Notifications
Clear all

அத்தியாயம் 54

 
Admin
(@ramya-devi)
Member Admin

“தம்பி” என்று தேவகி அவனிடம் ஓடிவர,

“ஸ்டே அவே” கடினமாக சொன்னவன் மிரண்டு போய் இருந்த தாயையும் வேதனையுடன் தன் கையில் இருந்து காலை எடுத்துக் கொள்ளும் அதிரலையும் சட்டை செய்யாமல் அவளின் காலை இறுக்கமாகப் பிடித்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்தான் தீரன்.

ஆளவந்தானுக்கு தன் மகனா இவன் என்று அதிர்ந்துப் போய் பார்த்து நின்றார். அதை விட சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த தாராவுக்கு தன் அண்ணன் யாரோ ஒரு பெண்ணின் காலை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து இருந்த விதம் மூச்சை அடைக்க செய்தது.

எல்லோரையும் மிரள விட்டவன் அதிரலுக்கு வலிக்காமல் கண்ணாடி துண்டை வெளியே எடுத்தவுடன் குபுக்கென்று பொங்கிய உதிரத்தை பஞ்சால் துடைத்து எடுத்து, மருந்து போட்டு கட்டி விட்டவன்,

“உங்க உடைஞ்சு போன விலை உயர்ந்த அமெரிக்க பிளவர் வாஷ் நாளைக்கு வந்திடும்..” தாயை பார்த்து சொன்னவன், மீண்டும் அதிரலை பிள்ளையோடு கையில் ஏந்திக் கொண்டு வெளியே போய் விட்டான் எதுவும் நடக்காதது போல.

ஆனால் அவனது பெற்றவர்களும் கூடப்பிறந்தவளும் நெஞ்சை பிடிக்காத குறையாக விழிகள் தெரித்து விடும் அளவில் கையில் அதிரலை தூக்கிக் கொண்டு போன தீத்திரள் தீரனை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்களின் அதிர்வை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அவளை காரில் அமரவைத்து அவளின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனவன் அவளை படுக்கையில் விட்டுட்டு கேர்டேக்கர் மூலம் பிள்ளைக்கும் அவளுக்கும் சாப்பாடு தயார் செய்து குடுத்தவன் அன்றிரவு வீட்டுக்கு செல்லாமல் அவளை கட்டிக் கொண்டு படுத்து விட்டான் தீரன்.

அதிரலோ அவனை விலக்கப் பார்க்க,

“நான் மேற்கொண்டு போகணும்னு நினைச்சா நீ என்னை விலக்கி வை. இல்லன்னா என்னை அனுமதி” என்று வார்த்தையை கடித்து துப்ப, அவனது அணைப்பில் அப்படியே படுத்து விட்டாள் அதிரல்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி ரக ரகமாக சென்றது அதிரலுக்கு.. நாளைக்கு என்ன நடக்குமோ.. என்ற கவலையுடன் தீத்திரள் தீரனின் அணைப்பில் படுத்து இருந்தவள் பிள்ளையின் தலையை கோதி விட்டாள் நேசத்துடன்..

அவளின் கழுத்தில் முகம் புதைத்து இருந்தவன் அவளின் இன்னொரு கையை எடுத்து தன் தலையில் கொடுத்து பிள்ளைக்கு செய்வது போல செய்ய சொல்லி அவளுக்கு ஆணை போட, வேறு வழியில்லாது அவனுக்கும் செய்து விட்டாள்.

--

இரவு ஒரு மாதிரி செல்ல அதிகாலை விடிய எழுந்து வேலையை பார்க்கவேண்டுமே சலிப்புடன் எண்ணியவள் எழுந்துக் கொள்ள பார்க்க, அவளை எழவே விடவில்லை தீரன்.

“எனக்கு வேலை இருக்கு நான் போகணும்” என்றவளை முறைத்துப் பார்த்தவன்,

“அறிவே இல்லடி உனக்கு. அதை சொல்லிட்டா ரோஷம் மட்டும் வந்திடும் பொத்துக்கிட்டு.. ஆனா எதுக்கு சொல்றேன் ஏன் சொல்றேன்னு புருஞ்சுக்கமா தைய தக்கன்னு ஆட வேண்டீயது..” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,

“நேத்திக்கு நான் என்ன பண்ணேன்னு அறிவு இல்லன்னு திட்டுனீங்க? அதை கேட்டுட்டு நான் சும்மா இருக்கனுமா?” பொரிந்தவளை இன்னும் முறைத்துப் பார்த்தவன்,

“உனக்கு மண்டையில கொஞ்சம் கூட மூளையே இல்லன்னு தான் நீ அடிக்கடி நிரூபிக்கிறியே..” எகத்தாளமாக சொன்னான்.

