“கையில பையோடு வந்து இருக்கா.. அதை விசாரிக்காம காலையில வர வேண்டியது தானேன்னு கேக்குறத பாரு...” முனுமுனுத்தவர்,
“ஆமா எங்க உங்க அப்பா... அப்பா வரலையா...? என்ன பிரச்சனை. எதுக்காக இங்க வந்து இருக்க” என்று மேலும் சீதா கேட்க...
ரஞ்சனி தவிப்புடன் மயூவை தேடினாள். அவளுக்கு பதில் ஆதி தேவன் தான் அவளுக்கு தரிசனம் கொடுத்தான்.
“ஐயோ இவரா...?” என்று உள்ளுக்குள் பயந்தவள், பின் மெல்ல தயங்கி தயங்கி “மயூகிட்ட பேசணும். கொஞ்சம் பார்க்க முடியுமா அவங்களை...” என்று கேட்டாள்.
“பார்க்க முடியாது...” கத்தி போல வந்தது ஆதியின் கர்ஜனையான குரல்.
“ப்ளீஸ் ஆதி... இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க..” என்ற நேரம் மயூ கீழிறங்கி வந்தாள். அவளது வருகையை கண்ட பின்பே ரஞ்சனிக்கு நிம்மதியானது.
ஆனால் ஆதிக்கு பயங்கரமாய் ரத்த அழுத்தம் ஏறியது. கண்களிலே அவளை மேலே போக சொன்னான். ஆனால் அவளோ அவனை கண்டுக்கொள்ளாமல், வேகமாய் ரஞ்சனியிடம் விரைந்து வந்து அவளது கைகளை பற்றி,
“வா ரஞ்சனி...” என்று உள்ளே அழைத்து வந்தாள். அவளது செயலை கேசவனை தவிர வேறு யாரும் அங்கே விரும்பவில்லை.
அவள் எல்லோரையும் ஒரு பார்வை பார்க்க, மயூ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் அறைக்கு அவளை அழைத்து சென்றாள்.
மயூவின் செயலில் ஆதி திரும்பி சீதாவை முறைத்தான்.
“அவ பண்ணுனதுக்கு நான் என்னடா பண்ணினேன்... எஹ்டா இருந்தாலும் அவக்கிட்ட டீல் பண்ணிக்க... இடையில என்னை இழுக்காத...” சொன்னவர் வேகமாய் அந்த இடத்தை விட்டு ஓடினார்.
இல்லையென்றால் ஆதியின் கோவத்துக்கு யார் ஆளாவது.
ஆதி கடுமையான கோவத்துடன் மயூவின் கதவை தட்ட அவளோ அவனுக்கு பயந்துக்கொண்டு கதவை திறக்கவே இல்லை.
“இப்போ கதவை திறக்க போறியா இல்லையாடி...?” கடுப்புடன் கேட்டான்.
“இப்போ முடியாது. கொஞ்ச நேரம் கழிச்சு திறக்கிறேன்... இப்போ போய் தூங்குங்க...” என்றவள் ரஞ்சனியை அழைத்துக்கொண்டு லிவிங் அறைக்கு வந்து பேச ஆரம்பித்தாள்.
“என்ன ஆச்சு ரஞ்சனி... அதும் இந்த நேரத்துல...” என்று கேட்க..
“எனக்கு எதை சொல்றதுன்னு தெரியல மயூ. உங்க வீட்டுல கல்யாணத்தை தள்ளி வைக்கலாம்னு சொன்னதுல இருந்தே அவரு ரொம்ப ஒரு மாதிரி ஆகிட்டாரு... இந்த கல்யாணம் நடக்காம போய்டுமோன்னு உள்ளுக்குள்ள பயந்துக்கிட்டே இருப்பாரு போல...”
“அப்படியே யோசிச்சுக்கிட்டு இருந்தவரு உன் கல்யாண விஷயம் கேட்டு சரி இது முடிஞ்ச உடனே அடுத்த முகுர்த்தத்துல எங்க கல்யாணம்னு நினைச்சாரு. கேசவன் மாமாவும் அப்படி தான் சொன்னாரு.”
“ஆனா உனக்கு கால் இப்படி ஆனதுல கல்யாணம் நின்னு போச்சா... அதுல அப்பா ரொம்ப டென்சன் ஆகிட்டாரு. அதனால எங்க கல்யாணம் இன்னும் பின்னுக்கு தள்ளி போய்டும்னு நினைச்சி அதிகமா கோவத்துல என்னை அடிக்க ஆரம்பிச்சாரு.”
