“உங்கக்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்” என்றவளை ஆழ்ந்து நிதானமாக பார்த்தவன்,
“அவனை தூங்க வச்ச மாதிரி என்னையும் தூங்க வை” என்றவன் அவளுக்கு அறுகில் இந்த பக்கமாக வந்து படுத்துக் கொண்டான். விக்கித்துப் போய் விட்டாள் வேரல்.
-
“என்ன விளையாடுறீங்களா கங்குவன்” அவள் பதட்டமாக கேட்டுக் கொண்டே படுக்கையில் இருந்து எழப்பார்க்க, அவளின் இடையில் இருந்தும் காலின் மீதும் இருந்த பிள்ளையின் கைக்கால்களை விலக்கி விட்டவன் கொஞ்சமும் யோசிக்காது அவளை படுக்கையில் தள்ளி விட்டவன் அவள் மீது முற்றும் முழுதுமாக பரவி படர்ந்து விட்டான்.
அவனின் மூச்சுக் காற்று அவளின் கழுத்துக்கடியில் உரச, ஆணவனின் முகம் அவளின் சரிவான நீண்ட கழுத்தில் புதைந்துப் போனது.
முழு பாரமும் தன் மீது அவன் போட்டு இருக்க இவளுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. தள்ளி விட பார்த்தாள். ம்ஹும் அசைய கூட விடாவில்லை அவளை.
“ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? முதல்ல என் மேல இருந்து எழுங்க.. நானென்ன உங்க பொண்டாட்டியா? என்னவோ பட்டா போட்ட மாதிரி என் மேல படுத்து இருக்கீங்க” கேட்டவளின் இதழ்களை சிறை செய்தவனது கை இடையை தாண்டி அவளின் மார்போரம் பயணிக்க வியர்த்து கொட்ட வேகமாய் எழுந்து அமர்ந்தாள். சுற்றி முற்றிப் பார்த்தாள். கங்குவனின் நிழல் கூட எங்கும் தென்படவில்லை.
அய்யோ கனவா? என்று நெஞ்சம் உலுக்கிப் போனது. ச்ச என்ன மாதிரியான கனவு இது.. கடவுளே ஏன் என் எண்ண போக்கு மட்டும் இவ்வளவு கேவலமா இருக்கு.. நொந்துப் போனவள்,
இங்கிருந்து முதலில் செல்ல வேண்டும் என்று எண்ணியவள், தன் அண்ணனுக்கு போன் போட பார்த்தாள். போன் அருகில் இல்லாமல் போக அதை தேடினாள். அந்த அறையில் எங்குமே இல்லை.
பிள்ளை உருண்டு விழாமல் இருக்க இரு பக்கமும் தலையணையை அணைவாக கொடுத்து விட்டு கீழே வந்தாள்.
“சாப்பிடும் பொழுது டைனிங் டேபிளில் வைத்தது நினைவுக்கு வர, அவ்விடம் சென்றாள். அப்பொழுது எங்கிருந்தோ சத்தம் வர, வேகமாய் அங்கு சென்று பார்த்தாள்.
பார் கவுண்டரில் அமர்ந்து அங்கு ஊற்றிக் கொடுத்துக் கொண்டு இருந்த பணியாளரிடம் ஏதோ சத்தம் போட்டுக் கொண்டு இருந்தான் கங்குவன்.
“எப்பப்பாரு தண்ணி அடிக்கிறது தான் வேலை. அதை தவிர வேற ஒன்னும் தெரியாது” திட்டிக் கொண்டே அவனை நெருங்கி சென்றாள்.
“ஒரு சரக்கை கூட ஒழுங்கா மிக்ஸ் பண்ண தெரியல.. உனக்கு எல்லாம் எவன்டா வேலை கொடுத்தது. நாளையில இருந்து உன்னை இங்க பார்க்க கூடாது. இன்னைக்கே உன் ஒன்றுக்கு போனை போட்டு கம்ப்ளைன்ட் பண்றேனே இல்லையான்னு பாரு” என்று போதையில் என்ன பேசுகிறோம் எதை பேசுகிறோம் என்று தெரியாமல் அவன் பாட்டுக்க உளற, கண்களெல்லாம் திறக்கவே முடியாமல் அத்தனை போதை ஏறி இருந்தான். உடல் வேறு ஒரு நிலையில் இல்லாமல் தள்ளாடிக் கொண்டு இருந்தது. அவனுக்கு அருகில் செல்ல, மது வாடையோடு குப்பென்ன்று சிகரெட் வாடை வேறு.
என்ன தான் உயர்தரமான சரக்கு என்றாலும் லேசாக வாடை அடிக்கவே செய்தது. இவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது.
