“ஆள் ஆராவரம் இல்லாத பக்கவாட்டு ரோட்டுல தான்டி நிப்பாட்டி இருக்கேன்” என்றவனின் குரலில் இருந்த காண்டை கண்டு லேசாக சிரிப்பு வந்தது அவளுக்கு.
அவளின் சிரிப்பை கண்டு முறைத்தவன்,
“காலையில இருந்து என்னை பைத்தியமாக்கிட்டு இருக்கடி.. என்னால வேற எதையுமே யோசிக்க விடாம ரொம்ப சுண்டி இழுக்குற” என்றவன் மீண்டும் அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.
“ஹைய்யோ.. எரியுது” என்றவளின் பேச்சை எல்லாம் அவன் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. முரட்டு தனமாக அவளின் இடையை கசக்கிப் பிடித்தவன், ஆசை தீர அவளின் இதழ்களில் முத்து குளித்தான். பின் மெல்ல விடுவித்து அவளின் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்.
“ஹைய்யோ..” என்று கிறங்கிப் போனாள். அவனின் மீசை முடி அவளின் கழுத்தை குத்தி கிழிக்க கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டாள். அவனை தடுக்க அவளுக்கு மனமே வரவில்லை. ஏனெனில் தன் மீதான அவனது தேடலின் தீவிரத்தை உணர்ந்து இருந்தாளே.. எத்தனை பொழுதுகள் இராப்பிச்சை காரனாக தன்னை தேடி அலைந்து இருக்கிறான். எத்தனை இடத்தில் அடியும் வாங்கி இருக்கிறான். வயது பிள்ளையை தேடி வந்தால் யாரு தான் சும்மா இருப்பார்கள்.
அத்தனை அடி வாங்கியும் கொஞ்சமும் பின்னுக்கு போகாமல் தன் கொண்ட உறுதியில் இருந்து நகரவே இல்லையே.
ஏன் இவளே எத்தனை நாட்கள் இவனுக்கு அடி வாங்கி குடுத்து இருக்கிறாள் ஹாஸ்ட்டல் வாட்ச்மேனிடம். அப்படி இருந்தும் விடாமல் இந்த நொடி வரை தன்னை விடாமல் தன்னோடு இறுக்கி வைத்துக் கொள்ள எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அவளிடமே போராடிக் கொண்டு இருக்கிறானே..
யாரும் காட்டாத நேசத்தை மொத்தமாக கொட்டி கவிழ்க்கிறானே.. அப்படி பட்டவனுக்கு தன்னை கொடுப்பதில் எந்த தவறும் இல்லையே..
கண்களை மூடி அவனது தொடுகையில் உருகிப் போனாள். பெண்ணவளின் உருகிய நிலை ஆணவனை இன்னும் பித்தம் கொள்ள வைக்க,
“ஒரு முத்தம் குடுடி” கேட்டான். அவனது கண்களில் இருந்த ஆசையை கண்டு, தன் நாணத்தை ஒழித்து விட்டு அவனை இன்னும் நெருங்கியவள் அவனது முரட்டு இதழ்களை முத்தமிடாமல், முடி அடர்ந்து இருந்த அவனின் மீசையை தன் பற்களால் பற்றி இழுக்க வலியில் ஷ்ஷ்.. என்றாலும் அவள் இழுக்க தன் முகத்தை ஏந்திக் கொடுத்தான் கதிரவன்.
“கோவம் வரலையா?” அவனின் விழிகளோடு விழி வைத்து கேட்டவளை இறுக்கிப் பிடித்தவன்,
“எதுக்காக கோவப்படணும்.. நீ என் உயிர்டி.. நீ எது செஞ்சாலும் எனக்கு ஓகே தான்” என்று அவன் முடிக்கும் முன்பே அவனின் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டாள் கதிரவனின் பனிநிலவு.
ஒரு முத்தத்துக்காக கூட அவனை எங்க விட அவளுக்கு மனம் வரவில்லை. முத்தம் மட்டும் இல்லை இதோ இந்த நிமிடம் தன்னை அவன் எடுத்துக் கொண்டாலும் அவள் தடுக்க மாட்டாள். ஆனால் கதிரவன் எல்லை மீற மாட்டானே.. அந்த நம்பிக்கை அவன் மீது மொத்தமும் குவிந்து கிடந்தது.
மெல்ல மெல்ல தட்டு தடுமாறி அவள் கொடுத்த முத்தத்தில் மயங்கிப் போனவன், அவள் விலகவும் அவளை விடாமல் பின்னந்தலையை இறுக்கமாக பற்றி
“முத்தம் குடுக்க கத்துக்கடி.. சும்மா சும்மா சலம்புர. நான் எப்படி குடுக்குறேன்னு கவனி” என்று அவளுக்கு அவன் பாடம் எடுக்க ஆரம்பிக்க அதன் பிறகு அங்கு ஒரே முத்த சத்தம் தான்.
அவளின் மெல்லிய வியர்வை வாசம் அவனை வெகுவாக இழுக்க கண்களை மூடி அவளின் கழுத்தில் புதைந்துக் கொண்டான்.
அவளை ஆராய்ந்து பார்க்க அவனுள் அப்படி ஒரு வேட்கை. ஆனால் அதை எல்லாம் செய்யாமல் வெறுமென அவளின் கழுத்தில் முகம் சாய்த்து இருந்தான். அதற்கு நேர் மாறாக அவளின் இடுப்பை கசக்கி இறுக்கிப் பிடித்து இருந்தான் கதிரவன்.
