Notifications
Clear all

அத்தியாயம் 43

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நீ முதல்ல கதவை திற. அப்புறம் மொத்தமும் தரேன்.” என்று டீல் பேசினான்.

அவனது பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாய் கதவை திறந்தவள், “ம்ம்ம் நீ குடு டா மாமா...” என்றபடி நிமிர்ந்து கன்னத்தை காட்டியபடி, குனிந்து இருந்த அவனது தோளை அடித்து அப்படியே சரிந்துக்கொண்டாள்.

அவளை அப்படியே கைகளில் தாங்கியவன், வேகமாய் அவளை காரை விட்டு வெளியே இழுத்து தூக்கியவன், அருகே படுக்க வைத்து உதிரம் கொட்டிக்கொண்டு இருந்த நெற்றியில் கட்டு போட்டு, முதலுதவி செய்தவன் மருத்துவமனைக்கு கூட்டி சென்றான் விரைவாய்.

அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்க பட அதன் பின்பே மயூ இயல்புக்கு திரும்பினாள். நெற்றியில் ஐந்து தையல் போட்டு பேன்டேட் போட்டவர்கள் அவளை சிறிது நேரம் மயக்கத்தில் வைத்து இருந்தார்கள்.

அதன் பின் மயக்கம் தெளிந்து விழிகளை மலர்த்தியவளுக்கு உதிரம் படிந்த சட்டையை அணிந்து இருந்த ஆதி கண்ணில் பட, அவனுக்கு என்ன ஆச்சோ என்று பயந்து போனாள். அவளது விழிகளில் தெரிந்த பதற்றத்தில் அவளது எண்ண போக்கை உண்ர்ந்துக்கொண்டவன்,

“எனக்கு ஒன்னும் இல்ல... உன்னை தூக்கிட்டு வந்ததுனால தான் இது...” என்று சட்டையை காண்பித்தவன், அதன் பின்பு தன் உதவியாளிடம் வேறு சட்டையை வரவழைக்க சொன்னான்.

மயூவால் எதுவும் பேசமுடியவில்லை. அப்பொழுது அந்த மயக்கத்தில் பேச முடிந்தவளால் தைய்யல் போட்ட பின்பு வாயை அசைக்கவே மிகவும் சிரமமாய் இருந்தது.

அதனால் அவள் “ம்ம்ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

ஏனோ ஆதியின் பார்வை அதிக கூர்மையுடன் இருந்தது. அவளால் கண் கொண்டு அவனை பார்க்க முடியவில்லை. அந்த அளவு அவளது செயலின் வீரியம் குற்ற உணர்வை தூண்டி விட்டு இருந்தது.

இவள் மருத்துவமனையில் இருந்த செய்தி காட்டு தீ போல பரவ ஊடகங்களுக்கு பெரும் அவலாய் போனது.

“கல்லூரியில் செக்கிங் போய் கொண்டு இருக்கும் போது மயூரா தேவி ஏன் காரில் இவ்வளவு வேகமாய் செல்ல வேண்டும். அதுவும் வேண்டும் என்றே மரத்தில் கொண்டு போய் இடிக்கும் அளவுக்கு அவருக்கு அப்படி என்ன பிரச்சனை. அதுவும் மாட்டிகிட்டோம் என்று தெருஞ்ச பின்னாடி. அப்போ இவர் தெரிந்தே தான் இவ்வளவு தப்பும் செய்தாரா...? டொனேசன் இல்லன்னு வெளியே சொல்லிட்டு தனியா பணம் பார்க்குறீங்களா...? இல்ல அதிக பீஸ்னு சொல்லில் மாணவர்களையும் பெற்றவர்களையும் டார்ச்சர் பண்றீங்களா?” என்று ஒரு நிருபர் கிளப்பி விட

“அதன்  பின்பு மற்றவர்களும் இது தான் காரணமா...? இப்படி அந்த ரெய்டை திசை திருப்பத்தான் இந்த விபத்து ட்ராமா வா...” என்று மேலும் பல நிருபர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்க,

அவர்கள் அனைவரையும் பார்த்து சிரித்த ஆதி கிளாங்கிடம் கண்ணை காட்ட... அவன் அவர்களின் முன் ஒரு சின்ன திரை கொண்ட டேபை காண்பித்து சில விடியோக்களை போட்டு காண்பித்தான்.

