“தூங்கு கண்ணா” என்று சொல்லி மகன் தூக்கத்தில் சொக்கும் வரை கடினப்பட்டு விழித்து இருந்தவள் அவன் தூங்கியவுடனே இவளும் தூங்க தொடங்கி விட்டாள். அத்தனை அலுப்பாக இருந்தது போலும். அடித்து போட்டது போல தூங்கினாள்.
மிட் நைட்டில் அவளின் இடுப்பு பக்கம் ஏதோ ஒரு கை படர,
“பாப்பா தள்ளி படு” என்று தங்கையிடம் சொல்வதாக எண்ணி சொன்னாள். நேத்ரா இவளை கட்டிக் கொண்டு தான் படுப்பாள்.
ஒருவேளை தங்கை தான் போடுகிறாள் போல என்று தூக்கத்திலே பிதற்றினாள்.
ஆனால் அந்த கையோ ஒரு இடத்தில் இல்லாமல் அவளின் இடுப்பை முழுவதும் தொட்டு வருடி விட்டு கொஞ்சமாக விலகி வயிற்று பக்கம் நகர்ந்து வருடி விட்டு இறுக்கமாக பிடித்து அழுத்த இவளுக்கு தூக்கம் பறந்தே போய் விட்டது.
நொடியில் பதறிப் போனவள் “யாரு” என்று அடித்து பிடித்து எழுந்தவளை எழ விடாமல் கை வைத்து தடுத்தவன்,
“நான் தான்டி” என்றான். அவளின் காதுக்குள்.
அந்த குரலில் யார் என்று புரிந்துப் போக, ஒரு ஆசுவாசம் வந்தது. ஆனால் அடுத்த நொடி கோவமாக அவன் புறம் திரும்பியவள்,
“உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க.. தனியா தூங்குற ஒரு பெண்ணோட அறையை கள்ள சாவி போட்டு திறந்து இப்படி திருடன் போல வர்றீங்களே இது தான் நீங்க படிச்ச நாகரீகமா? முதல்ல என்னோட படுக்கையை விட்டு எழுந்து வெளியே போங்க” என்றவளை கண்டு கொள்ளாமல்,
“டாட்டூ காட்டு போயிடுறேன்” என்றான்.
“என்ன?” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு அதிர்ந்துப் போனாள்.
“நான்தான் சொன்னனே ஒவ்வொரு நாள் நைட்டும் செக் பண்ணுவேன்னு. இப்ப என்னவோ தெரியாத மாதிரி நெஞ்சை பிடிக்கிற..” அதட்டியவன்,
“காட்டு எனக்கு வேலை இருக்கு. இதுக்காக தான் மெனக்கெட்டு வந்தேன்” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,
“இதென்ன சினிமா ஷோவா.. ஒவ்வொரு நாளும் நைட் ஷோ காண்பிக்க. அதெல்லாம் முடியாது. நீங்க முதல்ல வெளியே போங்க” என்றவளை சட்டை செய்யாமல் அவளின் முந்தானையை உருவி எடுத்தவன் அதை வைத்து அவளின் இரண்டு கையையும் தூக்கி மேலே கட்டிலோடு கட்டியவன் அவளின் ஆடையை கலைக்க ஆரம்பித்தான்.
--
தன் உடைகளை கலைத்துக் கொண்டு இருப்பவனின் வயிற்றில் எட்டி உதைக்கப் பார்த்தாள். அவளின் மோட்டிவ் புரிந்துக் கொண்டு சட்டென்று அவளின் மீது அமர்ந்தவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“ஏன் இப்படி இவ்வளவு சீப்பா பிகேவ் பண்றீங்க..? உங்கக்கிட்ட இருந்து இப்படியான செயல்களை கொஞ்சமும் எதிர்பார்க்கல. இதுக்கு தான் என்னை சென்னைக்கு வர வச்சீங்களா?” கேட்டவளை கூர்ந்துப் பார்த்த தீத்திரள் தீரன்,
“என்னவோ உன் கற்பை சூரையாடுறவன்ற கணக்கா பேசிட்டு இருக்க.. மைன்ட் யோவர் டங்க்” சீறினான்.
“அப்போ இப்ப நீங்க பண்றதுக்கு பெயர் என்ன” ஆத்திரத்துடன் கேட்டவளை அடி கண்களால் பார்த்தவன்,
“ஜஸ்ட் வெரிபிகேஷன்”
“மண்ணாங்கட்டி.. இதென்ன சோஷியல் ப்ளேஸா அடிக்கடி வந்து வெரிபை பண்ண”
“நீ சோசியல் ப்ராப்பெர்டி இல்ல. என் மகனோட ப்ராப்பெர்டி. என் மகன் என்னோட பார்ட். சோ நீ என்னோட ப்ராப்பெர்ட்டி” என்றான்.
