“சரி போய் படு... தூக்கம் வருது..” என்றவன் அறையின் உள்ளே சென்றுவிட்டான். அவனது இந்த ஒதுக்கம் மனதை பிசைய வேறு வழியில்லாமல் அவனோடு உள்ளே வந்தாள்...
வந்தவளின் கண்களில் அங்கிருந்த பிரம்மாண்டமான படம் பட... சட்டென்று ஆதியை பார்த்தாள். அவனோ கண்களை மூடி படுத்துவிட்டான்.
அவளால் அந்த படத்திலிருந்து பார்வையை விளக்கிக்கொல்லவே முடியவில்லை... ஏதோ வசியம் செய்தது போல அவளது கண்கள் அந்த படத்திலே நிலைத்து நின்றது...
மிக இயல்பாக வந்து இருந்தது அந்த படம்... அதை காணும் போதே இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கம் மிக அப்பட்டமாய் தெரிந்தது. இன்னும் சில நாட்களில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு, அவனது அறையில் அவளது படத்தை மாட்டி வைத்து இருப்பவனை கண்டு ஒன்றும் சொல்ல முடியாமல் நெஞ்சு கொள்ளா துக்கத்துடன் அங்கிருந்து விலகி ஓடினாள்.
“உங்க அன்புக்கு நான் பாக்கியம் ஆகவில்லையே ஆதி...” கதறியவளின் கதறல்கள் அவளது அறையிலே அடங்கி போனது வேறு யாருடைய காதுகளுக்கும் சென்று சேராமல்...
ஆனால் அவளின் அவனுக்கு மட்டும் அவளுடைய கதறல் காதில் ஒலித்ததுக்கொண்டே இருந்தது... ஆனால் அவளை ஆறுதல் படுத்த தான் முடியவில்லை...
எரியும் தன் நெஞ்சுக்கே ஆறுதல் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறான். இதில் இவன் எங்கே சென்று அவளுக்கு ஆறுதல் கூறுவது...
அவளது கொலுசின் ஒலி தேய்ந்து மறைந்த அடுத்த நொடி கண்களை திறந்து படுக்கையின் எதிர் புறம் சுவரில் நிறைந்து இருந்த அந்த புகைப்படத்தை பார்த்தான்.
“இப்படியே என்னோடு இருந்துவிடேன்... அந்த நொடி அப்படியே பிரீஸ் ஆகி இருந்தா என் கைக்குள்ளயே உன்னை வச்சு இருப்பேன்ல... ஏன் செல்லம்மா இந்த முடிவு எடுத்த...? என் மனசை கொஞ்சம் கூட நினைச்சி பார்க்காம விட்டுட்டியே...” மனதோடு புலம்பிக்கொண்டு இருந்தான்.
அந்த நேரம் அவள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று அவனது ஒவ்வொரு செல்லும் துடியாய் துடித்துக்கொண்டு இருந்தது... அவளது பூ முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாலே போதுமே.. அவனது ஜென்ம அனைத்தும் அதிலே கரைந்துவிடுமே...
அவளை போய் தொந்தரவு பண்ணவும் மனம் வரவில்லை. ஆனால் இந்த உணர்வுகளின் பிடியிலிருந்து வெளி வரவும் அவனால் முடியவில்லை...
ஜிம் சென்று வொர்கவுட் செய்தான்.. கடினமான கருவிகளை கூட மிக எளிதாக அசைத்து அசைத்து பயின்றவனால் அவனது மன போக்கை மட்டும் மாற்றவே முடியவில்லை...
இது வேலைக்கு ஆகாது என்று நீந்த சென்றவன், தன் தளத்திலே இருந்த நீச்சல் குளத்தில் தொப்பென்று விழுந்தான். நன்றாக கையை நீட்டி காலை அடித்து நீந்தினான்...
பத்து நிமிடம் கூட சென்று இருக்காது... காலையில் நீச்சல் குளத்தில் தன்னவளோடு போட்ட ஆட்டம் கண் முன் வர ஷிட் என்று தண்ணீரில் குத்தினான்... என்ன செய்தாலும் இந்த வலி அவனுக்கு போக மறந்தது...
அதில் அவனது முகத்தில் நீர் திவலைகள் தெரித்தது... அதை வழித்து போட்டவன் நீச்சல் குலத்தின் உள்ளே இருந்த போன் ஸ்டாண்டில் இருந்து போனை எடுத்து
“கம் டு மை ரூம்” என்று வைத்துவிட்டான்..
அவ்வளவு நேரம் அழுது கரைந்தவள் அப்பொழுது தான் கண்கள் சொருக தூங்க தொடங்கினாள்... காதின் ஓரம் இருந்த போன் அலறி எடுத்து அவளை எழுப்பி விட, வேகமாய் எழுந்து அமர்ந்தவள் தன்னவன் தான் அழைக்கிறான் என்று அறிந்து எடுத்து காதில் வைத்தாள்.
