Notifications
Clear all

அத்தியாயம் 31

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவர்களை கண்டு தலையில் அடித்துக் கொண்டவள் பணியாளர்களிடம் இருவரையும் மாஸ்டர் பெட்ரூமில் படுக்க வைக்க சொல்லி விட்டு குழந்தை என்ன செய்கிறான் என்று பார்க்க சென்றாள்.

சமரன் ஆழ்ந்த நித்திரையில் வாயில் விரலை வைத்துக் கொண்டு தூங்க, அவனின் கையை எடுத்து விட்டு, அவனின் நெற்றியில் முத்தம் வைத்தவள்,

“ரெண்டும் நல்லா குடுச்சுட்டு மட்டையாகி கிடக்குறாங்க. உன்னை பத்தின கவலையே உன் டேடிக்கு இல்லாம போயிடுச்சுடா கண்ணா” சொல்லிக் கொண்டவள் சிறிது நேரம் அவனுடன் அமர்ந்து இருந்தாள்.

தூக்கத்திலே அவளை உணர்ந்துக் கொண்டானோ என்னவோ நகர்ந்து வந்து அவளின் மடியில் படுத்துக் கொண்டான் பிள்ளை.

“கண்ணா” என்றவளின் இதழ்களில் புன்னகை.

“சமத்து கண்ணா நீ” அவனை கொஞ்சியவள் மடியோடு அணைத்துக்கொண்டாள்.

மணியை பார்த்தவள் மூன்று என காட்ட, சிறிது நேரமாவது தூங்கினால் தான் நாளைக்கு ஸ்கூலுக்கு போக முடியும் என்று பிள்ளையை மீண்டும் முத்தமிட்டு தலையணையில் படுக்க வைத்து விட்டு நிமிர, வாசலில் கையை கட்டிக் கொண்டு நின்று இருந்தான் கங்குவன்.

அவனை அந்த நேரம் அங்கு எதிர் பாரதவளுக்கு திக்கென்று தூக்கிவாரிப் போட்டது. அதன் பின்பே சமாதனம் ஆனவள்,

“இப்படி தான் சத்தமே இல்லாம வந்து நிக்கிறதா.. நான் யாரோ என்னவோன்னு பயந்துட்டேன்” என்று நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டாள்.

“என் வீட்டுல என்னை தவிர வேற யாருடி இப்படி வந்து நிற்பா” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.

பின்ன ஜிம் பாடியை காட்டிக் கொண்டு அல்லவா நிக்கிறான்.

“ஆளும் தலையும் பாரு.. இப்படி தான் சட்டை இல்லாம வந்து நிக்கிறதா?” முணகிக் கொண்டாள்.

“நீ தானேடி அவிழ்த்த?” அவன் சொல்ல, அவளது நெஞ்சில் பட்டென்று ஒரு சத்தம்.

“வாட்?” அதிர்ந்தாள்.

“ஐ மீன் வேலைக்காரங்கல வச்சு அவிழ்த்தியே அதை சொன்னேன்”

“அப்போ சுய நினைவுல தான் இருந்து இருக்கீங்க” பல்லைக் கடித்தாள்.

“லைட்டா உன் பேச்சு குரல் மட்டும் கேட்டுட்டு இருந்தது..” அப்புறம் என்று அவன் கேப் விட,

“அப்புறம் என்ன? அப்புறம்.. ரெண்டு பேரும் நல்லா குடிச்சுட்டு கூத்தடிக்கிறீங்கள்ள.. கேட்க ஆளு இல்லன்னு இஸ்ட்டத்துக்கு பண்ணிட்டு இருக்கீங்க.. வீட்டுல சின்ன பிள்ளையை வச்சுக்கிட்டு இப்படி தான் நடந்துக்குறதா? அவனுக்கு முன்னுதாரணமா இருக்குறது இல்ல.. நீங்க செய்யிறதை எல்லாம் அவன் பார்த்து வளர்ந்தா நாளைக்கு அவனும் இப்படி போயிட்டா என்ன பண்ணுவீங்க.. கொஞ்சம் கூட .. இல்ல” என்று அறிவில்லை என்பதை மட்டும் வாய்க்குள் சொல்லிக் கொண்டாள்.

“சரி இந்த நேரத்துல நீ ஏன் என் வீட்டுக்கு வந்த?” என்று கேட்டவனை முறைத்தவள்,

“சார் நீங்க தான் எனக்கு போன் பண்ணி அண்ணனை கூட்டிட்டு போக சொன்னீங்க.. மறந்துட்டீங்களா?” முறைத்தாள்.

“இல்லையே..” என்று அவன் நெற்றியை நீவ,

தன் போனை எடுத்து அவனிடம் காட்டியவள்,

“நகருங்க.. நான் அண்ணனை கூட்டிட்டு கிளம்புறேன்” என்றாள்.

கங்குவனோ கொஞ்சமும் நகராமல் வாசற்படியை அடைத்துக் கொண்டு அப்படியே நின்றான்.

“ப்ச் நகருங்க”

“நகர முடியாது. இப்படியே போ” என்றான்.

“இதென்ன இப்படி  பண்றீங்க..? ஒழுங்கா உள்ள வாங்க இல்லையா வெளில போங்க.. அதை விட்டுட்டு இப்படி பாதையை மறைச்சுக்கிட்டு நின்னா எப்படி போறது..”

