Notifications
Clear all

அத்தியாயம் 26

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நீயாச்சு அவளாச்சு.. உங்க ரெண்டு பேருக்கும் இடையில என் தலையை உருட்டாதீங்கடா” என்ற திரையன் சமரனை தூக்கி தன் அருகில் அமர்த்திக் கொண்டு, உணவு பட்டியல்களை பார்வை இட்டான்.

வேரலும் கங்குவனும் அருகருகே உட்கார நேர்ந்தது.

“என்னடா சொல்லட்டும்..?”

“நீயே பார்த்து சொல்லு மச்சான்” என்றான் கங்குவன் தன் போனை நொண்டியபடி.

“அப்ப ஒரு டம்ளர் கழனி தண்ணீர் சொல்லுண்ணா” என்றாள் வேரல்.

“சொல்ற உனக்கே அதை பார்சல் கட்டி தர சொல்றேன்” கடுப்படித்தான் கங்குவன்.

“ஏன்டா மாப்பிள்ளை இதுங்க இப்படி தான் எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்குமா? எப்படிடா இத்தனை நாளா இதுங்களை சமாளிக்கிற” என்று சமரனிடம் கேட்டவன் எல்லோருக்கும் ஆடர் குடுத்தான்.

“சாம்க்கு மட்டும் கொஞ்சம் காரம் இல்லாம சொல்லிடுண்ணா” வேரல் சொல்ல, ஸ்பெஷல் மேன்ஷன் பண்ணி விட்டான் திரையன் வெயிட்டரிடம்.

கங்குவனும் திரையனும் பேச, சமரன் வேரலிடம் தாவிக் கொண்டு வர, கங்குவன் எழுந்து திரையனிடம் போய் அமர்ந்துக் கொண்டான்.

அதன் பிறகே சமரனின் முகத்தில் புன்னகை வந்தது. அவனை தூக்கி தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டவள் உணவு வர அதை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டபடி சாப்பிட,

“அவனை கெடுக்காத.. அவனே அள்ளி சாப்பிடட்டும்” என்றான்.

“ஹையோ உங்களோட பெரும் ரோதனையா போச்சு.. சின்ன பிள்ளை.. இன்னும் பால்குடி கூட மாறாம இருக்கான். இப்ப போய் அவனுக்கு ஊட்டி விடாத அத பண்ணாத இத பண்ணாதன்னு ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க.. எங்க விசயத்துல நீங்க எதுக்கு சார் எப்போ பாரு இண்டர்பியர் ஆகிட்டு இருக்கீங்க..” குரலில் தன் முழு கடுப்பையும் கொட்டியவள்,

“இன்னொரு முறை எங்களை ஏதாவது சொல்லுங்க.. சுடு சாம்பாரை மூஞ்சி மேலையே ஊத்துறேன்” கடுப்பிடுத்தவள்,

“நீ சாப்பிடு கண்ணா.. அந்த ஆளுக்கு வேற வேலையே இல்ல.. எப்ப பாரு நம்மளையே நோண்டிக்கிட்டு இருக்குறது தான் வேலை” கங்குவனை முறைத்துப் பார்த்தவள்,

சாமிடம் புன்னகைத்து கதை பேசியபடி ஊட்டி விட, அதை பார்த்த கங்குவன், திரையனின் பக்கம் திரும்பி,

“சாரி திரையன்.. இவ பண்ற வேலையால எவ்வளவு இக்கட்டு வரும்னு தெரியாம பண்ணிட்டு இருக்கா..” சொல்ல,

“ப்ச்.. அதை அப்புறம் பார்த்துக்கலாம் கங்குவா.. எதையும்  யாரும் திட்டமிட்டு செய்யல.. அவங்கவங்க இயல்புல இருக்காங்க.. நீயும் சரி என் தங்கச்சியும் சரி.. சோ அதை விட்டுட்டு நீ சாப்பிடு. எதுவும் தப்பா போகாது.. அப்படியே தப்பா போனாலும் எனக்கு நோ அப்ஜெக்ஷன்” என்றவனை அதிர்ந்துப் போய் பார்த்தான் கங்குவன்.

“டேய் நீ அவளுக்கு அண்ணன். அண்ணன் மாதிரி யோசிடா” அதட்டினான்.

“இருக்கட்டும்.. நீயும் ரொம்ப நல்லவன் தான்டா.. உன்னோட என் தங்கச்சி லைப் ஸ்டார்ட் ஆனா எனக்கு ஹேப்பி தான்” நேரடியாகவே தன் சம்மதத்தை சொல்லி விட்டான் இளந்திரையன்.

