Notifications
Clear all

அத்தியாயம் 19

 
Admin
(@ramya-devi)
Member Admin

கூடவே வெட்ட வெளியாக ஒரு இடத்தையும் அமைத்து இருந்தான் ஆதி தேவன்... அந்த வெட்ட வெளியின் ஓரம் பூச்செடிகளும், பெரிய கண்ணாடி ஊஞ்சலும், சில அடுக்குகள் கொண்ட தோட்டமும் நிறைந்து இருந்தது. அதிலயே ஒரு பக்கம் சாய்வு இருக்கையும், இரு நாற்காலியும் போட பட்டு ஒரு டீபாயும் இருந்தது...

பார்த்து பார்த்து வடிவமைத்து இருந்தான் ஆதி... அந்த தளத்துக்குள் நுழைந்தாலே ஏதோ ஒரு மாற்றம் கண்டிப்பாக நிகழும் அவனுள்... ஆனால் இன்று அந்த மாற்றம் கூட அவனை நெருங்க முடியாமல் அவனை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தாள் மயூ...

பெருமூச்சு விட்டவன் தன்னவளின் வருகையை எதிர் பார்த்து இருந்தான்... மயூவும் அவனை ஒவ்வொரு இடமாக தேடி, கடைசியில் அவன் ஸ்விம்மிங்பூலில் இருப்பதை பார்த்து

“என்னங்க இது இந்த நேரத்துல தண்ணியில இருக்கீங்க... உடம்புக்கு முடியாம போனா என்ன பண்றது...” கேட்டவள் தண்ணீரை தொட்டு பார்த்தாள். அது இளம் சூடாக இருப்பதை உணர்ந்த பின்பே நிம்மதியானாள்.

அவனது நீச்சல் குளத்தில் வேணும் என்கிற பொழுது சூடாகவும், குளிர்மையாகவும் தண்ணீரை மாற்றிக்கொள்ளும்படி வசதி செய்து இருந்தான்.

“சாப்பிடலையா... சாப்பாடு அப்படியே இருக்கு...” அவனது தவிப்பை உணர்ந்து கேட்டாள்.

“ம்ம் சாப்பிடனும்...” என்றவன் மேலேறி வந்தான்... “சாப்பாடு எடுத்து வை... நான் குளிச்சுட்டு வந்துடுறேன்.” என்றவன் குளித்து முடித்து வந்தான்.

வெட்ட வெளி இருந்த இடத்தில் சாப்பாட்டை எடுத்து வைத்தவள் இருவருக்கும் பரிமாற அவளை பார்த்துக்கொண்டே உண்டான்.

அவளை கண்களில் நிரப்பிக்கொண்டே இருந்தான் நொடி நேரம் கூட இமைக்காமல்..

“கவிஞர்கள் சரியா தான் சொல்லி இருக்காகங்க இல்ல...” மெல்லமாய் அவளை பார்த்த படியே ஆரம்பித்தான் பேச்சை...

திடுமென அவன் ஆரம்பிக்க சற்று சுதாரித்து “என்ன சொல்லி இருக்காங்க...” என்றாள் தன் சிந்தனையிலிருந்து களைந்து.

“இல்ல... காதலியை பார்க்கிற நேரம், இமை கூட சுமையாய் இருக்குமாம் காதலனுக்கு... அதை நேற்று வரை உணரல நான்... ஆனா இன்னைக்கு உணருறேன்... இமைக்கும் நொடி கூட உன்னை காண முடியாம என் நெஞ்சு தவிச்சு துடிச்சு போகுது மயூ...” என்றான்.

“ஆதி....” தவிப்புடன் வெளிவந்தது அவளது சொல்..