“இது தான் வழி.. இப்படியே போ” என்றவனை முறைத்தவள், வேறு வழியில்லாது தன்னை குறுக்கிக் கொண்டு அவள் செல்ல, தன்னை நெருங்கும் வரை அமைதியாக இருந்தவன் நெருங்கிய உடனே அவளை காலால் தடுத்து தன் மீது விழ வைத்தவன் அவளை இடையோடு இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

அவன் கால் வைத்து தடுப்பான் என்று அறியாதவள் இயல்பு  போல நடக்க, குறுக்கே அவன் கால் விட கவனியாதவள் அவன் மீதே மொத்தமாக சரிந்தாள்.

அவளின் வெற்றிடையில் அவனது முரட்டு கரம் படிந்ததில் திகைத்துப் போனவள்,

“என்ன பண்றீங்க.. விடுங்க” அவளின் தேகம் நடுங்கிப் போனது.

“விட்டா கீழ விழுந்திடுவடி” அவளின் காதுக்குள் அவன் பேச, அவளின் காது மடல் சிலிர்த்துப் போனது.

“ஐயோ என்ன இது” என்று அவளுள் அவளே மிரண்டு நின்ற நேரம், இடுப்பில் இருந்த கை அவளின் மொத்த வயிற்றையும் இடுப்பையும் அளந்து பார்க்க நகர, பட்டென்று அவன் கை மீது தன் கையை வைத்து பிடித்துக் கொண்டாள்.

“விட்ரி..” அழுத்தமாக அவளின் காதுக்குள் சொன்னவன் அவளின் கையை உதறி விட்டு முன்பை விட இறுக்கமாக அவளின் இடுப்பை பற்றியவன், மென்மையாக கசக்க ஆரம்பிக்க, பெண்ணவளுக்குள் பேரலை மின்சாரம் பாய்ந்தது.

“ப்ளீஸ்” என்று அவனை தடுக்கப் பார்க்க, முகத்தை அவளின் கழுத்து வளைவில் அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.

அதை எதிர் பாராதவள் திகைத்துப் போய் தள்ளி விடப் பார்க்க, அவளின் இரண்டு கையையும் மேலே தூக்கி பிடித்துக் கொண்டவன் எதை பற்றியும் யோசிக்காமல் அவளின் செவ்விதழ்களை மென்மையாக கவ்விக் கொண்டான்.

வேரல் விக்கித்துப் போனாள் சில நொடிகள். அவனின் வாயில் இருந்து மது வாசனை வர, இவளுக்கு உமட்டியது.

“ஐயோ சீ” என்று அவள் அவன் மீதே எடுத்து விட்டாள்.

“சாரி.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல..” என்றவளுக்கு குற்ற உணர்வாய்  போய் விட்டது. அவன் மேனி எங்கும் வாமிட் பண்ணியதை பார்த்து.

“அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னை பார்த்தா எப்படிடி இருக்கு.. வாஷ் பேஷன் மாதிரி இருக்கா” பல்லைக் கடித்தவன் தன்னை சுத்தம் செய்துக் கொள்ள போக, வேரல் அடித்து பிடித்து தன் வீட்டுக்கு வந்து விட்டாள்.

“ஐயோ என்ன காரியம் செய்துட்டார் இந்த சைக்கோ” என்று தன் இதழ்களை தொட்டு பார்த்துக் கொண்டவளுக்கு மீதமிருந்த மூன்று மணி நேரமும் தூக்கம் என்பதே இல்லை.

அவளின் போனுக்கு கங்குவன் அழைக்க, அவளோ அதை வெறித்துப் பார்த்தாலே தவிர போனை எடுக்கவே இல்லை.

உடலெல்லாம் நடுங்கியது அவளுக்கு. கங்குவன் இப்படி முத்தமிடுவான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்த்தே இருக்கவில்லை.

இப்பொழுது எண்ணினாலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. வாமிட் மட்டும் வரவில்லை என்றால் இவளும் அல்லவா அவனுக்கு இணையாக முத்தமிட்டு இருக்க வேண்டும்.. அவனது இதழ்களின் சூடு அவளின் இதழ்களில் இன்னும் படர்ந்து இருப்பது போலவே தொன்றியது.

“நோ” மனதுக்குள் அலறியவளுக்கு உள்ளம் சமநிலையில் இருக்கவில்லை.

விடியும் வானத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ரீவைண்ட் போல அவனை கடந்து செல்ல முயன்றது, அவன் காலால் தட்டி விட்டது. இடையை இறுக்கிப் பிடித்தது. கழுத்தில் முகம் புதைத்தது, அதை தொடர்ந்து தன் இதழ்களை கவ்விக் கொண்டது என எல்லாம் வரிசையாக வர, திணறிப் போனாள் அந்த நினைவுகளில் இருந்து வெளியே வர முடியாமல்.

இரவெல்லாம் கொஞ்சமும் தூங்காமல் விழிகள் சிவந்துப் போனது. சற்று சோர்வாக இருக்க அதோடவே கிளம்பி பள்ளிக்கூடம் சென்றாள். அன்றைய நாள் முழுக்க அதே நினைவு தான். பெரிதாக எந்த வேலையும் செய்யவில்லை. ஒரு மாதிரி சோம்பலாகவே கழித்தவள் மாலை வீடு திரும்பும் நேரம் ஆகி விட, எழுந்து கிளம்ப ஆயத்தம் ஆனாள்.

அந்தே நேரம் அவளின் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் கங்குவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 10, 2026 11:12 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top