Notifications
Clear all

அத்தியாயம் 44

 
Admin
(@ramya-devi)
Member Admin

தானாகவே கொண்டு போய் அல்லவா இடித்தாள். ஆதியை ஏங்க வைத்ததிற்கு அவளுக்கு அவளே பனிஷ்மென்ட் கொடுத்துக்கொண்டாள். ஆதிக்குமே அப்பொழுது தான் அது ஸ்ட்ரைக் ஆனது.

அவளது முகத்தை கூர்ந்து பார்த்தவனுக்கு விஷயம் புரிபட அருகில் இருந்த சுவரில் ஓங்கி குத்தினான் தன் வலது கரத்தை.

அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க வேகமாய் அவ்விடம் விட்டு சென்றான். அதில் காயம் பட்டு போனாள் மயூ.

மனு, முகில் இருவரும் அவளிடம் நலம் விசாரித்துவிட்டு வேகமாய் ஆதியிடம் சென்றார்கள். ரேணுவும் ரோகிணியும் ஆளுக்கொரு புறம் அமர்ந்து மயூவின் கரங்களை பற்றிக்கொண்டு ஆறுதலாய் அமர்ந்து இருக்க... மயூவின் எண்ணமெல்லாம் வேகமாவும் கோவமாகவும் சென்ற தன்னவனையே நினைத்துக்கொண்டு கலங்கி போனது.

கேசவன் மருத்துவரிடம் சென்று மயூவை அழைத்து செல்லலாமா? என்று கேட்டு அதற்கு உண்டானவற்றை பார்க்க சீதாவிற்கு நெஞ்சமெல்லாம் பாரமாய் போனது.

இருக்க இருக்க இருவரிடமும் முரண்கள் அதிகமாய் எழுவதை உணர்ந்து கலங்கி போனார். இதில் எப்படி அடுத்த கட்டத்துக்கு செல்வது என்று விரக்த்தியாக எண்ணினார்.

கோவமாய் வெளியே வந்த ஆதி தன் காரில் சென்று அமர்ந்தான். அவனோடு பின்னே வந்த மனு அவனது கையை இறுக பற்ற... அதில் சுயத்துக்கு வந்தவனோ

“என்ன” என்றான் கோவமாய்.

“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது மாமா... ஆனா எனக்கு மாமான்னா அது நீங்க மட்டும் தான். வேற யாரையும் என்னால மாமாவா ஏத்துக்க முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ என்னை அவ்வளவு சீக்கிரம் மாமாவா ஆக்கணும்.” என்று சொல்ல அதுவரை இருந்த இறுக்கமெல்லாம் தளர்ந்து போனவனாய் சட்டென்று புன்னகை பூத்தான்.

“டேய்...” என்றான் அவனது தலையை கலைத்துவிட்டு..

மனுவோ கண்கள் கலங்கி “நம்ம வீடு மகிழ்ச்சியா இருந்து ரொம்ப நாள் ஆனா மாதிரி இருக்கு மாமா... இப்படி சூனியம் வச்சது போல இருக்குறது மனசை ரொம்ப வாட்டுது. நீங்க தான் இதுக்கு ஏதாவது முடிவு எடுக்கணும்.” என்று சொன்னான்.

“ஆமாண்ணா... எனக்கும் நீங்க ஒரு பக்கம், அண்ணி ஒரு பக்கம் இப்படி தனி தனியா இருக்கிறத பார்க்கும் பொழுது கஷ்டமா இருக்குண்ணா”

“அண்ணி வேதனை படுறத பார்க்க முடியல... ஏதாவது சீக்கிரம் பண்ணுங்க. எங்களால ஏதாவது செய்ய முடியும்னா நாங்களும் செய்யிறோம். எனக்கு பழைய அண்ணி அண்ணன் வேணும்.” என்றான் முகில்.

இருவரது பாசத்தையும் கண்டவன் தன் கோவத்தை மறந்து, “சீக்கிரம் எல்லாம் சரியா போகும். நீங்க கவலை படாதீங்க. போய் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போலாமான்னு கேட்டு கூட்டிட்டு வாங்க. நான் இங்கயே இருக்கேன்.” என்று கண்களை மூடி படுத்துவிட்டான்.

அதன் பின் செய்யவேண்டிய சில டெஸ்ட்டுகளை எடுத்து எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் சொன்னதன் பின்பே அவளை அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஆதி காரை ஓட்ட அனைவரும் ஒன்றாய் ஒரு காரிலே செல்ல பார்த்துக்கொண்டு இருந்த அவரவர்களுடைய உதவியாளர்களும் ஓட்டுனர்களும் வியந்து போனார்கள்.

ஏனெனில் வசதியாய் தாராளமாய் ஒவ்வொருவரும் தனி தனி காரில் வந்துவிட்டு இப்பொழுது இடமில்லாமல் நெருக்கிக்கொண்டு செல்வது என்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனாலும் அனைவரும் ஒன்றாய் செல்வது கண்டு பெருமையாய் இருந்தது.

