Notifications
Clear all

அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

அன்றைக்கே லான்ஞ் பண்ண வேண்டிய நாளை முடிவெடுத்துக்கொண்டு அக்ரிமென்ட் சைன் பண்ணி இரு தரப்பிலும் ஏகமனதாக ஒப்புக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு சென்றார்கள்.

மீட்டிங் சக்சஸ் என்று க்ளாங்கிடமிருந்து மெசேஸ் வர கேசவனுக்கு பெரும் திருப்தி எழுந்தது... சும்மாவா முதல் முறையாக இந்தியா முழுவதும் ரயில் பெட்டியில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கான மெக்கானிக் ஷாப்பை ஜெர்மனியுடன் டை அப் வைத்துக்கொண்டு அதை செயல் ஆற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...

இதில் ஜெர்மனி கம்பெனி தான் முக்கியம்... அது இருந்தால் தான் இந்தியாவில், இந்த பிராசசை நகர்த்த இயலும்... இல்லை என்றால் இந்த வகை பிசினசை இந்திய தொழில் துறை அங்கிகரிக்கவே செய்திருக்காது.

ஏனெனில் இந்திய கருபொருட்கள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி ஆகிக்கொண்டு இருக்கிறது. அவர்களுடைய சேவையை இதன் மூலம் வாங்கி கொள்ள இந்திய அரசாங்கம் திட்டமிட்டது.

அதை ஆதியின் மிக பெரிய நிறுவனம் செய்தல் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அவர்களுக்கு அனுமதி அளித்தது.

இதில் லாபம் பல கோடி என்றாலும்... அரசாங்கத்தின் பிடியிலிருக்கும் ரயில்வே துரையின் ஒரு சிறு பகுதி தனியார் மயமாக்கலுக்கு வருவது என்பது எவ்வளவு எளிதானது அல்ல...

அதில் உள்நாட்டிலே அவ்வளவு போட்டி இருந்தது.. இதில் ஜெர்மனி நாட்டு உபகரனங்கங்களும் ஒரு கருவியாய் உள்ளே வர வேண்டியது இருக்கிறது... அப்படி இருக்கும் போது அந்த ஜெர்மனி கம்பெனியை தங்கள் வசப்படுத்தி கொண்டே ஆகணும்...

மிகப்பெரிய பொறுப்பு அது... அதை ஆதியும் மயூவும் மிக எளிதாக செய்து முடித்து இருந்தார்கள். இன்னும் இந்த விஷயம் பொது மக்களுக்கு தெரியாது... அதற்குரிய எல்லா ஏற்பாடும் செய்துவிட்ட பின்பு தான் இதை சந்தை படுத்தவே முடியும்...

மெக்கானிக்கிலிருந்து தயாரிப்பு வரை கொண்டு போக வேண்டும் என்பது கேசவனின் கனவு... அதை முதலிலே கில்லி எறிவது போல இருந்த ஆதியின் செயலை கண்டு கடும் சினம் எழுந்தது கேசவனுக்கு...

அவரால் வர முடியாத நிலை... தொழில் துறை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.. அதில் இவர் மிக முக்கியமாக இருக்க வேண்டிய சூழல்... இல்லையென்றால் கேசவன் தான் இதை முழுவதும் எடுத்து நடத்தி இருப்பார்.

அதனாலே ஆதியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருந்தார் அவர்.. ஆனால் அவன் அதை அப்படியே விட்டுவிட்டு கிளம்பி இருந்தவனின் செயலை அவரால் மன்னிக்கவே முடியவில்லை... ஆனால் மயூ அதை திறம்பட வழி நடத்தி அழகாய் வெற்றி பெற செய்துவிட்டாள்...

அதை எண்ணியவருக்கு உள்ளத்தில் பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது...

“மயூ... வெல்டன் டா... கீப் ராக்... இதை கண்டிப்பா செலேப்ரெட் பண்ணியே ஆகணும்... டுடே நைட் டின்னர் மட்டும் அரேஞ் பண்ணிக் குடு.. நான் வந்ததுக்கு பிறகு சிறப்பா செய்யலாம்... நானும் அவங்க கிட்ட பேசுறேன்டா...” என்ற கேசவன் ஜெர்மனி ஆட்களுக்கு பேசி இன்னும் இரண்டு நாளில் பார்ட்டி வச்சுக்கலாம் என்று முடிவெடுத்தார்...

