ஏந்திழையாளுக்கு தான் அவனை பற்றி தெரியுமே. அதனால் பெரிதாக அவனது பரிசுக்காக காத்திருக்கவில்லை. அவள் அவளாகவே இருந்தாள்.
அவளின் காதோரம் அவளின் தங்கைமார்கள் “மாமா என்ன பரிசுடி வச்சு இருக்காரு” என்று கிசுகிசுக்க,
“ம்கும்... உங்க மாமா அப்படியே பரிசு குடுத்துட்டாலும்... முதல்ல அவரை முறைக்காம இருக்க சொல்லு அதுவே பெரிய பரிசு தான்” என்றவள் விழா முடியவும் புடவை மாற்ற சென்றாள்.
அவளுக்கு உதவ தேவகியும் லட்சுமியும் முன்வர அவர்களை தடுத்து விட்டு தானே அவளை கூட்டிக் கொண்டு அவனது அறைக்கு வந்தான் சிங்கன்.
காதிலிருந்த பெரிய சிமிக்கியை கழட்டிக் கொண்டு இருந்தவளின் பின்னே கைக்கட்டி நின்றவனை பார்த்தவள்,
“ஒன்னு நீங்க உதவி பண்ணும். இல்லைய்யா பண்ண வந்தவங்களையவது விடணும். அதை விட்டுட்டு இப்படி கையை கட்டிக்கிட்டு நின்னு வேடிக்கை பார்க்க கூடாது” என்றாள்.
“வரவர வாய் ரொம்ப தான்டி பேசுற. முன்னாடி இருந்த பயம் இல்ல போலையே” என்று அவன் தாடையை சொறிந்துக் கொண்டு அவளை ஏற இறங்கப் பார்த்தான்.
“ஏன் என் புருசன் கிட்ட என்னக்கு என்ன பயமாம். உங்களுக்கு பயந்து நடுங்கியது எல்லா கற்காலம் மிஸ்டர்” என்றாள்.
“ம்ஹும்... உன் கண்ணுல பயத்தை வர வச்சுட்டா எனக்கு என்ன தருவ?” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்தவள்,
“என்ன வேணும்?” என்றாள்.
“பயத்தை காட்டிட்டு வாங்கிக்கிறேன்” என்று அவளை பார்த்து கண்ணடித்தவன், கதிருக்கு போனை போட்டான்.
“பாஸ்” என்றான் அந்த பக்கம் இருந்து.
“என் மாமனாருங்க ரெண்டு பேரும் ரொம்ப ஜாலியா இருக்குற மாதிரி இருக்கானுங்க.. நீ என்ன பண்ணு அவனுங்களுக்கு வேலை பார்த்துக்கிட்டு இருக்க ஆட்களை நிறுத்த சொல்லிட்டு அவனுங்களையே அவனுங்களுக்கு வேலை பார்த்துக்க சொல்லிடு” என்று ஏந்திழையாளை பார்த்துக் கொண்டே கதிரிடம் சொன்னான்.
இழையாளுக்கு பக்கென்று போனது. அடப்பாவி ஏதாவது ஒரு விசயத்துல நான் இவருக்கிட்ட மாட்டாம இருக்க மாட்டேன் போல” என்று நொந்துக் கொண்டவள்,
“வேணாங்க ப்ளீஸ். போதும் அவங்க பட்டது எல்லாம். வேலையாட்களை நிறுத்தி இன்னும் அவங்களை வேதனை படுத்த வேணாம்” என்று சொல்லி அவனிடம் கெஞ்ச,
“எப்படி மேடம் இப்பவாவது பயம் வந்ததா இல்லையா?” நக்கலாக கேட்டான்.
“என் இளகுன மனதை வச்சு நீங்க உங்க காரியத்தை சாதிச்கிக்குறீங்க..” புகார் படித்தவள் அவனது நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் முழுமையாக. கதிரிடம் வேணாம் என்று சொல்லி விட்டு அவளை நெஞ்சோடு கட்டிக் கொண்டவன், அவளுக்கு நோகாமல் தலை அலங்காரங்களை எல்லாம் எடுத்து விட்டவனின் நெற்றியில் முட்டியவள்,
“என்ன வேணுங்க?” ஆசையாக கேட்டாள்.
