Notifications
Clear all

அத்தியாயம் 39

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இந்த வீட்டுக்கு வாரிசா இருக்க வேண்டாம்.. ஆனா இந்த வீட்டோட வாரிசுக்கு ஒரு வாரிசை பெத்து குடு” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“ஹாங்” நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

“என்ன உளறல் இது” கோவத்துடன் கத்தினாள்.

“நான் முடிவு பண்ணிட்டேன். நீ தான் என் பொண்டாட்டி”

“அதுக்கு வேற ஆளை பாருங்க” நறுக்கு தெரித்தார் போல அவள் சொல்ல,

“ஆல்ரெடி பாத்துட்டேன் யாரையும் பிடிக்கல”

“அதனால நான் கிடைச்சனா?” முறைத்தவள்,

“முதல்ல என்னை விடுங்க.. அதென்ன கட்டி பிடிச்சு பேசுறது.. புதுசு புதுசா பண்ணாதீங்க.. இது வரை நீங்க இழுத்து விட்ட பிரச்சனை எல்லாம் போதாதா..? இதுக்கும் மேல எதையும் நீங்க இழுத்து விட வேண்டாம்.. தள்ளி நில்லுங்க என்னை விட்டு” அவனது பிடியில் இருந்து வலுக்கட்டாயமாக விலகி நின்றாள்.

அவளை அவள் போக்கில் விட்டவன்,

“இப்போ தள்ளி போயிடலாம். ஆனா என்னைக்கா இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டி. அதுல எந்த மாற்றமும் இல்லை. அதே போல உன்னால இந்த வீட்டை விட்டு ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்க முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். நீ இருக்குறது தான் இங்க பிரச்சனைக்கு காரணம்னா அது எவ்வளவு பெரிய பிரச்சனையா வந்தாலும் அதை எதிர்கொள்கிற அளவுக்கு திறமும் திடமும் என்கிட்ட இருக்கு.. எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்” என்றான் உறுதியாய்.

அவனின் அடத்திலும் பிடிவாதத்திலும் பற்றிக் கொண்டு வந்தது பனிக்கு.

“ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க? என்னால இந்த குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம் நிகழும் தெரியுமா? ஊரே இந்த குடும்பத்தை எவ்வளவு மரியாதையா பார்க்கிறாங்க. நான் யாருன்னு தெரிஞ்சு போனா அந்த மரியாதை எல்லாம் காத்துல வீசிட்டு நாக்கு மேல பல்லை போட்டு பேசிட மாட்டாங்களா? உங்களுக்கு அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை இல்லையா?” ஆதங்கத்துடன் கேட்டாள்.

“யாரோ பேசுறாங்கன்றதுக்காக நான் உன்னை இழக்க முடியாதுடி”

“நான் அவமானத்தின் சின்னம் மாமா” கூறும் பொழுதே அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

“நீ என் சாமிடி..” என்றான் ஒரே வார்த்தையில். அவள் தான் விக்கித்துப் போனாள். இப்படி பேசுபவனிடம் அவள் என்னத்தை பேசுவது.

“நான் வேணாமே..”

“நீ தான் வேணும். நீ மட்டும் தான் வேணும்.. என்னை தவிர உன்னை வேற யாருக்கும் விட்டு தரவே மாட்டேன்டி” என்றான் நிலையாக.

“சொன்னா புருஞ்சுக்கோங்க ங்க.. நான் குப்பை” என்றாள் கண்கள் கலங்க.

அவளின் கன்னங்களை தன் இரு கையாளும் தாங்கி, அவளின் விழிகளோடு விழி நோக்கி,

“ம்ஹும் அப்படி சொல்லாதடி, நீ மாணிக்கம், மரகதம், வெட்டி எடுக்காத விலை சொல்லவே முடியாத கட்டி வைரம்டி. இந்த வைரத்தை என் கிட்ட இருந்து பிரிச்சுடாத.. நான் செத்தே போவேன்டி” என்றான் உருக்கமாக.

