“என்ன அத்தை தனியா விட்டுட்டு போறீங்க...” சின்ன பிள்ளையாய் கேட்டவளை கண்டு முறைத்தவர்,
“எதுக்கு....? அவன் வலுக்கட்டாயமா என்னை அசிங்க படுத்துவான் இன்னும் நீங்க கிளம்பலையான்னு...? தேவையா இது எனக்கு.. அதுக்கு பெட்டர் நான் இப்போவே கிளம்புறேன். கவனமா வந்து சேருங்க ரெண்டு பேரும். மீட்டிங் புல்லா முடுஞ்சுடுச்சு...”
“நாளைக்கு அவங்களை கம்பெனிக்கு வர சொல்லி, ஆல் இந்தியாவுல இருக்க நம்ம கம்பெனியை சுற்றி பார்க்க சொல்லி சொல்லிக்கலாம்... இப்போ நீ அவனை கவனி... மத்ததை உன் பிஏவும், க்ளாங்கும் பாத்துக்குவாங்க..” என்று சொல்லி அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்ட சீதா பாடிகாட்சுடன் வீடு வந்து சேர்ந்தார்.
அவர் கிளம்பியவுடன் அது வரை கிண்டிக்கொண்டு இருந்த உணவை அப்படியே வைத்துவிட்டு இன்முகத்துடன் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ஆதியின் கரத்தை பற்றி,
“ஆதி... ப்ளீஸ் ஒரே ஒரு ஸ்மைல் மட்டும் குடுங்க ப்பா... அவங்க உங்களையே பார்த்துக்கிட்டு இருக்காங்க... பேசிக் நாகரீகம் இது...” தன்மையாய் சொன்னவளை வெறித்து பார்த்தவன், அவளது கரத்தை தன் கையிலிருந்து எடுத்துவிட்டு நகர...
“ஆதி இது மாமாவோட கனவு...”
“அதை நிறைவேற்ற தான் நீ இருக்கியே...” என்று திம்பிவிட்டான்...
“ஆதி ப்ளீஸ்...”
“....”
அவனிடம் எந்த மாறுதலும் இல்லாமல் போக.. பெருமூச்சு விட்டவள், “சரி ஒரே ஒரு நிமிஷம் நில்லுங்க...” என்றவள் அனைவரிடமும் முறையாக விடைபெற்றுக்கொண்டு ஆதியிடம் வந்தாள்.
“ஆதி....” தயக்கமாய் அவள் ஆரம்பிக்க...
“நோ எக்ஸ்ப்லனேசன்...” கர்ஜித்தவன் தன் காரில் ஏறி அமர்ந்தான். அவனது அருகில் எதுவும் செய்ய முடியாமல் தவிப்புடன் அமர்ந்து வந்தாள்.
வீட்டில் வந்து நிறுத்தியவன், அவள் பின்னோடு வருகிறாளா என்று கூட பார்க்காமல் விடுவிடுவென்று சென்றுவிட்டான். அவனது கோவத்தில் மனம் சுருண்டவள் மேலேறி அவனது தளத்திற்கு வந்தாள்...
தான் போட்டு இருந்த உடைகளை கழற்றி வீசி மூளைக்கு ஒன்றாய் எறிந்தவன், குளிர் நீரில் தன் கோவம் அடங்க குளித்தான்... ஆனாலும் அவளது இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சொல்லிவிட்டு போகாததற்கு இவ்வளவு அக்க போறா என்று எண்ணிய சீதா...
“போங்கடா நீங்களும் உங்க காதலும்...” முணங்கிவிட்டு தூங்க சென்றார்.
நைட்வேரில் படுத்து இருந்தவனுக்கு பசி உணர்வு கூட மறுத்து போய் இருந்தது... ஏனோ அவளின் ஒரு சின்ன புறக்கணிப்பை கூட அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாமல் போனது...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தளம்... வேண்டும் என்கிற அளவுக்கு ப்ரைவசி இருந்தாலும், காலை உணவு வேலை அனைவரும் ஒன்றாய் சேர்ந்து தான் சாப்பிட வேண்டும்... என்பது அவ்வீட்டின் எழுதபடாத விதி... மற்ற நேரம் அவரவர் வசதிப்படி பார்த்துக்கொள்ளலாம்...
மயூரா தேவியும் குளித்து பிரெஷ் ஆகி வந்தவள் உணவை எடுத்து வர சொல்லிவிட்டு ஆதியின் லிவ்விங் அறைக்கு வந்தாள்..
அவன் அங்கு இல்லாமல் அவனது படுக்கை அறையில் இருந்தான். வந்த உணவுகளை முன் அறையிலே வைக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
உப்பரிகையில் நின்று இருளை வெறித்துக்கொண்டு இருந்தான் ஆதி... இப்பொழுது எல்லாம் மயூ தன்னை விட்டு ரொம்ப தூரம் விலகி செல்வது போல தோன்றி அவனது இதயத்தை அறுத்துக்கொண்டு இருந்தது..
அதில் அவனது மனம் சோர்ந்து போய் கோவம் கோவம் மட்டுமே மிஞ்சி போய் இருந்தது. அதை மயூவிடம் முழுவதுமாக காண்பிக்க முடியாமல் தடுமாறி போனான்.
