Notifications
Clear all

அத்தியாயம் 24

 
Admin
(@ramya-devi)
Member Admin

புகைப்படம் பார்த்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. இரவு கவிழ... சில காட்டு மிருகங்களின் ஓசை பலமாக கேட்டது... முதல் நாள் அசதியில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இன்று ரொம்பவும் பயமாக இருந்தது மயூவிற்கு

“ஆதி என்ன இவ்வளவு சத்தமா இருக்கு...” பயத்துடன் கேட்டவளை இறுக்கமாக அணைத்தவன்

“நான் இருக்கும் போது நீ எதுக்காகவும் பயப்பட கூடாது.. நான் இருக்கேன் ல எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்..” என்றவன் அவளது காதில் அவளுக்கு பிடித்தமான பாடல்களை போட்டுவிட்டு கேட்க வைத்தவன், அவளை தூக்கி அப்படியே சமையல் அறையில் உள்ள ஸ்லாப்பில் உட்கார வைத்து சூடான சூப் கப்பை அவளிடம் நீட்டினான்.

அவனது அனுசரணையில் கண்கள் கலங்கியது. ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அமர்ந்து அவனை ரசித்துக்கொண்டே குடித்தாள். அவன் பரபரப்பாய் மேகி கிண்ட... ஏனோ அவளுக்கு சிரிப்பு வந்தது..

ஒரு மேகி கிண்ட எவ்வளவு சீன் போடுறான்.. என்று கொஞ்சியவள் சமையல் செய்யும் போது கூட அவனிடம் வெளிப்படும் மேனரிசத்தை ரசித்தாள்.

கரண்டியை தூக்கி போட்டு பிடித்து, ஸ்டைலாய் உடலை இடப்பக்கம் வலப்பக்கம் என்று அசைத்து ஒரு மூவ்மென்ட்டை கொடுத்தபடி கிண்டினான்.

அதன் பின் போக் இரண்டை எடுத்து விரல்களால் அதை இடப்பக்கம் வலப்பக்கம் என்று அதனுடன் விளையாடியபடி ஒரு தட்டில் அவளுக்கு மேகியை எடுத்து போட்டு இரு போக்கையும் அதில் குத்தி செர்வ் செய்ய ரசித்து பார்த்தாள் அவனை.

அவளது பார்வையை கலைத்து “ஹவிட் மயூ...” என்றான்.

“ம்ம்ம்... வெறி நைஸ்.. ஆதி...” என்றபடி சூப் ஒரு வாயும், மேகி ஒரு வாயும் சாப்பிட்டு அவனிடம் சொல்ல...

“சாரோட ப்ரப்ரேசன்... அப்படி தான் இருக்கும்.” என்றவன் தனக்கும் ஒரு தட்டில் போட முனைய, அதை தடுத்து அவனுக்கும் சேர்த்து அவளே ஊட்டி விட்டாள்.

அவனது மகிழ்வை கண்களில் காட்டியவன், அவளது இரு கால்களுக்கும் இடையில் நின்று அவளை இடையோடு கட்டிக்கொண்டான்.

இருவரும் அந்த நிலையிலே உண்டு முடித்து, அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, கூடத்தில் வந்து அமர்ந்தார்கள்.

மலை பிரதேசம் என்பதால் அதிகமாக குளிர்ந்தது.

“ஆதி ரொம்ப குளிருது... தூங்கலாமா...?”

“ம்ம்ம்..” என்றவன் அவளை தன் அறைக்கு அழைத்து சென்றான். மயூ அவனிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. ஏன் இந்த அறை என்று...

அவளுக்காக மெல்லிசையை சுழல விட்டவன் அவளுடைய காதிலிருந்து ஹெட் சேட்டை கழட்டிவிட்டு தன்னோடு இருக்க அனைத்துக்கொண்டு தூங்க...

“பாட்டு வேணாம் ஆதி... நீங்க ஏதாவது பேசுங்க... நீங்க பேசுனா எனக்கு எந்த பயமும் வராது...” என்றவள் அவனுடைய நெஞ்சில் தலைவைத்துக்கொண்டு அண்ணாந்து அவனை பார்த்து சொன்னாள்.

அதில் அவனுடைய காதல் மனம் மலர... இசையை நிறுத்திவிட்டு அவளது தலையை வருடைய படி தன் நெஞ்சில் அவள் மீது கொண்டுள்ள காதலை சொல்ல ஆரம்பித்தான்.

அதை கேட்க கேட்க அவளின் விழிகளில் கண்ணீர் முத்துக்கள் சரம் தொடுத்தது.

அவளுடைய கண்ணீர் கூட அவனை கலைக்கவில்லை. ஏதோ தவம் போல சொல்லிக்கொண்டு இருந்தவனை காண காண தன்னுடைய காதல் எல்லாம் இவனது காதலுக்கு முன் ஒன்றுமே இல்லை என்பது போல தோன்றியது அவளுக்கு.

“அதென்னவோ செல்லம்... உன்னை மட்டும் என்னால பிரிச்சே பார்க்க முடியல... ஆதின்னா அது மயூ தான்.. மயூ ஆதியான்னு தெரியல... ஆனா இந்த ஆதி முழுக்க முழுக்க மயூ தான்.” என்று அவன் சொல்ல சொல்ல இவளால் தாங்க முடியவில்லை.

