Notifications
Clear all

அத்தியாயம் 47

 
Admin
(@ramya-devi)
Member Admin

ஆதிதேவனிடமிருந்து இப்படி ஒரு செயலை எதிர் பார்க்கவே இல்லை மயூ. தான் காதலித்தவனா இவன் என்ற எண்ணம் எழ தன்னையே வெறுத்து கொண்டாள்.

அவன் விட்ட இடத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாய் நகர்ந்து சென்று எட்டி போனை எடுத்து,

“கால் ஸ்லிப் ஆகிடுச்சு அத்தை. என்னால கதவை திறக்க முடியல. எமர்ஜென்சி எக்சிட் வழியா வாங்க...” என்று வைத்து விட்டாள்.

கண்களில் எல்லாம் கண்ணீர் பெருகியது. தன்னவனின் செயல்களை நினைத்தது பார்த்தவளுக்கு பத்திக்கொண்டு வந்தது... காதலோடு சரசமாடிக்கொண்டு இருந்தவன் திடிரென்று

“வலிக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ” என்று சொல்ல அவள் கூட வேறு ஏதோ செய்ய போகிறான் என்று முகம் சிவந்து அவனை பார்ப்பதை தவிர்த்தாள். ஆனால் ஆதியோ அவளை மேலிருந்து கீழ் வருடியபடி அவளது காலை பற்றியவன் சட்டென்று அவளது காலை ஒடித்து திருப்ப உள்ளிருந்த எலும்புகள் எல்லாம் சடசடவென்று முறிந்தது.

அதில் தான் மயூ “அம்மா” என்று அலறியது.

அதை எண்ணி பார்த்தவளுக்கு தன் புத்தியை தானே நொந்துக்கொண்டாள்.

உள்ளே நுழைந்த சீதாவும் மற்ற பெண்களும் அவள் கண்ணீரோடு படுக்கையின் கீழ் அமர்ந்து இருப்பதை கண்டு பதறி போனார்கள்.

“மயூ என்னடா ஆச்சு... ஏன் இப்படி அலற...” தவிப்புடன் கேட்ட சீதாவை கட்டிக்கொண்டு அழுதவள்,

“அத்தை காலை அசைக்கவே முடியல... வலி உயிர் போகுது... ப்ளீஸ் அத்தை எதாவது பண்ணுங்க...” கதறினாள்.

“வலிக்குதா...? எங்கயும் இடுச்சுக்கிட்டியா...? கீழ விழுந்திட்டியா பாப்பா...?” என்று அவளது காலை பார்த்து தடவியபடி கேட்டவரிடம்,

“ஆமா அத்தை. குளியல் அறையில விழுந்துட்டேன். காலு இந்த பக்கம் திரும்பிகிச்சு... அப்போல இருந்து வலிச்கிக்கிட்டே இருக்கு. வலி தாங்க முடியல அத்தை. ஏதாவது பண்ணுங்க...” என்றவளின் காலை சோதித்து பார்த்த சீதாவிற்கு எலும்பு ப்ராக்சன் ஆகி இருக்கும் என்று புரிய,

‘கீழ பங்க்சன் இருக்கும் போது இவ இப்படி காலை ஒடிச்சுக்கிட்டு இருக்காளே, இது அபசகுனம்னு நினைச்சுக்குவாங்களே. என்ன செய்யிறது. அதோட இவளால வலிய வேற தாங்க முடியல. முதல்ல இவளை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகலாம். அதுக்கு பிறகு மத்ததை பார்த்துக்கலாம்.’ என்று முடிவெடுத்தவர் கேசவனிடம் விஷயத்தை சொல்லி பங்க்சனை நிறுத்த சொல்லிவிட்டு மனு முகில் உதவியுடன் மயூவை மருத்துவனமைக்கு கூட்டி சென்றார்.

அங்கே ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள்,

“எலும்பு ஒடஞ்சி இருக்கு. அதுவும் கூட்டு எலும்புல ரொம்ப சேதாரம் ஆகி இருக்கு. அதனால காலை அசைக்கவே கூடாது.” என்று சொல்ல

சீதாவோ “டாக்டர் இவளுக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். இந்த நேரத்துல போய் இப்படி சொல்றீங்க.” வேதனையுடன் கேட்டவரை பார்த்து,

“நான் இருக்கிறதை தான் சொல்றேன் சீதா மேடம். இவங்க காலை கொஞ்சம் கூட அசைக்க கூடாது. கால் அசையாம இருக்க நாங்க முதல்ல கட்டு போடுறோம்... எப்படியும் இன்னும் ரெண்டு மாசத்துல எலும்பு கூடிக்கும்னு நினைக்கிறோம்... தொடர்ந்து ட்ரீட் மென்ட் எடுத்துக்கிட்டாலே போதும். பெட்டர் நீங்க மேரேஜை மூணு மாசத்துக்கு தள்ளி வைக்கிறது தான்.”

