திடிரென ஆதி அவளை தூக்க... பயந்து போனாள். அதோடு அனைவரின் முன்பும் அவ்வாறு செய்ய தடுமாறி போனாள்.
“ஆதி என்ன பண்றீங்க...” மயூ பதறி போய் இறங்க பார்க்க...
“ஷ்... வாயை மூடுடி..” என்றவன் தூக்கிக்கொண்டு வந்து பொத்தென்று படுக்கையில் போட்டான்.
“ஆ... அம்மா... ஏன் ஆதி இப்படி பண்றீங்க.. இப்போ தான் காலை ஒடச்சீங்க... அதுக்குள்ள இடுப்ப ஒடைக்க பார்க்குறீங்க...” கேட்டாள்.
“ஆமாண்டி லேசா உன் காலை பிடிச்சதுக்கு எலும்பெல்லாம் உடைஞ்சி போச்சுன்னு மூணு நாளு ஹாஸ்பிட்டல்ல இருந்து எல்லாத்தையும் நம்ப வச்சி கல்யாணத்தை நிறுத்தி, இல்லாத கேடி வேலையெல்லாம் பார்த்துட்டு நீ என்னை சொல்றியா...?” என்றவன் அவள் மீது வந்து பொத்தென்று விழ...
தன் குட்டு வெளிப்பட்டதில் சிறு பிள்ளை போல நாணி போனாள்.
“அ.. அது...”
“ம்ம்ம்... போதும்டி எனக்கு எந்த விளக்கமும் வேண்டியது இல்ல... உன்னை பத்தி எனக்கு எல்லாமும் தெரியும். உன் சிந்தனை முதற்கொண்டு” என்றவன் அவளது இதழ்களை நறுக்கென்று கவ்விக்கொண்டான். அதில் தேகம் சிலிர்த்தவள் அவனோடு ஒன்றிக்கொண்டாள்.
அவளின் போய் வேஷத்தை கண்டுக்கொண்ட ஆதியின் செயல்களில் சிறு பிள்ளை தவறு செய்து நாணி கோணி பெற்றவர்களின் முன் நிர்ப்பது போல நிற்கவும் அவளை வாரி அணைத்துக்கொண்டான் ஆதி தேவன்.
இது அத்தனையும் அவனுக்காக செய்தது தானே... பின் எப்படி அவளின் மீது அவனுக்கு கோவம் வரும்... மாறாக காதல் தானே அதிகம் பிறக்கும். அந்த காதலை தன் பாணியில் அவளிடம் காண்பித்துக்கொண்டு இருந்தான்.
அவனது வேகத்தில் திக்குமுக்காடி போனாள் மயூ...
“எதுக்கு இவ்வளவு வேகம்...” வெட்கத்துடன் கேட்டவளை இன்னும் இருக்கியவன் அவளது விழிகளில் முத்தமிட்டு,
“இவ்வளவு நாள் உன்னை தள்ளி வச்சதுக்கு சேர்த்து ஈடு செய்ய வேணாமா...?” தோரணையுடன் கேட்டவனை கண்டு வெட்கம் கொண்டவள்,
“அதுக்குன்னு இப்படியா...?” செல்ல சிணுங்கலுடன் கேட்டவளை வளைத்து பிடித்து, “இதுக்கு மேலையும் இருக்குடி..” என்றபடி அவளது இடையில் கைவிட்டு நெருக்கியவன்,
“என்னை அவ்வளவு பிடிக்குமாடி...” என்று கேட்டான்.
“ம்ம்ம்... ரொம்ப ரொம்ப பிடிக்கும். முதல்ல வேற கல்யாணம் பண்ணிக்கனுமான்னு யோசிச்சேன். அப்புறம் உங்களை விட்டு இருக்க முடியாதுன்னு நினைச்சேன். சரி எப்படியும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா நீங்க அந்த கல்யாணத்தை எப்படியும் தடுத்துடுவீங்கன்னு நினைச்சி சரின்னு சொல்லிட்டேன் அத்தைக்கிட்ட...”
“ஆனா சார் ரொம்ப தான் பண்ணிக்கிட்டு, கடைசி வரை எந்த ஸ்டெப்பும் எடுக்கவே இல்ல...” என்று அவனது மூக்கை பிடித்து ஆட்டினாள்.
“அப்போ அன்னைக்கு காலை பிடிச்சு திருப்பி சுளுக்கு வர வச்சானே.. மேடம் நான் போட்ட கோட்டை வச்சு தானே ரோட போட்டு கல்யாணத்தை நிறுத்துனீங்க..” ஒற்றை புருவத்தை தூக்கி கேட்டவனின் மேனரிசத்தில் மனதை கொள்ளை கொடுத்தவள்,
“ம்ம்ம்... அதுவும் சரி தான். ஆனா நான் அன்னைக்கு வேற ஒண்ணை நினைச்சேன்...” என்று முகம் சிவந்து போனாள்.
“அப்படி என்னடி நினைச்ச...” புருவத்தை சுருக்கினான்.
“அதை இப்போ சொல்ல மாட்டேன். எப்போ என் கழுத்துல தாலிய கட்ட போறீங்களோ அப்போ தான் அதை சொல்லுவேன்” என்று சொல்ல... அவள் சொன்ன சொல்லில் சட்டென்று உடல் விரைத்தவன், வேகமாய் அவளை உதறிவிட்டு எழுந்தான்.
