Notifications
Clear all

அத்தியாயம் 13

 
Admin
(@ramya-devi)
Member Admin

வீட்டில் எல்லோரும் கூடி இருக்கும் பொழுது அவர்களுடன் உரையாடாமல் சின்ன ஒரு தலையசைப்புடன் மேலே வந்து இங்கே இந்த பெண்ணுடன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து டென்ஷன் ஆகிவிட்டார்.

“கதிரவா” சத்தமாக அழைத்தார்.

சத்தம் கேட்டு இருவரும் திரும்ப அங்கே ரேவதி நிற்பதை பார்த்து பட்டென்று பனி எழுந்து நின்றாள். ஆனால் கதிரவன் அசையவே இல்லை.

“சொல்லு க்கா” என்றான் அலட்டிக் கொள்ளாமல். இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர்,

“கீழ வா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றார்.

“இங்கயே பேச்சுக்கா”

“தனியா பேசணும்” என்றார் பல்லைக் கடித்துக் கொண்டு.

“தனியா தானே இருக்கோம். பேசு” என்றான். ரேவதியின் பார்வை பனியை தொட்டு விலக, அவள் புரிந்துக் கொண்டு கீழே போகப் பார்க்க, அவளின் கையை இறுக்கிப் பிடித்து நிறுத்தியவன்,

“இவ எதுவும் நினைச்சுக்க மாட்டா.. நீ சொல்ல வந்ததை சொல்லு” என்றான்.

“கதிரவா இது நம்ம பேமிலி மேட்டர்”

“இருக்கட்டும் இனி இவளுக்கும் இதெல்லாம் தெரிஞ்சு தானே ஆகணும்” என்றவனிடம் தன் கையை விடுவித்துக் கொள்ள போராட, அவனோ பனியின் கையை விடவே இல்லை.

“ப்ளீ

“ஏன் இப்படி பண்றீங்க? நான் போறனே ப்ளீஸ்... அவங்களுக்கு முன்னாடி தேவையில்லாத சீன் க்ரியேட் பண்ண வேணாம்னு நினைக்கிறேன்” பனி கதிரவனிடம் கெஞ்ச,

“இதுல என்ன சீன் இருக்கு.. அப்படி சீன் ஆனாலும் பரவாயில்லை. நீ போகக் கூடாது” என்றான் அழுத்தமாய். தன்னை நிற்க வைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் அவர்களுக்குள் பேசிக் கொள்வதை பார்த்த ரேவதிக்கு சுத்தமாய் பொறுமை பறந்துப் போனது.

“கதிரவா” பொறுமை இழந்த குரலில் தம்பியை அழைத்தார்.

“அக்கா அவ இங்க தான் இருப்பா.. நீ சொல்ல வந்ததை சொல்லு” என்றான் முடிவாய்.

“இது தான் உன் முடிவா?” என்று கேட்டவருக்கு மனம் பொறுக்க முடியவில்லை. யாரோ ஒரு பெண்ணுக்கு அவன் குடுக்குற முக்கியத்துவம் கண்டு உள்ளுக்குள் சற்றே ஆடிப் போனார்.

“ப்ச் எத்தனை முறை சொல்ல சொல்ற க்கா? அவ இங்க தான் இருப்பா.. நீ சொல்லு” என்றவன் பனியின் கை நழுவுவது போல இருக்க, அவளின் கைப்பிடியை இன்னும் இறுக்கினான்.

அதனால் அவளால் தப்பித்து ஓட முடியவில்லை. இருவரின் கையும் சேர்ந்து இருப்பதை பார்த்த ரேவதி திகைத்துப் போனார். அதுவும் தம்பியின் கைப்பிடி அதிக வலுவுடன் அந்த பெண்ணின் கையை பற்றி இருப்பதை பார்த்து அதிர்ந்துப் போனார்.

தங்களின் கை சேர்ந்து இருப்பதில் அவரின் பார்வை படிந்து மீண்டதை கண்ட பனிக்கு அவ்வளவு கோவமாய் வந்தது.

“இதென்ன இவ்வளவு பிடிவாதம்” வாய்க்குள் முணகியவள்,

“மிஸ்டர் கதிரவன்” அடிக்குரலில் அழைத்தவளை ஆயாசத்துடன் பார்த்தவன்,

“மாமாடி” என்றான்.

“இப்போ அது தான் முக்கியமா?”

“எனக்கு இதுவும் தான் முக்கியம்”

“ப்ச் சொன்னா புரியாதா உங்களுக்கு.. நான் இங்க உங்க கூட இருந்தா அவங்களுக்கு என் மேல வெறுப்பு தான் வரும் மிஸ்டர். அதை தான் நீங்க எதிர் பார்க்குறீங்களா?” என்றவளை முறைத்துப் பார்த்தவன்,

“இப்ப நீ போனா மட்டும் உன் மேல அவங்களுக்கு வெறுப்பு வராதாக்கும்” கேட்டவனை இப்பொழுது இவள் ஆயாசத்துடன் பார்த்தாள்.

“அவங்களை நிற்க வச்சுட்டு நாம இப்படி பேசிட்டு நிக்கிறது கொஞ்சமும் நல்லா இல்ல மிஸ்டர்”

“ப்ச்” என்று அவன் அலுக்க,

“சரி மாமா” என்றவள், “ப்ளீஸ் என்னை விடுங்க. அவங்களை பேச விடுங்க” என்றாள்.

அவளை கண்டு கொள்ளாமல், தன் அக்கா புறம் திரும்பி, “சொல்லுக்கா” என்றான்.

