Notifications
Clear all

அத்தியாயம் 23

 
Admin
(@ramya-devi)
Member Admin

“உங்க கோவம் கூட என் காதலை உயிர்பிச்சுக்கிட்டே இருக்கு ஆதி... எனக்கு என் ஆதிமா எப்படி இருந்தாங்களோ அதே மாதிரி என் கடைசி வரை வேணும்... மென்மையை விட உங்க வன்மையும் திண்மையும் தான் என்னை உயிர்ப்போட வைக்கிது ஆதி..” என்றவளின் சொற்களில் அகமகிழ்ந்து போனவன்,

“உண்மையாவே நீ காதல் தேவதை தாண்டி... நான் தான் உன்னை இழக்க போறேன்...” கண்களிலும் மனத்திலும் வேதனை சூழ சொன்னவனை தாவி வந்து அணைத்துக்கொண்டவள்,

“இந்த பேச்சு வேண்டாமே... எனக்கு இன்னும் உங்க காதலின் பரிமாணத்தை முழுமையா காண்பிக்கல... எனக்கு அதை பார்க்கனும்னு ஆசையா இருக்கு ஆதி... ப்ளீஸ்... இதையெல்லாம் விட்டுட்டு நீங்க, நான், நாம ரெண்டு பேரும் மட்டும் பத்தி யோசிங்களேன்...” கெஞ்சலாய் கேட்டவளை இறுக்கி அணைத்தவன்,

“அதுக்கு தானே இங்க வந்து இருக்கோம்...” என்றவன் அவளது முகத்தை தன் இரு கைகளாலும் தாங்கி,

“எந்த நிமிடமும் என்னை விட்டு போகமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி குடு மயூ...” என்றான்.

“ஆதி...” அதிர்ந்து போனாள்.

“ம்ம்ம்.. எது நடந்தாலும் நீ என்னை விட்டு விலக கூடாது... நீ எப்பவும் என் கூட தான் இருக்கணும்...” என்று கேட்டவனின் காதலில் உள்ளா ஆழம் கண்டு உயிர் துடித்தது மயூவுக்கு.

“என்னால எப்படி உங்களை விட்டு இருக்க முடியும் ஆதி... உங்களை விட்டு ஒரு நிமிடம் பிரிஞ்சாலும் என் உடம்புல உயிர் தங்காது... இதுக்கெல்லாம் சத்தியம் தேவையில்லை.” என்றவள் அவனது இதழ்களில் தன் இதழை புதைத்தாள்.

முரட்டு தனமும் அழுத்தமுமாய் இருந்த உதடுகள் மீது மென்மையான உதடுகளின் தீண்டல் பதிய ஜிவ்வென்று இருந்தது... இருவருக்கும்.

அவளாய் தந்த முத்தத்தில் சித்தம் தொலைந்தவன் வேகமாய் அவளது இதழ்களை கவ்வி சுவைத்து இதழோடு இதழ் போரை துவக்கினான் வன்மையாக...

அவனது இதழ் முற்றுகையின் வேகம் தாளமால் சரிந்தவளை, தன் கையில் கிடத்தி கொஞ்சமும் விலகாமல் இன்னும் அதிகமாக அழுத்தம் கொடுத்து முத்தமிட்டவனின் அதிரடியில் மயங்கியவள், அவனுக்கு இணையாக அவனுடன் மல்லுக்கு நின்றாள். அதில் சித்தம் கலங்கியவன், தன் முரட்டு தனத்தை இன்னும் கூட்டினான். நீயா நானா என்று...

அவுச்... என்று மயூ தான் தடுமாறினாள். “மல்லுக்கு நின்னல்ல... இப்போ வா.. அதுக்குள்ள தோல்வியை ஒத்துக்காத...” என்று விளகியவளை தன்னோடு இழுத்தவன், மேலும் அவளிடம் ஒன்ற, அவனது பேச்சில் இவளுக்கும் வீம்பு வர, அவனுடன் இதழ் போரில் தானும் முனைப்புடன் ஈடுபட்டாள். அதில் கிரங்கியவனின் கைகள் வாலிபமான அவளது இடையை பற்றிக்கொண்டு இறுக்கியது.

பெண்ணவளின் கைகள் ஆதரவுக்காக அவனது பின் பக்க தலைமுடியை இறுக்கமாக பற்றிகொண்டவள், ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் உணர்வு மிகுதியில் அவனது இதழ்களை கடித்து தன் உணர்வுகளை அடக்க பார்க்க.... ஆதி அவளை விட்டு விலகினான்.

அவனது முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியாமல் சிவந்து தடுமாறியவளிடம்,

“என்னடி இது...” என்று அவளிடம் தன் இதழ்களை காட்டி கேட்க, நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அவனது இதழ் காயம் தெரிய இன்னும் அவளது முகம் சிவந்து போனது...