“இன்னும் நாலு பிள்ளை பெத்துக் குடு” என்றான்.
“எத இன்னும் நாளா” என்று அவள் அயர்ந்துப் போக,
“ஏன்டி முடியாதா?” கேட்டான்.
“அதெல்லாம் முடியும் முடியும்” என்றவள் ஆமா எனக்கு என்ன ரிட்டர்ன் கிப்ட் கிடைக்கும் என்று கேட்டாள்.
“என்ன வேணும்?” என்றவன் அவளின் மீது இருந்த நகைகளை எல்லாம் கழட்டி ஓரமாக வைத்தான்.
“இல்ல முன்ன ஒரு நாள் ஒன்னு சொன்னீங்களே...” என்று இழுத்தாள்.
“என்னடி? ராகம் போடாம சொல்லு” என்றவனின் கைகள் அவளின் உடையையும் கலைக்க ஆரம்பித்தது. அவனுக்கு இலகுவாக காட்டிக் கொண்டே அவனது நெஞ்சு முடியை திருகி விட்டவள்,
“தொழில் வளர்சிக்காக பெரிய பெரிய ஆளுங்களுக்கு லஞ்சமா சில பெண்களை கூட விலை பேசுறதா சொன்னீங்களே அதை விட்டுடுறீங்களா?” என்று கேட்டாள்.
“அது ஓகே. பட் சில முதலீட்டாளர் பெண்களே இளவயசு பையன்களை கேட்கிறாங்களே அவங்களுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணவா” என்று அவளை சீண்டுவது போல கேட்டான்.
“ப்ச்... போங்கங்க...” என்று அவனது நெஞ்சிலே அடித்தவள்,
“யாருக்கும் எதையும் ஏற்பாடு செய்ய வேணாம். அதென்ன சுகத்தை குடுத்து காரியம் சாதிக்கிறது...” என்று எரிச்சல் பட்டவளுக்கும் இதெல்லாம் இப்பொழுது ரொம்ப இயல்பா தொழில் துறையில நடந்துக்கிட்டு தான் இருக்கிறது என்று தெரியும். ஆனால் அதை தன் கணவன் செய்யக் கூடாது என்று எண்ணினாள்.
“நீங்க யாருக்கோ ஏற்பாடு செய்யிறது எல்லாம் உங்க தலையில வந்து விழுது. நீங்க தான் அவங்க கூட எல்லாம் படுக்குறதா சுத்திலும் பேசிக்கிறாங்க தெரியுமா? ஏன் அப்பாக்கள் எல்லாம் அப்படி தான் சொன்னாங்க. நான் கூட அதுக்காக தானே சந்தேகப் பட்டு உங்களை கேள்வி கேட்டேன்” என்றாள்.
“நீ நம்பிட்டியா?” என்றான்.
“எப்படி நம்புவேன். என் புருசன் எத்தனை வருடமா எனக்காக மட்டுமே காத்திட்டு இருக்கிறாரு.. இருந்தாரு. அவரு எப்படி இன்னொரு பெண்ணை ஏறெடுத்து பார்ப்பாரு” என்றாள் சிலிர்ப்பாக.
“அது இப்போ தானே தெரியும். ஆனா நான் சொல்றது நம்ம கல்யாணத்தப்ப...”
“அப்பவும் உங்க மேல ஒரு ஈர்ப்பு வந்ததுங்க. என் மனம் எப்பவும் தவறான எண்ணங்களை பிரதிபலிக்காது. உங்களை என் மனது எந்த கரும்புள்ளியும் வச்சு அடையாள படுத்தல.. ஆனா உங்க கோவமும் நீங்க நடந்துக்கிட்ட விதமும் தான் தவறே தவிர நீங்க தவறானவர் இல்லன்னு என் மனம் சொல்லிச்சு. இல்லன்னா இந்த மூஞ்சியை எனக்கு ஏன் ஊட்டியிலேயே பிடிக்கணும்?” என்று கேட்டவளின் உடல் சில்லென்று இருக்க தன்னை குனிந்துப் பார்த்த்தவள் வெட்கத்தில் சிவந்துப் போனாள்.