“இதெல்லாம் எப்பவும் ஒத்து வராது திரையன்.. இதை பற்றி இதுக்கு மேல பேச வேண்டாம்” உறுதியாக சொன்னவனின் முகம் இறுகிப் போனது.

“டேய் அதுக்கெதுக்கு இவ்வளவு இறுகிப் போற.. நார்மலா இரு.. முதல்ல சோல்டரை இறக்குடா” நார்மலுக்கு அவனை கொண்டு வந்தவன் உணவு உண்ண வைத்தான். அவர்கள் இருவரையும் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் இவர்கள் இருவரும் தன் உலகில் இருந்தார்கள் சாமும் வேரலும்.

“ரெண்டு பேருக்குள்ள பாண்டிங் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு” மனதோடு எண்ணிக் கொண்டான் திரையன்.

மூவரும் ஆடர் செய்த உணவுகளை ஷேர் செய்து சாப்பிட்டார்கள். மூவரின் டேஸ்ட்டும் சற்றே மாறுபட்டு தான் இருந்தது என்றாலும் கலந்து சாப்பிட ஆர்வமாகவே இருந்தது.

பிள்ளைக்கு ஊட்டி விட்டுக் கொண்டே அவள் சாப்பிட, அவளை ஆழ்ந்து ஒரு கணம் பார்த்தவன் பின் தன் உணவில் கவனமானான்.

சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ரிலாக்ஸ்டாக அமர்ந்து இருந்தார்கள். கங்குவன் பெரிதாக எதுவும் பேசவில்லை. ஆனால் மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்தான்.

“நெக்ஸ்ட் என்ன ப்ளான் பாப்பா?”

“வெஸ்டர்ன் கிளாஸ் போகணும் ண்ணா.. ஒரு நாளைக்கு மூணு கிளாஸ்.. இதெல்லாம் அவனை என்கேஜுடாக வச்சுக்க மட்டும் தான். மற்றபடி எல்லாத்தையும் திணிக்கிற நோக்கம் இல்லை. அதனால எடுகேஷன் லெவெல்ல போகாம ஆக்டிவிட்டி க்ளாஸ்ல சேர்த்து விட்டு இருக்கேன்.. அவனுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். அதோட வீட்டுல இருக்குற நேரம் அவன் ரொம்ப பயந்து போறான்...” பிள்ளைக்கு அம்மா மாதிரியே பேசினாள்.

“நல்லது தான் பாப்பா. பிள்ளையும் கொஞ்சம் நடந்ததுல இருந்து வெளில வரட்டும். மேக்சிமம் வீட்டுல இருக்குற நேரம் கங்குவன் கூட இருக்குற மாதிரி செட்யூல் பண்ணிக்கிட்டா அவனுக்கு பயம் வராது...” என்று தங்கையிடம் சொன்னவன்,

“கங்குவா, பாப்பா சொல்றது கரெக்ட்.. நீ எப்போ வீட்டுக்கு போறியோ அப்போ சாமையும் கூட்டிட்டு போற மாதிரி பார்த்துக்க.. அவனுக்கு தனிமை தான் முதல் எதிரி” என்றான் அவனிடம்.

அவ்வளவு ஈசியா அவன் ஓகே சொல்லவில்லை. தன்னிடம் ஒரு வார்த்த கூட கேட்காமல் எல்லா முடிவும் வேரல் எடுப்பதில் செம்ம காண்டு ஆனது.

ஆனால் அவள் சொல்வது எல்லாமே சரியாக இருக்கும் பட்சத்தில் அவன் என்ன மறுப்பை தெரிவிக்க முடியுமாம்..

“ம்ம்ம்” கொட்டினான்.

“ம்கும் வாயை திறந்து சம்மதம் சொல்லிட்டா அபப்டியே முத்து கொட்டிடும்..” முறைத்தாள் வேரல்.

“வாயை கிளராதடி” முறைத்தான் கங்குவன்.

“ஆமா உங்க வாயை கிளறி எனக்கு என்ன வரப்போகுது.. வேலையை பாருங்க மிஸ்டர்” நொடித்துக் கொண்டாள்.

“உன் தங்கச்சி என்கிட்ட நல்லா வாங்க போறாடா” பல்லைக் கடித்தான்.

“ஆமா நீங்க குடுக்குற வரை நாங்க சும்மா இருப்போம் நினைப்பு தான்” என்று அதற்கும் கவுண்டர் கொடுத்தவள்,

“கண்ணா” என்று பிள்ளை பக்கம் திரும்பிக் கொண்டாள்.

“வாய் வாய்” பல்லைக் கடித்தவன்,

“எப்படிடா இவளை வீட்டுல வச்சு வளர்க்குறீங்க.. எனக்கு ஒரு மணி நேரம் இவக்கூட இருந்தாலே கண்ணை கட்டுது” புலம்பியவன்,

“டைம் ஆகிடுச்சு.. கிளம்பலாமா?” வாட்ச்சை பார்த்தான்.