அவனது அறையின் உள்ளே வந்தவள் அவன் இருக்கும் இடத்துக்கு வந்தாள். அவன் கம்பீரமாக நின்ற தோரணையே என்னை நெருங்காதே என்று சொல்ல... உள்ளத்தில் தோன்றி இருந்த பயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவனது தோளை மென்மையாக தொட்டாள்.
“சமாதானமா...?” வெறுப்பாய் வந்தது அவனது வார்த்தைகள்.
“இது மாமாவோட கனவு ஆதி... அதுக்காக தானே நீங்க எல்லா ஏற்பாடும் செய்து வச்சு இருக்கீங்க. அதோட இல்லாம காலையில அந்த மீட்டிங்க்கு போனீங்க... ஆனா அது பாதியில நின்னு போய்டுச்சு... அதை சரி செய்ய தான் உங்களை மாமாவும் க்ளாங்கும் மாற்றி மாற்றி கூப்பிட்டு இருக்காங்க. ஆனா நீங்க தான் எடுக்கவே இல்ல..” என்றால் தயக்கமாய்.
“அதுக்கு...” கூர்மையாக அவளை பார்த்து கேட்டான்.
“மாமா உங்களை குறை சொன்னா எனக்கு பிடிக்காது தானே...” தயக்கமாய் கேட்டாள்.
“ப்ச்... நீ ஏன் அந்த மீட்டிங் அட்டென் பண்ணின அப்படின்னு நான் கேக்கல... எதுக்காக என் கிட்ட சொல்லாம போன. அது தான் என்னோட கேள்வி...” என்றான் எரிச்சலாக.
“நான் வந்தேன்... நீங்க கண்ணை மூடி இருந்தீங்க...” தயக்கமாய் சொன்னாள்.
“சோ...” அம்பின் சீற்றத்தோடு கேட்டான்.
“உங்களை கலைக்க மனம் வரல ஆதி...” என்றவள், அவனது அறைக்குள் சென்று ஒரு துண்டு காகிதத்தை அவனது கைகளில் திணித்தாள். என்ன வென்று அதை பார்த்தான்.
“என்ன இது...”
“நான் மீட்டிங் போறேன் ஆதி... தேட வேண்டாம்... என்கிட்டே வரணும்னா இங்க வாங்கன்னு எழுதி வச்சுட்டு தான் போனேன்..” தலை குனிந்து சொன்னாள்.
“நான் உங்க கிட்ட சொல்லாம எந்த செயலையும் செய்ய மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா ஆதி...” உள்ளம் உருக கேட்டவளை ஏளனமாய் பார்த்து,
“ஆனா வாழ்க்கைக்கு வேண்டிய முக்கியமான ஒரு செயலை என்னை கேட்காம செஞ்சுட்டு, இப்போ வெளியில இங்க போய் இருக்கேன்னு குறிப்பு வச்சுட்டு போயிட்டு... உங்கக்கிட்ட எதையும் சொல்லாம செய்ய மாட்டேன்னு சொல்ற... இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...” என்று வார்த்தையாலே அவளை கொன்றவன், அவள் திணித்த பேப்பரை சுக்கு நூறாய் கிழித்து எறிந்துவிட்டு...
“உன்னை இப்படி பண்ண தான் ஆசை.. ஆனா உன்னை அப்படி பண்ண விடாம உன் மேல நான் வச்ச காதல் என்னை தடுக்குது...” மேலும் கூர் வேலை பாய்ச்சினான் அவளது நெஞ்சில்...
“ஆதி....” கலங்கினாள்.
“என் ஆசைகள் எல்லாத்தையும் காற்றில் வீசிவிட்டு இப்போ சமாதானம் செய்வது போல உன்னால எப்படி இவ்வளவு இயல்பா இருக்க முடியுது மயூ... ஆனா என்னால கொஞ்சம் கூட முடியல.. ஒவ்வொரு நொடியும் நீ என்னை விட்டு போன நொடி தான் எழுந்து வதைக்கிறது... என் வலி உனக்கு புரியல மயூ... என் வலி புரிந்து இருந்தா நீ என்னை விட்டு விலகி இருக்க மாட்ட...”
“உன்னை பார்க்கும் ஒவ்வொரு நேரமும் என் கோவத்தை விதவிதமா காட்டி என் மனதின் காயத்தை ஆற்றிக்கொள்ள நினைக்கிறேன்...”
“ஆனா அது காயத்தை ஆற்றாம, இன்னும் ஆழமா கீறி விடுவது போல எதையும் மறக்கவே விடாம என்னையே திருப்பி வதைத்துக்கிட்டு இருக்கு... காதல் கண்ணாடி போலன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க... நாம எதை காட்டுரமோ அதை தான் திருப்பி குடுக்கும்னு...” வேதனையுடன் சொன்னவன்,
“இங்க இருந்து போ... உன்னை காண காண என் ஏமாற்றம் தான் கண் முன் எழுந்து என்னை கொல்லுது...” என்று அவளை காண படிக்காமல் கண்களை மூடிக்கொண்டான்.
அவனது இந்த வார்த்தைகளில் உள்ளம் துடித்து போனவள் வெடித்து எழும்பிய கேவலை அடக்க முடியாமல் வாய் விட்டு கதறிவிட்டாள்.