இதை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த சீதா

“இது அவன் விட்டுட்டு போன மீட்டிங்கா...?” என்றார் கோவமாக..

“அத்தை...”

“ஷ்... எதுவும் பேசாத... இப்போ டின்னர் வேலையை மட்டும் பார்ப்போம்..” என்று பல்லைக்கடித்தவர், ஜெர்மனி ஆட்களுடன் சேர்ந்து சாப்பிட, மயூவுக்கு வாயில் வைத்த உணவு தொண்டை குழியில் செல்லாமல் முள்ளாய் குத்தியது..

வீட்டில் தன் சிந்தனை இல்லாமல் விதானத்தை வெறித்துக்கொண்டு இருந்தவனின் தோற்றமே வர... அவளால் ஒரு கை பிடி அளவு கூட உண்ண முடியவில்லை... எல்லோரிடமும் சிரித்து பேசி... அவர்களை கவனித்தாளே தவிர அவள் ஒரு வாய் கூட உண்ணவில்லை..

அதை பார்த்த சீதாவுக்கு கடும் சினம் எழுந்தது... ஒருவரை ஒருவர் விட்டு இருப்பது கிடையாது.. ஆனால் காதலியே காதலனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து மனம் முடிக்க பார்க்கிறாள்...

இதென்ன சினிமாவா...? நினைச்ச உடன் மனதை மாற்றிக்கொள்ள... மயூ அவளையும் ஏமாத்திக்கொண்டு ஆதியையும் ஏமாற்றிக்கொண்டு இருப்பதை கண்டு அவ்வளவு ஆத்திரமாய் வந்தது...

இதெதுக்கும் அவசியமே இல்லாத நிலையில் தான் இருவரும் இருக்கிறார்கள்.. யார் இவர்களுடைய திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவள் இப்படி பண்ணிக்கொண்டு இருக்கிறாள்.

கண்டிப்பா நான் கிடையாது... ஒரு வேலை கேசவன்... நான் எதிர்ப்பு காண்பித்தால் கூட தகும். அந்த மனிதனுக்கு சுட்டு போட்டால் கூட அது வராது.. பின் என்ன தான் பிரச்சனையாக இருக்கும்... என்று பலவாறு யோசித்து தன்னை குழப்பிக்கொண்டு இருந்தார்.

ஆதி கண்டிப்பாக தன்னை மாற்றிக்கொள்ள மாட்டான்... ஆதி ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து அவனை வெளியே வரவைக்கவே முடியாது.. அவ்வளவு உறுதியாய் இருப்பவன்... இவளது விசயத்தில் எப்படி இதற்க்கு சம்மதித்தான் என்று தான் புரியவில்லை...

ஏனெனில் திருமணத்தை அறிவிப்பு செய்துவிட எல்லா ஏற்பாடும் செய்தாச்சு... அதும் உலகம் முழுவதும்... அப்படி இருக்கையில் எந்த நம்பிக்கையில் ஆதி இன்னும் மயூவை நினைத்துக்கொண்டு இருக்கிறான் என்று அவருக்கு தெரியவில்லை...

இவர்கள் இருவரது ஆட்டத்திலும் ரஞ்சனியின் நிலையை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை அவரால். அந்த அளவு ஆதி நடந்துக்கொண்டு இருக்கிறான். இதற்கு எல்லாம் காரணமாய் இருக்கும் மயூவை கண்டு சினம் இன்னும் பெருக்கெடுத்தது சீதாவுக்கு...

கல்யாணம் பேசி அது நடக்கவில்லை என்றால் வணிக வட்டாரத்தில் மிகப்பெரும் சறுக்கலாய் முடியும். அதை கேசவனால் தாங்கவே முடியாது. எதை நம்பிக்கொண்டு இவன் இந்த மாதிரி செய்துக்கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லையே... தன் பாட்டுக்கு புலம்பிக்கொண்டு இருந்தார் சீதா...