“சா...” சொல்ல வந்தவளின் வார்த்தைகள் முழுவதும் அவன் இதழ்களுக்குள்ளே புதைந்து போனது. அதில் முகம் சிவந்தவள் வலுக்காட்டாயமாக அவனிடமிருந்து முகத்தை விலகி அவனது நெஞ்சில் புதைத்துக்கொண்டாள்.

அவளது உணர்வுகள் புரிய சிறிது நேரம் அவளை தட்டிக்கொடுத்து தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டவன், அப்படியே படுக்கையில் சரிந்தான்... அவனோடு அவளும் சரிந்தாள்.

இருவரும் அருவியில் போட்ட ஆட்டத்தில் அசந்து தூங்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி போல தான் எழுந்தார்கள்.

எழுந்து உண்டுவிட்டு வெளியே காலாற நடந்து போனார்கள். ஓங்கி உயர்ந்த மரங்கள் மலையின் செழிப்பையும், திண்மையையும் மௌனமாய் சொல்லிக்கொண்டு இருந்தது.

மலைகளில் இருந்த மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி இதமான கூத காற்று வீசி இன்னும் மயக்கத்தை வாரி கொடுத்தது. கதிரவன் தன் உக்கிரத்தை குறைத்துக்கொண்டு மிக தன்மையாக ஒளி வீசிக்கொண்டு இருந்தான்.

அடர்ந்த மரங்கள் முழுவதும் வியாபித்து இருந்ததில் அவ்விடம் மிக குளுமையாகவே இருந்தது. சின்ன சின்ன புதர்களும் ஆங்காங்கே சூழ்ந்து இருந்தது. பல வகை பறவைகளும், சில சின்னஞ்சிறு ஆபத்தில்லா விலங்குகளும் ஆங்காங்கே போய்க்கொண்டும் வந்துக்கொண்டும் இருந்தது.

அதில் பலவகை சத்தம் எழுந்தது. இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே நடை போட்டுக்கொண்டு இருந்தார்கள் இருவரும்.

மயூவின் கைகளை மென்மையாக பற்றி தன் கையோடு பிணைத்துக்கொண்டவன், ஒவ்வொரு விரலுக்காய் சொடக்கு எடுத்து விட்டான். பிறகு நீவியும் விட அவனது ஒவ்வொரு பரிமாணத்திலும் திகைத்து போனாள். அவளுடன் நடந்து வருவதே புதிது என்றால், இதில் இவன் கைகளை கோர்த்ததோடு இல்லாமல், நெட்டி எடுத்து நீவி வேறு விடுகிறான். தன் கண்களையே அவளால் நம்ப முயடியவில்லை...

எல்லா பொழுதும் பரபரப்புடனும், அதிக வேகத்துடனும், பிரசருடனும் இருப்பவனிடம் இவ்வளவு நிதானத்தை அவள் எதிர் பார்க்கவே இல்லை. அவளது நிதானமான செயல்களை வியந்து பார்த்தாள்.

அவளது பார்வையை உணர்ந்தவனுக்கு இதழ் கடையோரோம் ஓர் புன்னகை எட்டி பார்த்தது.

சிறிது தூரம் சென்றவர்கள் திரும்பி வந்தார்கள். பேச்சுக்களற்ற நேரம்... மாருதம் மந்தமாய் வீசிக்கொண்டு இருந்தது.

வாசற்படியிலே சிறிது நேரம் அமர்ந்து இருந்தார்கள். மயூ காபி போட்டுக்கொண்டு வர, இருவரும் ரசித்து குடித்தார்கள்.

அதன் பின்பு உள்ளே படுக்கையில் சென்று விழுந்தவர்கள் எடுத்த போட்டோக்களை பார்வையிட தொடங்கினார்கள்.

தன் கால்களை விரித்து நடுவில் மயூவை அமரவைத்துக் கொண்டவன், அவளது தோள் பட்டையில் முகத்தை பத்தித்துக்கொண்டு புகைப்படங்களை பார்வையிட்டான்.

மயூவின் கரங்கள் கேமராவை பிடித்து இருக்க பின் புறம்பாய் தன்னவனின் மீது சொகுசாய் சாய்ந்துக்கொண்டு இருக்க, ஆதியின் கரங்களோ தன்னவளின் இடையை மிக இறுக்கமாக கட்டிக்கொண்டு இருந்தது.

இப்படியே எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். “இது அழகா இருக்குல்ல...”

“ஐயோ இதை ஏண்டி இப்படி எடுத்து இருக்க...”

“அதுல ஏன் ஆதி இப்படி முறைக்கறீங்க..”

“அச்சோ என் ஆதி கிங் மேக்கர் சூப்பரா இருக்காரு...” என்று ஒவ்வொரு புகைபடங்களையும் கேலி கிண்டல் செய்து ரசித்து பார்த்தார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 6, 2026 10:09 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top