அதை பார்த்த நிருபர்கள் அசடு வழிந்தாலும் “இது நீங்க செய்த ஏற்பாடா இருக்கும்” என்று சொல்ல... அவர்களின் முன் சில அதிகாரிகளை, அதுவும் இன்ஸ்பெக்சன் வந்த அதிகாரிகளையே நிறுத்தினான் கிளாங்.

அவர்கள் புன்னகையுடன், இரு கல்லூரிகளிலும் என்ன நடந்தது என்றும், என்ன பிரச்சனை என்றும் விளக்கமாக எடுத்துரைத்து மயூரா தேவியின் மீது யாதொரு தவறும் இல்லை என்பதை உறுதியாக சொல்லிவிட்டு, ‘இதுபோல உண்மை தெரியாமல் எதுவும் அவதூறு பேசாதீர்கள்’ என்று இலவசமாக அறிவுரையும் வழங்கிவிட்டு அகன்றார்கள்.

“இதெல்லாம் சரிதான் சார். ஆனா மரத்துல போய் இடித்ததர்க்கான காரணம் என்ன...?” என்று கேட்க

“நேற்று இரவு ஒரு மீட்டிங் அட்டென் பண்ணதுனால அவங்க சரியா உறங்கல... அதோட இன்றைக்கு சில அலைச்சல் காரணமாக ஒரு செகன்ட் கண்ண மூடியதுல அவங்க கண்ட்ரோல் ஸ்லிப் ஆகிடுச்சே தவிர வேற எந்த காரணமும் இல்ல. அண்ட்...” என்று அதுவரை பொறுமையாக எல்லாவற்றிற்கும் பதில் சொன்ன ஆதி,

“இதுக்கு மேல யாராவது ஒரு வார்த்தை சொன்னீங்க...” மிச்சத்தை சொல்லாமல் அனைவரையும் கண்களிலே எச்சரித்துவிட்டு அகன்றான்.

அதில் அனைத்து நிருபர்களுக்கும் கிலி பரவ பயத்துடன் அங்கிருந்து அகன்றார்கள். பின் ஆதியின் கோவத்துக்கு ஆளானால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு தான் தெரியுமே... அதனால் சத்தமில்லாமல் இடத்தை காலி செய்தார்கள்.

நிருபர்களை சந்தித்துவிட்டு மயூவின் அருகில் வந்து அமர்ந்தான். அவனது வருகையை உணர்ந்தவள் விழிகளை திறந்து பார்த்தாள்.

அவனது முகத்தில் மிக மெலிதான மகிழ்ச்சியின் சாரல் தெரிந்தது. அது எதுக்கு என்று அறியாதவளோ அவனை கேள்வியாக பார்த்தாள்.

அதை உணர்ந்தவன் பதிலெதுவும் பேசாமல் அவளருகில் இன்னும் நெருக்கமாக அமர விழிகளில் மிக மெலிதான அச்சம் பரவியது மயூவிற்கு.

அவளது விழிகளில் படர்ந்த அச்சத்தை பார்த்துக்கொண்டு களைந்து போய் இருந்த முடிகளை அவளது காதோரம் சொருகிவிட்டு

“நீ என்கிட்டே ஒன்னு கேட்ட மயூ...” என்றான் மிக ரகசியமான குரலில்.

அவள் என்ன என்பது போல பார்த்தாள். அவனது நெருக்கம் மனதுக்குள் ஒரு வித படபடப்பை கொடுத்தது. அதுவும் அவனுடைய ரகசிய பேச்சில் அது இன்னும் அதிகமாக படபடத்து போனது.

“அது என்ன தெரியுமா...?” என்று கேட்ட படி தன் முகத்தை அவளது முகம் நோக்கி இன்னும் நெருக்கியவன், பட்டென்று அவளது இதழ்களின் மீது தன் இதழை புதைத்தான்.

