Notifications
Clear all

அத்தியாயம் 54

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நான் ஏன் பதில் சொல்லணும். என் உரிமை என் தம்பிக்கு நான் தான் பொண்ணு குடுப்பேன். அதை தடுக்க யார் வந்தாலும் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” சிலிர்த்துக் கொண்டார்.

“ம்ம் பவரை யூஸ் பண்ண போற” ரேவதியை கேலி செய்து சிரித்தார்.

“ஏன் உங்களுக்கு ஆசை இல்லையா என்ன? என்ன மட்டும் கிண்டல் பண்றீங்க” அவரின் காலை வாரினார் ரேவதி.

“என் உயிரு, ஆஸ்த்தி, சொத்து, சுகம் எல்லாமே என் மச்சானுக்கு தான். அப்போ என் மகளும் என் மச்சான்னுக்கு தானே” கண்சிமிட்டி சிரிக்க,

“சரியான மச்சான் கோண்டு நீங்க” சிரித்தார் ரேவதி.

“நீ மட்டும் உன் தம்பி கோண்டு இல்லையா” இருவரும் மனம் மகிழ்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சிரித்தார்கள்.

“நம்ம பொண்ணு அப்படியே உன்ன மாதிரி ரேவதி” என்றார் மகளின் மீது பார்வையை வைத்து.

“ம்ம்.. ஆமாங்க.. ஆனாலும் உங்க சாயலும் நல்லா தெரியுது.. அவ தலையை சாச்சு பேசும் போது அப்படியே நீங்க தான்” என்றார் ரேவதி.

“மிஸ் பண்ணிட்டோம்டி” கண்கள் பணித்தது சேகரனுக்கு.

“நான் அழக்கூடாதுன்னு வைராக்கியமா இருக்கேன் சேகரன்.. அழ மாட்டேன்..” என்று கண்களில் வைரம் மின்ன சொன்ன ரேவதியின் உணர்வுகளை புரிந்துக் கொண்ட சேகரன் அவரின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டார்.

“மாமா இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே நிக்கிறது.. கால் வலிக்கிறது. நான் அம்மாச்சியோட இருக்கவா?” என்று கேட்டாள் பனி.

“கொன்னுடுவேன்டி உன்னை.. மரியாதையா இங்கையே நில்லு.. நைட்டுக்கு கால் அழுத்தி விடுறேன்” என்றான்.

“ஹலோ நீங்க பெரிய தலைக்கட்டு ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் கேலியாக.

“அதனால பொண்டாட்டிக்கு கால் அழுத்தி விடக்கூடாதுன்னு சட்டம் எதுவும் இருக்கா என்ன?” புருவம் உயர்த்தி கேட்டவனை இன்னும் அதிகமாக நேசிக்கத் தோன்றியது.

“பேச்சுலையே நல்லா மயக்குறீங்க”

“பேச்சுல மட்டும் இல்லடி.. முத்ததுலையும் மயக்குவேன்.. பார்க்குறியா?” காதல் மன்னனாய் மாற,

“ஹலோ பாஸ் தங்கச்சி கல்யாணம் ஞாபகம் இருக்கட்டும்” என்றவள் அவனின் கையோடு கைக் கோர்த்துக் கொண்டாள்.

இவர்கள் இருவரையும் தான் வச்ச கண்ணு வாங்கமால் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தார் மங்கை. கூடவே சிங்காரமும்.

மங்கையின் மனதோடு சேர்த்து வயிறும் பற்றி எரிந்தது. காந்தி எடுத்தது.. அவரால் இருவரின் நெருக்கத்தையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. என் மகள் இருக்க வேண்டிய இடம் இது என்று அவனின் மனது சொல்லிக் கொண்டே இருந்தது.

அதுவும் பனியின் முகத்தில் தென்பட்ட வெட்க சிரிப்பும், சிவப்பும் அவரை கொதிநிலைக்கு தள்ளியது. அதோடு ஊரின் முக்கியஸ்த்தர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்க வைக்க இங்கே இவருக்கு நெருப்பின் மீது அமர்ந்து இருப்பது போல தோன்றியது.