அதில் அடி பட்டு போனவள் தயக்கமாய் “ஆதி...” என்றாள்.
“நான் நல்ல மூடுல இருக்கேன். தேவையில்லாம பேசி எதுக்குடி என்னை கோவ படுத்துற... இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை...” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.
அவனது எச்சரிக்கையில் கண்கள் இரண்டும் சிரபுஞ்சி போல நீரில் நிறைந்து போனது.
அவனை சமாதன படுத்தும் வகை தெரியாமல் தடுமாறி போனாள். இது அவளுக்கு புதிது இல்லை என்றாலும், பல முறை அவனிடம் காய பட்டு போனாலும், மனம் அவனையே சுற்றி வந்தது.
அவளை விட அவனல்லவா அதிக காயம் கொண்டு இருக்கிறான். அதனால் அவன் பேசும் பொது அவள் தாங்கி நின்றுதான் ஆக வேண்டும். எண்ணியவள் எழுந்து உப்பரிகைக்கு சென்று நின்றாள்.
ஆதி தேவன் கீழே இருந்த தோட்டத்தில் நடை போட்டுக்கொண்டு இருந்தான். அவனது கோவத்தை இன்னும் அதிக படுத்தும் படி அடுத்த நாள் ஒரு காரியம் செய்து இருந்தாள் மயூ.
அப்படி என்னவாக இருக்கும்...
அன்றைய பொழுது ஆதியின் பாராமுகத்திலே கழிய, சோர்ந்து போனாள் மயூ. இரவு அவனது அறையிலே தூங்க முயல... ஆதி வலுக்கட்டாயமாக அவளை அவளது அறையில் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றான்.
அதில் மயூரா தேவி இன்னும் காயம் பட்டு போனாள்.
பாவமாய் அவனை பார்க்க...
“ரொம்ப சீன் போடாதடி... நீ செஞ்சதுக்கு நீயும், உன் மாமியாரும் என் கிட்ட நால்லா வாங்குவீங்க.” என்று கடுப்படித்துவிட்டு சென்றுவிட்டான். அதில் ஓய்ந்து போனவள் தூங்க முயல... அவளது போன் அடித்தது.
எடுத்து பேசியவளுக்கு மனம் பதட்டப்பட்டது.
“என்ன சொல்ற ரஞ்சனி.... நிஜமாவா”
“ஆமா மயூ.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு... ப்ளீஸ் என்னை வந்து கூட்டிட்டு போறியா...?” என்றால் விசும்பலுடன்.
“என்னால இப்போ வர முடியாது ரஞ்சனி... நீ எப்படியாவது இங்க வந்துடேன். மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன்...” என்றாள் பரபரப்பாய்.
“ப்ளீஸ் மயூ... வாயேன்...”
“இல்லடா... என்னால இப்போ வர முடியாது. வந்தா முழுசா மாட்டிக்குவேன்... நீ வாயேன்... நான் வேணா என்னோட காரை அனுப்பி வைக்கிறேன்.”
“சரி அனுப்பி வை.. நான் எப்படியாவது தப்பிச்சு வந்தர்றேன்...” என்று வைத்தவள், அவள் வீட்டிலிருந்து கிளம்பி சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
கொஞ்ச நேரம் நடந்து இருப்பாள். அதற்குள் மயூ அனுப்பி வைத்த ஓட்டுனர் காரோடு வர, அதில் ஏறி அமர்ந்தாள் ரஞ்சனி...
அர்த்த ராத்திரியில் வீட்டு கதவை தட்டிய ரஞ்சனியை கண்டு வீட்டு மாந்தர்கள் அனைவரும் யோசனையுடன் பார்த்தார்கள்.
ஒருவர் கூட அவளை வா என்று சொல்லவில்லை.
அதில் அவமானமாய் உணர்ந்த ரஞ்சனி மயூவை தேடினாள். அவள் மட்டும் வரவே இல்லை.
“என்ன இந்த நேரத்துல வந்து இருக்க. அதுவும் கையில பையோடு...” என்று சீதா ஆரம்பிக்க... கேசவன்
“ஆமா மா... ஏன் இப்படி ராத்திரியில வந்து இருக்க... நீ வந்தது உங்க அப்பாவுக்கு தெரியுமா...? அப்படி என்ன அவசரம். விடிந்த உடன் வர வேண்டியது தானே?” கேட்க,
அவரை பார்த்து முறைத்த சீதா...
“கையில பையோடு வந்து இருக்கா.. அதை விசாரிக்காம காலையில வர வேண்டியது தானேன்னு கேக்குறத பாரு...” முனுமுனுத்தவர்,
“ஆமா எங்க உங்க அப்பா... அப்பா வரலையா...? என்ன பிரச்சனை. எதுக்காக இங்க வந்து இருக்க” என்று மேலும் சீதா கேட்க...
ரஞ்சனி தவிப்புடன் மயூவை தேடினாள். அவளுக்கு பதில் ஆதி தேவன் தான் அவளுக்கு தரிசனம் கொடுத்தான்.




