“கண்ணம்மா” என்று அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அடைத்த தொண்டையை சரி செய்துக் கொண்டு,
“இல்லடா இதுல உன் பீரியட்ஸ் டேட் எதுவும் வந்தா அதை ஸ்கிப் பண்ணிடலாம் இல்லையா அது தான் கேட்டேன்” என்றான்.
“ஓ... அப்படியா மாமா” என்றவள், தன் தேதியை சொன்னாள்.
“அப்போ பின்னாடி வர்றதை எடுத்துக்கலாமா?” கேட்டான்.
“ஓகே மாமா” என்றவள்,
“எனக்கு ஒண்ணுமே தெரியல தானே” என்று உள்ளேப் போன குரலில் கேட்டவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,
“நான் இருக்கும் போது என் கண்ணம்மாவை அப்படி பீல் பண்ண வைப்பானாடி.. அதனால தான் எல்லோருக்கும் மத்தியிலும் கேட்கிறதை தவிர்த்து உன் கிட்ட மட்டும் கேட்டேன்.. உன்னை எங்கும் தடுமாற விட மாட்டேன் கண்ணம்மா” அவளின் உச்சியில் கன்னத்தை வைத்து அழுத்திக் கொண்டவன் அங்கேயே முத்தமும் வைத்தான்.
அவனின் நெஞ்சோடு புதைந்துப் போனவள் அவனின் நெஞ்சில் தன் ஈர இதழ்களால் அழுத்தமாக முத்தம் வைத்து, “நீங்க மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா என் வாழ்க்கை எப்படி இருக்கும்னு நினைச்சு கூட பார்க்க முடியல மாமா.. தனியா தவிச்சு தனிமையிலே உழன்று மூச்சு விடவே சிரமப்பட்டு இருந்த என்னை மகிழ்ச்சியின் உச்சத்துல கொண்டு போய் நிறுத்தி ஒவ்வொரு நிமிடமும் என்னை கொண்டாடிட்டு இருக்கீங்க.. ஐ லவ் யூ சோ மச் மாமா” அவனை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள் கதிரவனின் பனிநிலவு.
அதற்கு அடுத்து வந்த நாள்கள் எல்லாம் வெகு விரைவாக ஓடிப் போனது. வெளி வட்டாரத்தில் வைக்க வேண்டிய பத்திரிக்கை எல்லாம் இவனே வைத்து முடித்து விட்டான். ரேவதியும் சேகரனும் ஹனிமூனை மூன்று நாளில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
அவர்கள் திரும்பிய அன்றே அனைவரையும் கூடத்தில் ஒன்று கூட்டினான்.
மங்கையும் சிங்காரமும் “இப்ப எதுக்கு இந்த கூட்டம்..” சத்தமாகவே கேட்டார்கள். அவர்களுக்கு அத்தனை எரிச்சல் வந்தது. பின்ன ஊரே கேலி செய்து அல்லவா சிரித்துக் கொண்டு இருக்கிறது..
மங்கை அடித்துக் கொண்ட தம்பட்டம் அப்படி.. “என் அண்ணன் மகன் தான் என் மருமகன்.. அவனை தவிர வேற யாரு இருக்கா என் மகளுக்கு பொருத்தமா... என் மக இருக்குற அழகுக்கும் அந்தஸ்த்துக்கும் நிறத்துக்கும் கதிரவன் தான் மேட்ச்சா இருப்பான்.. வேற ஆம்பளை இந்த ஊர்ல இருக்கான என்ன” என்று அவ்வளவு பெருமை பேசியதில் இன்று ஊரில் இருப்பவர்களுக்கு தலை காட்ட முடியவில்லை.
ஏனெனில் அந்த ஊரில் ஆம்பளையே இல்லாத மாதிரி அல்லாவா பேசி இருக்கிறார். பையன்களை பெற்ற அத்தனை பேருக்கும் மங்கையின் வார்த்தை சுருக்கென்று தைத்து இருந்தது. இன்றைக்கு அது இல்லாமல் போனதில் “நல்லா வேணும்.. என்ன ஆட்டம் போட்டா.. கொஞ்சமாவா பேசுனா.. நாக்குல நரம்பு இல்லன்னு கண்டமேனிக்கு பேசலாமா.. அதுக்கு தான் ஆண்டவன் வச்சான் ஆப்பு” என்று அவ்வர் காது படவே பேசினார்கள்.
அதில் மங்கைக்கு அத்தனை தலை இரக்கமாய் போனது. ஆனாலும் அவரால் என்ன செய்ய முடியும்.. முடிந்தவரை தாய் தகப்பனிடம் பேசி பார்த்து விட்டார். அவர்கள் கையை விரித்து விட, அண்ணனிடம் ஓடினார்.
ஏற்கனவே இவர் பேசிய பேச்சால் காமாட்சியிடம் சண்டை போட்டு அடித்தது நினைவுக்கு வர,
“இதுல நான் என்ன முடிவும் எடுக்க முடியாது மங்கை. நீ கதிரவன் கிட்ட பேசி பாரு” என்று நகர்ந்து விட்டார்.
வேறு வழியில்லாது கதிரவனிடமே நேரடியாக சென்றார்.
அவன் டெப்போவில் அமந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டு இருந்தான். பனி அருகில் அமர்ந்து அவன் அடுத்ததாக தொடங்க இருந்த கேரவன் பிசினஸை பற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
என்ன மாடல், என்ன பெசிலிட்டி ஆட் பண்ணும் என்று அவள் பார்த்துக் கொண்டு இருந்த இவர் உள்ளே வந்தார். கூடவே சிங்காரமும் வந்தார்.