அவள் ஹலோ என்று கூட சொல்லவில்லை... அதற்குள் போனை வைத்துவிட்டான். பெருமூச்சுடன் எழுந்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவனது தளத்துக்கு சென்றாள்.
பெரிய வரவேர்ப்பறையும் அதை அடுத்து சின்ன கூடமும், அதிலிருந்து நழுவி இட பக்கம் நூலக அறையும், ஜிம்மறையும், அதிலிருந்து விளையாட்டு கூடமும், ரெஸ்ட் ரூம் ஒன்றும் இருந்தது. வலப்பக்கம் அவனது பெரிய படுக்கை அறையும் அதிலிருந்து குளியல் அறையும் இருந்தது.
குளியல் அறையே மிக பெரிய மாளிகை போல இருந்தது... எல்லாமே கிறிஸ்டல் மற்றும் கண்ணாடியிலே வடிவமைத்து இருந்தார்கள்... பெரிய குளியல் தொட்டியும், தொட்டியே மிக அழகனா வடிவமைப்பில் இருந்தது.
அதிலிருந்து சவர், பைப் ஒவ்வொன்றும் மிக நுணுக்கமான வேலை பாட்டினால் அமைத்து இருந்தார்கள். எல்லாவற்றிலும் பண செழுமை கொட்டி கிடந்தது...
பாத்ரூமிலே ப்ளவர் வாஷ், நறுமண கேண்டில்ஸ், சின்ன சின்ன செடிகள், அங்காங்கே சில நியுட் பெயின்டிங்ஸ், சில்வரில் அங்காங்கே ஸ்டாண்ட்... அதில் தேவையான உடுப்புகள், துண்டுகள்... இத்தியாதி இத்தியாதி இருந்தது... கூடவே சிட்டிங் சேரும் இருந்தது...
முன் பக்கமும் பின் பக்கமும் மிக பெரிய கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது... அதை சுற்றி இயற்கையான கொடிகள் பூ பூத்து மிக அழகாக இருந்தது... சில தேவையான இடங்களில் ஸ்க்ரீன் போட்டு அதை முத்துக்கள் கோர்த்த கயிற்றால் கட்டி இருந்தது..
இன்னொரு பக்கம் மிக பெரிய விண்டோ... அதை ஒட்டி குட்டி குட்டியாய் சின்ன சின்ன விண்டோஸ்... உத்திரத்தில் அழகாக ஒளி வீசும் விளக்குகள் தொங்க விடப்பட்டு இருந்தது...
குளிக்கும் இடத்தை தனியாக ட்ரான்ஸ்பரன்ட் கண்ணாடி மூலம் பாதி மட்டும் தடுத்து இருந்தது... ஒவ்வொரு பிடியிலும் தங்கமுலாம் பூசப்பட்டு வெள்ளை நிற பேக்ரவுண்டில் எடுப்பாய் வேலை செய்து இருந்தாகள்..
பாத்ரூமே அவ்வளவு கலை அம்சத்துடன் இருந்தது... அதிலிருந்து வெளியே வர முடியாத அளவும் மனதை மயக்கி வைத்திருந்தது ஆதியின் குளியல் அறை... அதை ஒட்டி சின்ன படுக்கை அறையும், அதிலிருந்து சென்றால் இன்னொரு அழகான குட்டி குளியல் அறையும், அதிலிருந்தும் போகலாம். கூடத்தின் வழியகவும் செல்லலாம் நீச்சல் குளத்திற்கு.
நீச்சல் குளத்தினை ஒட்டி இன்னும் ஒரு உப்பரிகை இருந்தது. அவனது தளத்துக்கே மொத்தம் நான்கு உப்பரிகை இருந்தது.
அலுவலக அறையே பெரிய மைதானம் போல இருந்தது. அதிலிருந்து சின்ன படுக்கை அறை ஒன்றும், அதுனுள்ளே ரெப்ரெஷ் பண்ணிக்கொள்ள சின்னதாய் ஒரு அறையும், என்று பல அறைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருந்தது அந்த தளம்...
கூடவே வெட்ட வெளியாக ஒரு இடத்தையும் அமைத்து இருந்தான் ஆதி தேவன்... அந்த வெட்ட வெளியின் ஓரம் பூச்செடிகளும், பெரிய கண்ணாடி ஊஞ்சலும், சில அடுக்குகள் கொண்ட தோட்டமும் நிறைந்து இருந்தது. அதிலயே ஒரு பக்கம் சாய்வு இருக்கையும், இரு நாற்காலியும் போட பட்டு ஒரு டீபாயும் இருந்தது...
பார்த்து பார்த்து வடிவமைத்து இருந்தான் ஆதி... அந்த தளத்துக்குள் நுழைந்தாலே ஏதோ ஒரு மாற்றம் கண்டிப்பாக நிகழும் அவனுள்... ஆனால் இன்று அந்த மாற்றம் கூட அவனை நெருங்க முடியாமல் அவனை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தாள் மயூ...




