“முதல்ல கிளம்ப சொல்லுங்க.. அவ நிக்கிற இடத்தை வாஷ் பண்ணனும்” என்று தேவகி சொல்ல, அவரை அறைய கை ஓங்கி இருந்தார் ஆளவந்தான்.
அந்த நேரம் “வாட் ஹெப்பேன்.. என்ன நடந்துக்கிட்டு இருக்கு இங்க?” கடுமையான குரல் கேட்க, நிமிர்ந்து பார்க்காமலே அது யாரென்று புரிந்துக் கொண்ட அதிரலுக்கு கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது.
தன் ஏழ்மை நிலையை குத்தி காட்டி பேசிய தேவகியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் மகனை கையில் வைத்துக் இருந்த அதிரலுக்கு தன் மகனால் ஏற்பட்ட இழப்பை நிர்வத்தி செய்து தானே ஆகணும்.. எண்ணியவள்,
“மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமா குடுத்து செட்டில் பண்ணிடுறேன் மேம்” தலையை நிமிர்த்தாமல் சொன்ன நேரம்,
“நான் இங்க என்ன நடக்குதுன்னு கேட்டேன்” இரும்பு குரலில் கேட்ட தீரனை கொஞ்சமும் சட்டை செய்யாமல்,
“நான் கிளம்புறேன் சார்.. என்னால யாரும் சண்டை போட வேண்டாம்.. இன்வைட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று ஆளவந்தானிடம் மட்டும் சொன்னவள், காலில் குத்திய கண்ணாடி பீஸோடு அவள் வெளியேப் போக, அவளை போக விடாமல் ஒரு கையால் அவளை பிடித்து நிறுத்தினான் தீத்திரள் தீரன்.
அவளை அப்படி பிடித்து நிறுத்திய மகனை கண்டு திடுக்கிட்டுப் போன தேவகி,
“தம்பி என்ன பண்ணிட்டு இருக்க? அது அந்த பொண்ணு” என்று அவர் தடுமாற,
“ப்பா சொல்லுங்க. இங்க என்ன நடந்தது. நான் வரும் நேரம் எதுக்காக அம்மாவை அடிக்க கை ஓங்குநீங்க” தீர்க்கமாக கேட்ட மகனை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் நடந்ததை அவர் சொல்ல, தாயை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.
“என்னம்மா இதெல்லாம்?” அவன் கேட்க,
“நம்ம வீட்டுக்கு வரதுக்கு ஒரு தகுதி வேண்டாமா தம்பி.. எத்தனை பேரை நீ வாசலில் கூட நிற்க விடாம செய்து இருப்ப.. ஆனா உங்க அப்பா யாரு என்னன்னே தெரியாத இந்த பெண்ணை வீட்டுக்குள்ள வரை விட்டு இருக்காரு. அதோட மட்டுமா அந்த பொண்ணு கையில இருக்கிற அந்த பையன் நம்ம அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்த வாஷை உடைச்சுட்டான். அது தான் சொல்லிட்டு இருந்தேன்” என்ற தாயை கண்கள் இடுங்க பார்த்தவன் திரும்பி அதிரலை பார்த்தான்.
அவளின் முகம் அவமானத்தில் சிவந்துப் போய் இருந்தது. கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது.
“இப்போ இவரும் சேர்ந்து அவமானப் படுத்த போறாரு.. பிள்ளையை கண்டிச்சு வளர்க்க மாட்டியா? நீ தான் கொஞ்சமும் பொறுப்பில்லாம இருக்க. அதே மாதியே பிள்ளையையும் வளர்க்குற” என்று கேட்பாரே என்று அவள் உள்ளுக்குள் மறுகிக் கொண்டு இருந்த நேரம்,
“ம்மா யாருக்கிட்ட என்ன பேச்சு பேசுறீங்க? அவங்க நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட் ம்மா” தீரனின் பின்னாடி வந்த வெற்றி தாயிடம் எகிறினான்.
“நீ என்னடா புதுசா துள்ளுற.. யார் யாரை எங்க வைக்கணுமே உங்க அப்பாவுக்கு தெரியல.. அவரோட சேர்ந்த நீயும் வேற எப்படி இருப்ப” தேவகி நொடித்துக் கொள்ள, வெற்றிக்கு வாய் வரை வந்து விட்டது அதிரல் யாரு என்றும், அவளின் கையில் இருந்த பிள்ளை யார் என்றும் சொல்ல. ஆனால் அண்ணனை மீறி அவனால் எதுவும் சொல்ல முடியாமல் வாயை கடினப்பட்டு அடக்கிக் கொண்டான்.