இவ்வளவு குழப்பத்துக்கும் காரணமானவளோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் எண்ணம் முழுவதும் தன் ஆதியை நிரப்பிக்கொண்டு அவனது நினைவிலே மூழ்கி இருந்தாள்...

அவனது எண்ணத்தின் நாயகனோ காலையில் எடுத்த புகை படத்தை பிரேம் போட்டு ஒரு பக்க சுவர் முழுவதுமாக பெரிது பண்ணி மாட்டி இருந்தான்... அதையே பார்த்துக்கொண்டு இருந்தான்...

அதில் மிக இயல்பாக மயூ மாராப்பை அள்ளி போட்டு, முந்தானையை மெல்லிய இடை தெரிவது போல கொத்தாய் சொருகி இருந்தாள்... ஒரு பக்க கூந்தள் அவளது மார்பிலிருந்து நழுவி இடையை தொட்டு நீண்டு இருக்க... அவளது முகமோ நிமிர்ந்து ஆதியை பார்ப்பது வைத்திருந்தாள்...

கண்களோ ஆதியிடம் நிலைத்து இருந்தது... வாயோ அவனிடம் எதையோ கேட்டுக்கொண்டு இருந்தது. அவளது அருகில் இருந்தவனோ கைகளை மடக்கிவிட்டு கோட்டை கழட்டி அவளுக்கு தோதாய் சற்றே குனிந்து அவள் சொல்வதை கேட்பது போல அவளது பக்கத்தில் ஒட்டி உரசிக்கொண்டு நின்றிருந்தான் ஆதி தேவன்...

அதை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு மயூ இப்பொழுதே அவன் கையில் வேண்டும் என்ற எண்ணம் வலுக்க வேகமாய் அவளது அறைக்கு சென்று பார்த்தான். அங்கே அவள் இல்லாமல் போக... மறைந்து இருந்த சினம் மீண்டும் துளிர்த்தது...

நேரம் பார்த்தான் மணி எட்டு என காட்ட... அவளது போனுக்கு கூப்பிட்டான்... அவள் எடுக்காமல் போக கண்களை ஆத்திரம் தழுவியது... என் போனை கூட எடுக்க முடியாத அளவுக்கு வந்துட்டியா...? பொங்கியவன்,  ஜீபீஎஸ் லொக்கேசன் அவள் இருந்த இடத்தை காட்ட அங்கு விரைந்து வந்தான்...

சரியாய் டின்னர் முடியும் வேலை, புயல் போல வந்தவனை அங்கிருந்த யாரும் சிறிதும் எதிர் பார்க்கவே இல்லை..

“ஆதி...” சன்னமாய் முணகியவளின் வார்த்தையில் நிமிர்ந்து பார்த்த சீதா அங்கே கடும் கோவத்துடன், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தவனை கண்டு தலையில் அடித்துக்கொண்டார் மானசீகமாக.

“வரும் போது அவன் கிட்ட சொல்லிட்டு வரலையா...?” ரகசியமாக கேட்டார்.

“இல்ல அத்தை... அவரு படுத்து இருந்தாரு.. அதான் நான் வந்துட்டேன்...” என்றாள் தயக்கமாய்.

“அப்போ இன்னைக்கு சாமியாடுவதை தவிர்க்க முடியாது... நான் சாப்பிட்டுட்டேன் நான் கிளம்புறேன்... நீ மெதுவா வந்து சேரு...” என்றவர் அவளது பியேவிடம் இருந்த கார் சாவியை வாங்கிக்கொண்டு கிளம்ப.

“என்ன அத்தை தனியா விட்டுட்டு போறீங்க...” சின்ன பிள்ளையாய் கேட்டவளை கண்டு முறைத்தவர்,

“எதுக்கு....? அவன் வலுக்கட்டாயமா என்னை அசிங்க படுத்துவான் இன்னும் நீங்க கிளம்பலையான்னு...? தேவையா இது எனக்கு.. அதுக்கு பெட்டர் நான் இப்போவே கிளம்புறேன். கவனமா வந்து சேருங்க ரெண்டு பேரும். மீட்டிங் புல்லா முடுஞ்சுடுச்சு...”

Loading spinner

Quote
Topic starter Posted : September 29, 2026 11:29 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top