தன் நெஞ்சில் அவளை போட்டுக் கொண்டவனோ தன்னோடு இறுக்கிக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். அதிகாலையில் அவளது வாசம் இல்லாமல் போக பித்து பிடித்தவன் போல ஆனான். அதனாலே அவளிடம் அந்த குதி குதித்தான். ஆனால் அதற்கு அவன் பேசிய பேச்சுக்கள் மிக அதிகமாயிற்றே...
விழிகளை திறக்க முடியவில்லை என்றாலும் அவளின் கண்களின் ஓரம் நீர் கசிந்தது...!
அது அவனது நெஞ்சில் வடிய தலையை தூக்கி பார்த்தவன் மீண்டும் தூங்கிப் போனான். அரக்கனாயிற்றே அவன். அவனுக்கு யாருடைய வலியும் தெரியவில்லை போலும்.
முயன்று தன் மயக்கத்தில் இருந்து கண் விழித்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். அவளின் இடையில் முரட்டு கைகள் படர்ந்து இருக்க பெருமூச்சு வந்தது.
அவனது கைகளை நகர்த்தி விட்டுட்டு அவள் எழுந்துக் கொள்ள பட்டென்று அவளை பிடித்து படுக்கையில் தள்ளியவன் அவள் மீது பாதி படர்ந்தது போல படுத்துக் கொண்டவன் தலையை மட்டும் தூக்கி அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“எங்கடிபோற?”
“கீழ தாத்தாவும் அண்ணனும் வந்து இருக்கதா சொன்னாங்க... அவங்களை பார்க்க போகிறேன்” என்று அவள் சொன்ன மறுகணம் அதுவரை நிர்மலாக இருந்த அவனது முகம் கடும் சினத்தில் மாறி இருக்க இவளுக்கு தொண்டையில் நீர் வற்றிப் போனது.
“இல்ல இனி என்னை பார்க்க வர வேணான்னு சொல்ல தான் போறேன்” என்றாள் அவசரமாய்.
“அதுக்குதுக்கு நீ போகணும்.. அவங்களை துரத்த வீட்டு வேலையாள் போதும்” என்றான்.
“ப்ளீஸ்... இந்த ஒரு முறை மட்டும்... இனி அவங்க கிட்ட பேசக்கூட மாட்டேன்” என்று அவள் கெஞ்ச, கொஞ்சமே கொஞ்சம் மனம் இறங்கினானோ என்னவோ...
“சரி போ ஆனா ஒரே ஒரு நிமிடம் தான். அதுக்குள்ள நீ மேல ஏறி இருக்கணும்” என்று அவன் அனுமதி கொடுக்க உயிரை கையில் பிடித்துக் கொண்டு கீழே ஓடினாள்.
ஏனெனில் படியில் இறங்கவே ஒரு நிமிடம் தேவை படுமே இதில் எங்கிருந்து அவர்களிடம் பேசுவது. அதனால் ஓடிப்போனாள்.
முன் கூடத்தில் அவளின் தாத்தா வேல்முருகனும் யுகேஷும் நின்று இருந்தார்கள். இவளை பார்த்த உடன் இருவரின் முகம் மலர்ந்து போவதை கண்டு நொந்துக் கொண்டவள்,
“நான் நல்லா இருக்கணும்னு நீங்க நினைச்சா இனி என்ன பார்க்க வாராதீங்க... ப்ளீஸ்” என்று அவள் இரு கை கூப்பி அவள் சொல்ல இருவரும் அடி முதல் இறுதி வரை ஆட்டம் கண்டு போனார்கள்.
“இழை” என்று இருவரும் அதிர,
“ஏந்திழையாள் ராசசிங்கன்” என்று அவள் திருத்தினாள்.
“அவனை இந்த அளவுக்கு நம்பாத பாப்பா... அவன் உன்னை வச்சு வாழமாட்டான்... அவன் சரியான அரக்கன். உன் வாழ்க்கையை கெடுத்து விடுவான். இப்பவும் ஒன்னும் கெட்டு போகல... எங்களோட வந்திடு” என்று யுகேஷ் அவளின் கையை பிடித்து கெஞ்ச,
தலையை தூக்கி மேலே பார்த்தாள். அங்கே கண் சிவக்க இவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் ராசசிங்கன். அதில் நெஞ்சு அதிவேகமாக துடிக்க கண்டு,
தன் கையை யுகேஷிடம் இருந்து உருவிக் கொண்டவள், “அண்ணா ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாத... என் வாழ்க்கை எப்பவும் அவரோட தான். இந்த முடிவை மனப்பூர்வமா தான் எடுத்து இருக்கேன். எங்களை வாழ்த்தலன்னாலும் இப்படி சாபம் போல பேசாதண்ணா...” என்று சொன்னவள் இருவரையும் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள்.
