அவள் அதிரவெல்லாம் இல்லை. அவளுக்கு வேதனை என்றால் முதலில் துடைக்கும் கரம் அவனது தானே. வாகாக அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு அவனின் கையில் இருந்தாள்.
அவனது சட்டை பட்டன் இரண்டை அவிழ்த்து விட்டு அவனின் வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொண்டவள்,
“இந்த இறுக்கம் இணைப்பு பிணைப்பு எனக்கு எப்பவும் வேணும் கதிரவா” என்றாள்.
“மாமா சொல்லுடி” என்றான் இன்னும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டு.
“சொல்வேன்..” என்றவள் அவனின் நெஞ்சோடு இன்னும் தன் முகத்தை வைத்து அழுத்தினாள்.
“ஸ்..” என்று மெல்லிய முனகல் அவனிடம் இருந்து.
“என்ன ஆச்சு?” பதறிப்போய் கேட்டாள்.
“உன் மூக்குத்தி குத்திடுச்சுடி”
“அப்போ கழட்டிடவா?”
“ம்ஹும்.. இது ஸ்பெஷல் வைரத்துனால செஞ்ச மூக்குத்திடி.. கழட்டாத..” என்றான்.
“ம்கும் ரொம்ப தான்” என்றவள்,
“சாப்பாடு ஊட்டி விடுங்க மாமா.. சாப்பிடலாம்” என்று கேட்க, அவளை தன் மடியில் அமரவைத்துக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட்டான். அதோடு அவளும் அவனுக்கு ஊட்டி விட, பொழுது இனிமையாக கரைந்தது.
மேலே வந்த காமாட்சி இந்த காட்சியை பார்த்து விட்டு புன்னகையுடன் கீழே போய் விட்டார்.
“லவ் யூ மாமா” என்றாள் கைக்கழுவி விட்டு நிமிர்ந்தவனிடம்.
அவளின் முந்தானையை பற்றி கையையும் வாயையும் துடைத்தவன், அதை பிடித்து இழுக்க அவன் மீது வந்து விழுந்தாள் பனி.
“நானும் லவ் யூ” என்றான் மிக சாதரணமாக.
“நான் பீல் பண்ணி சொல்றேன்” சிணுங்கினாள்.
“நானும் பீல் பண்ணி தான்டி சொல்றேன்.. நீ இல்லன்னா இந்த கதிரவனோட வாழ்க்கை முழுமை ஆகாது.. என்னை முழுமை பெற வச்சவ நீ தான்..” என்றான் ஆத்மார்த்தமாக.
“ம்ஹும் நீங்க தான் என்னை முழுமை பெற வச்சவர்.. எப்படி அந்த கதிரவன் கிட்ட இருந்து வானத்து நிலா ஒளியை வாங்கி பிறகு பிரகாசிக்கிதோ அது மாதிரி தான் இந்த நிலாவும்.
இந்த கதிரவன் கிட்ட இருந்து ஒளியை வாங்கி பிரகாசிக்கிறது. இந்த கதிரவன் இல்லன்னா இந்த நிலா இல்ல” என்றாள் அத்தனை காதலுடன்.
அவளின் விளக்கம் கேட்டு புன்னகைத்த கதிரவன்,
“லவ் யூடி கண்ணம்மா” என்றான்.
“நானும்” என்று சொல்லி அவனின் பரந்த நெஞ்சில் படர்ந்துக் கொண்டாள் பெண்ணவள்.
“படுக்கலாமா?” கேட்டவன் வெறும் தரையில் நீட்டி நிமிர்ந்து படுத்தவன், கை நீட்டி அவளை இழுத்தான். அவனின் நெஞ்சில் பொத்தென்று வந்து விழுந்தாள் கதிரவனின் கண்ணம்மா..
அவனின் நெஞ்சில் இரு கையையும் வைத்து அவன் முகம் பார்த்து படுத்தவள் அவனையே ஆழமாக பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கிற?”
“ம்ஹும்.. இந்த ஒரு மாசத்துல எவ்வளவு மாற்றங்கள் கொண்டு வந்துட்டீங்க என் வாழ்க்கையிலன்னு பார்த்தேன்” என்றவள்,
“என்னை எங்கயும் தலை குனிய விடாம பார்த்துக்கிட்டீங்க கதிரவன்...” என்றாள் நெகிழ்வாக. அவளை முழுமையாக பேச விட்டான். இடையில் எங்கும் குறுக்கிடவே இல்லை.
“நீங்க எங்கயும் வாய் வார்த்தையா இது உன் பிள்ளைன்னு சொல்லாமலே என்னை என் அப்பா அம்மாவுக்கு அடையாளம் காட்டிட்டீங்க.. என் மனம் நோகாம அப்பா அம்மாவை எனக்கு குடுத்துட்டீங்க.. என்னை தூக்கி எறிஞ்சவங்க முன்னாடி என்னை ராணியா நிக்க வைக்கிறீங்க.. யாரு மாமா நீங்க எனக்கு” என்று விழிகளில் மெல்லிய நீர் கோர்த்தது.