அத்தியாயம் 16
இருவரின் ஏகாந்தமான மன நிலையை கலைத்தது ரேவதியிடம் இருந்து வந்த அலைபேசியின் அழைப்பு. அதில் சற்றே சுதாரித்த பனி கதிரவனை விட்டு விலகி அமர்ந்தாள்.
அவளை போக விடாமல் அணைபோட்டு பிடித்தவனிடம் போனை காட்டினாள்.
“ப்ச்” சலித்துக் கொண்டே எடுத்து பேசினான். ஆனாலும் அவளை விட்டு விலகவில்லை.
“எங்க வர்ற கதிரவா.. உனக்காக இங்க சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கோம் எல்லோரும்” என்றார்.
“லொகேஷன் சேர் பண்ணு வந்திடுறேன்” என்றான் சுறுக்கமாக.
“இல்லடா.. கொஞ்சம் சீக்கிரமா வா.. அத்தை மாமா எல்லோரும் முறைச்சுக்கிட்டு இருக்காங்க..” என்றார் இரகசியமாக.
“அதுக்காக எல்லாம் சீக்கிரம் வர முடியாது.. எனக்கு எப்போ வரணும்னு தோணுதோ அப்ப தான் வருவேன்” என்றான்.
“ப்ச்.. கதிரவா.. ஏற்கனவே தான் மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துட்டு போன பிறகு நீ அவங்களை லேபிட் ரைட் வாங்கிட்ட.. இன்னும் என்னடா உன் பிரச்சனை”
“அவங்க செஞ்சதுக்கு தான் பேசுனேன்.. இனிமேலும் பேசுவேன். என் தங்கச்சி கல்யாணத்துல கலகம் பண்றவங்களை வீட்டுக்குள்ள விட்டு இருக்குறதே பெருசு.. நீ என்ன ரொம்ப சாதரணமா என்ன பிரச்சனைன்னு கேட்கிறா” அக்காவிடம் எகிறினான்.
“அவனை எதுக்கு இப்ப சொல்ற?” என்று மனைவியை லேசாக முறைத்த சேகரன்,
“மச்சான் பொறுமையா வா.. வெயிட் பண்றோம்” என்று ரேவதியின் கையில் இருந்த போனை பறித்து தான் பேசி விட்டு வைத்து விட்டார்.
“ம்கும் நல்லா மச்சானுக்கு கொடி பிடிங்க” நொடித்துக் கொண்டார் ரேவதி.
“போடி உனக்கு பொறாமை” என்று விட்டு மகனை கூட்டிக்கொண்டு கடையை சுத்தி பார்க்க சென்றார்.
அந்த கடை உணவு விடுதியோடு சேர்ந்து கைவினை பொருள்களும், சூப்பர் மார்க்கெட்டும் சேர்ர்ந்த மாதிரி இருக்க சுத்தி பார்க்க கிளம்பி விட்டார்.
காமாட்சியை முறைத்துக் கொண்டு இருந்தார்கள் மங்கையும் சிங்காரமும்.
“நல்ல மகனை பெத்து வச்சு இருக்கா.. பெரியவங்க யாரையும் மதிக்காதவன்” என்று விழிகளாலே காமாட்சியிடம் எரிந்து விழுந்தார் மங்கை.
இந்த சொற்களை மட்டும் வாய் விட்டு கூறி இருந்தால் அவ்வளவு தான். மங்கையின் அம்மாவே அவரை ஆய்ந்து தள்ளி விடுவார். எனவே பார்வையில் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்.
“இன்னும் எவ்வளவு நேராம் தான் துரைக்கக காத்துக்கிட்டு இருக்கணுமாம்” சிங்காரம் வாயை திறந்து கேட்டு விட்டார்.
பொன்னனுக்கு சங்கடமாக போய் விட்டது. தேவன் தான்,
“இந்தா வந்திடுவாப்ள.. நாம ஆடர் குடுத்துட்டு இருப்போம்” என்று சமாதனம் செய்து ஆடர் குடுக்க ஆரம்பித்தார் தேவன்.
அடுத்த கால் மணி நேரத்தில் பனியோடு வந்து இறங்கினான் கதிரவன்.
நிதான நடையுடன் வந்த மகனை பார்த்தார் பொன்னன். அவருக்கு ஒரு ஆசை இருந்தது. தங்கை மகளையே தன் மகனுக்கு மணம் முடிக்கலாம் என்று. ஆனால் பனியின் கையை கோர்த்துக் கொண்டு வந்த விதத்திலே அவருக்கு புரிந்துப் போனது. தன் மருமகள் யாராக இருக்க போகிறாள் என்று.
பெருமூச்சு எழுந்தது அவருக்கு. அதுவும் கதிரவனும் அந்த பெண் பனியும் இருவரும் பேசிக் கொண்டே உண்டதை பார்த்தவருக்கு உணவு தொண்டைக்குள் செல்லவில்லை.
பாதியிலே எழுந்து விட்டார். அதை ஒரு பார்வை பார்த்தானே தவிர கதிரவன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. காமாட்சிக்கு தான் தவிப்பாக இருந்தது. இருந்தாலும் கதிரவனின் முடிவை யாரால் மாற்றி அமைக்க முடியும்.