“கேட்டவுட்” என்று அங்கு ஊற்றிக் கொடுத்துக் கொண்டு இருந்த இருவரையும் அப்புறப் படுத்தினாள் எரிச்சலுடன்.
“ஏய் ஏய் ஏன்டா போறீங்க? எனக்கு இன்னும் சரக்கு வேணும்” என்று சோபாவில் சரிந்து அமர்ந்தவன் தள்ளாடி எழுந்து நிற்க பார்த்தான்.
ஆனால் உடம்பு ஒத்துழைக்காமல் போக தள்ளாடி மீண்டும் இருக்கையிலே பொத்தென்று அமர்ந்தான்.
“ஏய் நீ யாருடி அவனுங்களை போக சொல்ல.. எனக்கு சரக்கு வேணும்.. என்னை மறக்கணும். அதுக்கு நான் குடிக்கணும்.. ஐ வான்ட் ஸ்காட்ச்.. புல்லா மப்பு ஏறணும் அப்பா தான் எனக்கு தூக்கம் வரும்..” என்று சலம்பிக் கொண்டு இருந்தவனை பார்த்தவளுக்கு கோவம்னா கோவம் அப்படி ஒரு கோவம் வந்தது.
வேகமாய் அவனை இழுத்துக் கொண்டு பாத்ர்றோம் நோக்கி செல்ல, அவனை அந்த மலை மாட்டை இழுத்துக் கொண்டே செல்லவே முடியவில்லை.
ஓரடி எடுத்து வைப்பதற்குள் நாக்கு தள்ளியது. “மனுசனா இந்த ஆளு.. இப்படியா குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்குவாரு. நமக்கு பிறகு நம்ம பிள்ளைக்கு யாரு இருக்கான்னு யோசிக்க வேண்டாம். நாம இப்படி குடிச்சு குடிச்சு குடல் வெந்து சீக்கிரமா செத்து போயிட்டா நம்ம பிள்ளை அனாதையா போயிடுமேன்ற கவலை கொஞ்சமாச்சும் இருக்கா? யாரு எப்படி போனா என்ன? நமக்கு நாலு பாட்டில் சரக்கு இருந்தா போதும்னு நினைக்கிற மனுசன் கிட்ட என்னத்தை பேசுறது..”
“எது பேசுனாலும் உன் வேலையை பார்த்துக்கிட்டு போடின்னா நாம என்ன பேசுறது. ஒன்னு சொல் புத்தி இருக்கணும். இல்லையா சுய புத்தியாவது இருக்கணும். ரெண்டும் இல்லாத மனுசன் கிட்ட பேசுறதே வேஸ்ட்” புலம்பிக் கொண்டே அவனை குளியல் அறைக்குள் தள்ளி ஷவரை திறந்து விட்டாள்.
“ஏன்டி என்னை குளிக்க வைக்கிற.. ஐயோ என் போதை எல்லாம் இறங்குதே.. எனக்கு போதை வேணும்டி” தண்ணீரை விட்டு நழுவப் பார்க்க,
“கொன்னுடுவேன் உங்களை ஒழுங்கா நில்லுங்க” அவனை பிடிச்சு தண்ணீரில் நிற்க வைக்க,
“அப்போ வா நீயும் என் கூட நில்லுடி”ன்னு அவளையும் நீருக்கடியில் நிற்க வைத்து திமிறி வெளியே போகப் பார்த்தவளை உடும்பு பிடியாக நீருக்கடியில் நிறுத்தி அவள் மீது முழுவதுமாக சரிந்து நின்றான் கங்குவன்.
நறுவேரலுக்கு இதயம் பல மடங்கு வேகமாக அடித்துக் கொண்டது.
“என்ன செய்ய வந்து என்ன செய்துட்டு இருக்கேன். அவருக்கு தான் சுய நினைவு இல்லை. ஆனா எனக்கு இருக்கே..” பதறிப் போனவள் வேகமாய் தன் மீது சாய்ந்து இருந்தவனை விலக்கி விட்டு குளியல் அறையை விட்டு வெளியே வரப் பார்க்க,
கங்குவன் முரட்டு தனமாக அவளை இழுத்து சுவரில் சாய்த்து நிறுத்தியவன், அரைகுறை போதையில் இருந்தவனுக்கு என்ன தொன்றியதோ “என் போதையை நீ தானே குறைச்ச, எனக்கு இப்போ அந்த போதை வேண்டும். நீ தான் தரணும்”னு சொல்லி நீரில் பளபளத்து இருந்த அவளின் இதழ்களை போதை ஏறிய விழிகளுடன் பார்த்தவன் எதை பற்றியும் யோசிக்காது கவ்வி சிறை எடுத்துக் கொண்டான்.
அதை அவனிடம் இருந்து எதிர் பார்க்காத பெண்ணவளோ திகைத்து தடுமாறிப் போனாள்.