“மாமா” என்றாள் கதறலாக.. முதல் முறையாக அவள் வாழ்வில் கேட்க துடித்த கொஞ்சல் மொழிகள், உதாரண மொழிகள்.

தாயை தவிர யாரும் கூறாத மொழிகளை அவளுக்கு இவ்வளவு நாள் காவலனாக இருந்தவன் கூற, தாயை அவனிடம் கண்டாள் பனிநிலவு.

“உன் மாமா தான். உனக்கு மட்டுமே உரிய மாமாடி” என்றவன் அவளை அப்படியே தன் நெஞ்சோடு இறுக்கமாக சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவனது இறுக்கமான அணைப்பில் எதுவும் சொல்லாமல் உருகி கரைந்து நெகிழ்ந்துப் போய் நின்றாள். அவளுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது. இன்பத்தின் பேரலை அவளை ஒரேடியாக புரட்டி போட்டது போல இருந்தது.

“நான் இதுக்கு எல்லாம் தகுதியே இல்ல” என்று அவனின் முகம் பார்த்து சொன்னாள். அவனின் மார்பில் சாய்ந்த பொழுது இதை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இருந்து விடவே முடியாது என்று அவளின் நெஞ்சம் வன்மையாக கூறியது.

“உன்னை தவிர என் நெஞ்சை ஆளும் தகுதி வேற யாருக்கும் கிடையாதுடி.. நீ என் இதய ராணி” என்றான் அழுத்தமாக. அவன் விளையாட்டாக எல்லாம் சொல்லவில்லை. அவன் வாயிலிருந்து வரும் அனைத்து சொல்லும் இதய பூர்வமாக சொல்கிறான் என்று புரிந்தது. அவளை கொண்டாடவும் ஒருவன் இருக்கிறான். அதுவும் அவளின் மனதுக்கு மிக நெருக்கமானவன்.. அவளால் எப்படி மறுக்க முடியும். மறுத்தால் மட்டும் விட்டு விடுவானா இந்த கதிரவன்.

எழு மலைகளுக்கு அப்பால் ஒளிந்து இருந்தாலும் தேடி வந்து கண்டு பிடித்து தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய் விட மாட்டானா இந்த வல்லவன்.

“ஆனா பிரச்சனை இன்னும் வலுக்குமே..” என்றாள் தயக்கமாய்.

“உனக்கு என் கூட வாழ ஓகேயா? அதை மட்டும் சொல்லு. மீதியை நான் பார்த்துக்குறேன்” என்றான்.

அவளுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கும் கதிரவனிடம் அவளால் மறுக்க முடியவில்லை.

“ஓகே தான்.. ஆனா” என்று அவள் முடிக்கும் முன்பே வன்மையாக அவளின் இதழ்களை தனக்குள் எடுத்துக் கொண்டான் கதிரவன்.

அவனின் வன்மையான இதழ் முத்தத்தில் திகைத்துப் போனாள் பனி. முதல் முறை அவ்வளவு மென்மையா முத்தமிட்டவன் இந்த முறை வன்மையில் ஈடு பட படபடத்துப் போனாள்.

“ஏன் இப்படி?” என்று தனக்குள் புலம்பினாலும் அவனின் வன்மையான இதழ் முத்தத்தில் மெல்ல மெல்ல கரைந்து தான் போனாள்.

கதிரவனின் இடை விடாத  இதழ் முத்தங்களில் திகைத்து தளர்ந்துப் போனாள் பனிநிலவு. மூச்சு விட கூட விடாமல் அவன் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்க அதுவும் வன்மையாக அவன் முத்தமிட மயக்கமே வருவது போல இருந்தது. இதழ்கள் எல்லாம் எரிந்தது.. காந்தியது.

“இன்னுமா?” என்று பாவமாய் அவனை பார்த்தாள்.

“எதுக்குடி இப்படி பார்க்கிற.. முத்தம் தானே குடுக்குறேன். ஏதோ ரேப் பண்ற மாதிரி மூஞ்சியை வச்சு இருக்க?” கடுப்புடன் அவளின் இதழ்களை கடித்து வைத்தான்.

