Notifications
Clear all

அத்தியாயம் 48

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர் பார்க்காத ஆதி ஒரு கணம் தடுமாறி போனான். ஆனால் அடுத்த நொடி அவனது முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று பரவியது...

“ம்ம்ம் நல்லா தான் பேச கத்துக்கிட்ட...” என்றவன் அவளிடம் நெருங்கினான். அவனது நெருக்கம் அவளது மனதில் சாரல் அடிக்க விழிகளை சிமிட்டாலம் தன்னவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது பார்வையில் தெரிந்த காதலை உள்ளுக்குள் வாங்கியவனின் நெஞ்சம் ஜில்லென்று ஐஸ் மழையில் நனைந்தது போல இருக்க... அவனும் அவளது விழிகளை நோக்கிக்கொண்டே வந்தான்.

இருவரது பார்வையும் நேர்கோட்டில் சந்தித்தபடியே நெருங்க, ஆதியின் கையில் இருந்த திருநீரை கண்டு புருவம் சுருக்கினாள் மயூ.

அவளது பார்வையை கண்டுக்கொள்ளாமல் அதை எடுத்து அவளது நெற்றியில் பூசிவிட்டு,

“சீக்கிரமா வீட்டுக்கு வாடி...” என்றான்.

“ம்ம்ம்.. அதை என் காலை ஒடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்... நன் இப்படியே ரெண்டு மாசம் ரெஸ்ட் எடுக்க இமாச்சல் போறேன்..” கெத்து காட்டினாள்.

அவளது இந்த பரிமாணம் அவனை சிலிர்க்க செய்ய...

“எப்போ போற..” என்றான்.

“மேபி டுமாரோ மார்னிங்...”

“ம்ஹும்... ஓகே ஆள் தி பெஸ்ட்...” என்றவன் குறும் புன்னகையுடன் அவளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டான்.

அவன் சென்ற பிறகும் அவனது வாசம் தன் அருகில் வீசுவது போல தோன்ற ஆழ்ந்து மூச்சை சுவாசித்தாள்.

அப்படியே அவனே அவளுள் உள் இறங்கியது போல இருந்தது.

இன்னும் இன்னும் ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டு இருந்தவளை விசித்திரமாக பார்த்துக்கொண்டே வந்தார் சீதா...

‘இவளுக்கு என்ன ஆச்சு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கா...?’ யோசித்தபடியே வந்து அவளது தோளை தொட்டு உசுப்பினார். அதில் களைந்த மயூ,

திடுக்கிட்டு கண்களை விழித்து சீதாவை பார்த்தாள்.

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க...”

“அ... அது ஒன்னும் இல்ல அத்தை... சும்மா...” என்று தடுமாறி போனாள்.

“நீ செய்யிறதா பாத்தா வித்தியாசமா இருக்கே...” என்று யோசித்தவர்,

பின் “என்ன உன் மாமேன் வந்தானாக்கும்... அதனான் அவன் விட்ட மூச்சு காத்தை நீ வாங்கிக்கிட்டு இருக்கியாக்கும்.” நக்கல் பண்ண மயூவின் முகம் வாடி போனது.

“ம்கும் இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல... வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க. போலாமா...?”

“இல்ல அத்தை... நான் வேற எங்கயாவது போறேன்.” என்றாள்.

“வேற எங்கயாவதுன்னா... எங்கன்னு தெளிவா சொல்லு...”

“அது இமாச்சல் போலாம்னு இருக்கேன்...”

“தனியாவா...?”

“ம்ம்” என்று தலையசைத்தாள்.

“உன் மாமன் பார்க்க உனக்கு விருப்பம் இல்லையாக்கும். ஆமா இதுக்கு உன் மாமன் காரன் சம்மதிச்சுட்டான்னா...?”

இல்லை நெரு தலையை ஆட்டியவளை காணும் போது மனசு புண்பட்டு போனது.

“நீ போன பின்னாடி அவனும் உன் கூடவே வந்துடுவான்... இதுக்கு எதுக்கு நீ அவ்வளவு தூரம் போகணும். வா ஒழுங்கா வீட்டுக்கே போகலாம்.” என்றார்.

“இல்ல அத்தை... நான் இமாச்சல் போற போறது உறுதி. நீங்க அதுக்குள்ள மாமாவுக்கு கல்யாணத்தை நடத்தி முடிங்க. அப்புரம் எல்லாமே சரியாக முடியும்.” என்றாள்.

