அதுவே அவளிடம் கேள்வி கேட்பது போல இருக்க, “ஏன் இப்படி கேலி பண்ணி சிரிக்கிறீங்க? உங்க கூட முழு மனதா தானே குடும்பம் நடத்துறேன்” என்று சொற்களை முழுதாக சொல்ல முடியாமல் கண்களின் ஓரம் நீர் கசிய கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
அவளது முகத்தை நிமிர்த்தி தன் முகத்தை பார்க்க வைத்தவன் வன்மையாக அவளின் கண்களை தன் பார்வையால் கவ்விக் கொள்ள அவளால் அவனிடம் இருந்து பார்வையை நகர்த்திக் கொள்ளவே இயலாமல் போனது.
“உன்னை கேலி பண்ற மாதிரி இருக்கா என்னோட சிரிப்பு” ஆழ்ந்த குரலில் அவன் கேட்க அவள் திகைத்துப் போனாள்.
“அப்போ என்னை நீங்க கேலி செய்யலையா?” அவள் அப்படி தானே எண்ணினாள்.
“படுக்கையில தாசியே இருந்தாலும் அவளை அவமானப்படுத்த எனக்கு வராது” என்று விட்டு அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள தூக்கி வாரிப் போட்டது.
“நீங்க இதுக்கு முன்னாடி அப்படி எல்லாம் இருந்து இருக்கீங்களா? அதாவது தாசி கூட எல்லாம்” என்று இதயம் நடுங்க கேட்டாள்.
“ஏன் உன் வீட்டுல யாரும் சொல்லையா?” என்று தலையை நிமிர்த்தி கேட்டவன் மீண்டும் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
“சொன்னாங்க... ஆனா என்னால நம்ப முடியல...” என்றாள்.
“ஏன்?” ஒற்றை சொல்லாக கேள்வி பறந்து வந்தது அவனிடம் இருந்து.
“ஏன்னா எனக்கு அப்படி தோணல...? என் மனசு அப்படி உங்களை அடையாள படுத்தல” என்றாள்.
“ஒருவேளை வருங்கலத்துல அப்படி உன் மனசு சொன்னா என்ன பண்ணுவ”
“என்னால என்ன பண்ண முடியும்...?” என்று முகம் வாடிப் போனாள். அவள் கிழித்த கோட்டுக்குள் அடங்குபவனா இந்த சிங்கன். இல்லையே... நீ என்னடி கோடு கிழிக்கிறது நான் என்னடி அதை தாண்டுவது என்று அல்லவா வீம்புக்கு நிர்ப்பான். இவனுக்கு கடிவாளம் போடுவதும் ஒன்று தான் காற்றுக்கு கடிவாளம் போடுவதும் ஒன்று தான்.
இரண்டும் கடிவாலத்துக்குள் அடங்காதது.
அதை அவள் அப்படியே சொல்ல ராசசிங்கனின் முகத்தில் மெல்லிய கீற்று தெரிந்தது.
“உண்மைய சொல்லுங்க ங்க... உங்களுக்கு அந்த மாதிரி பழக்கம் எல்லாம் இருக்கா?” என்று கேட்டாள்.
“உண்மைய சொன்னா நீ ரொம்ப வருத்தப் படுவியே” என்று அவளுக்காக அவன் பரிந்து வருவது போல சொல்ல,
“ரொம்ப தான் அக்கறை... உள்ளதை உள்ளபடி சொல்லுங்க” என்று அவனிடம் சரளமாக வாயாடினாள். அவனும் அவளிடம் சரளமாக வாயாடினான்.
அதை இருவருமே உணரவில்லை.
“ஆரம்ப கால கட்டத்துல என் தொழில் முன்னேற்றத்துக்காக ஒரு சிலர் கூட டை யப் வச்சுக்க வேண்டி வந்தது” என்று அவன் சொல்லும் போதே இங்கு இவளுக்கு இதயம் வெடித்து விடுவது போல ஆனது.
கண்களில் அப்பட்டமாய் அதிர்வை காட்டினாள். அதை நிதானமாக பார்த்துக் கொண்டே அவளது காதில் எதையோ சொல்ல இன்னும் அதிர்ந்துப் போனாள்.
ராசசிங்கன் முணுமுணுதத்தை கேட்டவளுக்கு முற்றிலும் கோவம் வந்தது.
“இதெல்லாம் செய்ய உங்களுக்கு அசிங்கமா இல்லையா?” என்று படபடத்துப் போனாள்.
“எதுக்கு அசிங்கப்படணும்? யாரும் செய்யாததையா நான் செய்யிறேன்” என்று அவளின் மார்பில் தன் தலையை சாய்த்துக் கொண்டான்.