“நான் கட்டுற புடவையில இருந்து போடுற மூக்குத்தி வரை எனக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்யுறீங்க.. என் ஒட்டு மொத்த உறவா நீங்க மட்டும் தான் எனக்கு தெரியுறீங்க.. உங்க முன்னாடி அப்பா அம்மா கூட இரண்டாம் பட்சமா தெரிய வைக்கிறீங்க.. யாரு கதிரவா நீ? என்னை எனக்கே அறிமுகம் செய்து வைக்கிறீங்க.. இதுக்கு முன்னாடி நான் இப்படி எல்லாம் இருந்தது இல்ல.. ஆனா இப்போ முழுசா இந்த கதிரவனோட நிலாவா மாறிட்டேன்” என்று அவள் புலம்பி தள்ள, அத்தனையையும் கேட்டுக் கொண்டு இருந்தான் சின்ன புன்னகையுடன்.
“புலம்பி முடிச்சாச்சா.. கால் வலிக்கிதுன்னு சொன்னியே.. வா சுடு தண்ணீர் எடுத்து வைக்க சொல்லி இருக்கேன்” என்று அவளை கீழே கூட்டி சென்று எந்த பந்தாவும் இல்லாமல் இலகுவாக அவளுக்கு கால் பிடித்து விட்டவனை பார்த்தவள், “இதுக்கு மேல் தாங்க மாட்டேன்டா கதிரவா” என்று அவனை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவள் அவனின் முரட்டு இதழ்களை வன்மையாக கவ்விக் கொண்டாள் பெண்ணவள்.
--
“நான் உன்னை விட பெரியவன்டி.. அசால்ட்டா டா” சொல்ற என்று ஈரமாக இருந்த உதட்டை துடைத்துக் கொண்டே பனியை முறைத்தான்.
“அது ஏதோ ஒரு ப்ளோல வாந்திடுச்சு வாத்தியார் இனி சொல்ல மாட்டேன்” சுணங்கிக் கொண்டு சொன்னவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன், அவளை தன் மீது இழுத்துப் போட்டுக் கொண்டவன்,
“இப்ப சொல்றது தான் எப்பவும் எல்லோருக்கும் முன்னாடி வரும்டி.. ஏற்கனவே நீ பெயர் சொன்னதுக்கே எல்லோரும் அவங்கவங்க நெஞ்சை பிடிச்சுக்கிட்டாங்க. இதுல நீ டா மட்டும் போட்ட.. அவ்வளவு தான்” என்றான்.
“அதுவும் சரி தான்.. இனி சொல்லல மாமா” என்றாள் உடனடியாக.
“தட்ஸ் மை கேர்ல்..” என்றவன்,
“கை வலிக்கிதுன்னு சொன்னியே அழுத்தி விடவாடி”
“வாயும் தான் வலிக்கிதுன்னு சொன்னேன்” உதட்டை சுளித்தாள்.
“அப்படியா?” என்றவன் அவளின் பட்டு இதழ்களை விரலால் நசுக்கி அழுத்திப் பிடித்தவன், பிதுங்கி இருந்த இதழ்களின் வனப்பும் முன்னர் முத்தம் இட்டதால் விளைந்த சின்ன காயமும் அவனை வெகுவாக ஈர்க்க, தன் இதழ்களுக்குள் அவளின் இதழ்களை சிறை எடுத்துக் கொண்டான்.
அவளின் மென்மையான இதழ்களில் தொலைந்துப் போனவன், இன்னும் நெருக்கமாக அவளின் இடுப்பில் கைக்கொடுத்து தன்னுடன் இழுத்துக் கொண்டவன், அவளின் இடுப்பு சேலையை இறக்கி விட்டு வெற்று இடுப்பை முரட்டு தனமாக பற்றிக் கொண்டான்.
“ம்ம்ம்” சிணுங்கினாள்.
“செம்மையா இருக்கடி” என்றவன் வெண்ணையாய் வலுக்கும் அவளின் இடுப்பில் கையை அங்கும் இங்குமாய் அலைய விட்டான்.
அதில் எழுந்த கூச்சத்தில் இவள் நெளிய, “ம்ஹும்” என்று முத்தமிட்டுக் கொண்டே கட்டளை போட்டவன் தன்னோடு அவள் முழுமையாக புதைந்து போகும் அளவுக்கு இறுக்கிக் கொண்டான்.
அவனது அதீத நெருக்கத்தில் இவளின் முகம் அந்தி வானமாய் சிவந்துப் போனது. அதை இரசித்துப் பார்த்தவன் அவளின் வெட்கத்தை இன்னும் அதிகமாக்கும் எண்ணத்துடன் அவளை புரட்டி கீழே தள்ளி அவள் மீது தாவி படர்ந்தவன் அவளின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
கண்களை அழுத்தமாக மூடிக் கொண்ட பனி, கதிரவனின் பின்னந்தலையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவளின் அணிந்து இருந்த பட்டு சேலை அவனுக்கு உறுத்தலை கொடுக்க, வேகமாய் அவ்விடம் விட்டு சற்று மேலேறி அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு மீசையால் கோலம் போட்டான்.
அவனின் ஒவ்வொரு தொடுகையிலும் சிலிர்த்துப் போய் காலோடு கால் பின்னிக் கொண்டாள். அவளின் மீது தன் முழு எடையும் போட்டு படுத்து இருந்தவனின் தீரத்தில் பெண்ணவளுக்கு சொல்லாத பல உணர்வுகள் தோன்றியது.
அதுவும் அவளின் கழுத்தில் குறுகுறுப்பூட்டி, மீசை முடிக் கொண்டு கூச்சமூட்டி பெண்ணவளை மேலும் சிலிர்க்க வைக்க, தவியாய் தவித்துப் போனாள்.