“இனி என்னை தேடி யாரும் வாராதீங்க... உங்களை வரவேற்கிற நிலையில் நான் இல்லை. ப்ளீஸ்.. கிளம்புங்க” என்று வாசலை பார்த்து கையை காட்டியவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அடுத்த நொடி தாமதிக்காமல் மேலே ஏறி ஓடினாள். வழியிலே கண்களில் இருந்து சாரை சாரையாக வடிந்த கண்ணீரை அழுத்தமாக துடைத்துக் கொண்டு ராசசிங்கனின் எதிரில் மூச்சு வாங்க வந்து நின்றாள் ஏந்திழை.
தன் கடிகாரத்தை ஒரு பார்வை பார்த்தவன் புருவத்தை தூக்கி இதழ்களை பிதுக்கி மெச்சியவன் அவளை வளைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
அவளின் மனதை கூறு போட்டு விட்டு அவளின் உடம்பை அவன் ஆள அவன் மீது முன்பு தோன்றிய மெல்லிய நேசம் இப்பொழுது முற்றும் முழுதாய் உடைந்து சிதறிப் போனது.
இனி அந்த நேசம் துளிர்க்குமா என்று தெரியாது. ஆனால் அவள் மனம் மொத்தமும் கருகிப் போவது மட்டும் உண்மை.
மூச்சு வாங்க வந்தவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“உன் குடும்பத்துக்கு புரியிற மாதிரி சொல்லிட்டியா?” என்று கேட்டான்.
“ம்ம்ம் இனி வரமாட்டாங்க” என்று அவள் சொன்னாள். சொன்னவளின் கண்களை கூர்ந்துப் பார்த்தான். எங்கே தன் கண்ணீரை கண்டுக் கொள்வானோ என்று பயந்துப் போனாள்.
அவளின் பயத்தையும் அழுத கண்களையும் கூர்ந்து பார்த்தவன்,
“இனி இன்னொரு முறை உன் கண்ணுல கண்ணு தண்ணி வந்துச்சு” என்று இடைவெளி விட்டவன்,
“உன்னை எதுவும் செய்ய மாட்டேன்... ஆனா உன் குடும்பத்தை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்” என்று முழு அரக்கனாய் நின்றான் ராசசிங்கன்.
“இல்லல்ல அழ மாட்டேன்” என்று அவசரமாய் அவனுக்கு அவள் உறுதி குடுத்தாள்.
“ஆனா நீ எனக்காக அழனும்” என்று அவன் மேலும் சொல்ல முழித்துக் கொண்டு நின்றாள் அவன் சொன்னது புரியாமல்.
“புரியல” என்றாள் அவள்.
அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டான்.
“என்னவோ சொன்னாரே” என்று அவள் அதை பற்றி யோசிக்க, ராசசிங்கன் அவளை யோசிக்க அனுமதிக்கவே இல்லை.
தன் கைகளில் அவளை அள்ளிக் கொண்டு பள்ளிப்பாடத்தை தொடங்க பெண்ணவளின் சிந்தை எங்கும் மன்னவனே நிறைந்துப் போனான்.
அவளின் உடலில் தன் வன்மையான இதழ்களை புதைத்து அவளை மெல்ல மெல்ல தன் ஆளுகைக்கு கொண்டு வந்து பெண்ணவளை உலகம் மறக்க செய்தான். அவனது தொடுகைக்கு எந்த எதிர்விளைவும் செய்யக் கூடாது என்று எண்ணி இருந்தாலும் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அவளின் உடலை அறவே வெறுத்துப் போனாள்.
அவனுக்கு ஈடாக பெண்ணவளின் உடலும் அவனை ஆளுகை செய்ய கண்கள் மின்னியது ராசசிங்கனுக்கு. இதழ் கடையோரம் குறுஞ்சிரிப்பு உதயமாவதை கண்டு தன்னை கேலி செய்கிறான் என்று உள்ளுக்குள் மறுகிப் போனாள்.
தன் உடலை தானே வெறுத்து ஒதுக்கினாள்.
அவளின் முகம் கசங்குவதை பார்த்து புருவம் சுறுக்கினான் சிங்கன்.
அதுவே அவளிடம் கேள்வி கேட்பது போல இருக்க, “ஏன் இப்படி கேலி பண்ணி சிரிக்கிறீங்க? உங்க கூட முழு மனதா தானே குடும்பம் நடத்துறேன்” என்று சொற்களை முழுதாக சொல்ல முடியாமல் கண்களின் ஓரம் நீர் கசிய கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
அவளது முகத்தை நிமிர்த்தி தன் முகத்தை பார்க்க வைத்தவன் வன்மையாக அவளின் கண்களை தன் பார்வையால் கவ்விக் கொள்ள அவளால் அவனிடம் இருந்து பார்வையை நகர்த்திக் கொள்ளவே இயலாமல் போனது.





