Notifications
Clear all

அத்தியாயம் 14

 
Admin
(@ramya-devi)
Member Admin

இதோ இப்பொழுது கூட தன்னை தேடி தவிப்பவனின் காதலை உணர்வு பூர்வமாக உணர்ந்தவள் அவனை விலக்கிவிட்டு செல்ல முடியாமல் தான் அவன் முன்பு ஆயுதம் இல்லாதவளாய் நின்றுக்கொண்டு இருக்கிறாள். இது இவளது காதல்...

நீ என்னை விட்டு கொடுத்தாலும், நான் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்.. இது தான் என் காதல்... என்று நெஞ்சை நிமிர்த்தி திமிரோடு இருக்கிறான் ஆதி...

இருவரது நிலையும் அதித காதலை தான் வெளிப்படுத்துகிறது... அதை அறிந்த சீதா மெளனமாய் கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார்.

இரு பிள்ளைகளும் அவரது பிள்ளைகள் தானே... இதில் யார் ஒருவருக்கு என்றாலும் துடிப்பது அவர் தானே... இதெல்லாம் வேண்டாம் என்றால் மயூ பிடிவாதமாய் இது வேண்டும் என்று அடம் பிடித்துக்கொண்டு இருக்கிறாள்...

இது எப்படி, எவ்வாறு, எப்போது, முடியும் என்று ஒருவருக்கும் தெரியாமல் ஆட்டி விக்கும் படி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்..

பாவாடை ரவிக்கையோடு நின்றிருந்தவளை சிவந்த விழிகளால் பார்த்தவன், அந்த உடைக்கு உரிய தாவணியை எடுத்து அவள் மீது வீசினான் கடும் எரிச்சலில்...

தன் மீது வந்து விழுந்த உடையை பற்றியவள் திரும்பி அவனை பார்த்தாள். மேல் சட்டையில்லாமல் சார்ட்சோடு கம்பீரமாய் நின்றுக்கொண்டு இருந்தான்... கூடவே அடங்காத ஆத்திரத்தோடு..

அவனை நெருங்கி சமாதனம் செய்ய மனம் துடித்தாலும், இப்பொழுது சென்றால் இன்னும் கடித்து குதருவான் என்று அறிந்தவள் கண்ணாடி முன் நின்று தாவணியை அணிய முற்பட.. அவளது இந்த மௌனம் அவனை இன்னும் சீண்டி விட்டது...

“நான் சொன்னதுக்கு மேடம் இன்னும் பதிலே சொல்லல...” ஆத்திரமாய் கேட்டான். அதில் அவனை திரும்பி பார்த்தவள்,

“அதை முதல்ல நான் சாப்பிட்டுட்டு, அப்பறம் உங்களுக்கு ஊட்டி விடுறேன்... ஆனா இப்போ என்னால முடியாது கொஞ்ச நாள் கழிச்சு அதை செய்யிறேன்.” என்றவள் முதன் முறையாக இல்லையில்லை அவளது வாழ்வில் இரண்டாவது முறையாக அவனுக்கு பதிலடி கொடுத்தாள்...

அவளது இந்த பதிலில் முறைத்தவன், அவளை நெருங்கி அவளது கழுத்தில் கை வைத்து நெரித்தவன்,

“உன்னை எதுவும் செய்ய முடியாதுன்னு இல்லடி... செய்ய மனசு வரல.. அதுக்காக ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காத... இந்த ஆதிய பத்தி முழுசா தெரியாம உள்ள இறங்கிட்ட... நீ எவ்வளவு தூரம் போகணும்னு நினைக்கிறியோ அந்த அளவுக்கு போ... ஆனா முடிவு என் கையில தான்...” சீறியவன்,

“சாப்பாடு போடு...” என்று கீழே சென்றுவிட்டான்.

அவனது மிரட்டலில் பயம் எழுந்தது... ஆனாலும் இதை சமாளித்து தான் ஆக வேண்டும் என்று எண்ணியவள் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டு, அவசர அவசரமாய் தாவணியை சுற்றிக்கொண்டு கீழே சென்று, இருவருக்கும் தட்டை எடுத்து உணவு பரிமாறி அவனோடு அமர்ந்து உண்டாள்.

அதன் பின் அவளிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளவில்லை ஆதி... இருவரும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தார்கள். அலுவலகம் செல்ல வேண்டியது இருந்தாலும் செல்லவில்லை அவன்...

க்ளாங் பெரும் தயக்கத்துடன் மயூக்கு அழைத்தான்..

“மேம் ப்ளீஸ்... கேசவன் சாருக்கு என்னால பதில் சொல்ல முடியல... சம்திங் டூ இட்... வெரி இம்பார்டன்ட்..”  என்று இருக்கும் சூழ்நிலையை அவளிடம் விளக்க... காதில் போனை வைத்த படி, ஆதியின் அறைக்கு சென்று பார்த்தாள். அங்கே விட்டத்தை வெறித்த படி படுத்து இருந்தான்...

அவனுக்கு எப்பவும் இசை ரொம்ப பிடிக்கும்.. தனியான நேரம் எப்பொழுதும் அவனுடன் ஏதாவது இசை சுழன்ருக்கொண்டே இருக்கும்.. இன்று அது கூட இல்லாமல் வெறித்துக்கொண்டு இருப்பவனை பார்த்தவளுக்கு அவனை கலைக்க மனம் வரவில்லை...

