Notifications
Clear all

அத்தியாயம் 30

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ம்மா என்னம்மா இது இந்த மாதிரி பேசுறாங்க?” வேரலால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“விடு கண்ணா.. இதெல்லாம் ஊர் பக்கம் சகஜம் தான்.. இன்னைக்கு ஒரு நாள் கூத்து தானே... இனி இந்த மாதிரி ஆட்களிடம் சங்காத்தமே வச்சுக்கக் கூடாதுன்னு உங்க அப்பாக்கிட்ட சொல்லணும்..” என்றார் மாளவிகா.

“ஆமாம்மா சரியான இரிட்டேட்டிங் பெர்சென்சா இருக்காங்க எல்லோரும்” என்றவள்,

“மாம் தூக்கம் வருது.. நான் தூங்குறேன்” என்று சொல்ல, அவளின் தலையில் இருந்த பூக்களை எல்லாம் எடுத்து விட்டு, உடை மாற்ற உதவி செய்தவர்,

“நானும் தூங்குறேன் கண்ணா.. முழிச்சு இருந்தா வழியனுப்ப கூப்பிடுவாங்க.. சொல்லிட்டு போறேன்னு அவங்களை மறுபடியும் பார்க்கணும்.. சாமி நம்மள முடியாது.. அம்மாவும் குட் நைட்” என்றவர் உடை கூட மாற்றாமல் அப்படியே படுத்துவிட்டார்.

“யூ சீட்டர் அம்மா” என்று சொன்னவள் தாயின் அருகில் அவளும் படுத்து தூங்கி விட்டாள்.

அன்றிரவு அடைத்து வைத்து இருந்த அந்த மாப்பிள்ளை பையனை அடையாளம் தெரியாத மர்ம ஆட்கள் வெளுத்து எடுத்து விட்டார்கள். முக மூடி அணிந்த அந்த கும்பலில் மச்சானும் மாப்பிள்ளையும் இருந்தார்கள்.

எல்லோரையும் விட இவர்களின் அடி மட்டும் தனியாக விழுந்தது அந்த பொறுக்கிக்கு.

அன்றிரவு மாப்பிள்ளையும் மச்சான்னும் கங்குவனின் வீட்டில் இருக்கும் பாரில் அமர்ந்து விட்டார்கள். ஆளாளுக்கு ஒரு கிளாசை கையில் வைத்துக்கொண்டு

“ஏன் மாப்பிள்ளை என் தங்கச்சிக்கு என்ன குறைன்னு நீ வேணாம்னு சொல்ற?” திரையன் கேட்க,

“அடேய் நீ என்ன லூசா.. உன் தகச்சிக்கு என்னடா குறை..” என்ன்று முறைத்த கங்குவன், கையில் இருந்த கிளாசை வாயில் சரித்துக் கொண்டவன்,

“இந்த டாப்பிக்கே வேண்டாம்டா” என்றான் உறுதியாக.

“போடா பூஃள்.. சில சமயம் வாய்ப்பு வரும் பொழுதே யூஸ் பண்ணிக்கணும்.. பிறகு கைக்கு எட்டாமல் போய்விடும்”

“ப்ச் வேற டாப்பிக் பேசுடா எருமை”

“ஆமா இவன் மட்டும் பெரிய சிங்கமாக்கும்.. என்னை எருமைன்னு திட்டுறான்” என்றவன்,

“ஆமான்டா இந்த காதலை பத்தி நீ என்ன நினைக்கிற?” கங்குவனின் வாயை கிளறினான்.

“காதலா.. அது டைம் ஆப் வேஸ்ட்டுடா.. முட்டா பய தான் அது பின்னாடி அலைந்து நாசமா போவான்” என்றான்.

“ஏன்டா பன்னி இப்படியா ஆரம்பிக்கும் போதே முட்டுக் கட்டை போடுவ.. வீணா போனவனே” அவனை கீழே தள்ளி இவன் மேலே ஏறி அமர்ந்துக் கொண்டான் திரையன்.

“ஏன் சார் ஏதும் காதல் கடல்ல விழுந்துட்டாரா..?” திரையனை தாங்கியபடி தலைக்கு அடியில் இரண்டு கையையும் வைத்து அவன் முகம் பார்த்து கேட்டான்.

அவனின் முகத்தை பார்த்த திரையன்,

“தெரியலடா..” என்றான்.

“தெரியலைன்னாலே அது காதல் கண்றாவி தான்.. சொல்லி தொலை உன் காவிய காதலை.. டைமாவது போகும்” என்றவனின் மீது ஒரு குதி குதித்தான் திரையன்.

“டேய் செத்த பயலே.. குதிச்சு குதிச்சு சாவட்டிச்சுடுவான் போலையே... எழுந்து தொலைடா எரும கணம் கணக்குறான்” நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.

“அப்படி எல்லாம் எழுந்திரிக்க முடியாதுடா.. என் முழு கதையும் சொல்லிட்டு வேணா பார்க்கலாம்” என்றவன் அவனின் காவிய காதலை பற்றி பியர் குடித்துக் கொண்டே சொல்ல,

தலையில் அடித்துக் கொண்டான் கங்குவன்.

