Notifications
Clear all

அத்தியாயம் 35

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இருக்கட்டும் அண்ணி.. எங்க மேல தவறு இருக்குல்லையா? பனிக்கு எப்படி சுருக்குன்னு இருக்குமோ அது மாதிரி தானே ரேவதிக்கும் இருக்கும். ரெண்டு பொண்ணுங்களையும் தேவையில்லாம பேசிட்டாங்க. அதனால என் மருமக எப்படி கலங்கி போய் இருப்பா. பொண்ணு குடுக்குற நீங்க எப்படி கலங்கி போய் இருப்பீங்க” தங்களின் உணர்வுகளுக்கு மரியாதை குடுத்த சம்மந்தியை இன்னும் பிடித்துப் போனது காமாட்சிக்கு.

“பரவாயில்ல அண்ணி.. என் பொண்ணு எதையும் தவறா எடுத்துக்க  மாட்டா..” என்று அவரிடம் சொன்னவர்,

“ரேவதி, பனி ரெண்டு பேரும் போய் துளசியை கூட்டிட்டு வாங்க அத்தை தான் இவ்வளவு தூரம் சொல்றாங்க இல்ல..”  என்றார்.

அதன் பிறகே ரேவதி இசைந்தார். ஆனால் பனிக்கு அப்பவும் தயக்கமாக இருக்க, காமாட்சி தன் மகனை ஒரு பார்வை பார்த்தார்.

கதிரவன் பனியை அழுத்தமாக பார்த்தான். அவனது பார்வையில் இருந்த அழுத்தத்தில் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கக் கண்டு பல்லைக் கடித்தவள்,

“பார்வையாலே கட்டளை போடுறாரு” முணுமுணுத்துக் கொண்டே துளசியின் அறைக்கு சென்றாள்.

தொண்டை அடைக்க துளசியின் கையை பற்றிக் கொண்ட பனி,

“சாரி சித்.. துளசி.. இப்படி எல்லாம் நடக்கும்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை. என்னால தான் உங்களுக்கு இவ்வளவு வேதனையும் கண்ணீரும்.. என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்” கண்களில் நீருடன் சொன்னவளை புன்னகையுடன் எதிர்க்கொண்ட துளசி, அவளின் கண்ணீரை துடைத்து விட்டு,

“உன் மேல எந்த தவறும் இல்ல பனி.. நீ ஏன் மன்னிப்பு கேட்கிற.. நீ எங்களோட கெஸ்ட்.. எங்க வீட்டுல ஒருத்தி. உன்னை. மன்னிப்பு கேட்டு எங்களை ஒதுக்கி வைக்காதடி” துளசி உரிமையாக அழைக்க,

“அப்படி சொல்லு துளசி..” என்ற ரேவதி, “பனி எதையும் பத்தி யோசிக்காம இந்த கல்யாணத்தை என்ஜாய் பண்ணு” என்றார் அவளிடம். அதன் பிறகே பனிக்கு அப்பாடி என்று இருந்தது. “இன்னும் என்ன பண்றீங்க மூணு பேரும்...” குரல் கேட்க வேகமாய் துளசியை கூட்டிக்கொண்டு வந்தார்கள் இருவரும்.

சபையின் நடுவில் வந்து வணக்கம் வைத்த துளசிக்கு, முப்பது பவுன் சவரன் நகைகளை அல்லி போட்டு விட, அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கலாவும் மங்கையும்.

“கல்யாணம் நிக்கும்னு பார்த்தா.. இங்க என்ன இன்னும் முப்பது நாப்பது பவுன் போடுறாங்க பொண்ணுக்கு” முணகிக் கொண்டார்கள்.

அதன் பிறகு மாப்பிள்ளை வீட்டுக்கு தடாபுடாலக விருந்து போட்டு அசத்தி விட்டார் காமாட்சி. நேற்றைக்கு இருந்த கலக்கமும், இன்றைக்கு இருந்த கண்ணீரும் காணாமல் போய் உற்சாகமாக வளைய வந்தவரை பார்க்க பார்க்க பத்திக் கொண்டு வந்தது கலாவுக்கும் மங்கைக்கும்.

இந்த பக்கம் அல்லியின் நாத்தானார் இருவருக்கும் பத்திக் கொண்டு வந்தது. நால்வரின் வயிற்ரேரிச்சலையும் கொட்டிக் கொண்டு துளசி, கோபால் இருவரின் கல்யாண நாளும் வெகு விரைவில் வந்தது.

--

கோபால் வீட்டில் இருந்து வந்து துளசியை பார்த்து விட்டு முப்பது பவுன் போட்டு விட்டு போன பிறகு கதிரவன் மங்கையை அழுத்தமாக பார்த்தான். அவனது பார்வையில் உள்ளுக்குள் பயம் இருந்தாலும் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்து இருந்தார்.

கலாவுக்கு ஒரு புறம் பயம் இருந்தது தான். ஆனால் மங்கை தானே மெயின் கல்ப்ரிட். எனவே தன் பக்கம் அதிக சேதாரம் இருக்காது என்று சற்று திடமாகவே இருந்தார்.

இருக்க இருக்க கதிரவனின் பார்வையில் அழுத்தம் கூடிக் கொண்டே போக, மங்கைக்கு அதுவே ப்ரஷராகிப் போனது.

