“ஹையோ.. ப்ளீஸ் உங்க ரூம்க்கு போங்கலேன்” அவனை உசுப்பி எழுப்ப, அவன் கொஞ்சமும் அசையவுல்லை. அவள் மீது கையையும் காலையும் போட்டு நிம்மதியாக தூங்கினான்.
இவளுக்கு தான் தூக்கமே வரவில்லை. அவிழ்த்த ஆடையை ஒழுங்காக கூட போடவிடாமல் படுக்க வைத்து விட்டான்.
“ஒழுங்கா போட்டுக்குறேன்” என்று அவள் சொல்ல, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவளின் வயிற்றில் இருந்த சேலையை விலக்கி தன் கையை அங்கே பதித்துக் கொண்டவன்,
“தேவையில்ல” அழுத்தமாக சொன்னவன் இரவெல்லாம் அவளை தூங்கவே விடவில்லை. அவளை தொட்டுக் கொண்டும் வருடிக்கொண்டுமாகவே இருந்தான். அப்பட்டி இருக்க எங்கிருந்து அவள் தூங்க.
“ப்ளீஸ் இதெல்லாம் வேணாம்” என்று அவள் சொல்ல அவளது சொல்லை காதிலே வாங்கிக் கொள்ளாமல் அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்து அவளுக்கு வலிக்க செய்தவன்,
“இனி இதெல்லாம் இப்படி தான் நடக்கும்.. ஏன் போக போக என் மூடு மாறுனுச்சுன்னா இதுக்கு மேலையும் போவேன். உன் வாழ்நாள் முழுக்க உனக்கு விடுதலையே கிடையாது. சோ என்னை அவாயிட் பண்ணனும்னு நினைக்காத.. அதிதீரனுக்கு நீ அம்மான்னா நான் அப்பா.. சப்போஸ் அவன் விளையாட தம்பி பாப்பாவோ இல்ல தங்கச்சி பாப்பாவோ கேட்டான்னு வை.. நாம பெத்து குடுத்து தான் ஆகணும். அதுவும் நேச்சுரலா..” அறுதியிட்டு சொன்னவனின் பேச்சில் விக்கித்துப் போனவள்,
“யாரை கேட்டு நீங்க இப்படி எல்லா...” முடிக்கும் முன்பே அவளின் கழுத்தை வளைத்து அவளின் இதழ்களை கவ்விக் கொண்டவன் அவளின் உடலெங்கும் தன் கைகளை சேலைக்கு மேலே அலைய விட்டவன்,
“உன் வாய்க்கு நாளைக்கே நான் பிள்ளை பெக்குற பிராசசை ஆரம்பிச்சுடுவேன் பார்த்துக்க” மிரட்டியவன் தன் வெற்று மார்பில் பெண்ணவளின் முதுகு படுமாறு இழுத்து அணைத்துக் கொண்டவன், அவளின் வயிற்றில் கையை போட்டு விலகாமல் இறுக்கிக் கொண்டான்.
அவளும் அவனை நகர்த்த முடியாமல் திண்டாடி அப்படியே தூங்கிப் போனாள். இரவெல்லாம் இருவரும் நீண்ட நேரமாக வழக்கடித்துக் கொண்டே இருந்ததால் விடிந்த பிறகும் தூங்கினார்கள்.
பிள்ளை வேறு இந்த பக்கம் இருந்துக் கொண்டு அவளை மீது கையை காலை போட்டு தூங்கிக் கொண்டே தூக்கத்தில் அன்னையை நாடி வந்து ஒட்டிக் கொண்டான். தீரனின் கால் பிள்ளையின் மீது படாமல் சற்று கீழே தள்ளி வைத்தவள் மகனுக்கு இடம் விட்டாள் தன் இடையில்.
ஆனால் அதை பொறுக்காத தீத்திரள் தீரன் மகனின் காலை எடுத்து விட்டு தான் முதலில் போட்டு தன் கால் மேல் மகனின் காலை போட்டுக் கொண்டான்.
“கருமம்டா” தலையில் அடிக்காத குறையாக அப்பன் மகன் இருவருக்கும் மத்தியில் படுத்து இருந்தாள் அதிரல். எதிர்கால வாழ்க்கை எப்படி போகுமோ என்று அதிரலுக்கு அத்தனை பயமாக இருந்தது.
--
வேலை இருக்கிறது காட்டு என்றவன், காட்டிய பிறகும் போகாமல் அவள் மேல் காலை போட்டு தூங்கும் அவனை முறைத்துப் பார்த்தவள், அவனிடம் இருந்து விலக ஆரம்பித்து அது முடியாமல் போய் விட மகனுக்கும் மகனின் அப்பனுக்கும் நடுவில் படுத்து தூக்கமில்லாமல் இரவு பொழுதை கழித்தாள் அதிரல்.