வந்தவர்களை “வாங்க” என்று அமரவைத்தவன் பனியை பார்த்தான்.
உடனடியாக போனை எடுத்து காபி ஸ்நேக்ஸ் வாங்கிட்டு வர சொல்லி சொன்னவள் எழுந்து வெளியே போக,
“உட்காருடி” என்றான் அழுத்தமாக.
“மாமா” என்று அவள் மறுக்க,
“அப்போ சொன்னது தான் எப்பவும்.. உட்காரு” என்று சொன்னவன், இவர்கள் புறம் திரும்பி “சொல்லுங்க” என்றான்.
“நான் நேரடியா விசயத்துக்கு வரேன் கதிரவா.. என் மகளை எப்போ கட்டிக்குவ” என்றார் மங்கை.
அதை கேட்டவன் உடனடியாக பனியை பார்த்தான். அவள் முகம் மாறாமல் இயல்பாக இருந்தாள். அதில் நிறைந்துப் போனவன்,
“நிலா தான் என்னோட மனைவி.. அவளுக்கும் எனக்கும் தான் கல்யாணம். சோ இந்த பேச்சு இனி எடுக்க வேணான்னு நினைக்கிறேன்..” என்றான் எந்த பூச்சும் இல்லாமல்.
“நீ இப்படி சொல்லுவன்னு நாங்க கொஞ்சமும் நினைச்சு பார்க்கல கதிரவ.. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்ட இல்ல.. உன்னையே நினைச்சுக்கிட்டு இருக்க என் பொண்ணுக்கு நான் என்ன பதிலை சொல்லுவேன். நீ தான் என் வீட்டு மாப்பிள்ளைன்னு தண்டோரா போடாத குறையா ஊர்ல இருக்குற அத்தனை பேருக்கும் சொல்லி வச்சு இருக்கேன். இப்போ நீ வேற ஒருத்தியை கட்டிக்கிறேன்னு சொன்னா ஊரே என் மூஞ்சில காரி துப்பாதா..” என்று நிற்காமல் பேசிக் கொண்டே போக,
“லிசன்... நான் மகா கிட்ட பேசிட்டேன்.. அவளுக்கு அப்படி எந்த தாட்டும் என் மேல இல்லன்னு சொல்லிட்டா.. அதனால அவளை வச்சு ப்ளேம் பண்ண பார்க்காதீங்க. நீங்க தண்டோரா போட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். நீங்க செய்த செயலுக்கு நீங்க தான் அதனோட சாதக பாதக பலனை அனுபவிக்கனும். அதை விட்டுட்டு என்னை குறை சொன்னா அது எனக்கு சுத்தமா பிடிக்காது. நான் எந்த வகையிலும் உங்கக்கட்ட நம்பிக்கை கொடுத்தது இல்ல. என் தேடலே வேற.. அது தெரிஞ்சும் நீங்களே உங்க விருப்பப்படி கண்டதையும் கற்பனை பண்ணி வச்சு அது நடந்து தான் ஆகணும்னு சொன்னா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்..” என்றவன்,
“இந்த முறை ரொம்ப நிதானமா பேசுறேன். இதுக்கு மேல இதை பத்தி பேசுனா நான் ரொம்ப ஹார்ஷா பேச வேண்டியது இருக்கும். சோ பெட்டர் இதை இதோட விட்டுட்டா எல்லாருக்கும் நல்லது. தேவையில்லாம என் நேரத்தை வீணடிக்க வேணாம்..” என்றான் பட்டென்று.
கதிரவன் இப்படி பேசுவான் என்று ஏதிர் பார்க்காத சிங்கரதுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது.
“உன்னை தேடி வந்து பேசுனோம் இல்லையா அதுக்கு நீ ரொம்ப நல்ல மரியாதை குடுத்துட்ட கதிரவா..” ஆற்றாமையில் அவர் பொங்க,
தேவன் சரியாக அந்த நேரம் உள்ளே வந்து,
“மாப்பிள்ளை.. தம்பிக்கு ஒர்க் பிரஷர் அதிகம். அதோட இப்படி வேலை செய்யிற இடத்துல வச்சு பேசுற காரியமா நீங்க பண்ணி இருக்குறது. நம்ம வீட்டுல வச்சு பேசி இருக்கலாம் இல்லையா? நீங்க செஞ்சது மட்டும் சரியா? ஏதோ தம்பியை கார்னர் பண்ற மாதிரி இங்க வச்சு லாக் பண்ணி பேசி இருக்கீங்க.. சோ அவனுக்கு கோவம் வர தான் செய்யும்” என்ற தேவன்,
“முதல்ல வீட்டுக்கு வாங்க.. அங்க வச்சு மிச்சம் மீதியை பேசிக்கலாம். இங்க தம்பியை பார்க்க நிறைய பேர் காத்துக்கிட்டு இருக்காங்க” அப்படி இப்படி என்று அவர்களை அழைத்துக் கொண்டு தானே வீட்டில் போய் விட்டு விட்டு வந்தார்.
பனி தான் அவருக்கு போனை போட்டு வரவைத்து இருந்தாள்.
“நீ பார்த்த வேலை தானா இது” என்று அவளிடம் கடிந்தான்.