“நீ இங்க இருந்து போன அடுத்த நிமிஷம் உன் ஆளு இங்க ஒரு பேட்டை நிரந்தரமா போட்டு தங்கிக்குவான் பாத்துக்க...” அவர் அப்படி சொல்ல பதறி போனாள்.

“அத்தை...”

“ம்ம்ம் இது தான் நடக்கும் பாப்பா... அதனால தான் சொல்றேன். நீ நேரா வீட்டுக்கு வா. பிரச்சனையை கண்டு ஓடி ஒளிய கூடாது. நேருக்கு நேரா எதிர்த்து நின்னு செயிக்கணும். புரியுதா..?”

“புரியுது. ஆனா உங்க மகன் கிட்ட எந்த பாச்சாவும் பலிக்காது... அது தான் கவலையா இருக்கு... கூடவே கல்யாணம் செய்ய இருக்குற அந்த மாப்பிள்ளை, அவங்க குடும்பம் எப்படி சமாளிக்கிறது அத்தை.”

“இதுக்கெதுக்கு கவலை படுற... இப்படி ஒரு அன்பு கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கணும். இந்த கால கட்டத்துல அவனோட முழு அன்பையும் வாங்கிக்க... எனக்கு தெரிஞ்சு அவன் உனக்கு கல்யாணம் பண்ண விடமாட்டான். அவனும் ரஞ்சனியை கல்யாணம் செய்ய மாட்டான். நீ தான் மாறனும். அதோட இல்லாம அந்த மாப்பிள்ளை வீட்டுலயும் ஏதோ சகுன தடையா இருக்கு. எனக்கு எங்க புள்ளையோட உயிர் முக்கியம். அதனால வேற இடம் பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டேன்.” என்றார்.

“ரொம்ப சந்தோஷம் அத்தை... எப்படி அவங்களை பேஸ் பண்றதுன்னு தயக்கமா இருந்தது. ஆமா எப்படி அந்த மாப்பிள்ளை அவ்வளவு சுலபமா விட்டாரு.”

“உன் ஆதிய பத்தி தெருஞ்சுமா இப்படி கேக்குற..” என்று சொல்ல...

அவளுக்கு அவனது தீரத்தை எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தது. அவளது புன்னகையை பார்த்த சீதா...

“பெட்டர் நீ அவனை முழுசா ஏத்துக்க ஆரம்பி... அவன் எல்லாத்தையும் பார்த்துக்குவான்..” என்று சொல்ல,

“அத்தை” என்று தவித்து போனாள்.

“ம்ம்ம்... அவனோட தான் உன்னோட வாழ்க்கை. உனக்கு மாப்பிள்ளை பாத்து வச்சதுக்கு அவன் கிட்ட என்னென்ன பாடு பட போறனோ தெரியல... வீட்டுக்கு போனா அந்த எலி பொறியில இருந்து வேற தப்பிக்கணும்...” அங்கலாய்க்க..

மயூ சிரித்தாள்.

“சிரிக்காதடி... உன் மாமன் என் மேல கொலை காண்டுல சுத்திக்கிட்டு இருக்கான். எப்படி தான் அந்த முசுட்டு சிங்கத்துக்கிட்ட இருந்து தப்பிக்க போரேனோ தெரியல...”

“நான் வேணா மாமாக்கிட்ட பேசவா...?”

“நீ பேசுனாலும் அங்க பப்பு வேகாது. விடு அந்த சுண்டக்காய நான் பாத்துக்குறேன்...” என்றவர் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

நாடு கூடத்தில் தன் கணினியோடு ஆதி அமர்ந்து இருக்க...மற்றவர்களும் முன் புறம் இருந்த கூடத்தில் அமர்ந்து இருந்தார்கள்.

வீட்டுக்குள் உள் நுழையும் போது ஆராத்தி சுற்றி மயூவை உள்ளே அழைத்து வந்த சீதா, நேராக அவரது அறைக்கு கூட்டி செல்ல... அதுவரை பொறுமையாக இருந்த ஆதி, வேகமாய் சீதாவை தடுத்து, அவரை ஒரு முறை முறைத்து விட்டு மயூவை தன் கரங்களுக்குள் தூக்கிக்கொண்டவன் யாரையும் சட்டை செய்யாமல் அவனது அறைக்கு வந்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 14, 2026 10:32 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top