“இங்க பாருங்க” என்று அவன் பக்கம் முழுமையாக திரும்பியவள்,

“சும்மா சும்மா என்னையே சொல்லிட்டு இருக்காதீங்க” என்றவளை இடையோடு இறுக்கிப் பிடித்தவன்,

“நேத்திக்கு கால்ல கண்ணாடி குத்தி ரத்தம் சொட்டுது.. அதுலையே நடந்து வெளிய போகப் பார்த்தியே பின்ன உன்னை வேற என்ன சொல்லி திட்டுறது. நீ நடந்தா குத்திய கண்ணாடி இன்னும் ஆழத்துக்கு போயிடாதாடி” முறைத்தான்.

“அது என் பிரச்சனை.. உங்களுக்கு என்ன வந்ததாம்” என்றவள்,

“உங்க அம்மா கேட்ட அமெரிக்கன் பிளவர் வாஸ் எவ்வளவு வரும்.. என்னோட சம்பளத்துல இருந்து மாதா மாதம் பிடிச்சுக்கோங்க” ரோஷத்துடன் சொன்னவளை இன்னும் இறுக்கிப் பிடித்து அவள் மீது பாதி தன் உடலை போட்டு படர்ந்தவன்,

“அவன் உனக்கு மட்டும் பிள்ளை இல்லடி.. எனக்கும் தான்” பல்லைக் கடித்தான்.

“அப்போ நீங்க பாதி காசு போடுங்க. நான் பாதி காசு போடுறேன். ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கி குடுத்துடலாம்” என்றவளை இன்னும் முறைத்தவன்,

“அடங்க மாட்டியாடி நீ” கடுப்படித்தவன்,

“இன்னைக்கு ரெஸ்ட் எடு.. நீ எந்த வேலையும் செஞ்சு கிழிக்க வேண்டாம்” என்றான்.

“எனக்கு யாருடைய கருணையும் வேணாம்.. என்னை என்னால மேனேஜ் செஞ்சுக்க முடியும்” என்றவளை ஆழ்ந்துப் பார்த்தவன், அவளின் முகம் நோக்கி குனிந்து வன்மையாக அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான்.

அதை எதிர் பார்க்காதவள் திகைத்துப் போக, அவளின் சேலையை விலக்கி அவளின் இடுப்பை இன்னும் இறுக்கமாக பற்றியவன் அவளின் இதழ்களில் வன்மையாகவே முத்த கவிதை படித்தான்.

“சொன்ன பேச்சு கேட்கலன்னா இப்படி தான் ஆகும்” ஈர இதழ்களை துடைத்துக் கொண்டவன் அவளை எச்சரித்தான். இவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“நீ குளிச்சுட்டு ரெடியா இரு.. கேர்டேக்கர் வந்து பிள்ளையை கிளப்பி விடுவாங்க. சாப்பாடு ஹோட்டல்ல இருந்து அனுப்ப சொல்றேன்..”

“இல்ல பிள்ளைக்கு” என்று அவள் ஆரம்பிக்க,

“உன் பிள்ளைக்குன்னு தனியா செய்ய புதுசா ஒரு செப் போட்டுட்டேன் நம்ம ஹோட்டல்ல.. அதனால உன்னை விட அவங்க நல்லா செஞ்சு குடுப்பாங்க” அவளின் வாயை அடைத்தான்.

“பிள்ளைக்கு மட்டும் வேணா குடுங்க. எனக்கு வேணாம். எனக்கு நானே செஞ்சுப்பேன்” பிகு பண்ணியவளை முறைத்துப் பார்த்தவன்,

“அடங்க கூடாதுன்னு இருந்தா நான் என்ன பண்றது” என்றவன் பிள்ளை லேசாக முழிப்பது போல இருக்க, இருவருக்கும் சேர்த்து போர்வையை போர்த்தியவன் அவளை வரைமுறை இன்றி வன்மையாக தொட்டு தடவி எடுக்க, துடியாய் துடித்துப் போனாள் அதிரல்.

“ஐயோ ஏன் இப்படி பண்றீங்க..?” புழுவாய் துடித்தவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“நான் பேசுனா ஓகேன்னு சொல்லி பழகு. அதை விட்டுட்டு எதிர்த்து பேசிட்டு இருந்தன்னு வை. இன்னைக்கு காட்டியது வெறும் சேம்பிள் தான். நாளைக்கு மொத்தமா உரிச்சு பார்த்துடுவேன்” எச்சரித்தவன் வெளியே போய் விட்டான்.

“அடப்பாவி” என்று மிரண்டுப் போனவள் அவன் வன்மையாக தீண்டிய இடமெல்லாம் வலி எடுத்தது. எங்கெங்கோ அவன் தீண்டி வைக்க அவளுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.

அப்படியே சிறிது நேரம் படுத்து இருந்தாள். கேர்டேக்கர் வர, அவரிடம் பிள்ளையை குடுத்து விட்டு எழுந்து குளிக்க சென்றாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 19, 2026 10:16 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top