“சாகுற நேரம் தெருஞ்சுடுச்சுன்னா அதுக்கு பிறகு இருக்குற வாழ்க்கை நரகம் தெரியுமா...? அந்த மரண நேரம் நெருங்க நெருங்க நெஞ்சுக்குள்ள ஒரு பயம் வரும், தவிப்பு வரும், படபடப்பு வரும்... இன்னும் கொஞ்ச நாள் இந்த பூமியில வாழ்ந்துட மாட்டம்மான்னு ஆசை வரும், ஏக்கம் வரும், எப்படியாவது இந்த உயிரை தக்க வச்சுக்க மாட்டமான்னு தோணும்...”

“கட்டுக்கடங்காத கோவம் வரும்... ஆனா யாரையும் குத்தம் சொல்ல முடியாது... இது தான்னு  உறுதியா தெரியும், ஆனா அது மனசு ஏத்துக்காது. இதுல இருந்து யாரும் நம்மளை காப்பாத்த மாட்டாங்களான்னு தோணும்... மயூ...” என்றவனை கண்கள் கலங்க பார்த்தாள்.

“இப்போ நானும் சாவின் விளிம்புல இப்பவா அப்பவான்னு இருக்கேன்... நீ என்னை விட்டு போகிற நாள் தெருஞ்சதுல இருந்தே எனக்குள்ள உன்னை பதுக்கி வச்சுக்கனும்னு வெறியா வருது... என்ன செஞ்சா என் மயூ என்னோட இருப்பான்னு நினைச்சு பைத்தியம் போல எதையாவது செஞ்சு வைக்கிறேன்...”

“உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு... உன்னை பார்க்காத ஒவ்வொரு கணமும் பிரிவின் வலி அதிகமாயிட்டே இருக்கு. அந்த கனத்தை தாங்க முடியல தேவிமா... உன்னை பிரியிறதை விட செத்துடலாம்னு தோணுது... ஆனா செத்துட்டா எப்பவாவது உன்னை பாத்துக்குற சந்தர்ப்பம் கூட எனக்கு இல்லாமே போயிடுமேன்னு விட்டுட்டேன்...”

“இதையெல்லாம் சொல்லி உன்னை வருத்த பட வைக்க கூடாதுன்னு தான் என்னை நான் கட்டுப்படுத்திக்கிட்டு இருந்தேன்... ஆனா முடியலடி... எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு... உயிரில் உயிராய் உறைந்து நின்ற தருணங்களை மறுபடியும் நினைத்தது பார்க்கிறேன்... அதுல கூட என் மனசு ஆறாம உன்னையே தேடுது...” என்று அவன் சொல்ல சொல்ல மௌன கண்ணீர் விட்டவள் அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.

நேற்றைக்கு அவளுக்கு இருந்த அதே உணர்வு இன்று இவனுக்கு இருக்க... எதுவும் சொல்லாமல் தன் முகத்தை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தாள் மிக பிரெஷ்கா...

“என் ஆதிக்கு இல்லாது எதுவுமே என் கிட்ட இல்லையே தேவ்... என் கிட்ட என்ன தயக்கம்...” என்றவள் அவனை பார்க்க வசதியாக அமர்ந்தவள், வைத்த கண் வாங்காமல் அவனை பார்க்க ஆரம்பித்தாள்.

ஆதியும் கைகளை கூட கழுவாமல் தன் இதயம் முழுவதும் தன்னவளை நிரப்பிக்கொள்ள, அவளது முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்க ஆரம்பித்தான்.

இருவரது பார்வைகளும் நேர்கோட்டில் இருந்தது.. அதில் எந்த வித உணர்வுகளுமே இல்லை... வெறி மட்டுமே இருந்தது... இன்றோடு இந்த உலகம் அழிந்துவிட போவது போல் இருவரது பார்வைகளும் ஒருவரை ஒருவர் கௌவிக்கொண்டு இருந்தது...

அதிலிருந்த பிணைப்பை இருவருமே நன்கு உணர்ந்துக்கொண்டார்கள். எதிரெதிராய் அமர்ந்து ஒருவரின் விழிகளுக்குள்ளே ஒருவர் சென்று விடுவது போல இருந்தது இருவரது பார்வைகளும்...