போச்சே போச்சே.. எல்லாம் கைநழுவி போச்சே என்று உக்கிரமானர். இல்ல விட மாட்டேன். இந்த மான மரியாதை கெளரவம் எல்லாம் எனக்கும் என் பொண்ணுக்கும் தான் வந்து சேரனும். அதை வேற யார் தட்டி பறிச்சுட்டு போனாலும் நான் விட மாட்டேன்.. என்று ஆவேசமாக சொல்லிக் கொண்டார்.

மங்கை என்ன தான் ப்ளான் பண்ணினாலும் கதிரவனின் முன்பு செல்லுபடியாகுமா என்ன..

சிரித்த முகமாக வந்த அனைவரிடமும் பேசி வணக்கம் சொல்லி, வாயும் கையுமே வலி எடுத்துவிட்டது பனிக்கு.

“கையெல்லாம் வலிக்கிறது மாமா”

“கையும் சேர்த்து அழுத்தி விடுறேன்” என்றான்.

“வாயும் வலிக்கிறது”

“சரி அதையும் அழுத்தி விடுறேன்”

“மனசாட்சி இருக்கா உங்களுக்கு” பிணங்கிக்கொண்டாள்.

“அதெல்லாம் கழட்டி வச்சுட்டேன்” என்றவன், அவனை நோக்கி வந்த பெரியவரை வரவேற்று, பனிக்கு அறிமுகம் செய்து வைக்க, பட்டென்று புன்னகை முகமாகி தலையசைத்து வரவேற்றாள்.

“தட்ஸ் மை கேர்ல்” என்றான் பெருமையாக.

“ஹலோ உங்க இமேஜ் போயிடும்னு தான் மத்தபடி வேற ஒன்னும் இல்ல..”

“ஆஹாங்” நக்கலாக சொன்னவன்,

அவள் எதிர்பாரா நேரம் காதோரம் குனிந்து,

“லவ் யூடி கண்ணம்மா” என்றான்.

அதில் அவளின் மனமும் முகமும் பூவாய் மலர்ந்து மணம் வீசியது.

“எந்த இடத்துல சொல்றீங்க” தன் வெட்கத்தை மறைத்துக் கொண்டு முறைத்தாள்.

“எந்த இடமா இருந்தா என்ன.. நான் லவ் யூ” கண்ணடித்தான்.

“உங்க தங்கச்சி கல்யாணம் நடக்குது..”

“சோ வாட்..” என்றவனை அடக்க முடியாமல் இவள் தான் திணறினாள்.

“ஹேய் குங்குமம் லேசா கலைஞ்சி இருக்கு பாரு..” என்று தன் கைக்குட்டையால் அவளுக்கு சரி பண்ணி விட,

“உங்களுக்கும் தான் தலை கலைஞ்சி இருக்கு...” என்று அவனுக்கு முன் முடியை சரி செய்து விட, வந்து இருந்த சொந்த பந்தம் உற்றார் உறவினர் எல்லோரின் கண்களும் மணமக்களை விட்டுட்டு இவர்களை தான் ஆவென்று பார்த்தார்கள்.

கதிரவனை மேடைக்கு அழைத்தார்கள். இன்னும் முகூர்த்தத்துக்கு நேரம் இருந்தது.. இப்பொழுது தான் தாய் மாமன் மாலையே மண மக்களுக்கு போட்டு விட்டார்கள். இனி தான் மற்ற சடங்குகள் எல்லாம் செய்ய வேண்டும்.

“கொஞ்ச நேரம் ஆகட்டும்.. வந்திடுறோம்” என்றானே தவிர போகவில்லை. வரவேற்பிலே நின்று இருந்தான்.

“என்ன மாமா.. சித்தி கல்யாணத்தை ஆரம்பத்துல இருந்து பார்க்கலாம்னு நினைச்சேன். முன்ன போக விடல.. இப்போ அவங்களே கூப்பிடுறாங்க.. ஏதோ சடங்கு செய்யணும்ன்னு இப்பவும் போக விடலன்னா என்ன அர்த்தம்” என்ற பனியை ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான்.

