அவ்வளவு தானா...? இனி ஆதி எனக்கு இல்லையா...? என்ற எண்ணமே அவளை வாட்டி வதைக்க வாய்விட்டே கதறினாள்.
அவளது கதறல் யாருடைய காதுக்கும் செல்லாமல் நன்கு சுவரிலே முட்டி மோதி தணிந்தது.
அதற்குள்ளே வெளியிலிருந்து அவளை அழைக்கும் சத்தம் வர, கையில் வைத்திருந்த மருதாணியும் காய்ந்து போக, வேகமாய் கைகளை கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
வந்தவளை வீட்டின் நடுவே அமரவைத்து சில சடங்குகளை செய்ய வைத்து, உடை மாற்றி வர சொன்னார்கள். அப்பொழுதும் ஆதியை அவளது கண்கள் தேட, அவனோ அவளது தேடலை உணர்ந்தும் அவளை பார்க்கவே இல்லை.
அவனது இந்த ஒதுக்கம் அவளை நூறு கூறாய் வெட்டி போட, வலியில் துடிதுடித்து போனாள். அதை தன் கண்களில் காட்டாமல் சாமார்த்தியமாக மறைத்துக்கொண்டவள் உடை மாற்ற தன் அறைக்கு சென்றாள்.
குளித்து மறுபடியும் புதிய உடை அணிந்து தலை அலங்காரம் செய்ய முயன்ற போது அவளது கதவு தட்டப்பட்டது. வேகமாய் திறந்து பார்த்தாள்.
எதிரே ஆதி தேவன் மந்தகாச புன்னகையுடன் நின்றிருந்தான். ஒரு கணம் அவனது புன்னகையை ரசித்து பார்த்தவள், காலையிலிருந்து அவனது பாரா முகம் நினைவுக்கு வர வேகமாய் கதவை அடைக்க பார்த்தாள்.
ஆனால் ஆதி அவளது கரங்களை தட்டி விட்டு விட்டு அறையின் உள்ளே நுழைந்தான் கம்பீரமாக.
அவனது அடாவடியில் முறைத்தாள் அவனை.
“கதவை சாத்திட்டு வாடி...” என்றான் கடுப்பாக.
“ஹலோ இங்க கடுப்பாக வேண்டியது நான். நீங்க இல்ல..” என்றவள் கதவை அழுத்தாமாக சாத்தி தாளிட்டாள்.
“நான் சாத்த தான் சொன்னேன். தாழ்ப்பாள் போட சொல்லலயே...” என்று கெத்து காட்டினான் மன்னன்.
“ப்ச் சொல்ல வந்ததை சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுங்க...” என்று இவளும் பதிலுக்கு சிடுசிடுத்தாள். அவளது கோவத்தை ரசித்து பார்த்தவன் அவளை சுண்டி இழுத்தான் தன் அருகே..
அதில் அவனது மேல் வந்து விழுந்தவள்,
“எதுக்கு இப்போ....” என்று ஆரம்பிக்கும் முன்பே அவளது இதழை சிறை செய்தவன் சிறிதும் யோசிக்காமல் அவள் தலை தன் கரம் கொண்டு வளைத்து பிடித்து இன்னும் தன்னோடு நெருக்கினான். அவளுடைய நெருக்கத்தில் மனம் மயங்கியவன் உடை மறைக்காத இடையை தன் கரங்கொண்டு அளவெடுத்தான்.
அவனது அந்த செயலில் கூச்சம் கொண்டவள், அவனது கரத்தை பற்றிக்கொண்டாள் எங்கும் நகராத அளவிற்கு. ஆனால் அவனோ அவளது கரத்தை தட்டிவிட்டு இன்னும் தன்னோடு நெருக்கி அவளது உதட்டிலிருந்த தன் இதழை எடுத்து அவளது கழுத்தில் புதைத்துக்கொண்டான்.
ஆடம்பரமாய் தைத்து இருந்த ரவிக்கை அவனுக்கு வசதியாக போக, அவனது இதழ்கள் அவளது கழுத்து வளைவில் புதைந்துக்கொண்டான்.
அவனது தலை முடியும் மீசையும் மேலும் பல இம்சைகளை அவளுக்கு வாரி வழங்க அவனை தவிர அவளுக்கு வேறு எதுவும் நினைவில் எழாமல் அவனது வசமாகி போனாள்...
அவனுக்கும் அது தானே வேண்டும். மேலும் அவளை தனக்கு முன் புறமாய் திறப்பி பின் பக்கமாய் அவளை அனைத்து இன்னும் வசதியாய் அவளை சுகிக்க தொடங்கினான்.
அவன் காட்டிய உணர்வுகளில் தொலைந்து போனவள் கண்களை மூடி அவனது தொடுகையை உள் வாங்கிக்கொண்டாள்.
எதிர் புறமிருந்த கண்ணாடியில் அவளது முகத்தில் படிந்த உணர்வுகளை பார்த்தவனுக்கு அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று மனம் முரண்ட அவளை வன்மையாக மிக வன்மையாக இறுக்கி பிடித்தான். தன் உணர்வுகளை சொல்வது போல...
அதை உள் வாங்கியவள் கண்களை திறந்து எதிர் புறமிருந்த கண்ணாடியில் தன்னவனின் முகத்தை பார்த்தாள்.
அந்த முகம் அவளது காதலை காட்டி நிற்க... பின்புறமாய் கைகளை விட்டு அவனது தலையை வருடி கொடுத்தவள் தானே அவனது முகத்தை வளைத்து தன் கழுத்துக்கடியில் புதைத்துக்கொண்டாள்.