“அதுக்காக அவங்க நம்ம வீட்டுக்கு வந்தவங்க ம்மா. அப்பா இன்வைட் பண்ணி தானே வந்தாங்க” என்றவனை முறைத்த தேவகி,
“உனக்கு என்னடா ஆச்சு.. ஏன் இப்படி புதுசா பிகேவ் பண்ற?” என்ற தாயை எதுவும் செய்ய முடியாமல் அண்ணனை பார்த்தான் வெற்றி.
“கையை விடுங்க.. ப்ளீஸ்” தீரனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அதிரல். அவள் எவ்வளவு கேட்டும் அவளை விடாமல் அவன் பிடித்து இருந்த தோரணை அவளுக்குள் பெரும் அதிர்வை கொடுத்தது.
“இதுக்கு மேல அவமானப் பட எதுவும் இல்லை சார்..” என்றவள்,
“இதுக்கு மேலையும் நான் அவமானப் படனும்னு நீங்க ஆசை பட்டா நான் இங்கயே இருக்கேன்” என்றவளின் விழிகள் அவமானத்தில் சிவந்துப் போய் இருந்தது.
அவளின் கையை விட்டவன் அவளின் கையில் இருந்த பிள்ளையை வாங்கிக் கொள்ள, அதிர்ந்துப் போய் அவனை பார்த்தாள் அதிரல். அதுவரை அவனின் முகத்தையே பார்க்காமல் தலையை கீழேயே குனிந்து நின்று இருந்தவள் இப்பொழுது தான் அவனையே பார்த்தாள்.
அதற்காக தான் காத்துக் கொண்டு இருந்தவனாய் அவளை முறைத்துப் பார்த்தவன்,
“ஏய் அறிவு இல்ல” என்று அவளை திட்ட ஆரம்பிக்கும் முன்பே,
“எனக்கு அறிவு இல்ல சார்.. மூளை இல்ல சார். நாகரீகம் னா என்னன்னு கூட தெரியாது சார். எங்களை எல்லாம் வீட்டுல வச்சு வளர்க்கல.. ஜூல வச்சு தான் வளர்த்தாங்க சார்.. நான் வளர்த்த என் மகன் அவனும் அப்படி தான் சார்.. எனக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல.. யார் கிட்ட எப்படி நடந்துக்கணும் ன்ற மேநேர்ஸ் இல்ல.. எதுவுமே இல்ல சார்.. போதுமா?” என்று கண்கள் கலங்க சொன்னவளை ஆழ்ந்துப் பார்த்தவன் வெற்றியை ஒரு பார்வை பார்க்க அவன் தாயிடம் இருந்து விலகி உள்ளே ஓடினான்.
“என்னை விடுங்க சார். உங்க தகுதி தெரிஞ்சு இருந்தும் நான் இங்க வந்தது என்னோட தவறு.. நான் இங்க வந்து இருக்கவே கூடாது. தெரியாம வந்துட்டேன். ப்ளீஸ் என்னை விடுங்க. என் மகனை என்கிட்டே குடுங்க.. நான் போறேன்” என்று அவனின் கைப்பிடியில் இருந்த தன் கையை உருவிக் கொள்ளப் பார்த்தவள் அவனின் இன்னொரு கையில் இருந்த பிள்ளையை வாங்க பார்த்தாள்.
அவளை ஆழ்ந்துப் பார்த்தவன், அவளின் கையில் பிள்ளையை குடுத்தான். அவனை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்,
வெளியேறப் பார்க்க, அவளையும் பிள்ளையும் சேர்த்து தூக்கியவன் அங்கிருந்த சோபாவில் உட்கார வைக்க, திகைத்துப் போனாள் அதிரல்.
“சார்” என்று அவள் கத்த, அதே நேரம் “தம்பி” என்று தேவகியும் கத்தினார்.
யாரையும் சட்டை செய்யாமல் அதிரலின் காலை தூக்கி தன் மடியில் வைத்தவன் வெற்றி எடுத்து வந்த முதலுதவி பெட்டியை திறந்து அவளின் காலில் குத்தி இருந்த கண்ணாடி பீசை எடுக்கும் வேலையில் ஆழ்ந்தான்.
“தம்பி” என்று தேவகி அவனிடம் ஓடிவர,
“ஸ்டே அவே” கடினமாக சொன்னவன் மிரண்டு போய் இருந்த தாயையும் வேதனையுடன் தன் கையில் இருந்து காலை எடுத்துக் கொள்ளும் அதிரலையும் சட்டை செய்யாமல் அவளின் காலை இறுக்கமாகப் பிடித்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்தான் தீரன்.