“வாய்ப்பே இல்ல.. நான் யாரோட” என்று ஆரம்பிக்கும் பொழுதே அவளின் இதழ்களை கவ்விக் கொண்டு விட்டான்.
கைகளை வைத்து அவனை தடுக்க முடியாமல் அவள் துள்ளி துடிக்க, நிதானமாக அவளின் இதழ்களை மென்று தின்றான்.
“ப்ளீஸ்” அவனின் நெருக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் தகித்துப் போய் சொல்ல,
“ஐ வான்ட் ஒன் மோர்” என்றவன் மீண்டும் அவளின் இதழ்களில் இதழ் புதைத்தான். மென்மையாக அவன் அவளின் இதழ்களை கையாள இவளுக்கு தான் பெரும் அவஸ்த்தையாகிப் போனது.
“வேணாமே” என்று பெண்ணவளின் கெஞ்சல் உள்ளுக்குள் அடங்கிப் போக,
“ஜஸ்ட் என்ஜாய்” என்றான்.
“ம்ஹும்” என்று அவள் தலையை ஆட்ட, அவளின் பிடிவாதத்தில் வன்மையாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
வித விதமாக அவன் முத்தமிட இவள் தான் திண்டாடி தவித்துப் போனாள்.
“கொலையா கொல்றாறே” எண்ணியவளின் இடையில் கையை வைத்து இறுக்கிப் பிடிக்க அவளுக்கு கண்களே திறக்க முடியாமல் போனது.
“வேணாம் ப்ளீஸ்” அவளின் எதிர்ப்புகள் வலுவிழந்துப் போக,
அவளின் காதுக்குள் தன் மீசை உரசும் அளவுக்கு நெருங்கியவன்,
“ஐ வான்ட்” என்றான். அதில் அவளின் அடி வயிற்றில் தீப்பிடித்துக் கொள்ள “நோ” என்றாள் சன்னமாக. முன்பு கத்தி பேசிய பொழுது பிள்ளை அசைந்து முழிக்கப் பார்க்க, தன்னை இந்த நிலையில் பார்த்தால் என்ன பண்ணுவானோ என்று சத்தத்தை குறைத்து பேசினாள். ஆனால் இந்த வாய்ஸ் ஆணவனுக்குள் மோகத்தை கிளப்பி இருக்க அவளின் மீது மொத்தமாக கவிழ்ந்துக் கொண்டான்.
அதிரலின் கழுத்தில் முகம் புதைத்து மீசையால் உரசி அவளை தவிக்க விட்டவன் இன்னும் கீழே இறங்கினான். ஆடை மறைத்து இருக்கும் அழகை காண அவனின் உள்ளம் அலைமோத அவளின் கட்டுகளை அவளறியாமலே அவிழ்த்து இருந்தவன் அவளின் உடைகளையும் கலைத்து அவள் போட்டு இருந்த டாட்டூவில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்தான். அவனது செயலில் அவளின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள, அதை உணர்ந்தவன் மீண்டும் மீண்டும் முத்தம் வைத்தான்.
“கடவுளே..” என்றவள் அவனை தடுக்கப்பார்த்த போது கைகள் சுதந்திரமாக இருப்பதை உணர்ந்து அவனை தள்ளி விட்டு தன் மீது சேலையை அள்ளிப் போட்டுக் கொண்டவள் எழப் பார்க்க, அவளை மீண்டும் படுக்கையில் கிடத்தி அவள் மீது மொத்தமாக சாய்ந்துக் கொண்டவன்,
“நவ் ஆம் ஐ டையர்ட்.. மார்னிங் பேசிக்கலாம்” என்று சொல்லி அவளின் மீதே படுத்து தூங்க ஆரம்பித்து விட்டான்.
அவனின் முழு எடையும் தாங்க முடியாமல் இவளுக்கு தான் மூச்சு வாங்கிப் போனது.
“மூச்சு விட முடியல.. ப்ளீஸ் எழுந்திரிங்க” அவனை அசைத்துப் பார்த்தும் முடியாமல் அவனிடம் சொல்ல, அவனோ அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு தூங்கினான்.
“ப்ச் ஏன் இப்படி பண்றீங்க?” என்ற நேரம் அவளை விட்டு எழுந்தவன் அவளை பிள்ளை இருக்கும் பக்கமாய் ஒருக்கழித்து படுக்க வைத்தவன் அவளை பின்னாடி இருந்து அணைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
“ஹையோ.. ப்ளீஸ் உங்க ரூம்க்கு போங்கலேன்” அவனை உசுப்பி எழுப்ப, அவன் கொஞ்சமும் அசையவுல்லை. அவள் மீது கையையும் காலையும் போட்டு நிம்மதியாக தூங்கினான்.