விடிய விடிய இருவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்களே தவிர வேறு எந்த செயலும் இருவரிடமும் இருக்கவில்லை... தூக்கம் கூட தூர விலகி நின்றது இருவரது காதலையும் கண்டு...

விடிந்த பின்பே இருவரும் லேசாய் கலைந்தார்கள்... கண் சிமிட்டாமல் பார்த்த பார்வைகளால் நான்கு விழிகளும் சிவந்து போய் இருந்தது... அது கூட இருவருக்கும் தனி அழகை கொடுத்தது.

பறவைகளின் சத்தத்தில் லேசாய் கலைந்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முட்டி நின்றார்கள்...

“காபி வேணுமா...?” அவனது சோர்வை கண்டு கேட்டாள்.

“ம்ம்ம்... நீயே போடு...” என்றவன் எழுந்து சூரிய உதயத்தை பார்த்தான். எழுந்து போய் அவனது அறையிலே இருந்த சமையல் அறையில் புகுந்து காபி போட்டு கொண்டு வந்தவள் அவனிடம் நீட்ட... வாங்கி பருகியவன், அந்த வாசத்தை உள் இழுத்தான்.

“வாசம் பிடுச்சி இருக்கா...?”

“ம்ம்... ரொம்ப... இது தனி அரோமா... உன் கூந்தல சுவாசிக்கும் போது வருமே ஒரு ஸ்மெல் அது போல நீ போடுற காபியும் என்னை மயக்குது...” என்றான்.

எதுக்கெடுத்தாலும் தன்னோடு இணை கூட்டி பேசுபவனை கண்டு உள்ளம் கர்வம் கொண்டது. ஆனால் அவனது இந்த அன்பை அனுபவிக்க முடியாமல் போவதை எண்ணி வருந்தியவள் அதை ஒதுக்கி வைத்துவிட்டு,

“எங்கயாவது வெளிய போகலாமா..?” கேட்டாள்.

“ம்ம் நீயே சொல்லு எங்க போகலாம்...”

“யாருமே இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா...?”

“சரி... ரெடியாகு போகலாம்” என்றவன் ரசித்து ருசித்து குடிக்க ஆரம்பித்தான் காபியை..

“ம்ம்ம் சரிங்க..” என்றவள் அவனது அறையிலே குளித்து அவனது அலமாரியில் இருந்த தனது உடைகளை எடுத்து அணிந்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அவனும் குளித்து கிளம்பி வந்தான்... இருவரும் ஒன்றாய் கீழே வந்து உணவு உண்ண... மொத்த குடும்பமும் பே என்று அவர்களை பார்த்தது... பின்ன இவ்வளவு ஒற்றுமையை அதும் ஆதி கோவ படாமல் இருப்பதை கண்டு அவர்களுக்கு வியப்பு தான்.. ஆனால் அதை யாரும் பெரிதாக்காமல் அவரவர் வேலையை செய்து முடித்துவிட்டு கிளம்பினார்கள்.

இன்றைக்கு இருக்கும் முக்கிய வேலைகளை இருவரும் கேன்சல் பண்ணிவிட்டு சிட்டியை தாண்டி போய்க்கொண்டு இருந்தார்கள். கூடவே இருவரது போனையும் அனைத்து போட்டுவிட்டான் ஆதி... காரில் எரிய உடனே...

“ஏதாவது எமெர்ஜென்சின்னா என்ன பண்றது ஆதி..”

“இது நமக்கான நேரம்... இதுல யாருமே இண்டர்பியர் ஆகுறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது... எனக்கு முழுமையா உன் கூட இருக்கணும்...” என்று குரலை உயர்த்தி சொல்ல, பெண்ணவளின் உடலில் சிறு நடுக்கம் ஓடி மறைந்தது...

Loading spinner

Quote
Topic starter Posted : October 1, 2026 8:26 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top