அடுத்த நாள் காலையில் எழுந்து பிள்ளைக்கு சமைத்து தனக்கு சமைத்து இருவரும் உண்டு விட்டு கிளம்ப, அதற்குள் தீரன் தன் அறைக்குச் சென்று குளித்து கிளம்பி வெளியே வந்தான். இருவரும் சாப்பிடுவதை ஒரு பார்வை பார்த்தவன் வெளியே போய் விட்டான். இவளும் அவனை நிறுத்தி சாப்பிடுங்க என்று சொல்லவில்லை.
கேர்டேக்கர் வந்து பிள்ளையை வாங்கிக் கொள்ள அவரோடு கிளம்பி அலுவலகம் வந்தாள். மார்க்கெட்டிங் ஆட்களில் ஒருவர் இவளை தேடி வந்து பேச,
“இல்ல சார் எனக்கு வேலையை இங்க மாத்திட்டாங்க. நான் இனி வர மாட்டேன். என்னை தேடி வந்து கேட்டதுக்கு தாங்க்ஸ் சார்” என்று சிரித்தாள்.
“அப்படியா மேம்.. நேற்றைக்கு தான் உங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். ஊட்டி ப்ரஞ்சுல ஒர்க் பண்ணதா சொன்னாங்க. அதனால தான் மார்க்கெட்டிங் செம்மையா பண்ணி இருக்கீங்க” என்று அவன் மேலும் சொல்ல,
இவள் வெறுமென சிரித்தாள்.
“ஓகே மேம் நீங்க பாருங்க.. இன்னொரு நாள் பார்ப்போம். எங்களுக்கு இன்னும் ஐந்து நாள் எக்ஸ்போ இருக்கு.. வரேன்” என்று கிளம்பி விட்டான்.
அவன் போன அடுத்த நிமிடம் தீரன் உள்ளே வந்தான்.
“யார் அவன் உன்கிட்ட என்ன பேசிட்டு இருந்தான்” என்று விசாரித்தான்.
“அவர் என்னோட பிரெண்ட். ஜஸ்ட் நல விசாரணை” என்றவள் மிடுக்காக தன் மேசையில் அமர்ந்து வேலையில் ஈடுபட, பல்லைக் கடித்தான் தீரன்.
“ரொம்ப தான்டி பண்ற” என்று சொன்னவன் தன் வேலையில் ஈடுபட்டான்.
அந்த நாள் மேற்கொண்டு எந்த ராசாபாசமும் இல்லாமல் நகர்ந்தது. மத்திய நேரம் பிள்ளைக்கு உணவு ஊட்ட வர, அங்கே வெற்றி பிள்ளையோடு விளையாண்டுக் கொண்டு இருந்தான்.
அவனை அங்கே எதிர் பார்க்காதவள் திகைத்துப் போனாள்.
அவளின் திகைப்பை பார்த்த வெற்றி,
“இவன் என் அண்ணன் குழந்தை. இவனோட விளையாட தூக்கி கொஞ்ச எனக்கு உரிமை இருக்கு தானே..” என்று அவன் மிதமான குரலில் கேட்க, தலையை ஆட்டினாள் அதிரல்.
“பெர்மிஷன் கேட்கணுமா?” அவன் மேலும் கேட்க, அதில் பதறிப் போனவள்,
“இல்ல சார்.. அதெல்லாம் இல்ல.. நீங்க உங்களுக்கு எப்போ பார்க்கணும்னு தோணுனாலும் வந்து பாருங்க” என்றவள் வெளியே போக பார்க்க,
“கேரியான்.. நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்” சொன்னவன் பிள்ளையின் கன்னத்தில் முத்தம் வைத்து,
“சித்தப்பா அப்புறம் வந்து தம்பியை பார்க்கிறேன்டா என்ன?” கேட்டவன் குழந்தை முத்துப் பற்கள் வைத்து சிரித்து தலை அசைத்தான்.
“அப்படியே என் அண்ணன் மாதிரியே இருக்கடா” கொஞ்சியவன் பிள்ளையை இறக்கி விட மனமே வரவில்லை. ஆனால் சாப்பாட்டோடு அதிரல் நிற்கவும் வேறு வழியில்லாது வெளியே போய் விட்டான்.
அதன் பிறகு பிள்ளைக்கு உணவு ஊட்டி தானும் உண்டு வெளியேறும் நேரம், சரியாக வெற்றி வந்து விட்டான்.
அவனிடம் ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவள் கிளம்பி விட்டாள்.
அலுவலகம் முடிந்து மாலை நேரம் பிள்ளையை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்றாள் அதிரல்.
என்னவோ மனமெல்லாம் லேசாக இருந்தது கோயிலுக்கு வந்த பிறகு. ஒவ்வொரு சாமியாய் கும்பிட்டு வந்தவள் ஒரு ஓரத்தில் பிள்ளையோடு அமர்ந்து இருந்த நேரம்,
“அதிரல்..” என்று அவளின் பெயரை யாரோ அழைக்க, திடுக்கிட்டுப் போனாள். அவளை பற்றி யாருக்குமே தெரியாதே இங்கே. அப்படி இருக்கும் பொழுது அவளின் பெயரை சொல்லி யாராவது அழைத்தால் திகைக்காமல் எப்படி இருக்க முடியும்.




