Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

“கிழிச்ச.. நீ ப்ராஸசை கேன்சல் பண்ணிட்டு வெளிநாட்டு வந்துட்ட, ஆனா அங்க ஐவிஎப் ப்ராசஸ் நடந்தே முடிஞ்சிடுச்சு..” என்றான் கோவமாக.

“அண்ணா” என்று ஒருபக்கம் வெற்றி அதிர, இன்னொரு பக்கம் தேவகியும் அதிர்ந்துப் போனார்.

“நீ என்ன தம்பி சொல்ற?” கண்கள் எல்லாம் பயத்தில் விரிந்துப் போனது அவருக்கு. மிரண்டு போய் இருந்த தாயை பார்த்த தீத்திரள் தீரன்,

“எல்லாம் உங்களை சொல்லணும்..” என்று தேவகியிடம் எகிறினான்.

“நான் அப்பவே சொன்னேன் தானே எதுக்கும் அவசரப் படாத தேவகின்னு. என்னைக்கு நீ என் பேச்சை கேட்ட.. இப்ப பாரு என்ன நடந்து இருக்குன்னு” என்று ஆளவந்தான் ஒரு பக்கம் எகிறினார்.

“நான் என்ன பண்ணுனேன். பெரியவன் எந்த நிலையில இருந்தான்னு உங்களுக்கு நல்லா தெரியும் தானே.. அவன் தான் நம்மளோட இல்லாம ....” அதை சொல்லக் கூட முடியாமல் பேச்சை பாதியில் நிறுத்திக் கொண்டவர்,

“அவனது குழந்தையாவது எனக்கு வேணும்னு நினைச்சேன் அது தவறா...?” கண்ணீருடன் கேட்ட தாயை பார்த்து “ப்ச்” என்று சலித்துக் கொண்டான்.

“அது தப்பு இல்ல.. ஆனா அதுக்கு பிறகு நீங்க யாராச்சும் அந்த பெண்ணை மானிட்டர் பண்ணி இருக்கணுமா? இல்லையா? இப்போ என் குழந்தை பிறந்ததா இல்லையான்னு கூட தெரிஞ்சுக்க முடியாம பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு..” என்றவனின் உணர்வுகள் ஊசி முனையில் நின்றது.

ஒரு தகப்பனாய் அவனுள் இருந்த போராட்டத்தை கண்டு அனைவருக்குள்ளும் குற்ற உணர்வு எழுந்தது.

“சரி யாரு அந்த பொண்ணு. அந்த பெண்ணோட தகவல் சொல்லு. எப்படி இந்த விசயத்துக்கு ஒத்துக்கிட்டா” என்று தம்பியிடம் கேட்டான்.

“அது அண்ணா...” என்று திணறிப் போனான்.

“எதா இருந்தாலும் சொல்லித்தொலை.. மென்னு முழுங்காத” என்று வார்த்தையை கடித்து துப்பினான்.

“அது வந்து அண்ணா அந்த பொண்ணு யாருன்னு தெரியல.. ஆனா அந்த பெண்ணோட தங்கைச்சிக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ண நம்ம ஹாஸ்பிட்டலுக்கு வந்தாங்க.. பணம் இல்ல. அப்போ தான் அம்மா இந்த ஐவிஎப் பத்தி சொன்னாங்க. அதனால அந்த பொண்ணுக்கிட்ட அக்ரிமென்ட் போட்டு அவங்களோட தங்கச்சிக்கு ஹார்ட் ஆப்ரேஷன் ப்ரீயா பண்ணி குடுக்குறேன். அதுக்கு பதிலா குழந்தையை பெத்து குடுக்க சொல்லி..” என்று முடிக்கும் முன்பே முன்பை விட பளார் என்று ஓங்கி அரை விட்டு இருந்தான் தீரன்.

“ஹவ் டேர் யூ” என்று அவனின் சட்டையை பிடித்து அப்படியே தூக்கி விட்டான் தீரன். அந்த அளவுக்கு பொறுமை பறந்து போய் இருந்தது அவனுக்கு.

“மென்டலா டா நீ.. தங்கச்சிக்கு முடியாம வந்த பொண்ணுக்கிட்ட போய் எப்படிடா உன்னால பேரம் பேச முடிஞ்சுது..” மனம் பொறுக்கவில்லை தீத்திரள் தீரனுக்கு.

“டேய் என்னடா இப்படி பண்ணிட்ட” ஆளவந்தானும் தேவகியும் நிலை குலைந்துப் போய் விட்டார்கள்.

“எனக்கு அந்த நேரம் என்ன பண்றதுனே தெரியலப்பா.. அம்மா சாப்பிடாம இருந்தது மட்டும் தான் கண்ணு முன்னாடி வந்தது. அம்மா எப்படி கிடந்தாங்கன்னு உங்களுக்கு தான் தெரியுமே ப்பா” என்று வெற்றி சொல்ல,

“அதுக்காக ஏற்கனவே மன உளைச்சல்ல இருக்கிற பொண்ணுக்கிட்ட போய் எப்படிடா இந்த விசயத்தை செய்ய வைச்ச.. அந்த நேரம் அந்த பொண்ணு என்ன பாடு பட்டு இருக்கும்” என்ற ஆளவந்தானுக்கு மனமே ஆறவில்லை.