“ஷ்.. ஏற்கனவே லிப்ஸ் எல்லாம் எரியுது. இதுல இப்படி கடிச்சு வச்சா எப்படி? இன்னும் வலிக்கிறது” என்றாள் பனி.

அவளின் புகாரில் தன்னை முழு ஆணாக உணர்ந்தானோ என்னவோ அவளின் முகத்தோடு தன் முகத்தை வைத்து இளைந்தவன்,

அவளின் கையை பிடித்து படுக்கைக்கு சென்று அமர்ந்தவன் தன் அருகில் அவளையும் அமர்த்திக் கொண்டு அவளின் கையை வருடி விட்டு,

“இப்ப தான்டி ஓயாம அலை பாய்ஞ்சுக்கிட்டு இருந்த என் நெஞ்சம் ரொம்ப அமைதியில இருக்கு. உன் சம்மத்ததுல தான் எனக்கு அந்த நிம்மதி கிடைச்சு இருக்கு.. இனி என்னை விட்டு போக மாட்ட தானே” அவளின் விழிகளோடு விழி வைத்து கேட்டவனின் அன்பில் முற்றும் முழுதுமாக தொலைந்துப் போனாள். ஆனாலும் அவளுக்குள் சில கேள்விகள் உள்ளுக்குள் கிளர்ந்துக் கொண்டு இருந்தது.

“சப்போஸ் நான் இந்த வீட்டோட வாரிசுன்னு எல்லோருக்கும் தெரியப்படுத்திட்டன்னா இந்த ப்ரப்போசல் தேவை இல்ல தானே” அவனின் மனதை அறியவே இந்த கேள்வியை கேட்டாள்.

பனியின் இந்த கேள்வி கதிரவனை கோவமுற செய்தது. அவளை தீயாக விழிகளால் சுட்டு பொசுக்கியவன், பட்டென்று அவளின் கையை தட்டி விட்டான். பின் நிதானித்து அவள் ஏன் இந்த கேள்வியை கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்டவன், அவளை முன்பை விட அதிக கூர்மையுடன் பார்த்தவன்,

“நீ என் கூட இருக்கணும்னு நான் எப்பவோ டிசைட் பண்ணிட்டேன் நிலா.. வீட்டுல மகாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லும் பொழுது கூட நான் வாயே திறக்கவில்லை ஏன் தெரியுமா? முதல்ல உன்னை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரணும். அதுக்கு பிறகு தான் இவங்க முடிவுக்கு முடிவு கட்டணும்னு நினைச்சேன். இந்த கல்யாண ப்ரப்போசல் கூட இப்ப எடுத்த முடிவு இல்ல.. உன்னை எப்போ முதல் முதலா பார்த்தனோ அப்பவே எடுத்த முடிவு.. என் முடிவுல எப்பவும் நான் திடமா நிற்பேன். எப்பவும் எங்கயும் விட்டுட மாட்டேன். என் கையை இறுக்கி பிடிச்சுக்கோ. உன் வாழ்க்கை அது என்னோட மட்டும் தான்.. அதே போல இது மாதிரி சில்லியா கேள்வி கேட்காம துளசி கல்யாணத்துக்கு ரெடியாகு” என்றான் அழுத்தமாய்.

அவன் குடுத்த உறுதியில் இவளின் நெஞ்சுக்குள் பனியின் குளுமை முழுமையாக இறங்கியது.

“என்னை அவ்வளவு பிடிக்குமா மாமா?” அவனை பார்த்து கேட்டாள்.

“பிடிக்கும்.. ரொம்ப பிடிக்கும்” என்றான்.

“காதல் பண்றீங்களா?” ஆர்வத்துடன் கேட்டாள்.

“அது தெரியல.. ஆனா உன்னை மட்டும் தான் பிடிக்கும். கல்யாணம் பண்ணி உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் பிள்ளை பிறக்கணும் ன்ற அளவுக்கு யோசிச்சு வச்சு இருக்கேன்” என்றவனை திகைத்துப் பார்த்தாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : May 13, 2026 2:39 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top