அவளது ஒன்ருதலில் மனம் சிலிர்த்தவன், மிக அந்தரமாக அவளிடம் உரையாட தொடங்க ஏன் அவனை வளைத்து பிடித்தோம் என்று எண்ண வைத்துவிட்டான் ஆதிதேவன்.
காதோரம் அவன் பேசும் ரகசிய பேச்சில் முகம் சிவந்தவள் அவனது வாயை அடைக்க பார்த்தாள். ஆனால் அது முடியாமல் போனது.
தவிப்புடன் தனன்வனை பார்த்தாள். அவளது தவிப்பையும் படப்படப்பையும் பார்த்தவன் காதலுடன் சிரித்தவன் இன்னும் அந்தரங்கமாக பேச, வேறு வழியின்றி தன் இதழ்களை கொண்டே அவனது இதழ்களை சிறை செய்தாள்.
அதில் மனம் மயங்கியவன் அவளை நகர்த்திக்கொண்டு எங்கெங்கோ சென்றான்.
அதை உணர்ந்தாலும் மயூ பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
என்ன செய்யணுமோ செய்துக்கொள்ளட்டும்... என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாள். அதனால் அவனோடு ஒத்து இளைந்தாள். அவளது நெருக்கம் கண்டு சிலிர்த்தவன்,
அவளின் காதோரம் முத்தமிட்டு, “நான் என்ன செஞ்சாலும் நீ சம்மதம் சொல்லணும்” என்றான்.
“அது எப்பொழுதோ எடுத்த முடிவு...” என்று கடுப்படித்தாள். பின்னே நெருக்கமான நேரத்தில் இவன் இப்படி பிதற்றினால் அவள் என்ன தான் செய்வது.
“ப்ச்... நான் அதை சொல்லலடி.” என்றவன் வன்மையாக அவளை கையாள தொடங்கினான்.
“ஷ்... ஷ்.. ஆதி என்ன பண்றீங்க...” அவனது தொடுகையில் தேகம் சிலிர்த்தவள், அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி போனாள்.
“ம்ம்ம்...” என்றானே தவிர அவளை விட்டு அவன் விலகவே இல்லை. நெருக்கம் என்றால் அப்படி ஒரு நெருக்கம். அவளை துளைத்துக்கொண்டு அவளுள்ளே சென்றுவிடுவான் போல... இரு கூறாய் அவளை வெட்டி உள்ளே தன்னை வைத்து உப்புட்டு போல மாற்றிவிடுவான் போல...
அந்த அளவு அவளிடம் நெருக்கம் காட்டினான். அவனது வேகத்தில் மூச்சு வாங்கியவள்,
“எதுக்கு இவ்வளவு அவசரம்...” என்று கேட்டாள்.
“எல்லாம் காரணமாக தான்...” என்றவன், “கொஞ்சம் வலிக்கும். வலியை பொறுத்துக்கோ.” என்று மேற்கொண்டு அவன் அவளிடம் இன்னும் நெருங்கினான். அவனது நெருக்கத்தில் கண்களை மூடி அவனது வியர்வை வாசத்தை உள்ளுக்குள் நிரப்பிக்கொண்டவளின் கால்களில் ஏதோ சுர் என்று ஓட... அவளது காதல் பித்தம் களைந்து வலி எடுக்க ஆரம்பித்தது.
சுர் என்ற ஓட்டத்தின் பின் வலது காலின் அடி காலில் வலி ஆயிரம் மின்சாரம் பாய்ச்சியது போல எடுக்க “அம்மா...” என்று அலறிவிட்டாள்.
அவளது அலறல் வெளியே கூட கேட்கும் அளவுக்கு இருக்க, மயூ உடை மாற்றி வர அதிக நேரம் ஆகியதில் சீதாவிற்கு பயம் வந்து ஒட்டிக்கொண்டது மனதில். அதனால் சீதா இன்னும் சிலரோடு அவளது அறைக்கு வர... சரியாய் அந்த நேரம் மயூவின் அலறல் சத்தம் கேட்டது.
மேற்கொண்டு மேற்கொண்டு மயூவின் அலறல் பெரிதாகிக்கொண்டே போக கீழே இருந்தவர்களில் பாதி பேர் அவளது அறை வாசலின் முன்பு வந்து நின்றார்கள்.
“மயூ என்ன ஆச்சு...”
“கதவை திற...”
“என்னடா ஆச்சு...”
“எதுக்கு கத்துற...” என்று எல்லோரும் கேள்வி மேல் கேள்வி கேட்க, மயூவோ தன் எதிரில் இருந்த தன்னவனையே கடுமையான சீற்றத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன லுக்கு... எனக்கு கிடைக்காதவ வேற யாருக்கும் கிடைக்க கூடாது... உன்னை அவ்வளவு ஈசியா விட்டுவிடுவானா...? இன்னும் என்னை பத்தி முழுசா தெரியாம இருக்கியே செல்லம். வாட் அ சேம்.. வாட் அ சேம்... முடுஞ்சா இங்க இருந்து வந்து என்னை என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.” என்று சவடால் பேசியவன் உப்பரிகையில் ஏறி குதித்து கீழே இறங்கினான் சர்ரென்று..
அவனது இந்த செயலில் கண்கள் நிறைய கண்ணீரும், மனம் நிறைய வேதனையும் கொண்டவள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் தட்டு தடுமாறி போனாள்.