அந்த பார்வையில் இருந்த பொருள் புரியவில்லை. ஆனால் அவனது பேச்சை மீறி அவளால் போக முடியவில்லை. எனவே அமைதியாகி விட்டாள்.

அவளின் அமைதியை பார்த்து “போகனுமா?” என்று மட்டும் கேட்டான்.

அவள் வேண்டாம் என்று தலையை ஆட்ட, சின்னதாய் சிரித்தவன்,

“கொஞ்ச நேரம்.. போயிடலாம்” என்றான். தலையை ஆட்டியவள் அவனுடன் நின்றுக் கொண்டாள்.

“இந்த கதிரவன் செய்யிறதை பார்த்தீங்களா அண்ணி” என்று கலா சும்மா இருக்காமல் மங்கையிடம் ஏத்தி விட,

“இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும் கலா.. அப்புறம் இருக்கு இந்த பயலுக்கு..” கருவிக் கொண்டார்.

“ம்கும்.. நீ பெருசா கோட்டை கட்டி வை. அதுல இடி விழுகுதா இல்லையான்னு மட்டும் நான் பார்க்கிறேன்.. உன் மவளுக்கு புருசன் அது என் மவன் தான்.. நீ என்ன பண்ணாலும் கதிரவன் பயலை அசைச்சுக்க முடியாது” என்று கலா மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

இதுக இரண்டும் இப்படி இருக்க, மணமகள் அறையில் துளசி அழகாக தயார் ஆகிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு உதவியாக மகா இருந்தாள். கூடவே ரேவதியும் இருக்க மிகவும் உதவியாக இருந்தது.

வீட்டு பெரியவர்கள் மணமேடையில் பரபரப்பாக அதையும் இதையும் எடுத்து வைத்துக் கொண்டு மந்திரம் ஓதுபவர் கேட்கும் பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

தாத்தா பெரிய நாற்காலியில் அமர்ந்து எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தார். பொன்னன் மற்றும் தேவன் இருவரும் எல்லோரையும் வரவேற்று, அமர சொல்லி,  இன்முகமாக பேசி, சாப்பிட சொல்லிக் கொண்டு என இருந்தார்கள்.

“என்ன ரேவதி இன்னும் உன் மாமானார் மாமியார் யாரும் வரல.. ஓரகத்தி, நாத்தனார் குடும்பமும் வரல..” கவலையுடன் காமாட்சி கேட்க,

“வருவாங்க ம்மா” என்று முடித்துக் கொண்டார் ரேவதி.

பெருமூச்சு விட்டவர் அங்கிருந்து கீழே போய் மணமேடையில் இருந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

சரியாக அந்த நேரம் அந்த மண்டபத்தின் வாசலில் மூன்று கார் வந்து நின்றது.

அதில் இருந்து சேகரனின் அப்பா அம்மா, தம்பி மற்றும் தங்கை குடும்பம் என இறங்கினார்கள். சேகரன் வாசலை ஒரு பார்வை பார்த்தார்.

பின் அலட்டிக் கொள்ளாமல் திரும்பி மாதவனோடு சேர்ந்து கல்யாண வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். ரேவதி சரியாக கீழே இறங்கி வந்து விட்டார்.

வந்தவரும் இந்த காட்சியை பார்த்தார். ஆனால் கண்டுக் கொள்ளாமல் தன் தாயோடு சேர்ந்து மணமேடையில் நின்றுக் கொண்டார்.

அதற்கு நேர் மாறாக கதிரவன் புன்னகை முகத்தோடு வந்தவர்களை வரவேற்றான்.

“வாங்க மாமா வாங்க அத்தை..” என்று சேகரனின் அப்பா அம்மாவை வரவேற்றவன்,

மறக்காமல் சேகரனின் தம்பி மற்றும் தங்கை குடும்பத்தையும் வரவேற்றான்.

“பனிநிலவு..” என்று அழுத்தமாக அழைத்தான்.

“ஹாங் மாமா இங்க தான் உங்கக்கூட இருக்கேன்” என்றாள். அவளுக்கு வந்தவர்கள் யார் என்று எதுவும் தெரியாது.

Loading spinner

Quote
Topic starter Posted : June 12, 2026 4:03 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top