படியே சாய்த்து அவளின் மீது பரவி படர்ந்துக் கொண்டான்.
“வேலை இருக்குங்க” என்று அவள் முணக,
“நான் தான் இன்னைக்கு ஆபிஸ் போகலையே.. பிறகு என்னடி வேலை இருக்கு” என்று கேட்டுக் கொண்டே அவளின் வயிற்றில் தலையை சாய்த்துக் கொண்டான்.
அவனது தலையை கோதிக் கொடுத்தவள்,
“நீங்க ஆபிஸ் போகலன்னா எனக்கு வேலை இல்லையாக்கும்... போய் பூசை செய்யணும். டிபான் ரெடியான்னு பார்க்கணும். இன்னைக்கு வேலை காரவங்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வச்சு இருக்கேன். அதை குடுக்கணும்.. கொஞ்சம் ப்ளவுஸ் தைக்கணும்... மேக்கப் திங்க்ஸ் வாங்கணும் இப்படி ஏகப்பட்ட வேலை இருக்கு...” என்றவளை பார்த்து முறைத்தவன்,
“அதெல்லாம் நான் வீட்டுல இல்லாதப்ப பார்த்துக்கடி. இப்போ என்னை மட்டும் பாரு” என்று அவளை தன் வசப்படுத்திக் கொண்டான் ராசசிங்கன்.
“உங்களை தான் தினமும் பார்க்கிறேனே” என்று அலுத்துக் கொண்டே அவனிடம் தஞ்சம் கொண்டாள் பெண்ணவள்.
அவனது சுருக்கென்று தைக்கும் பேச்சு முற்றும் குறையவில்லை என்றாலும் அவ்வப்பொழுது வெளியே வந்து அவளை காயம் செய்துக் கொண்டே தான் இருந்தது.
ஏந்திழையாளை கூடி தழுவி குளித்து விட்டு வெளியே வந்தான் ராசசிங்கன். இழையும் சற்று நேரத்துக்கு முன்பு தான் குளித்து விட்டு கீழே வந்தாள்.
வந்தவள் பூசை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டாள். குங்குமத்தை எடுத்து வகிட்டிலும் தாலியிலும் வைத்துக் கொண்டவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் சிங்கன்.
“அச்சோ சாமி அறை இங்க போய் இப்படி எல்லாம் செய்யலாமா?” என்று படபடத்துப் போக,
“அதெல்லாம் செய்யாலாம்... வேண்ணா உன் சாமியை கண்ணை மூடிக்க சொல்லுடி” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்தவள்,
“முதல்ல வெளியே போங்க... சாமியையே கிண்டல் பண்ணிக்கிட்டு” என்று அவனை தள்ளிக் கொண்டு அவளும் வெளியே வந்தாள்.
அந்த நேரம் கதிர் உள்ளே நுழைந்தான். இருவரும் நிற்கும் தோரனையை கண்டு திருட்டு முழி முழித்தான். தப்பான வேலையில் என்ட்ரி குடுத்துட்டமோ என்று.
பின்ன ராசசிங்கன் இடையில் வெறும் வேட்டி மட்டுமே கட்டி இருந்தான். மேலே வெறும் உடம்பாக நின்று இருக்க அவனின் அருகில், அவனது கையணைப்பில் தலைக்கு குளித்து துண்டை சுற்றி இருந்த ஏந்திழையோ அடக்கமான தோற்றத்துடன் புடவையில் சிங்கனுக்கு ஏற்ற வகையில் அவனது கையில் பிணைந்து நின்று இருந்தாள்.
“உள்ள வாடா” என்ற சிங்கன் தன் கையில் இருந்த பெண்ணவளின் இடையை யாரும் கவனிக்க வண்ணம் இலை போல கசக்கி எடுக்க அதிர்ந்துப் போனாள். மடிப்பு எடுத்து பின் பண்ண நேரம் இல்லாததால் இரண்டு மடிப்பு வைத்து அவசரமாக அள்ளி போட்டு இருந்தாள் தோளில். அது அவளின் இடையை முற்றிலும் மூடி இடது கையின் மணி கட்டுக்கு சற்று மேலே வரை மூடி இருக்க அது அவளின் கணவனுக்கு தோதாக போய் விட்டது போல...