“என்னை குடிக்க விடாம நீ மட்டும் குடிச்சு வெறுப்பேத்துறியா நாயே.. அவனை புரட்டி போட்டு கீழே தள்ளி விட்டவன் ஒரு உந்துதலில் எழுந்து சோபாவில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு ஒரு பாட்டில் சில் பியரை வாயில் ஊற்றினான்.

“நீ மட்டும் குடிக்காதடா குடிகார பரதேசி.. எனக்கும் குடு” என்று அவனின் எச்சில் பட்ட பாட்டிலை பிடுங்கி தன் வாயில் ஊற்றிக் கொண்டான் திரையன்.

“அட புடுங்கி திங்கிற நாதாரி.. அது தான் அங்க அத்தனை இருக்கே.. அதுல ஒன்னை எடுத்து சாப்பிட வேண்டியது தானே. என்னோடதை ஏன்னா புடுங்குற” கேட்டவன்,

“உன் தெய்வீக காதலை கண்டினியூ பண்ணுடா” என்றவன், தன் போனை நோண்ட ஆரம்பித்தான். அவனது கையில் இருந்த போனை பிடுங்கி போட்டுட்டு,

“கேளு மாப்பிள்ளை” என்றவன் அவனின் ஆவாத போவாத லேடிஸ் கான்ஸ்ட்டபில் கதையை சொல்ல, ஆவ்.. என்று கொட்டாவி விட்டான்.

“உயிரை குடுத்து காதல் பண்ணிய கதையை சொல்லிட்டு இருக்கேன். கொட்டாவி விடுரியாடா பேயே” என்று அவனின் இடுப்பிலே ஒரு உதை விட்டான்.

“உன்னை ஏன்டா கூட்டிட்டு வந்தேன்னு இருக்கு.. வேலில போன ஓணானை நானே வேட்டியில விட்டுட்ட கதையா போயிடுச்சு” என்றவன், அவனின் தங்கை வேரலுக்கு போனை போட்டான்.

“வந்து  உன் அண்ணனை கூட்டிட்டு போ... ஒரே ரகளை பண்றான்” என்று சொல்ல,

அவளும் அந்நேரத்துக்கு வீட்டில் யாருக்கும் தெரியாமல் கங்குவனின் வீட்டுக்கு வந்தாள்.

வந்தவள் இருவரும் முழு போதையில் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொண்டு, மச்சான் மாப்பிள்ளை என்று உளறிக் கொண்டு இருந்தார்கள்.

அதோடு “மச்சான் உன் காதல் காலியான காதல்.. ச்சீ காவிய காதல் மச்சான்.. நான் உன் காதலுக்கு பச்சை நிறம் அடிக்கிறேன். இந்த காவி எல்லாம் வேணாம்..” என்று கங்குவன் உளற,

“மாப்பிள்ளை என் காதல்... காதலி அவ புருசனோட ஓடி போயிட்டா டா... இந்த பிஞ்சு நெஞ்சு டம்முன்னு வெடிச்சுடுச்சு.. ஒரே சத்தம்” என்று இருவரும் அளப்பரையை கூட்ட, கண்ணை கட்டிக் கொண்டு வந்தது இவளுக்கு..  

“அண்ணா அண்ணா” என்று உசுப்ப,

“நோ டியர் நான் ஒன்லி என் ஆளுக்கு லவ்வர்.. அண்ணா எல்லாம் இல்ல” மேலும் உளற,

கங்குவனோ, “யாருடா அது என் நண்பனின் காதலை அண்ணான்னு சொல்லி அசிங்கப்படுத்துறது” என்று சலம்ப,

“அடப்பாவிங்களா இப்படியா ஆள் யாருன்னு தெரியாத அளவுக்கு குடிச்சு மட்டையாவீங்க.. எப்படி திரையனை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறது..” தலையை பிடித்துக் கொண்டவளுக்கு அந்த அறையில் நிறைந்து இருந்த வாசனை உமட்டலை கொடுக்க முந்தானையை வைத்து மூக்கை பொத்திக் கொண்டவள், வெளியேறப் பார்க்க,

இரண்டில் ஏதோ ஒன்று உமட்டியது..

திரும்பி பார்த்தாள். அவளின் அண்ணன் தான்.. உமட்டிக் கொண்டு இருந்தான். அது அருகில் இருந்த கங்குவனின் மீதும் சிந்தி இருக்க,

“இது வேறையா?” அயர்ந்துப் போனவள், அந்நேரத்துக்கு வேலையாட்களை வரவைத்து இருவரையும் சுத்தம் செய்து விட்டவள், அந்த அறையை கிளீன் பண்ண சொன்னாள்.

இருவரும் முழுதாக குடித்து மட்டையாகி இருக்க, தங்களின் சுய சிந்தனையே இல்லாமல் இன்னும் தள்ளாடிக் கொண்டே இருந்தார்கள் கங்குவனும் திரையனும்...

Loading spinner

Quote
Topic starter Posted : October 7, 2026 10:18 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top