தன் நாவை கொண்டு காய்ந்து போய் இருந்த அவளது இதழ்களை ஈரம் செய்தவன்,

சற்றே விலகிக்கொண்டு “நீ என்கிட்டே முத்தம் கேட்ட... அதான்” என்றவன் மீண்டும் அவளது இதழில் இதழை ஒற்றி எடுத்தான்.

“உனக்கு உடம்பு சரியில்ல... வாயை அசைக்க முடியாததுனால தான் வெறுமெனே ஒற்றி எடுத்து இருக்கேன்... இல்லன்னா...” என்று நிறுத்தி அவளை பார்த்தவன் மேற்கொண்டு அவன் என்ன செய்வான் என்பதை தனது விழிகளிலே சொல்லி முடித்தான்.

அதை கேட்டு அவளது முகம் அந்திவானமாய் சிவந்து போனது. அதை இரசித்து பார்த்தான். மேற்கொண்டு இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஆதியும் அவளை சீண்டாமல் அருகிலே அமர்ந்துக்கொண்டான்.

ஆனால் இருவருடைய மனம் மட்டும் ஆயிரம் விசயங்களை பேசிக்கொண்டு இருந்தது.

மயூவிற்கு தூக்கம் வருவது போல இருக்க... தூங்க தொடங்கினாள். ஆனால் அவளால் தூங்க முடியவில்லை. நிமிர்ந்து ஆதியை பார்த்தாள்.

அவளது பார்வையில் இருந்த பொருளை உணர்ந்தவன், எழுந்து அவள் படுத்து இருந்த படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் அவளது இழுத்து தன் நெஞ்சால் போட்டுக்கொண்டான். அதில் நிம்மதி கொண்டவள் சுகமாக நித்திரை கொண்டாள்.

அவளை வருடிவிட்டபடி ஆதியும் தூங்கி போய்விட்டான். ஒரு பொழுதும் மத்தியம் தூங்காதவன் இன்று தன்னவளின் அருகில் நிம்மதியாக தூங்கி போய்விட்டான்.

இருவரையும் எழுப்ப காதல் தேவன் யாரையும் அனுமதிக்கவில்லை. மூன்று மணி நேரம் நிம்மதியாக தூங்கி எழுந்தவர்கள் சாப்பிடலாம் என்று முடிவு பண்ணி மயூவிற்கு பழசாறும், ஆதிக்கும் உணவும் சொல்லிவிட... இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு எழுந்தார்கள்.

அதன் பின்பே வீட்டு ஆட்களை பார்க்க அனுமதித்தான் ஆதி. அதில் கோவம் கொண்ட சீதா ஆதியை முறைத்துக்கொண்டே வந்தார்.

“ரொம்பதான் பண்றான்...” முனகிக்கொண்டே தன் மருமகளை பார்த்தவர் அதுரமாய் அணைத்துக்கொண்டார். அதில் ஆதி சற்றே சேறும மயூவிற்கு புன்னகை வந்தது.

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல...” முணகிய சீதா

“என்னடா கண்ணு பார்த்து போறது இல்ல... இப்படியா போய் முட்டிக்குவ... பாரு அஞ்சு தைய்யல் போட்டு இருக்காங்க...” என்று அதை வருடிக்கொண்டே சொல்ல... கேசவனுக்கும் அதே எண்ணம் தான்.

“என்ன ஆச்சு மயூ... ஏன் இப்படி ஆனது... கார் சர்வீசுக்கு போனுச்சா இல்லையா...?” என்று கேட்க

அவள் எந்த பதிலை சொல்ல முடியும்.

தானாகவே கொண்டு போய் அல்லவா இடித்தாள். ஆதியை ஏங்க வைத்ததிற்கு அவளுக்கு அவளே பனிஷ்மென்ட் கொடுத்துக்கொண்டாள். ஆதிக்குமே அப்பொழுது தான் அது ஸ்ட்ரைக் ஆனது.

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 12:33 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top