“என்ன டாக்ட்டர் இப்படி சொல்றீங்க...” அதிர்ச்சியுடன் பார்த்தார்.

“உங்களுக்கு தெரியாது ஒன்னும் இல்ல... இந்த காலை வச்சுக்கிட்டு மேரேஜ் பண்றது ரிஸ்க்... கால் ஏதாவது பிசகி போச்சுன்னா அப்புறம் நிரந்தரமா உங்க பொண்ணு குச்சு வச்சி தான் நடக்குற மாதிரி ஆகிடும். அதனால தான் சொல்றேன்.”

“ஒரு மூணு மாசம் காத்திருங்க. அதுக்குள்ள உங்க பொண்ணு காலை குணமாக்கி உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்” என்று அவர்களது குடும்ப நல மருத்துவர் சொல்ல, வேறு வழியின்றி ஏற்பாடு செய்து இருந்த கல்யாணத்தை நிறுத்தினார் சீதா.

மயூவிற்கு கால்களில் எண்ணை வைத்து காலை நேராக வைத்து எலும்பு கூடுவது போல முறிந்து போன எலும்புகளை வைத்து, அதனுடன் சில குச்சிகளை வைத்து இறுக்கி கட்டுப்போட்டு விட்டனர்.

மருத்துவமனைக்கு வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது.

சீதாவிற்கு வண்டு குடைவது போல அவரின் மனதில் ஒரு உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது. அந்த அறையில் வேறு யாரும் இல்லாது போக மெல்ல மயூவிடம்,

“உனக்கு இந்த கல்யாணம் பிடிக்காம தான் இப்படி பண்ணியா...?” என்று கேட்டுவிட்டார்.

அவரின் கேள்வியில் அதிர்ச்சி ஆகாமல்,

“இல்ல அத்தை... நான் ஏன் இப்படி பண்ண போறேன்...” என்று வலியில் சுணங்கிய முகத்தோடு சொல்லவும்,

“அப்போ வேற யாரு இப்படி பண்ணா...”

“வேற யாரு உங்க மகன் தான்...” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“மயூ என்னடி சொல்றே...” அதிர்ச்சியாய்.

“ம்ம்ம் நிஜமா தான் அத்தை. வந்தாரு என்ன ஏதுன்னு எதுவுமே கேக்கல... உடனே காலை பிடிச்சாரு... அந்த பக்கம் திருப்பி ஒரு திருப்பு திருப்பினாரு... கால்ல இருந்து சடசடன்னு சத்தம் கேட்டுச்சு... அதுக்கு பிறகு காலை கீழ ஊணவே முடியல...” என்றாள்.

“ஓ... அப்போ இத்தனைக்கும் காரணம் இவன் தானா...? இவ்வளவையும் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத பிள்ளை மாதிரி அவன் அவனோட வேலையை பார்த்துக்கிட்டு இருக்கானா...?” முணகியவர் ,

“வேணும்னே பண்ணானா...”

“ம்ம்ம்... அப்படி தான் எனக்கு தெரிஞ்சுது” என்றாள்.

“இந்த கல்யாணத்தை தடுக்க வலி தேடி இருப்பான் ராஸ்க்கல்... அதான் இப்படி பண்ணி வச்சு இருக்கான்.” என்று பொருமினார்.

“எனக்கும் அப்படி தான் தோணுச்சு. கேட்டா அப்படி இல்லன்னு சொல்லுவாரு. அதெதுக்கு கேட்டுக்கிட்டுன்னு விட்டுட்டேன்..” என்றாள்.

“அதுவும் சரி தான். கேட்டா தான் இன்னும் ஓவரா பேசுவான்...” என்றவர்,

“நீ இங்க இரு... நான் போய் டிச்சார்ஜ் எப்போன்னு கேட்டுட்டு வரேன்.” என்றவர் மருத்துவரிடம் செல்ல, அடுத்த நொடி ஆதி தேவன் உள்ளே நுழைந்தான் புயல் போல.

வந்தவன் அவளது காலில் போட்டு இருந்த கட்டை பார்த்து மனம் துடித்து போனாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல்,

“என்னடி உடம்பு எப்படி இருக்கு...?” என்று நக்கல் பண்ணினான்.

“அதுக்கென்ன அது ஒரு ஓரமா நல்லா இருக்கு. நான் ஒரு ஓராமா நல்லா இருக்கேன்...” என்று நக்கல் பண்ணினாள் மயூ.

அவளிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர் பார்க்காத ஆதி ஒரு கணம் தடுமாறி போனான். ஆனால் அடுத்த நொடி அவனது முகத்தில் மெல்லிய புன்னகை ஒன்று பரவியது...

“ம்ம்ம் நல்லா தான் பேச கத்துக்கிட்ட...” என்றவன் அவளிடம் நெருங்கினான். அவனது நெருக்கம் அவளது மனதில் சாரல் அடிக்க விழிகளை சிமிட்டாலம் தன்னவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 14, 2026 10:31 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top