“நான் நம்ம குடும்ப விசயத்தை பத்தி பேசலாம்னு வந்தேன்” என்றார் அழுத்தமாய்.

அதை கேட்ட பனி துடித்துப் போனாள். பெற்ற தாயே தன்னை யாரோ எவரோ என்று போல பேசியதை கேட்டவளுக்கு தொண்டையில் ஏதோ அடைத்த உணர்வு. விரக்தி புன்னகை முகிழ்த்தது.

கதிரவனை விரக்தியாக பார்த்த பனி “ஆர் யூ ஹேப்பி நவ்?” என்று கேட்டவள்,

“உங்களை பார்க்கிறதுக்கு முன்னாடி நான் நானா இருந்தேன். ஆனா எப்போ என்னை தேடி வந்தீங்களோ அப்போதுல இருந்து இப்போ வரை காய்ப்பட்டுக்கிட்டே இருக்கேன் மிஸ்டர் கதிரவன்.. போதும் ப்ளீஸ்... என்னை விட்டுடுங்களேன்” என்று அவனின் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ளப் பார்க்க, அவளின் கையை முன்பை விட அதிகமாக அழுத்திப் பிடித்தவன்,

“இவளும் இந்த குடும்பம் தான் க்கா. இவளுக்கு தெரியாம இனி நம்ம வீட்டுல ஒரு விசயம் கூட நடக்காது.. நடக்கவும் நான் விட மாட்டேன்” என்று பனிக்கும் சேர்த்து சொன்னவன்,

“இவளுக்கு முன்னாடி உன்னால சொல்ல முடிஞ்சா சொல்லு.. இல்லையா எனக்கு நீ சொல்ல வர்ற விசயம் நான் எப்பவும் கேட்க மாட்டேன். சாய்ஸ் இஸ் யூயர்” என்று அழுத்தமாக சொல்லி விட்டு இன்னும் சாய்ந்ந்து அமர்ந்துக் கொண்டான்.

“கதிரவா” என்று ரேவதியும்,

“மிஸ்டர் கதிரவன்” என்று பனியும் அதிர்ந்துப் போனார்கள் ஒரே நேரத்தில்.

“ரெண்டு பேருக்கும் ஒரே பதில் தான்..” இரத்தின சுருக்கமாக முடித்துக் கொண்டான்.

அவனது அழுத்தத்தை ஏற்கனவே ரேவதி அறிந்து இருந்தார் தான். ஆனால் குடும்ப விசயத்தில் அவன் இவ்வளவு பிடிவாதமாக இருப்பான் என்று எண்ணி இருக்கவில்லை. அப்படி என்ன இந்த பெண் மீது இவனுக்கு பிடித்தம் என்று தான் தோன்றியது.

அதோடு இந்த பெண்ணுக்கு முன்னாடி தான் அவமானப் பட்டதாக வேறு உணர, அதற்கு மேல் ஒரு நொடி கூட அவரால் அங்கு நிற்க முடியவில்லை. சட்டென்று கீழே போய் விட்டார்.

அவரை தடுக்க கூட இல்லை கதிரவன். அதில் இன்னும் உடைந்துப் போனார் ரேவதி. கூடத்தில் அமர்ந்து இருந்த யாரையும் சட்டை செய்யாமல் தன் அறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொண்டவருக்கு தம்பியின் இந்த செயலில் கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.

அதை யாரிடமும் காட்ட மனம் வரவில்லை. எல்லோரும் கம்பீரமான ஆளுமையான ரேவதியை தானே இதுவரை பார்த்து இருக்கிறார்கள். முதல் முறை உடைந்து போய் இருக்கிறார். தம்பியே காயப்படுத்தி இருந்தான். இதை எப்படி கடைபரப்ப.. தன் வேதனையை தனக்குள் புதைத்துக் கொண்டார்.

“அவங்க வேதனையோட போறாங்க.. பின்னாடி போய் சமாதனம் செய்ங்க.. போங்க” என்ற பனியை பார்த்த கதிரவன்,

“அதை நான் பார்த்துக்குறேன் நீ சாப்பிட வா. ரொம்ப பசிக்கிது..” என்று அவளை விடாப்பிடியாக அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

பனிக்கு இவனின் அடாவடியில் கண்ணை கட்டிக் கொண்டு வந்தது. அக்காவை கோவப்படுத்திட்டு எப்படி தன் இவருக்கு சாப்பிட மனசு வருதோ எண்ணிக் கொண்டே அவனோடு நடந்தாள்.

ஸ்.. நான் கீழ போறேன்.. விடுங்க” என்றாள் பிடிவாதமாய்.

“மொட்டையா பேசாதன்னு சொன்னேன் இல்ல” அதட்டினான்.

“இப்போ அது தான் முக்கியமா?” கோவமாக கேட்டவள்,

“ப்ளீஸ்.. படுத்தாதீங்க.. நான் கீழ போறேன்” என்றவள், ரேவதிக்கு கேட்காத வண்ணம் “மாமா” என்றாள்.

அதில் அவனுக்கு புன்னகை வர,

“மாமா சொன்னத்துனால ஓகே.. ஆனா நீ கீழ போகக் கூடாது” அழுத்தமாக அவன் சொல்ல, விக்கித்துப் போனாள் பனி.

“என்ன விளையாட்டு இது.. அவங்க உங்ககிட்ட பேச வந்து இருக்காங்க”

“இருக்கட்டும்.. அதனால என்ன?” என்றவனின் அழிச்சாட்டியத்தில் இவளுக்கு தான் கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.

 

Loading spinner

Quote
Topic starter Posted : April 23, 2026 9:08 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top