Notifications
Clear all

அத்தியாயம் 28

 
Admin
(@ramya-devi)
Member Admin

“வேரல் ஒத்துக்கிட்டாளா?” என்று மட்டும் கேட்டான் கங்குவன்.

“அம்மா சொன்னாதுனால ஓகே சொல்லி இருக்கா.. பட் எங்க யாருக்கும் இதுல விருப்பம் இல்ல”

“அப்புறம்” புருவம் சுருக்கினான் கங்குவன்.

“அப்பாவோட தூரத்து சொந்தம்.. பாட்டியும் தாத்தாவும் எவ்வளவோ எடுத்து சொன்னாலும் கேட்காம நாளைக்கு வீட்டுக்கு வரதா சொல்லி இருக்காங்க.. சின்னதா பெண் பார்க்கும் வைபோகம் மாதிரி..” என்றான்.

“கன்பார்ம் பண்ணுவீங்களோ?”

“ப்ச் இன்ட்ரெஸ்ட் இல்லடா.. அவளே இப்ப தான் தன் காலை ஸ்டெடியா ஊன்ற ஆரம்பிச்சு இருக்கா.. அதுக்குள்ள பேக் பண்ணி அனுப்ப மனசு இல்லை..” என்ற பிறகே கங்குவனின் நெஞ்சுக்குள் லேசான சாரல் அடித்தது.

“அதுக்கென்ன மத்தியமே வந்திடுறேன். ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுடா.. பண்றேன்” என்றான் கங்குவன்.

“சும்மா தானே வர்றாங்க.. பார்த்துக்கலாம். பட் நீ கண்டிப்பா வந்திடனும்டா”

“வேற என்னடா வேலை இருக்கு” என்றவன் அடுத்த நாள் மத்தியமே பிள்ளையை கூட்டிக்கொண்டு வேரலின் வீட்டுக்கு வந்து இருந்தான் கங்குவன்.

வந்தவனை வரவேற்ற வேரலின் குடும்பம் டென்ஷனில் இருந்தது.

“என்னடா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.. வேரல் எங்க ஆளையே காணோம்” விசாரித்தான்.

“அவளால தான்டா பிரச்சனையே” நெற்றியை அழுத்தி தேய்த்தவன்,

“நீ போய் கூட்டிட்டு வர்றியாடா.. எனக்கு ஸ்டேஷன் போகணும்” என்றான்.

“இதுல என்னடா இருக்கு.. நான் போறேன்” என்றவன், கையேடு பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வேரல் இருந்த ஸ்கூலுக்கு சென்றான்.

அங்கே மேசையில் தலை கவிழ்ந்து படுத்து இருந்தாள் வேரல்.

“போனை ஆப் பண்ணிட்டு இங்க என்ன பண்ற” கதவை அதிரடியாக திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

“ப்ச்” என்று முணகியவளை அழுத்தமாக பார்த்தவன்,

“நேத்திக்கு உங்க அம்மா உன் பெர்மிஷன் கேட்கும் பொழுது ஓகே சொன்னவளுக்கு ஓவர் நைட்ல என்ன ஆச்சு...?” ஊசி துளைக்கும் பார்வையால் அவளை பார்த்தான்.

“அதெதுக்கு உங்களுக்கு” சொன்னவளிடம் தாவிய சமரனைதூக்கி மடியில் வைத்துக் கொண்டவள்,

“சாப்பிட்டியா கண்ணா” என்று அவனிடம் பேச்சை மாற்றினாள்.

“உன் கொஞ்சலை எல்லாம் அப்புறம் வச்சுக்கோ.. இப்ப கிளம்பு” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,

“நான் எங்கயும் வரல” என்றாள்.

