அத்தியாயம் 56

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நாளைக்கு பத்து மணிக்கு உங்க சார் கிட்ட எனக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் பண்ணிடுங்க கதிர் சார்... தாலி கட்டின பொண்டாட்டி என்றாலும் உங்க பாஸை அப்பாயின்ட்மென்ட் இல்லாம பார்க்க முடியாது போல..” என்று குரல் ஒடுங்க சொன்னவள் பட்டென்று வைத்து விட்டாள்.

அவளின் குரலை கேட்ட கதிருக்கு ஒரு மாதிரி ஆகிப் போக வேகமாய் ராசசிங்கனிடம் ஓடினான்.

அவனிடம் ஏந்திழையாளை பற்றி பேச போக,

“கதிர் அந்த கம்பெனி எம்டி நம்மக்கிட்ட ஏதோ ஆட்டம் காட்ட பார்க்கிறான்.. அவனை கொஞ்சம் தட்டி வை. நம்ம காட்ஸ் கிட்ட சொல்லி என்ன செய்யணுமோ செய்ய வை. இன்னொரு முறை அவன் எழுந்திரிக்கவே கூடாது...” எச்சரித்தவன்,

“எப்போ வேல் க்ரூப்ஸ் ஆப் கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு? எல்லா டாக்குமேன்ட்டும் சரியான்னு செக் பண்ணி வை. ஏன்னா அவனுங்களை நம்பவே முடியாது. எப்படா என் காலை வாரலாம்னு சந்தர்ப்பம் பார்த்துட்டு இருக்கானுங்க. அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது” என்று அறிவுறுத்தினான்.

“தென் ஏதோ ஒரு பொறம்போக்கு சமூக ஆர்வலர் ன்ற பேர்ல நம்ம ப்ராடெக்ட் மேல கம்பளைன்ட் பைல் பண்ணி இருக்கான். அதை என்னன்னு பாரு” என்றவன் மேற்கொண்டு,

“இப்போ புது எடுத்து இருக்கிற புது ப்ராஜெக்ட்டுக்கு நம்மக்கிட்ட இருக்கிற ஆட்கள் போதாது. சோ ஆட் குடுத்து இந்த வீக் எண்டுக்குள்ள இண்டர்வியூ பண்ணி ஆட்களை செலக்ட் செய்து ட்ரைனிங் குடுக்க ஆரம்பிக்க சொல்லிடு” என்று அவன் சரமாரியாக சொல்லிக் கொண்டே போக கதிர் முழி பிதிங்கிப் போனான்.

அவனது திணறலை கண்டு கடுப்பானவன்,

“டேய் என்னடா மசமசன்னு நின்னுட்டு இருக்க... நான் சொன்னது எல்லாம் காதுல வாங்கின தானே” என்று பல்லைக் கடித்தான் ராசசிங்கன்.

“எஸ் பாஸ்” என்று சொன்னாலும் ராசசிங்க இருக்கும் பரபரப்பில் ஏந்திழையாள் பேச விரும்பியதை சொல்ல இயலாமல் பாவமாய் நின்றான்.

“இப்போ அந்த கன்ஸ்ட்ரெக்ஷன் சைட்ல என்னவோ ப்ராபலமாம்... என்ஜினியர்ஸ் அங்க என்ன ஹேரை பிடுங்கிட்டு இருக்கானுங்கன்னு நீ பார்க்க மாட்டியாடா. எல்லாத்துக்கும் நான் தான் முன்னாடி நிக்கனுமா?” என்று எரிந்து விழுந்தான்.

“இன்னும் ஒரு மாசத்துல ரெடி பண்ணி இருக்கணும்னு தெரிந்தும் அவனுங்க ஆட்டம் காட்டுறானுங்கன்னா தெரிஞ்சி தானே இந்த வேலைல இறங்கி இருக்கானுங்க...” என்று கண்கள் சிவந்தவன்,

“அங்க இருக்கிற சைட் மேனேஜர்ல இருந்து ஒருத்தனையும் விடாம அத்தனை பேரையும் வேலைல இருந்து தூக்கிடு...” என்றான் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல்.

