அத்தியாயம் 53

 
Admin
(@ramya-devi)
Member Admin

இருக்கவே இருக்கிறான் ஒருவன். ஆனால் அவனுக்கு இவளுடைய கதைகளை எல்லாம் கேட்க நேரமே இல்லை. இருந்தாலும் அவன் கேட்டுக்க மாட்டான் எனபது வேறு கதை.

தனிமையில் இருந்தவளுக்கு ஒரே ஒரு உறவான ராசசிங்கனை பகைத்துக்கொள்ளவும் முடியவில்லை. அதனாலே அவன் மீது இருந்த நேசத்தை தூசி தாட்டினாள்.

இருக்கிற ஒரு உறவையும் பகைத்து என்ன ஆகப்போகிறது என்று எண்ணி விட்டாளோ என்னவோ...

இது தான் வாழ்க்கை என்று புரிந்துக் கொண்டு ராசசிங்கனை நேசிக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே ஊட்டியில் இருக்கும் பொழுது படர்ந்த மெல்லிய நேசத்தை தூசி தட்டி எழுப்பி மீண்டும் அதற்கு உயிர் கொடுக்க ஆரம்பித்தாள்.

ராசசிங்கன் அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். எவ்வளவு காயம் கொடுத்தாலும் அவனை விட்டு அவள் நகராமல் இருந்ததில் ஆணவனுள் பெரிய பூகம்பம் ஏற்பட்டது.

“எதுக்கு இப்படியெல்லாம் மெனக்கேடுற? இப்படி எல்லாம் செய்தா நீ நல்லவன்னு நான் நினைப்பனா?” என்று அவளிடம் கேட்டால் வெறும் சிரிப்புடன் நகர்ந்து விடுவாள் ஏந்திழை.

அவன் குளிக்க போனாள் இவளும் உள்ளே நுழைந்து அவனுக்கு குளிக்க உதவி செய்வாள். தலையை துவட்டி விட்டு அவனுக்கான எல்லாமும் அவள் செய்து வைக்க உணவையும் அவளையே ஊட்டி விட சொல்லி அவளை வேலை வாங்கினான்.

முதலில் திகைத்தாலும் அவனது விருப்பம் போலவே ஊட்டியும் விட்டாள். தன் தனிமையை போக்கிக்கொள்ள அவனுடன் அவள் இளைந்தாள்.

பகல் பொழுதில் அவனுடைய நினைவுகளை வலுக்கட்டாயமாக தனக்குள் அவள் நிரப்பிக் கொண்டு அவனை நேசம் புரிய தொடங்கினாள்.

வெறும் கட்டாயம் மட்டுமே... அந்த கட்டாயமே சில நாள்களில் இயல்பாக வந்து விட்டது. அவளிடம் இருந்த மாற்றங்களை எல்லாம் நன்கு உள்வாங்கிக் கொண்ட ராசசிங்கன் அவளை பெரிதாக எதையும் வதைக்கவில்லை.

ஒரு நாள் சில கம்பெனி பைல்களை அவளிடம் கொடுத்து வேலை வாங்கவும் ஆரம்பித்தான்.

முதலில் திகைத்தாள்.

“ஏன்?” என்று ராசசிங்கன் விழிகளை உருட்ட,

“இல்ல ரொம்ப நாள் ஆச்சு ஆபிஸ் பைல் பார்த்து... அது தான்” என்றாள்.

“ஒன்னும் பிரச்சனை இல்லை... ஏதாவது டவுட்ன்னா எனக்கோ இல்ல கதிருக்கோ போன் போட்டு கேட்டுக்க..” என்று அவளிடம் பைல்களை ஒப்படைத்து விட்டு அலுவலகம் கிளம்பினான் ராசசிங்கன்.

போகும் பொழுது அவளின் இதழ்களில் வன்மையாக முத்தம் கொடுத்து விட்டே சென்றான்.

அலுவலகத்தில் இருந்து கிளம்பும் பொழுது அவளுக்கு போன் போட்டான்.

“என்னங்க” என்று இவள் ப்ளூடுத்தில் போட்டு விட்டு அவனுக்காக சமைத்துக் கொண்டு இருந்தாள். வேலையாட்கள் எல்லா வேலையும் செய்து வைக்க நின்று கிளறி விடுவது மட்டுமே இவளது வேலையாக இருந்தது.

அதையும் செய்யவில்லை என்றால் சோம்பேறியாகி விடுவோம் என்று சில வேலைகளை அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். அதில் இந்த சமைப்பதும் ஒன்றாகி இருந்தது.

ராசசிங்கன் அலுவலகம் கிளம்பிய பிறகு சாமி அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி பூசை செய்து விடுவாள். அவன் இருக்கும் பொழுது அந்த பக்கம் போகவே முடியாது.

கேட்டால் நான் தானே உனக்கு சாமி. வரம் கொடுக்கும் சாமி.. எனக்கு பூசை பண்ணு... எனக்கு ஆராதனை செய் என்று ஆரம்பித்து விடுவான். அதனால் அவன் இருக்கும் பொழுது சாமி அறை பக்கம் போகவே முடியாது. இல்லை என்றால் அவன் ஒரு ஆட்டத்தை ஆடிவிடுவான். அதற்கு பயந்தே அமையாகி விடுவாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டவனின் கைகளில் கார் சீறி பாய்ந்துக் கொண்டு இருந்தது.