“இதுக்கெல்லாம் காரணம் நீதானே. அப்படின்னு சம்மந்தமே இல்லாம என் மேல கோவப்பட்டு அடி வெளுத்துட்டாறு...” என்றவள் கொஞ்சம் இடைவெளிவிட்டு
“வர வர நீ அதிகமா வாந்தி எடுக்குறதா தகவல் வந்ததே... சரி கல்யாணம் பண்ணிட்டு அதை பாத்துக்கலாம்னு இருந்தேன். ஆனா இப்போ அப்படி விட முடியாதுன்னு சொல்லி... காலையில உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு போயிட்டாரு.”
“அதுல இருந்து எனக்கு ஒரே பயமா போய்டுச்சு மயூ... எனக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஒன்னு ஆயிடுமோன்னு..” கண்கள் கலங்கியவள், அவளது கைகளை பற்றிக்கொண்டு,
“அதுக்கு பிறகு தான் உன் கிட்ட பேசினேன்.” என்றாள் ரஞ்சனி.
அவளது கையை ஆறுதலாய் தட்டி கொடுத்தவள், “நீ என் கிட்ட வந்துட்டீள்ள... விடு இனி எல்லாத்ததையும் நான் பார்த்துக்குறேன். நீ எதுக்கும் கவலை படாத... ஆமா செக்கப் டேட் எப்போ” கேட்டாள் மயூ.
“இன்னும் த்ரீ வீக்ஸ் கழிச்சு மயூ...”
“ம்ம் ஓகே இப்போ போய் நீ ரெஸ்ட் எடு...மீதியை காலையில பார்த்துக்கலாம்..” என்று செர்வன்டை வரவைத்து அவளை கெஸ்ட் ரூமில் கீழ் தளத்தில் தங்க வைத்தாள்.
ரஞ்சனி சென்ற அடுத்த நொடி ஆதி மயூவின் அறையில் நுழைந்தான் சீற்றமாக...
“மயூரா....” கர்ஜனையுடன் ஒலித்த அவனது குரலை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவனது அருகில் வந்து, அவனது காலில் ஏறி நின்று, அவனது கழுத்தை வளைத்து தன் முகத்துக்கு நேராக பிடித்து,
“என்ன மிஸ்டர் ஆதி... சத்தம் பலமா இருக்கு...” கேட்டவள் ஒற்றை கண்ணடித்து, அவனை இன்னும் தன்னோடு நெருக்கியவள்,
“இந்த சத்தத்துக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். நான் ஆதி தேவனோட வைப்... தெரியும் தானே..” என்று அவனை சீண்டி விட,
“வேணாண்டி... நானே என்னோட கோவத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடக்கி வச்சுக்கிட்டு இருக்கேன். நீ மேற்கொண்டு கிளறி விடாத... அப்புறம் சேதாரம் அதிகமா போய்டும்...” என்றபடி அவளை ஆழ்ந்து பார்த்து கூறினான்.
“என்ன சேதாரம் வந்தாலும் பரவால...” என்று சொல்லி முடிக்கும் முன் அவளது இதழ்களை கொய்து இருந்தான் ஆதி தேவன்.
அவனது அதிரடியில் சிலிர்த்தவள், அவனது வேகத்துக்கு தடை போடாமல் இன்னும் அவனை தூண்டி விட... மனம் மயங்கி போய் அவளுடன் ஒன்றினான்.
அதில் அவளது இதழ்கள் சிரிக்க... அதன் பின்பே தான் செய்ய வந்த காரியம் என்ன, செய்துக்கொண்டு இருக்கிற காரியம் என்ன என்பதை உணர்ந்தவன் அவளை விட்டு விலகி, அவளை முறைத்து பார்த்தான்.
அதில் மயூரா தேவி கலகலவென்று சிரித்தாள். அவளது சிரிப்பை கண்டு தன்னையே நொந்துக்கொண்டவன்,
“வேணாண்டி ரொம்ப சிரிக்காத... இரிடேட் ஆகுது.” என்றான்.
“என் வாயி நான் சிரிக்கிறேன்.. உங்களுக்கு என்னவாம்...” என்றவள், “ஆதி எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அதுக்குள்ள நான் எல்லா குழப்பத்தையும் சரி பண்ணியர்றேன். அது வரை நீங்க எதுக்கும் டென்சன் ஆகாம கொஞ்சமே கொஞ்சம் காமா இருந்து எனக்கு உதவி பண்ணுங்க...” என்றாள்.