“இப்ப என்ன வெட்டி முறிக்கிற வேலை இருக்குன்னு கிளம்புறீங்க?” இவள் தான் வாய் இருக்க முடியாமல் கேட்டாள்.

“உனக்கு வேலை வெட்டி இல்ல.. அதனால நீ சும்மா இருந்து பொழுதை ஒப்பேத்துற.. நானும் அப்படி இருந்தா என் ஸ்கூல்ஸய் இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்” என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

அவன் எழுந்த பிறகு எப்படி மற்றவர் உட்கார்ந்து இருக்க, எல்லோரும் எழுந்துக் கொண்டார்கள்.

“வா” என்று மகனிடம் கையை நீட்டினான் கங்குவன்.

வேரலின் கழுத்தை கட்டிக் கொண்டு அவளின் முகத்தை பார்த்தான் பிள்ளை.

“இன்னொரு கிளாஸ் இருக்கு.. அதை முடிச்சுட்டு கொண்டு வந்து உங்க ஸ்கூல்ல விட்டுடுறேன்” என்றாள்.

“என்னவாச்சும் பண்ணுங்க” என்று இருவரையும் முறைத்தவன்,

“நீ வாடா. உனக்கு நோ எஸ்க்யூஸ்” என்று இளந்திரையனை கையோடு அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

உதட்டை சுளித்து அவனுக்கு பழிப்பு காட்டியவள் பிள்ளையோடு தன் ஸ்கூலுக்கு சென்று விட்டாள். அங்கு அவனை உட்கார வைத்து விட்டு தன் வேலையில் ஈடு பட்டவள் மூன்று மணி ஆக, அவனை அழைத்துக் கொண்டு வெஸ்டர்ன் கிளாசுக்கு சென்றாள்.

அங்கும் அவனோடு வகுப்பில் சேர்ந்துக் கொண்டாள்.

என்னவோ பிள்ளையை எங்கும் அவள் தனியே விடவில்லை.

ஏற்கனவே அவளிடம் டைம் லொக்கேஷன் கேட்டு இருந்ததால் கங்குவனும் அந்த இடத்துக்கு வானது சேர்ந்தான்.

அவனை அவ்விடம் பார்த்தவள்,

“இப்படி எங்க பின்னாடி வர்றதுக்கு பேசாம நீங்களே அவனை பிக்கப் டிராப் செய்யலாம்” என்றாள்.

“அதுக்கு கூட உனக்கு நோகுதாடி. அதை விட உனக்கு என்ன புடுங்குற வேலை” பல்லைக் கடித்தான்.

“ச்சீ எப்ப பாரு கெட்ட வார்த்தையாவே பேசிட்டு.. ஆளும் தலையும்” முறைத்தவள் பிள்ளையோடு உள்ளே சென்று அவர்கள் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்பை போட ஆரம்பித்தாள்.

இவனும் வகுப்புக்கு காசை கட்டி விட்டு அவர்களோடு வந்து ஆட,

“ஹாங்” என்று பிள்ளையோடு அவளும் அதிர்ந்துப் போய் பார்த்தார்கள்.

“இங்க பார்த்தா ரெண்டு பேரோட கண்ணையும் நொண்டி விடுவேன்” என்று மிரட்டினான்.

“ர்ரொம்ப தான்” இருவரும் நொடித்து விட்டு ஆட ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு கிளாஸ் முடித்து சாமை கூட்டிட்டு போவானோ என்று அவளும் பிள்ளையும் அவனது முகத்தை பார்க்க,

“ரெண்டு பேரும் மூஞ்சை பாவமா வச்சுக்கிட்டு நிக்காதீங்க.. கேவலமா இருக்கு..” என்றவன்,

“ஸ்கூல் முடிஞ்ச பிறகு நீ வேலை செஞ்ச ப்ரான்சுல தான் இருப்பேன். கொண்டு வந்து அவனை விடு” என்று கிளம்பி விட்டான்.

“யாகூ..” என்று இருவரும் துள்ளி குதித்து தங்களின் காருக்கு ஓடினார்கள்.

காரில் சிஸ்ட்டத்தை ஆன் பண்ணி விட்டு நல்ல குத்து பாடலை ஒலிக்க விட்டு இருவரும் என்ஜாய் செய்துக் கொண்டு செல்ல,

“அவளோட சேர்ந்து இவனையும் கெடுக்கிறா” முணகிக் கொண்டே தன் வேலையை பார்த்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 26, 2026 10:01 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top