“சமைக்கிறேன்.. இன்னைக்கு கதிரும் அவனோட வைபும் வரதா சொன்னீங்களே.. அது தான் டின்னர் ரெடி பண்ணிட்டு இருக்கேன்” என்றாள்.

“ஷிட் மறந்துட்டேன்டி” என்றான்.

“என்னதுங்க?” இழையாள் கேட்க,

“அவனை வீட்டுக்கு விருந்துக்கு வர சொல்லி சொன்னேன் காலையில. ஆனா இப்போ ஹார்பர் வர போயிட்டு வரச்சொல்லிட்டு வந்து இருக்கேன்டி” என்றான்.

“அவனுக்கு முதல்ல போனை போட்டு வர சொல்லுங்க” என்று இவள் சொல்ல,

“ம்ம் நீ அப்படியே லைன்ல இரு அவனுக்கு கான்ல கூப்பிடுறேன்” என்று கதிருக்கு போன் போட்டான்.

“சார்” என்று அவன் எடுத்தான்.

“ஏன்டா நான் தான் உன்னை இன்னைக்கு வீட்டுக்கு கூப்பிட்டு இருந்தேனே.. அப்புறம் எதுக்குடா ஹார்பர் போக சொன்னப்ப நீ ஒன்னும் சொல்லாம கிளம்பிட்ட” என்று முறைத்தான்.

“பாஸ் அது...” என்று அவன் பம்ம,

“ஒழுங்கா உன் மனைவியை கூட்டிட்டு இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வந்து இருக்கணும்” என்று ஆர்டர் போட்டவன் அவனது காலை கட் பண்ணி விட்டு இவளுடன் பேச ஆரம்பித்தான்.

“ஆமா பாத் டப்ப ரெடி பண்ண சொன்னேனே.. செய்துட்டியா?” என்று கேட்டான்.

அதில் அவளது முகம் சிவந்துப் போக,

“இல்லங்க... சமைச்சுட்டு தான் போய் ரெடி பண்ணனும்” என்றாள்.

“ப்ச் வேலையாட்களை செய்ய சொல்ல வேண்டியது தானேடி” என்றான்.

“ப்ளீஸ்... கூச்சமா இருக்கு” என்று இவள் முகச்சிவப்புடன் சொல்ல,

“போடி” என்று கடுப்படித்தவன்,

“சோறை அப்புறமா பொங்கு. முதல்ல டப்பை ரெடி பண்ணு... இன்னும் பைவ் மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்று சொன்னான்.

“சமையல் பாதியில இருக்குங்க” என்றவளின் சொற்கள் எல்லாம் இவளிடமே திரும்பி வந்தது. போனை கட் செய்ததற்கான அறிகுறியாக பீம் பீம் என்ற சத்தம் மட்டுமே கேட்டது.

“ப்ச் எதுக்கு தான் இந்த பிடிவாதமோ... கொஞ்சம் லேட்டா பிரிப்பர் பண்ணா தான் என்னவாம்” என்று முணுமுணுத்துக் கொண்டவள் சமையல் வேலையை பணியாளர்களிடம் கொடுத்து விட்டு தங்களுடைய அறைக்கு விரைந்தாள்.

அங்கே பாத் டப்பில் பறித்த ரோஜா இதழ்களையும் கண்ணாடி மெழுகுவர்த்தியையும் சில மலர் கொத்துகளையும் வைத்து வேலையாட்கள் அலங்காரம் செய்துக் கொண்டு இருக்க பக்கென்று ஆனது.

“அதுக்குள்ளவா எல்லா ஏற்படும் செய்தாச்சு” என்று மாய்ந்துப் போனவளை வேலை செய்பவர்கள் நிமிர்ந்து பார்க்க “அய்யோ” வெட்கம் சூழ பட்டென்று வெளியே வந்து விட்டாள்.

“நான் தான் செய்யிறேன்னு சொன்னனே.. அதுக்குள்ள இந்த மனுசனுக்கு என்ன அவசரமாம்?” தனக்குள் முணகியவள் வெளியே போக பார்க்க ராசசிங்கன் வாசலை அடைத்துக் கொண்டு வந்து நின்றான்.

ஐந்து நிமிடம் ஆகும் என்றவன் இவ்வளவு விரைவாக வந்து நிற்பதை பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போனாள்.

அவளது வெளியில் இருந்த மிரட்சியை பார்த்து இதழ் வளைத்தவன்,

“ரெடியா?” என்றான்.

“இல்ல செய்துட்டு இருக்காங்க” என்று அவன் கண்ணை பார்க்காமலே சொன்னவள்,

“நான் காபி எடுத்துட்டு வரேன்” என்று அவனை கடந்துப் போக பார்த்தவளை சுண்டி இழுத்து தன் கையணைவுக்குள் வைத்துக் கொண்டவன்,

“அதெல்லாம் எதுவும் வேணாம்... வா” என்று அவளை அறைக்கு உள்ளே கூட்டி சென்றான்.

அவனது அதிரடியில் திகைத்துப் போனவள்,

“இல்ல அவங்க எல்லாம் இருக்காங்க” என்று தடுமாறினாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 16, 2026 10:00 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top