“என்ன தான் காசு பணம் இருந்தாலும் இந்த ஒற்றுமை வேண்டும் இல்லையா...? ஆறுதலாய் தலை கோத ஒரு கை. தடுமாறி நிற்கும் வேளையில் ஒரு பற்றுதல். இதல்லவா சொந்தம்.” என்பதற்கு எடுத்துக்காட்டாய் இந்த குடும்பம் இருப்பதை கண்டு வியந்து மாய்ந்து போனார்கள்.

அடித்து பிடித்துக்கொண்டு அனைவரும் ஏறி அமர ஆதி புன்னகையுடன் வண்டியை ஓட்டினான்.

மயூவிற்கு ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்ற சீதா அவளை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்று சொல்லி ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தாள். ஆனால் ஆதி அதை மதிப்பானா என்ன...?

மயூவை கைத்தாங்கலாய் அழைத்து சென்ற ஆதி அவளின் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டு அவளையே பார்த்தான்.

அதில் சீதா கோவம் கொள்ள, மயூ அவரிடம் கண்ணை காண்பித்தாள்.

“ம்கும் அவனும் திருந்த மாட்டான். நீயும் திருந்த விட்டுடாத...” திட்டிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஆதி அவளை பார்த்தக்கொண்டே இருக்க... அவளால் தூங்க முடியாமல் தவித்து போனாள்.

“எதுக்குடி இப்படி பண்ணின... என்னை ஒரு நிமிடம் நினைச்சி பார்த்தியா...?” ஆத்திரத்துடன் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்

பேச சிரமப்பட்டுக்கொண்டே “உங்களை ஏங்க விட்டேன்ல.. அதுக்கு தண்டனை எனக்கு வேண்டாமா...?” என்று ஆளுமையுடன் கேட்டவளின் அன்பில் நெகிழ்ந்தவன்,

“அதுக்குன்னு இப்படியாடி... ஒரு நிமிடம் செத்து போயிட்டேன்டி... இனி இது மாதிரி எந்த கிறுக்கல் வேலையும் செஞ்சு வைக்காத சரியா..?” என்று கேட்டவன், அவளது நெற்றியில் முத்தமிட்டு

“ஒழுங்கா கண்ணா மூடி தூங்கு. நான் இருந்தா நீ தூங்க மாட்ட...” என்று செல்ல அவனது கையை பிடித்து இழுத்தவள்,

“உங்க நெஞ்சுல சாஞ்சுகுக்கவா...?” ஏக்கத்துடன் கேட்டவளை நெருங்கி அமர்ந்து பின் பக்கமாய் சாய்ந்து வசதியாய் அம்ர்ந்துக்கொண்டவன் தன்னவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டு தூங்க வைத்தான்.

மிக மெலிதாய் ஒரு தாலாட்டு பாட்டும் பாட வியந்து போய் பார்த்தாள்.

“ப்ச்.. தூங்குடி... ஏதோ எட்டாவது அதிசயத்தை பார்ப்பது போல பார்ப்ப...” என்று சிரித்தவன் அவளுக்கு முதுகை வருடி கொடுக்க ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள்.

காலங்கள் இப்படியே இருந்தாள் இன்னும் நலமாய் இருந்து இருக்கும். ஆனால் நான் அப்படியே இருக்க முடியாதே என்று விரைந்து நகர்ந்தது காலம்.

---

அடிபட்ட நாளுக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் முழுதாய் முடிந்து இருந்தது. மயூவும் பூரணமாய் நலமாக அவளுடைய கல்யாண வேலை மிக விரைவாய் நடந்துக்கொண்டு இருந்தது.

அதை பயத்துடன் பார்த்தாள் மயூ. ஆதியிடமிருந்து எந்த தாக்குதலும் இல்லை. அதிலே அவளது பயம் இன்னும் அதிகரித்தது.

ஆதி இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது செய்வான் என்று தான் மயூ கல்யாணத்திற்க்கே ஒத்துக்கொண்டாள். ஆனால் ஆதி எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் அவன் பாட்டுக்கு அவன் இருந்தான்.

அவன் மனதில் என்ன இருக்கிறது என்று கூட தெரியவில்லை. மயூவிற்கு பார்த்த மாப்பிள்ளையிடம் ஆதி நன்றாகவே பேசி பழக... குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே குழப்பமாய் இருந்தது.

மயூ கூட மாப்பிள்ளைக்கும் ஆதிக்கும் ஏதாவது நட்பு பழக்கம் இருக்குமோ? ஒரு வேலை நட்பு ரீதியாக கூட ஆதிக்கு உதவி செய்ய மாப்பிள்ளை வேஷம் போட்டு இருந்து, அதன் பின்பு கல்யாணத்திற்கு அன்று போக சொல்லி சொல்லி இருப்பானோ ஆதி என்று எண்ணி டிடெக்ட்டிவ் வைத்து விசாரித்து விட்டாள்.

அப்படியும் யாதொரு பழக்கமும் இருவரிடமும் இல்லை என்று அவர்கள் சொல்லிவிட மண்டை காய்ந்து போனாள் மயூ.

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 12:34 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top