“விளையாடாதடி.. அங்க மொத்த குடும்பமும் உனக்காக காத்துக்கிட்டு இருக்காங்க.. மத்தவங்க முன்னாடி உன் குடும்ப மானத்தை வாங்காத.. ஜஸ்ட் எல்லோருக்கும் ஒரு ஹலோ சொல்லிட்டு உன் ரூமுக்கு போய்க்கோ.. அப்புறமா உங்க அப்பாவும் அம்மாவும் சமாளிச்கிக்குவாங்க. அவங்களுக்கும் இப்பவே உன்னை கல்யாணம் செய்து வைக்க சம்மதம் இல்லை. மூணு ஸ்கூல் அட்லீஸ்ட் பத்து ஸ்கூலாவது மாறுன பிறகு தான் அலையன்ஸ் பார்ப்பாங்க. இப்ப தைரியமா கிளம்பு” என்றவனை விழிகள் கலங்க பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தன் போனை திறந்து அவனிடம் ஒன்றை காட்டினாள்.

என்ன என்று படித்துப் பார்த்தவனுக்கு குப்பென்று கோவம் பொங்கியது.

“யாரு பார்த்த வேலைடி”

“இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வர்ற மாப்பிள்ளை” என்றாள் கலங்கிய குரலில்.

“அவனை” என்று பல்லைக் கடித்தவன்,

“உன் போன் நம்பர் அவனுக்கு எப்படி கிடைச்சது” என்று முணுமுணுத்தவன்,

“நானும் உன் அண்ணனும் இருக்கோம்ல.. நாங்க பார்த்துக்குறோம்.. நீ இப்போ கிளம்பி வா..” என்றான் அழுத்தமாக.

அவளின் விழிகள் சிவந்துப் போய் கலங்கி இருப்பதை பார்த்து இவனுக்குள் நரம்புகள் புடைத்தது.

“வேரல் எங்க மேல நம்பிக்கை இருக்கா இல்லையா?” என்ற நேரம் பிள்ளையை தூக்கிக் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள்.

“குட்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு நேராக இளந்திரையன் இருந்த ஸ்டேஷனுக்கு சென்றான் கங்குவன்.

“நீங்க ரெண்டு பேரும் கார்லயே இருங்க.. நான் அவனை கூட்டிட்டு வரேன்” என்று உள்ளே போனவன் அவள் போனில் இருந்து தன் போனுக்கு அதை ட்ரான்ஸ்செக்ஷன் செய்த தகவலை திரையனிடம் காட்டினான்.

“பிட்ச். எவ்வளவு தைரியம்டா அந்த பன்னாடைக்கு..” கொதித்துப் போனான் திரையன்.

“ரிலாக்ஸ்டா.. இதை நாமலே ஹேண்டில் பண்ணிக்கலாம்” என்றவன், தன் திட்டத்தை அவனிடம் சொல்ல,

“பக்க ஐடியாடா” என்றான் திரையன்.

“உனக்கு ஓகே தானே.. இல்ல கசின்னு செண்டிமெட் ஏதாவது இருக்கா?” என்று கேட்டான்.

“மண்ணாங்கட்டி.. அவன் மட்டும் என் கையில கிடைச்சான் ராஸ்க்கல் உப்பு கண்டம் போட்டுடுவேன்டா” ஆத்திரமாக மொழிந்தான்.

“ரைட் விடு.. அந்த பொறம்போக்குக்கு போன் போடுறேன்” என்ற கங்குவன்,

அவனிடம் சாமர்த்தியமாக பேசி ஒரு இடத்துக்கு வர செய்து விட்டான்.

அதோடு தன் ஆட்களையும் போலீஸ்ல இருந்து சில காவலர்களையும் வர செய்து அவனை சுற்றி வளைத்து தூக்கி ஒரு இடத்தில் தலைகீழாக தொங்க விட்டு விட்டார்கள்.

“மேட்டர் ஓவர்..” இருவரும் கையை தட்டிக் கொண்டு வேரல் இருந்த காருக்கு வந்தார்கள்.

“அவனை தூக்கியாச்சு.. இனி நீ பெண் பார்க்கும் வைபோகத்துக்கு தாராளமா கிளம்பலாம்.. அந்த பொருக்கி முன்னாடி போய் நிற்க வேண்டிய அவசியம் இல்லை” என்றான் கங்குவன்.

