அடுத்த நாள் சமரனை சைகாட்ரிஸ்டிடம் கூட்டி சென்றாள் வேரல். கூடவே கங்குவனும் வந்தான். போகும் பொழுதே உள்ளுக்குள் ஒரு படபடப்பு தான். குழந்தை எப்படி ரியாக்ட் செய்வானோ என்று.
“கத்திடுவானோடி”
“அப்படியெல்லாம் எதுவும் ஆர்பாட்டம் செய்ய மாட்டான்.. ஜஸ்ட் டாக்கிங் மட்டும் தானே.. சோ நீங்க பயந்து அவனையும் பயமுறுத்தாதீங்க” கண்டிப்புடன் சொன்னவள் அப்பன் மகன் இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த வயதான மனநல மருத்துவரிடம் சென்றாள்.
“குட்மார்னிங் டாக்டர்” வேரல் விஷ் பண்ண, அவளை பார்த்து பிள்ளையும் மழலை குரலில் விஷ் பண்ணினான்.
“சமத்து குட்டிடா” கொஞ்சியவள்,
“இவன் தான் அங்கிள். நேத்திக்கு அப்பா பேசி இருந்தாங்களே” என்றாள்.
“ஐ நோ வேரல்.. முரளி எல்லாத்தையும் சொன்னான்” என்று புன்னகை முகமாக சமரனை வரவேற்றவர்,
“ஹாய் குட்டி பையா” என்று அவனிடம் பேச ஆரம்பிக்க,
அவன் திரும்பி வேரலின் முகத்தை பார்த்தான்.
“சே ஹாய்” என்றாள்.
“ஹாய்” என்றான் சமரன்.
“வேரல் பேச சொன்னா தான் பேசுவியா பெரிய மனுஷா” அவர் அட்டகாசமாய் சிரித்தார்.
கங்குவனுக்கு காதில் புகை வந்தது. “எப்போ பாரு என்னை மட்டும் ஒதுக்கி வச்சுக்கிட்டே இருக்கான்.. ஏன் என் முகத்தை பார்த்து சம்மதம் கேட்க மாட்டானா? அதென்ன உன் முகத்தை பார்த்து பெர்மிஷன் கேட்கிறான்” வேரலிடம் எரிந்து விழுந்தான்.
“ப்ச் உங்கா சண்டையை அப்புறம் வச்சுக்கோங்க.. இப்ப அங்க கவனிங்க” என்று அவனை அடக்கியவள், பிள்ளை மற்றும் மருத்துவர் இருவரும் பேசுவதை கவனித்தாள்.
“யங் மேன்...” என்று அவர் பேச்சை ஆரம்பிக்க, வேரலின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான் பிள்ளை.
மேசைக்கு அடியில் அவனது கையை தொட்டு தடவி நீவி விட்டுக் கொண்டே இருந்தாள். அதில் அவனுக்கு தைரியம் பிறந்ததோ என்னவவோ மருத்துவரிடம் இயல்பாக பேச ஆரம்பித்தான்.
அவனிடம் பேச்சுக் குடுத்துக் கொண்டே இருந்தார். அவர் கேட்ட கேள்விகள் எல்லாம் மிக எளிதாகவே இருந்தது. அது மட்டும் அல்லாது அவனை பேசவும் விட்டார்.
வேரலின் முகத்தை அவன் பார்க்க,
“உனக்கு தோணுனதை பேசு கண்ணா.. நானும் அப்பாவும் உன் கூடத்தானே இருக்கோம்.. நாம அன்னைக்கு போனமே ஒரு பார்க் அதை பத்தி உன் பிரெண்ட் டாக்டர் அங்கிள் கிட்ட சொல்லு.. அவரு இந்த மாதிரி பார்க் எல்லாம் பார்த்ததே இல்லையாம்.. நீ சொன்னா அவரும் அந்த பார்க்குக்கு போய் பார்ப்பார். அவர் வீட்டுலயும் உன்னை மாதிரி ஒரு குட்டி வாண்டு இருக்காம்.. அவனை கூட்டிட்டு போறாராம்..” என்று சொன்ன உடன் மடை திறந்த வெள்ளம் போல அவன் பேச ஆரம்பித்தான்.
முதலில் அவரை அவனின் மனதில் நண்பன் என்று பதிய வைத்தாள். அதோடு அவரிடம் மிக இலகுவாக பேச வைக்க, அவர் வீட்டிலும் சின்ன குழந்தை இருக்கு என்று சொன்னாள்.
அது போதாதா.. அதோடு அவனுக்கு பிடிச்ச வேரல் சொல்ல, இனி தயங்குவானா? பேச்சு பேச்சு அப்படி ஒரு பேச்சு..
எல்லாமே மழலை மொழியில் தான். இடையிடையே தலையை திருப்பி வேரலை பார்த்துக் கொண்டான். கூடவே கொசுறாக தகப்பனை பார்த்துக் கொண்டான். அதுவும் இப்படி பேசுவதால் தன்னை ஏதாவது திட்டுவானோ என்று பார்த்தான்.
அதை உணர்ந்துக் கொண்ட வேரலுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வர, கங்குவனுக்கோ புசுபுசுவென்று மூச்சு வாங்கியது கோவத்தில்.
“ரிலாக்ஸ்.. சார்” என்றாள்.
“ப்ச்..” அசூசையானான்.
“உங்க கிட்டயும் பேசுவான்.. நீங்க உங்க உயரத்தை மறந்து அவன் அளவுக்கு இறங்கி வந்து பேசணும் சார்”
“ஆறடியை எப்படிடி குறைக்க சொல்ற”
“மண்ணாங்கட்டி.. நீங்க உங்க மகனோட பழகுன மாதிரி தான்” கோவப்பட்டவள், மருத்துவர் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
அதில் இன்னும் காண்டானவன் “ரெண்டும் வந்து வாச்சு இருக்கு பாரு..” முணகியவன் பிள்ளை பேசுவதை ஆழ்ந்து உள் வாங்கினான்.