பெருமூச்சுடன் “மேற்கொண்டு என்ன செய்யணுமோ அது எல்லாவற்றையும் செய்து, தயாரா வைங்க... அவங்களையும் வர சொல்லுங்க... சார்ப் டைம் செவென் தேர்ட்டி... குயிக்... நான் வரேன் க்ளாங்...” என்றவள் தன் உடைகளை மறுபடியும் மாற்றிக்கொண்டு மீட்டிங்கு கிளம்பினாள்.

இரவு பொழுது வெளியே கிளம்பியவளை பார்த்த சீதா...

“என்ன மயூ இந்த நேரம் கிளம்புற... எனி எமர்ஜென்சி...”

“ம்ம்ம்... ஒரு முக்கிய மீட்டிங் அத்தை. அதான்...”

“ஆதி வரலையா...”

இது ஆதியோடது தான் என்று சொல்ல முடியாமல், “தலை வலின்னு படுத்து இருக்காரு அத்தை... நான் பார்த்துக்குறேன்.. நீங்க ஒரி பண்ணிக்காம இருங்க..” என்றவள் கிளம்ப,

“இரு மயூ நானும் வரேன்...” என்றவர் அவளுடன் அவரும் கிளம்பி விட்டார்.

“அத்தை என்னால சமாளிக்க முடியும்...”

“அதுக்கு இல்ல மயூ... இரவு நேரம் இல்லையா.. அதான் வா...” என்றவர் அவளுடன் இணைந்துக்கொண்டார்.

வீட்டில் ஆதியை தவிர வேறு யாரும் இன்னும் வந்து இருக்கவில்லை.. கேசவன் தொழில் விசயமாக டெல்லி சென்று இருந்தார். பிள்ளைகள் நால்வரும் படிப்பு விசயமாகவும் கம்பெனி விசயமாகவும் வெளியே சென்று இருந்தார்கள். அதனால் வீட்டில் ஆதி மட்டுமே இருந்தான்.

அவனது தனிமை கோலத்தை கலைக்க அங்கு யாருமே இல்லாமல் போனார்கள்.

காலையில் மீட்டிங் வெற்றிகரமாக முடியவில்லை என்று அறிந்த கேசவன் கோவத்தின் உச்சியில் இருந்தார். அப்பொழுது இருந்து ஆதிக்கும் க்ளாங்கிற்கும் மாற்றி மாற்றி போன் போட்டு சலித்து போனார்.

ஆதி எந்த பதிலும் க்ளாங்கிற்கு சொல்லாததால் கேசவனிடம் க்ளாங்கால் பேசமுடியாமல் போனது...

கேசவன் அந்த வெளிநாட்டு ஆட்களிடம் பேசி மீண்டும் மீட்டிங்க்கு ஏற்பாடு செய்தார்.

“க்ளாங், மறுபடியும் அந்த நிருவனத்துக்கிட்ட பேசி ஓகே வாங்கி இருக்கேன். இப்பவாச்சும் உன்னோட பாசை கொஞ்சம் வேலையில கவனத்தை வைக்க சொல்லு... என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது.. இந்த மீட்டிங் சக்சஸ்ன்ற மெசேஜ் மட்டும் தான் எனக்கு வரணும்... காட் இட்...” என்று வைத்துவிட்டார் கேசவன்..

அப்பொழுது இருந்து க்ளாங் ஆதிக்கு போன் போட்டு போட்டு பார்த்தான்... அவனது போன் முழு ரிங் போய் கட்டாணதே தவிர ஒரு முறை கூட எடுக்கப்படவில்லை.

அதன் பின் ஒரு கட்டத்துக்கு மேல் போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது.. ஆதியின் பெர்மிசன் இல்லாமல் அவனை தேடி வர கூடாது என்பது கட்டளையாக பிறப்பிக்கப்பட்டு இருந்தது.. அதனால் அவனை தொடர முடியாமல் தடுமாறி போய் இருந்தவன், வேறு வழியில்லாமல் மயூவிடம் விஷயத்தை சொல்ல, அவள் உடனே கிளம்பி விட்டாள்.

அவளும் மீட்டிங் நடக்கும் இடத்துக்கு சீதாவோடு வந்துவிட, மெய் காவலர்கள் அவர்களுக்கு இடைவெளிவிட்டு அவர்களை தொடர்ந்துக்கொண்டு இருந்தார்கள்...

ஆதி முடித்து வைத்திருந்த ரிப்போர்ட்டை ஒரு முறை வாசித்து பார்த்தவள், அதன் பின் இதை எப்படி கையாள்வது என்று திட்டமிட்டுக்கொண்டாள்.

அவனது திட்டத்தின் படியே மீட்டிங்கை கொண்டு சென்றாள் எந்த தடையும் இன்றி... அவளது சரலமான பேச்சிலும், நடந்துக்கொள்ளும் ஆட்டிட்டியூட்டிலும், திறமையிலும் முழு நம்பிக்கை வந்து இருந்தது அவர்களுக்கு.

ஆதியின் போக்கு அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஆதியின் நிறுவனத்தோடு இவர்கள் டையப் வைத்து தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தை ஆதியே உருவாக்கி இருந்தான். அதனால் தான் ஆதி சற்றே மெத்தனமாக இருந்தான்.

அவனது நடவடிக்கைகளை மயூ கவனித்துக் கொள்ளுவாள் என்பதால் ஆதி பாதியில் விட்டு சென்ற மீட்டிங்கை வெற்றி கரமாக நடத்தி சென்றாள்...

அன்றைக்கே லான்ஞ் பண்ண வேண்டிய நாளை முடிவெடுத்துக்கொண்டு அக்ரிமென்ட் சைன் பண்ணி இரு தரப்பிலும் ஏகமனதாக ஒப்புக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 29, 2026 11:27 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top