அவனை பிடித்து தள்ளி விட்டவள்,
“ஆனா இனி இப்படி எல்லாம் வேணாம்” என்றாள்.
“அதுக்கு எல்லோரும் சரியா இருக்கணும்டி” என்றான் அவன்.
“யாரு எப்படி போனா எனக்கு என்ன.. நீங்க என் புருசன்... உங்களை தான் நான் கண்டிக்க முடியும்...” என்று அவள் சிலுப்பிக் கொண்டு சொல்ல,
அவள் சொன்ன புருசன் என்கிற சொல்லில் அவனது கண்கள் மின்னியது தெரியாமல் அவனுடன் மேலும் வாயாடினாள்.
இப்படியே இருவரும் தர்க்கம் பண்ணிக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் மிகவும் குளிராக இருக்க கண்டு,
“ஷ்... ரொம்ப குளிருதுங்க... இந்த ஏசியை கொஞ்சம் ஆப் பண்ணி போட்டா தான் என்ன... எப்போ பாரு உடம்பு நடுங்கி போற அளவுக்கு குளிரை வச்சுக்க வேண்டியது” என்று இயல்பான மனைவி மாதிர்யே அவனிடம் புகார் படித்தவள் போர்வையை குனிந்து தேடப் பார்க்க அதன் பிறகே தான் இருக்கும் நிலை உணர்ந்து “அய்யோ” என்று அலறி தன்னை மறைத்துக் கொள்ள துணி எதுவும் அருகில் இல்லாமல் போக தன் மன்னவனையே இழுத்து போர்த்திக் கொண்டாள்.
“ப்ச் விடுடி... எனக்கு வேலை இருக்கு” என்று அவன் பிகு பண்ண,
“என் துணி எல்லாத்தையும் எடுத்து குடுத்துட்டு நீங்க போகலாம்” என்று அவள் சொல்லி அவனை தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“அதுக்கும் நீ என்னை விடணும்டி” என்றான் நக்கலாக.
அவனை விடலாம் தான். ஆனால் அவனுக்கு முழுமையாக காட்சி கொடுக்க வேண்டி இருக்குமே என்று உணர்ந்து,
“ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.
“இவ்வளவு நேரமும் உன்னை இந்த கோலத்துல தான்டி பார்த்துட்டு இருந்தேன். நீ உணரலன்னா நான் என்ன செய்ய” என்று அவளை அவன் வம்பு இழுக்க,
“ப்ச்... அதையே சொல்லாதீங்க ங்க” என்று சிங்கியவளின் இதழ்களை தன் இதழ்களுக்குள் எடுத்துக் கொண்டவன் முழுமையாக அவளை ஆளத்தொடங்க நேரம் காலம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.
பாதி நேரம் அவளை அழவிட்டு ஓடவிட்டு மூச்சு வாங்க விடுபவன், அவளையும் அறியாமல் அவளின் மென்மையான குணங்களை தூண்டி விட்டு இதோ இது போல தன்னிடம் இயல்பாக பேசவும் வைத்தான்.
இருவேறு மனநிலையில் தான் அவள் இருந்தாள். அது அவளுக்கே தெரியாமல் போனது தான் வியப்பு. ராசசிங்கனின் பெரும் வேட்கைக்கு தன்னை உணவாக அவள் வாரி கொடுத்தாள். அதில் அவன் சுகமாக குளிர் காய ஆரம்பித்தான்.
அவள் இல்லாமல் அவனுக்கு ஒரு வேலையும் ஓடாது என்கிற நிலையில் தான் ஏற்கனவே இருந்தான். அவளின் இருப்பிலும், அவளின் வாசனையில் தன் உள்ளத்து வேதனை எல்லாம் ஓரம் கட்டி விட்டு அவன் நிம்மதியாக தலைசாய்ந்துக் கொண்டு இருந்தான்.
இப்பொழுது அவனுக்கே அவனுக்கு என்று அவள் கிடைத்து விட நேரம் காலம் எல்லாம் எதுவும் பார்ப்பது இல்லை. காஞ்ச மாடு கம்மங்கொல்லையில புகுந்த கணக்கா அவளின் மீது அவன் ஆளுகை செய்தான்.
மூச்சு கூட விட முடியாமல் பாவம் ஏந்திழையாள் திணறிப் போவாள்.
அவளின் இருபத்தி நாலு மணி நேரமும் ராசசிங்கனை மட்டுமே சுற்றி வரும்படி ஆனது. அதனால் அவளுக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் போனது. அவளது குடும்பம் அவளுடைய நட்பு வட்டம் என எதுவுமே அவளுக்கு கருத்தில் பதியவில்லை. பதிய ராசசிங்கன் விடவில்லை என்பதே உண்மை.