தீத்திரள் தீரனுக்கோ கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது. வருகிற கோவத்துக்கு தம்பியை இன்னும் தூக்கிப்போட்டு மிதிக்க வெறி வந்தது. ஆனால் அந்த நேரம் அவனும் என்ன செய்வான். ஒரு பக்கம் மலையாய் நின்று இருந்த அண்ணன் சுய நினைவு இழந்து கோமா ஸ்டேஜில் எழவே முடியாத மீள் தூக்கத்தில் இருக்க, குடும்பம் நிலை குலைந்துப் போய் இருக்க, இது போதாது என்று நிறுவங்களின் சுமை ஒரு பக்கம் அவனை அழுத்த, இதில் தாயின் கோரிக்கை வேறு அனுபவமில்லாத பையன் வெற்றி. அவனால் அந்த நிமிடம் தாயின் கோரிக்கையை நிறைவேற்றவே விளைந்து நின்றது புரிந்தது.

சட்டென்று வெற்றியை தன் நெஞ்சோடு தழுவிக் கொண்டான் தீரன்.

“சாரிடா” என்று சிவந்து போய் இருந்த கன்னத்தை தடவி கொடுத்தான்.

“பரவாயில்ல அண்ணா” என்றவனுக்கு கண்கள் கலங்கி போனது. தான் அவசரப் பட்டு செய்த செயலால் அண்ணன் இன்றைக்கு நிலைகுலைந்து போய் இருப்பதை பார்த்தவனுக்கு நெஞ்சம் வேதனையில் துடித்தது.

“அவளை பத்தின வேற டீட்டையில் எதுவும் தெரியுமா?” கசங்கிப் போய் இருந்த தம்பியின் சட்டையை நீவி விட்டான்.

“அது அண்ணா பைல் போட்டு வச்சு இருக்கேன். அங்க ஹாஸ்பிட்டல்ல இல்ல. என் ரூம்ப வச்சு இருக்கேன். இருங்க எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி தன் அறையில் இருந்த சீக்ரெட் கபோர்டில் இருந்து அண்ணன் சம்மந்தப்பட்ட அந்த ஐவிஎப் பைலை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த தீரன் அந்த பெண்ணின் பெயரை எடுத்து வாசித்துப் பார்த்தான். அதில் மல்லிகை என்று இருந்தது.

“மல்லிகான்னு தானே இருக்கும் எல்லாருடைய பெயரும் இதென்ன மல்லிகைன்னு” இருக்கு யோசித்தவன், அவளின் முகவரியை பார்த்தான். அதை எடுத்துக் கொண்டவன் உடனடியாக அந்த முகவரி இருக்கும் வீட்டுக்கு செல்ல அதுவோ உடைந்து இடிந்துப் போன குட்டி சுவராய் இருந்தது.

அந்த குட்டி சுவரை பார்த்த வெற்றிக்கு பெரும் குற்ற உணர்வாய் போனது.. அண்ணனை ஏறெடுத்துப் பார்க்கவே முடியவில்லை.

“சாரி அண்ணா” என்று அவன் கலங்கிப் போய் கேட்க,

“ப்ச் விடு பார்த்துக்கலாம்” என்றவன், நேராக மருத்துவமனைக்கு சென்றான். மல்லிகையின் தங்கை ரிப்போர்ட்டை தேடி எடுத்தான். அதில் கயல் என்று பெயர் போட்டு இருந்தது.

அவளுக்கு என்ன முகவரி கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று தேடிப் பார்த்தான். அதிலும் இடிந்துப் போன குட்டி சுவர் முகவரி தான் கொடுக்கப்பட்டு இருந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பான கேமரா புட்டேஜ் எல்லாவற்றையும் எடுக்க சொன்னான். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்பான புட்டேஜ் மட்டுமே இருந்தது. ஸ்டோரேஜ் காரணமாக அதை டெலிட் செய்து விட்டதாக சொல்ல, கண்ணை கட்டி காட்டில் விட்டது போல எதுவும் புலப்படவில்லை.

அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டது போல தோன்றியது.

சரி இந்த இரு பெயர்களை வைத்து தேடலாம் என்று தங்களின் ஐடி நிறுவனத்துக்கு சென்று தகவல்களை கொடுக்க, அங்கு ஏகப்பட்ட மல்லிகை, ஏகப்பட்ட கயல் வந்தது. அதில் தேடித் பார்க்க ஒரு மல்லிகை கூட வெற்றி பார்த்தது போல இல்லை.

“நல்லா பார்த்து சொல்லி வெற்றி.. இதுல ஒரு பெண் கூடவா அந்த பொண்ணு மாதிரி இல்ல” துருவி துருவி கேட்டான்.

“ஆமா அண்ணா.. இதுல ஒரு பொண்ணு கூட அந்த பெண் மாதிரி இல்ல.. எனக்கு அந்த பெண்ணோட முகம் கொஞ்சம் கூட மறக்கல. அப்படியே பிரெஷா இருக்கு அவங்க முகம். அண்ணனோட குழந்தையை சுமக்க போறவங்கன்றதுனாலயோ என்னவோ என்னால கொஞ்சம் கூட அந்த முகத்தை மறக்க முடியவல” என்றவனின் பேச்சை கேட்ட தீரனுக்கு தன் மீது அவன் கொண்டுள்ள பாசம் புரிந்தது.

அவனின் தோளை தட்டி கொடுத்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. இரவெல்லாம் கண்முழித்து கிடந்தான். ஒரு பொட்டு தூக்கம் வரவில்லை. மனமெல்லாம் ஒரு மாதிரி பாரமாக இருந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : October 8, 2026 9:24 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top