“சார் அசோசியேஷன்ல ப்ராப்ளம் வந்திட போகுது” என்று எச்சில் விழுங்கினான்.

“சோ அதுக்காக இவனுங்களை அப்படியே விட சொல்றியா..? அஷோசியன் லீடர் கிட்ட நான் பேசிக்கிறேன்... நீ கேரியான் பண்ணு... இமிடியட்டா வேற சைட்ல இருக்கிற ஆளுங்களை அங்க போக சொல்லி வேலையை முடிக்க சொல்லு” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு முக்கியமான கான்பரென்ஸ் காலில் அமர்ந்து விட்டான்.

இனிமேல் அவனை எந்த தொந்தரவும் செய்ய முடியாது. கதிர் அங்கிருந்து போக முடியாமல் தயங்கி நிற்க,

“என்ன பியே வேலைக்கும் சேர்த்து இண்டர்வியூ எடுக்க சொல்லணுமா?” என்று அவன் கர்ஜிக்க கதிர் தெரித்து ஓடியே விட்டான்.

“இரிடேட் இடியட்” என்று விட்டு கான்ப்ரென்ஷில் கவனமானான். கதிரும் தலைக்கு மேல் இருந்த வேலையில் எல்லாவற்றையும் மறந்துப் போனான்.

அன்றைக்கு இரவு ராசசிங்கன் வீட்டுக்கு வரவே இல்லை. எதிர்பார்த்தது தான் என்றாலும் மனம் விண்டுப் போனது அவளுக்கு. அடுத்த நாள் காலையில் வந்தவன் குளித்து விட்டு அவளின் முகத்தை கூட பார்க்க நேரமில்லாமல் அலுவலகம் கிளம்பி விட்டான்.

போகும் அவனை வேதனையுடன் பார்த்தவள் நிதானமாக கிளம்பி அவன் இருக்கும் அலுவலகத்துக்கு வந்தாள்.

ஐந்து பில்டிங் சேர்ந்தது போல இருபது மாடி கட்டிடம் கண்ணாடியில் பட்டொளி வீசிக் கொண்டு இருந்தது. இது தான் அனைத்து தொழில்களுக்கும் முதன்மையான தலைமை இடம். இது போல இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள் இருக்கிறது.

ராசசிங்கனின் உயரத்தையும் மதிப்பையும் அந்த கட்டிடம் சொல்லாமல் சொல்வது போல இருக்க அதை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவளை எல்லோருக்கும் அடையாளம் தெரிய அனைவரும் எழுந்து நின்று விஷ் பண்ணினார்கள். எல்லோருக்கும் இதமான புன்னகையை கொடுத்தவள் உள்ளுக்குள் எரிமலையை சுமந்து இருந்தாள்.

ஏந்திழையாள் அலுவலகத்தின் உள்ளே வருவதை கதிருக்கு ரிஷப்ஷனிஸ்ட் தெரிவிக்க அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

வந்தவனை பார்த்தவள்,

“எந்த ரூம்?” என்று கேட்டாள்.

அவன் எச்சில் விழுங்கினான் பயத்தில்.

“மேம் ப்ளீஸ் பாஸ் ரொம்ப கோவமா இருக்காங்க. இந்த நேரம் வேணாமே” என்று அவன் அவளை தடுக்க பார்க்க,

“பத்து மணிக்கு அப்பாயின்ட்மென்ட் போட்டு இருக்கு தானே” என்று கேட்டாள் நிதானமாக.

ஆமாம் என்பது போல தலையாட்டியவனை கடந்து அவள் நடக்க,

“அண்ணி..” என்று அவளை முதல்முறையாக உறவு முறை சொல்லி அழைத்தான் தவிப்புடன்.

திரும்பி நின்று அவனை முறைத்தாள்.

“சாரி மேடம்” என்று அவளின் பார்வையில் இருந்த அனலில் உறவு முறையை மாற்றிக் கொண்டான்.