நெஞ்சமெல்லாம் குமுறிக்கொண்டு வந்தது. எப்பேர்ப்பட்ட காதலை தான் ஒதுக்கி வைத்து இருக்கிறோம் என்று எண்ண எண்ண அவளுடைய இழப்பு கண்ணெதிரில் வந்து நின்றது.

இவனது அன்பு இல்லாமல் தன்னுடைய மிச்ச பொழுதுகள் போகுமா...? போய்விடுமா...? என்று பயந்து போனாள்.

கண்ணுக்குள் தான் பொத்தி வைத்து இருக்கிறான் என்று இவ்வளவு நாளும் எண்ணி இருந்தாள். ஆனால் அவன் உயிருக்குள் பொத்தி வைத்து, பொக்கிஷம் போல இவ்வளவு நாளும் தன்னை காத்துக்கொண்டு இருக்கிறான் என்று இப்பொழுது தான் தெரிந்துக்கொண்டாள்.

ஆதி பாட்டுக்கு பேசிக்கொண்டே போக அவன் தன் மேல் வைத்துள்ள காதலை கொஞ்ச கொஞ்சமாக தெரிந்துக்கொண்டவள் அதற்க்கு மேல் முடியாமல் வெடித்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவளது கதறலை கண்டு “ஏய் இதெல்லாம் நீ அழறதுக்காக நான் சொல்லலடா...” என்று அவளது முதுகை நீவி விட... அவனது கையை தட்டிவிட்டு எழுந்து அமர்ந்தவள் அவன் மீது பொத்தென்று விழுந்தாள்.

“மெதுவா டி...” என்றவன் அவளை வளைத்துக்கொள்ள,

“நான்... எ... எனக்கு... நீங்க வேணும்... முழுசா வேணும் ஆதி... உங்களை யாருக்கிட்டயும் விட்டு குடுக்க முடியாது. எனக்கே எனக்குன்னு நீங்க வேணும்...” கதறினாள்.

“இதை தான் நானும் சொல்றேன் மயூ. என்னை யாருக்கிட்டயும் தூக்கி குடுத்துடாதடி... நான் வேற யார் கிட்ட போனாலும் என்னால வாழ முடியாது... என்னோட உணர்வுகள் புரியுதா...? வாழவே முடியாது கண்ணம்மா... வேற யாரவது உரிமையா என் பக்கத்துல வந்தாலே வெந்து தனிஞ்சுடுவேன்...” என்றான்.

முன்பு புரியாத பல உணர்வு இலைகள் இப்பொழுது அவளுக்கு மிக நுணுக்கமாக புரிய ஆரம்பித்தது... ஆனால் காலம் கடந்துவிட்டதே... இப்பொழுது என்ன செய்வது என்று தடுமாறினாள்.

மிக எளிதாக தன்னை மறந்துவிடுவான் என்று நினைக்கவில்லை தான். ஏனெனில் பிறந்தது முதல் ஏற்ப்பட்ட நேசம் இவர்களுடையது... அப்படி இருக்கையில் இன்றைக்கு அவன் சொன்ன காதலின் நிலையை உணர்ந்த பின் அவளுக்கு மூச்சு முட்டி போனது...

ஆதியின் மனதில் தான் எந்த அளவு இருக்கிறோம் என்று நன்கு உணர்ந்துக்கொண்டாள். அதனாலே அவளுக்கு அவனுடைய காதலுக்கு தான் ஈடு செய்யவில்லை என்ற உணர்வு வந்து அவளை குற்றம் சாட்டியது.

குற்றத்தை விட இவ்வளவு காதல் செய்பவனை எப்படி தான் இழக்க முடியும் என்ற உணர்வு அவளை பெரிதும் அலைக்கழித்தது.

தான் செய்த தவறை எண்ணி பார்த்தவளுக்கு மனது மிகவும் வேதனை பட்டது. எப்படி இதிலிருந்து மீண்டு வருவது என்று கேள்வியும் எழுந்தது.

அதையெல்லாம் ஊருக்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்று ஒதுக்கியவள், அவனை கொண்டாட ஆரம்பித்தாள். எப்பொழுதும் அவன் ஆடும் ஆட்டத்துக்கு வளைந்து கொடுத்தவள், இப்பொழுது அவனை ஆட்டுவித்தாள். அதை தான் ஆதியும் எதிர் பார்த்தது.

தன் ஆளுமையை அவளிடம் செலுத்தி தன் பக்கம் இருத்திக்கொண்டவன், உரிமையாய் அவனிடம் இன்று வரை எதுக்காகவும் சண்டை போட்டது இல்லை மயூ. ஏன் எதிர்த்து கூட பேசியது இல்லை அவள். அதை எண்ணி எப்பொழுதும் ஒரு கோவம் அவள் மீது அவனுக்கு இருக்கும்.

“காதல் னா இது இல்லடி...” என்று பல முறை அவளிடம் கத்த முடியாமல் தனிமையில் கத்தி தன் கோவத்தை அடக்கி கொள்ளுவான்.

ஆனால் இங்கு வந்த பின்பு அவளது கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தாள் மயூ. அதும் அவனது காதலை முழுமையாக உணர்ந்த பின்பு வேறொரு மயூவை அவனுக்கு காட்டினாள் மயூ...

Loading spinner

Quote
Topic starter Posted : October 6, 2026 10:13 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top