“பிராடு.. பேச்சு பேச்சா இருக்கும் பொழுதே என்ன காரியம் செய்யிறீங்க” என்று அவனை அள்ளி எடுத்து தன்னை மறைத்துக் கொள்ளப் பார்த்தாள்.
அதற்கு விடாதவன் அவளை அழைத்துக் கொண்டு பாத் டப்பில் மிதமான சுடு நீரில் படுக்க வைத்து பின்னிருந்து அவனும் அமர்ந்துக் கொண்டான். அவனின் உடைகளும் விடை பெற்று இருந்தது...!
காலையில் இருந்து இருந்த கசகசவென்ற மன நிலைக்கு அவன் ரோசா இதழ்களை தூவி நறுமணம் கமழ வைத்து இதமான மனநிலைக்கு கொண்டு வந்தவனை திரும்பி பார்த்தவள் அவனிடம் நெற்றி முத்தம் கேட்டாள்.
அவன் தரமாட்டேன் என்று பிகு பண்ண அவனை முறைத்துப் பார்த்தவள், அவனது முகத்தை இழுத்து அவனது உதடு தன் நெற்றியில் படுவது போல செய்துக் கொள்ள புன்னகையில் சிங்கனின் உதடுகள் விரிந்தது.
பின் அழுத்தமாக அவளுக்கு நெற்றி முத்தம் கொடுத்தான்.
“இன்னைக்கு நீங்களா குடுப்பீங்கன்னு பார்த்தேன்” என்றாள்.
“நீ இப்போ மாதிரி கேட்டு வாங்க வேண்டியது தானேடி” என்றான் அவன்.
“கேட்டு வாங்கிட்டேன் தான் ஆனாலும்.. நீங்களா குடுத்தா இன்னும் ஹேப்பியா இருக்கும்” என்றாள் தன் மனதை மறைக்காது.
“நான் மறந்துடுவேன். நீ ஞாபகப் படுத்துடி”
“ம்கும் எனக்கு முத்தம் குடுக்குறதுக்கு நானே ஞாபகப் படுத்துறேன்” என்று சிலிர்த்துக் கொண்டவள் அவனை பார்க்க இன்னும் நன்றாக திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.
“என்னடி?” என்று கேட்டான் சிங்கன்.
“நான் உங்களை ஹேப்பியா வச்சுக்கணும்னு நினைச்சேங்க. என்கிட்டே நீங்க ஹேப்பியா இருக்கீங்களா?” ஆழ்ந்து கேட்டாள்.
“இந்த கேள்விக்கு நமக்கு வாசனப் பிறகு பதில் சொல்லவா?” என்று கேட்டான்.
“ப்ச் சொல்லுங்க ங்க” என்றவளுக்கு,
“ஆகாயம் எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதே
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதே
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்தால் வலியும் தீர்ந்தது
வழியும் தெரிந்தது...!” என்று பாடல் வரிகளை ஓடவிட்டு அவளை ஆழ்ந்துப் பார்த்தான் ராசசிங்கன்.
“நான் தொலைத்த சாங் போட்டதுக்கு கன்னத்துல என்னா அடி விட்டீங்க” என்று நினைவு கூர்ந்தாள்.
“அதெல்லாம் அப்படி தான்டி.. அப்பப்போ அணைக்கணும் அப்பப்போ முட்டிக்கணும்.. புருசன் பொண்டாட்டின்னா சும்மாவா?” என்று கேட்டவன் அவளிடம் தன் மென்மையான காதலை காண்பித்தான்.
“ப்ச் இது வேணாம் உங்களோட பெரும் காமம் தான் வேணும்” என்றாள் ஏக்கமாக.
“இப்போதைக்கு அதுக்கு வாய்ப்பு இல்லை. என் மகனை பெத்து எடு முதல்ல. பிறகு பெரும் காமத்தை பார்க்கலாம்” என்று உறுதியாக மறுத்து விட்டான்.
ஏந்திழையாளுக்கு மறுபடியும் ப்ளீடிங் வந்தால் குழந்தைக்கு ஆபத்தாக முடியும் என்பதால் மிகவும் கவனமாகவே இருந்தார்கள் இருவரும். அதுவும் சிங்கன் மிக மிக கவனமாக இருந்தான்.