அவளோ அதை கண்டு கொள்ளமல்,

“சோ நான் இப்ப தான் உனக்கு அண்ணியா தெரியிறேன் இல்லையா? அதாவது இந்த மூணு மாசமா உனக்கு தெரியல ல்ல...” என்று அழுத்தம் திருத்தமாக கேட்க கதிருக்கு கண்கள் கலங்கி விட்டது.

“அண்ணி அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்று ஏந்திழையாள் கொடுத்த அங்கீகாரத்தில் நெகிழ்ந்துப் போனான்.

“ப்ச்.. உன் விளக்கம் எல்லாம் எனக்கு எதுவும் வேணாம்” என்று விட்டு அவள் நடக்க,

“அண்ணி... ப்ளீஸ், இப்போ வேணாம் அண்ணா ரொம்ப கோவமா இருக்காரு.. அவர் எதிர் பார்த்து இருந்த ஒரு டீல் இன்னைக்கு சைன் ஆகணும். ஆனா அது டீல் ஆக கொஞ்சம் இழுக்குது.. இண்டஸ்ட்ரி மினிஸ்டர் கிட்ட பெட்டி குடுத்தும் இன்னம் வேலை ஆகல. அதுல நிறையவே கோவத்துல இருக்காரு. இப்போ போனா உங்களை கடிச்சு குதறிடுவாரு அண்ணி” என்று தயங்கினான்.

“பரவாயில்லை...” என்று சொன்னவள்,

“இப்பவாவது வழி காட்டுவியா இல்ல நானே பார்த்துக்கட்டுமா?” என்று தோரணையாக கேட்டாள்.

வேறு வழியில்லாமல் கதிர் அவளுக்கு வழியை காட்ட நிதானமாக நடந்து அவன் காட்டிய பிரதியேக வழியில் நடந்தாள்.

“அண்ணி இன்னொருமுறை யோசிச்சுக்கோங்களேன்” என்றான் மனமில்லாமல்.

ஏனெனில் ராசசிங்கன் வேலை விசயத்தில் அரக்கனாய் இருப்பானே. எதிரில் யார் இருந்தாலும் கடித்து உதிரத்தை குடிக்காமல் போக மாட்டானே. இப்பொழுது அவன் அந்த அரக்க தனத்தில் தான் இருக்கிறான் என்று தெரிந்தும் எப்படி அண்ணியை பலி கொடுப்பது என்று தவியாய் தவித்துப் போனான் நல்ல மனம் கொண்டவன்.

கதவை நாக் பண்ணிட்டு உள்ளே நுழைந்தாள் ஏந்திழையாள்.

“யாரும் உள்ள வரக்கூடாதுன்னு சொன்னனா இல்லையாடா” எடுத்த எடுப்பிலே கர்ஜித்தான் ராசசிங்கன் கதிர் என்று எண்ணி நிமிர்ந்து பாராமலே.

அவன் கத்திய பிறகு எந்த சத்தமும் இல்லாமல் போக,

“டேய்” என்று அந்த அறையே அதிர அவன் நிமிர்ந்து பார்க்க இரு கைகளையும் கட்டிக் கொண்டு தீர்க்கமாக அவனை பார்த்துக் கொண்டு இருந்த அவனின் மனைவியை கொஞ்சமும் அங்கே எதிர் பார்க்கவே இல்லை.

சற்றே புருவம் சுழித்து தன் எதிரில் நின்று இருந்தவளை முறைத்துப் பார்த்தவன்,

“உனக்கு தனியா சொல்லணுமா வெளிய போ” என்றான் கொஞ்சமும் அசையாமல். இதை தான் இவன் சொல்லுவான் என்று தெரிந்தும் அவள் விழி எடுக்காமல் அவனை பார்த்தவள்,

“அப்பாயின்ட்மென்ட் இருக்கு” என்றாள்.

“சோ வாட்... எனக்கு இப்போ யாரையும் பார்க்க மூட் இல்லை.. மூடிட்டு கிளம்பு” என்றான் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 26, 2026 9:34 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top