“மிஸ்டர் கங்குவன் உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட்... எதையும் கப்புன்னு புடுச்சுக்குறான்.. அது தான் அவனோட வீக்னேசும் கூட.. இன்னைக்கே சிலதை பத்தி பேசி அவனை கலவரப் படுத்த வேண்டாம்.. போக போக இயல்பா பேசிக்கலாம்.. அடுத்த சிட்டிங்” என்று சொல்லி டைமும் டேட்டும் சொன்னார்.
“தேங்க்ஸ் அங்கிள்” என்று அவரிடம் விடை பெற்றுக் கொண்ட வேரல் சமரனை அழைத்துக் கொண்டு வெளியே வர, பின்னாடி கங்குவன் வந்தான்.
“என்னடா ஆச்சு எல்லாம் ஓகே தானே?” மருத்துவமனைக்கு வெளியே நின்று இருந்தான் இளந்திரையன். டியூட்டியில் இருந்து அப்படியே வந்து இருப்பான் போல.. யூனிபாம் கூட மாற்றி இருக்கவில்லை.
“இன்னும் ரெண்டு சிட்டிங் இருக்குன்னு சொன்னார்டா” என்றவன்,
“வா பேசிட்டே போகலாம்” என்று அவனை தன் காரில் அழைத்துக் கொண்டான்.
வேரலையும் சமரனையும் பின் இருக்கைக்கு மாற்றி விட்டவன், நண்பனோடு கதை அளந்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.
“நான் ஓட்டவாடா..”
“ஒன்னும் வேணாம் நீ ரெஸ்ட் எடு” என்று கங்குவனே வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான்.
“பசிக்கிதுடா”
“இரு நல்ல ஹோட்டலா பார்க்கிறேன்” என்று பின்னாடி இருக்கும் இருவரையும் கண்டுக் கொள்ளாமல் நண்பர்கள் இருவரும் பேச்சில் மூழ்கினார்கள்.
“ப்ச்.. ரெண்டும் ஒன்னு சேர்ந்தா நம்மளை கண்டுக்க மாட்டாங்கடா சாம்.. வா நாம வேடிக்கை பார்த்துக்கிட்டே ஜூஸ் குடிக்கலாம். அந்த ரெண்டு எருமைக்கும் குடுக்க வேண்டாம்” இரகசியம் பேசியவள் பிள்ளைக்கு வெளியே காட்சிகள் எதுவும் தெரியாததால் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அவனுடன் கதை பேசியபடி, அவனுக்கு ஜூசை குடுத்தபடி வந்தாள்.
“என்னடா பின்னாடி சத்தமே இல்ல.. ரெண்டும் தூங்கிடுச்சா” என்று திரும்பி பார்த்தான் திரையன்.
“பாரேன் நம்ம ரெண்டு பேரையும் விட்டுட்டு அதுங்க மட்டும் ஜூஸ் குடிக்கிதுங்க” என்று தாவி போய் அவர்களிடம் இருந்த ஜூசை வாங்கி தன் வாயில் சரித்தவன், மீதியை நண்பனின் வாயிலும் ஊற்றி விட்டான்.
“டேய் அண்ணா அது எங்களோடதுடா...”
“மாமா அத்து எங்கது” இருவரும் பிடுங்க வர, அதற்குள் இருவரும் ஆளுக்கு ஒருவாய் என்று குடித்து முடித்து விட்டார்கள்.
“பிராடுங்களா..” திட்டியவள்,
“எனக்கெல்லாம் தெரியாது.. இப்பவே எங்களுக்கு ஜூஸ் வேணும்.. இல்ல.. சீட்டுல ப்ளேடு போட்டுடுவேன்” என்று ஊக்கை எடுத்து அதன் கூர் முனையை சோதிக்க,
“ஏய்.. சீட்ல கை வச்ச உன்னை கொண்ணுடுவேன்டி” எகிறினான் கங்குவன்.
“அப்படி தான் வைப்பேன்.. கண்ணா இந்தா உனக்கு ஹேர் பின்.. நீயும் கிழிச்சு விடு.. நம்ம ஜூசை குடிச்சாங்கள்ள. இவங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..” என்று ரகளை பண்ண, அடுத்து வந்த உயர் ரக உணவு விடுதியில் நிறுத்தி அவள், சாம் இருவரும் கேட்டதை எல்லாம் நண்பர்கள் இருவரும் வாங்கி கொடுத்தார்கள்.
மொத்தமாக இருவரின் பர்சையும் காலி பண்ணி விட்டு சொகுசாக பின்னாடி போய் அமர்ந்துக் கொண்டார்கள் கேடிகள் இருவரும்.
“என் பையன் ரொம்ப சந்தோஷாம் இருக்கான்டா”
“கண்ணு வைக்காதடா..” அதட்டிய திரையன்,
“நாளைக்கு நீயே பையனை கிளாசுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்திடுடா.. வேரலால வர முடியாது. அதே சமையம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்திடு” என்றான்.
“ஏன்டா என்ன விசேசம் வீட்டுக்கு வர சொல்ற”
“வேரலை நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்கடா...” என்றான் திரையன்.
கங்குவன் திரும்பி வேரலை பார்த்தான். அவள் அவன் பிள்ளையிடம் கிச்சு கிச்சு மூட்டி விளையாடிக் கொண்டு இருந்தாள். அவளின் முகத்தில் அத்தனை புன்னகை நிறைந்து இருந்தது.
இவனது நெஞ்சில் சொல்லொண்ணாத வலி எழுந்தது முதல் முறை.