வாய் திறந்து ஏதாவது கேட்டான்னா கூட பரவாயில்லை. ஆனா இப்படி பார்த்தே நம்ம உயிரை புடுங்குறானே.. பீதியாகிப் போனது.

அவன் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் எழுந்து செல்லப் பார்க்க,

“உட்காருங்க” என்றான் கர்ஜனையாக. அதில் பட்டென்று அமர்ந்து விட்டார் மங்கை. அத்தனை கலக்கமாக இருந்தது அவருக்கு.

தயக்கத்துடன் அவனை நிமிர்ந்துப் பார்த்தார். அவன் அசையாத பார்வை பார்த்தான். இருவரின் செயலையும் கண்ட தாத்தா,

“என்னய்யா என்ன ஆச்சு? ஏன் இப்ப மங்கையை பிடிச்சு வச்சு இருக்க?” நீண்ட மௌனங்களுக்கு பிறகு வாயை திறந்தார் அவர்.

அப்பொழுதும் அவன் பேசவில்லை. பனிக்கு தான் ஐயோ என்று வந்தது கதிரவனின் அழுத்தத்தில்.

“எதுக்கு இப்படி முடிஞ்சு போன விசயத்தை மறுபடியும் இழுத்து கட்டி பிடிக்கிறாரோ.. விட்டது பிரச்சனைன்னு இல்லாம மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாரே..” என்று கலங்கிப் போனாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தாலாவது அவள் விழிகளில் கெஞ்சுவது தெரியும். அப்படியே பார்த்தாலும் அவன் நினைத்ததை தானே செய்வான். இவள் கெஞ்சுகிறாள் என்று இவளின் பேச்சையா கேட்பான். அது கிடையாது..

பெருமூச்சு விட்டு நின்றவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் துளசி.

“துளசி என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி நெர்வஸா இருக்கீங்க” யாருடைய காதுக்கும் கேட்காமல் மெல்ல கேட்டாள்.

“அண்ணனை நினைச்சு தான் பயமா இருக்கு பனி” என்றவளின் உணர்வுகளை புரிந்துக் கொண்ட பனிக்கு பாவமாய் போனது.

துளசியின் முகத்தில் திருமணத்துக்கு உண்டான மகிழ்ச்சியே இல்லை. அதற்கு நேர் மாறாக எப்பொழுது பிரச்சனை வரும். யார் யார் புதிய பிரச்சனையை கிளப்புவார்கள் என்று இருக்கக் கண்டு இவளுக்கு உருகிப் போனது.

வாழ்க்கையில் வரும் ஒரே ஒரு முறை திருமணம். ஆனால் அதை எண்ணி மகிழ முடியாமல் இப்படி மணப்பெண்ணின் மனதை அலைக்கழித்துக் கொண்டு இருந்தால் எப்படி என்று கோவம் வந்தது.

அதுவும் கதிரவன் மீது தான் அதிகம் வந்தது.

“நீங்க இங்க இருக்காதீங்க துளசி.. ரூமுக்கு போங்க. இதை எல்லாம் பார்த்தா இன்னும் டென்ஷன் ஆகுவீங்க” என்ற பனியை பார்த்த துளசியின் கண்கள் கலங்கி இருந்தது.

“ப்ச் துளசி” என்று அவளின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்ட பனி கோவமாக கதிரவனை பார்த்தாள்.

அவனோ விடாமல் மங்கையை பார்த்தான்.

மங்கைக்கு அவனது பார்வையை தாங்கிக்கொள்ள முடியாமல்,

“எதுக்கு கதிரவன் இப்போ இப்படி பார்த்துட்டு இருக்க?” அவரே வலையில் வந்து விழுந்தார்.

“ஏன்னு உங்களுக்கு தெரியாதா? அதை என் வாயால நான் சொல்லனும்னு நீங்க எதிர் பார்த்தா அப்போ நானே சொல்லிடுறேன்” என்றான்.

மங்கை பயத்துடன் தன் அப்பாவை பார்த்தார். அதிலே தெரிந்துப் போனது மெய்யப்பனுக்கு தன் மகள் தான் ஏதோ கிருத்துருவம் செய்து இருக்கான்னு.

அவருக்கு மகளின் மீது அவ்வளவு கோவம் வந்தது. வீட்டில் நடக்கும் முதல் நிகழ்ச்சி. ஆனால் அதை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டு இருக்கும் மகளை எண்ணி வேதனை கொண்டவர், கதிரவனை பார்த்தார்.

கதிரவன் அசையாமல் இன்னும் மங்கையை தான் பார்த்தான்.

“நான் எதுவும் செய்யல” என்றார் மங்கை.

“அப்போ கோபால் அத்தைங்கக்கிட்ட யார் பேசுனது. அவங்க போன்ல உங்க நம்பர் எப்படி வந்தது? உங்க கால் ஹிஸ்டரியை செக் பண்ணலாமா? அப்போ தெரியுமே இந்த கல்யாணத்தை யார் நிப்பாட்டா பார்த்தாங்கன்னு..” என்றவனின் சரமாரியான கேள்வியில் வெலவெலத்துப் போனார் மங்கை.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 1:26 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top