“என் கிட்ட சொல்லி இருக்க வேண்டயது தானேடா” தங்கையை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

“இல்லன்னா இதை சொல்லி சொந்ததுக்குள்ள பிரச்சனை ஆகிடும்னு தான்” என்று குரல் கமற சொன்னாள்.

“நீ அவனுக்கு பரிதாபம் காட்டுற. ஆனா அவன் செக்ஸ் வீடியோ அனுப்புறான்.. என்னத்தை சொல்ல” என்ற கங்குவன்,

“இனியாவது அழாத.. பார்க்க சகிக்கல” என்றான்.

“என் புள்ளையும் மிரண்டு உன் மூஞ்சியையே பார்த்துக்கிட்டு வரான்” என்றான் நக்கலாக.

“ண்ணா பாருண்ணா இவரை.. எப்போ பாரு என்னை எதாச்சும் சொல்லிட்டே இருக்காரு” அண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டு கங்குவனை முறைத்தாள்.

அவனின் நெஞ்சில் பிள்ளை தலை சாய்த்து படுத்து இருந்தான்.

முன் இருக்கையில் இருந்து ஆந்த காட்சியை பார்த்த கங்குவனுக்கு தான் உள்ளுக்குள் ஆட்டம் கண்டது.

“முன்னாடி வாடா” என்று நண்பனை இழுத்துக் கொண்டவன் பின் அவனோடு பேசியபடி அவனின் வீட்டுக்கு வண்டியை விட்டான்.

இறங்கி போனவளை பார்த்தான் சில நிமிடங்கள். அதன் பிறகு அவளை எங்கும் பார்க்கவே முடியவில்லை. அவளுடன் அவனின் மகனும் போய் விட்டான் முந்தானையை பிடித்துக் கொண்டு.

இனி அவ்வளவு தான் ரெண்டத்தையும் பிரிக்க முடியாது.. என்று எண்ணியவன் முரளியிடமும் இளமாறனிடம் பேச ஆரம்பித்தான்.

இளந்திரையன் கிளம்பி வந்து அவனுடன் இணைந்துக் கொண்டான்.

அதன் பிறகு நேரம் இன்னும் இலகுவாக சென்றது கங்குவனுக்கு.

மாலை நேரம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்தார்கள். ஆனால் மாப்பிள்ளை மட்டும் வரவில்லை. எப்படி வருவான். அது தான் மாமன் மச்சான் இருவரும் சேர்ந்து தூக்கி தலைகீழாக தொங்க விட்டுட்டர்களே..

வந்தவர்கள் சற்றே சலம்பிக் கொண்டு இருந்தார்கள். மாப்பிள்ளை வீடு அல்லவா அதனால் அந்த சலம்பல் இருந்தது.

“பொண்ணை வர சொல்லுங்க” என்று சொல்ல,

நறுவேரல் எந்த வித ஆரம்பாட்டமும் இல்லாமல் நிதான நடையோடு பிள்ளையை வலது கையில் பிடித்தபடி மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.

எப்பொழுதும் புடவை தான் கட்டுவாள் என்ற பொழுதும் இன்றைக்கு பட்டு புடவையில் லேசான நகைகளுடன் மெலிதான மேக்கப்புடனும் வந்து நின்றவளை கண்டு கங்குவனுக்கு இதயத்தில் மெல்லிய அதிர்வு. அது போக போக வலுவானதாக மாறியது.

“நிமிர்ந்து பாரும்மா” என்று சொல்ல, வேரல் நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவளுக்கு நேர் எதிரில் அமர்ந்து இருந்தான் கங்குவன்..

“செம்ம பிரேம் இல்ல மாமா” என்று நக்கல் பண்ணினான் இளந்திரையன்.

“சாவடிச்சுடுவேன்டா” முணகினான் கங்குவன்.

Loading spinner

Quote
Topic starter Posted : October 2, 2026 12:22 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top