Notifications
Clear all

அத்தியாயம் 42

 
Admin
(@ramya-devi)
Member Admin

“அது நீங்க போன் பண்ணுணீங்களான்னு இவ்வளவு நேரம் கேட்டுக்கிட்டு இருந்தாரு.” என்று தயக்கமாய் சொல்ல மயூ சீட்டின் பின் புறம் அப்படியே சரிந்தாள்.

“என்ன கிளாங் சொல்றீங்க...” பதை பதைத்து போனாள்.

“ஆமா மேடம்... ‘நான் நல்ல படியா வந்துட்டனான்னு கேட்பா.. அப்படி கேட்டா நான் வரலன்னு சொல்லு அவக்கிட்ட...’ அப்படின்னு சொன்னாரு மேடம். ஆனா நீங்க போனே பண்ணலையா...? அதுல சார் ரொம்ப அப்செட் ஆயிட்டாரு.”

“இப்போ அவரு எங்க இருக்காரு க்ளாங்...” உயிரை கையில் பிடித்துக்கொண்டு கேட்டாள் மயூ.

“உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னாரு மேடம்...” தயங்கி தயங்கி சொன்னான்.

அதில் அடிபட்டு போனவளின் கண்களின் ஓரம் ஒரு துளி கண்ணீர் உருண்டது.

“அவ்வளவு கோவமாய் போனாலும், ஆதி தன்னை தேடி இருக்கிறான்.” என்று எண்ணியவள் தான் தான் அவருடைய காதலுக்கு சரியான பொருத்தமாய் இல்லாமல் போய்விட்டோம் என்று எண்ணியவள் கலங்கி போனாள்.

அவனது தேடலை கண்டு அவனது காதலின் வீரியத்தின் சத்தியை முழுமையாக தெரிந்துக்கொண்டவள் நொந்து போனாள். இனி எப்படி அவரின் முகத்தை காண்பேன் என்று கலங்கி போனாள்.

இப்படி காதல் ஒரு பக்கம் மட்டும் அதிக வீரியத்துடன் இருந்தால் அதன் வலி எவ்வளவு இருக்கும் என்பதை இப்பொழுது புரிந்துக்கொண்டாள் மயூ.

அவனது வேதனையை கொண்டே அவள் அவனது வலியை உணர்ந்துக்கொண்டாள். அந்த வலி அவளை வேரோடு வெட்டி சாய்த்தது போல ஊடுருவி... அடி வரை தாக்கியது.

அவன் வேதனை படுகிறான் என்று அறிந்து இவளது உள்ளமும் வேதனை கொண்டு வாடியது.

இவள் கல்லூரி சென்று பார்த்த பொழுது அங்கு எல்லாமே சரியாகி இருக்க... தலைமை ஆசிரியரை பார்த்தாள் கேள்வியாய்.

“ஆதி சார் வந்தாங்க மேடம்...”

அந்த ஒற்றை வரியிலே அவளுக்கு எல்லாமே புரிந்து போனது. அவனுடைய காதல் அவளை குற்றவாளி ஆக்கியதோ இல்லையோ ஆனால் குன்ற வைத்தது மட்டும் உண்மை.

தனக்கு முன் வந்து தனக்கு எந்த சிரமும் இல்லாமல் அனைத்தையும் திறம்பட செய்துவிட்டு சத்தமில்லாமல் இருப்பவனிடம் இப்பொழுதே மண்டியிட வேண்டும் போல இதயம் கதறியது.

அடக்கப்பட்ட விம்மல் வெடித்து விடுமோ என்று பயந்தவள், பெருமூச்சு ஒன்றை விட்டு ஆசுவாசப்பட முனைந்தாள். ஆனால் அதற்க்கு இடம் கொடாமல் அவளது இதய பந்து தொண்டை குழிக்குள் ஏறி இறங்கி அவளை இன்னும் சிரமப்பட வைத்தது.

அவனது அதிக காதலை தாங்க முடியாமல் திண்டாடி போனாள். மூச்சு விடுவதே பெரும் சிரமமாய் இருந்தது அவளுக்கு.

சட்டென்று வெட்ட வெளியில் வந்தவளுக்கு ஒரு துளி நீர் அவளது கன்னத்தை நனைத்தது. அதன் பின் தொடர் சரமாய் அவளது கண்ணீர் இறங்க, அதை துடைக்க கூட மனமில்லாமல் வேகமாய் தன் காரை கிளப்பியவள் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரு மரத்தின் மீது முட்டி நின்றாள்.

அடுத்த நொடி அவளது போன் அடித்தது. நெற்றியில் வழிந்த குருதியுடனும், இதழில் உறைந்த புன்னகையுடனும் அந்த போனை எடுத்து பேசினாள். இல்லை முத்தமிட்டாள்.

“இச்... இச்... இச்...” என்ற முத்த சத்தம் கேட்க.. அந்த புறம் இருந்து சீரலான ஒரு பெருமூச்சு விடும் சத்தம் கேட்டது.

“ஆதி... மை லவ்...” என்றபடி கண்களை மூடிக்கொண்டாள்.

“மயூ...” ஆதியின் குரல் தன்மையாய் ஒலித்தது அவளது காதில்.

“பேபி... ஸ்டில் ஐ லவ் யூ... ஐ நீட் யூ... உன்னை என்னால விட்டு குடுக்க முடியாது. ஆனா நான் விட்டு குடுத்தே ஆகணும். நான் சொல்றது புரியுதா...? தேவா... என்னை கல்யாணம் பண்ணி உன்னோட நெஞ்சுக்குள்ளயே வச்சுக்குரியா...? எனக்கு நீ வேணும். நீ மட்டும் தான் வேணும். உன்னை யார்கிட்டயும் குடுக்க மாட்டேன். உன்னை என் நெஞ்சுக்குள்ள பொத்தி வச்சுக்குவேன்.” என்று அவள் பாட்டுக்கு புலம்ப... கேட்டுக்கொண்டு இருந்த ஆதிக்கு பத்திக்கொண்டு வந்தது.

“இதை தாண்டி நான் முன்னே புடுச்சி சொல்லிக்கிட்டு இருக்கேன்...” கத்தியவன்...

“தங்கம் நீ சொல்றது எல்லாம் நான் கேக்குறேன்... நான் சொல்றத நீ கேக்குறியா...?” என்றான் தன்மையாய்.

அவனிடமிருந்து பொறுமையான வார்த்தையை கேட்ட மயூ, தன் கண்களை பெரிதாக விரித்து, “மாம்ஸ் நீ மலையில இருக்கும் போது பேசுனியே அப்படியே பேசுற... இனிமேலும் அப்படியே பேசுறியா...? உன் டெரர் வாய்ஸ் எனக்கு பயத்தை குடுக்குது தெரியுமா...?” என்று தண்ணி அடித்தவள் போல பேச ஆதிக்கு பக்கென்று இருந்தது.

“மயூ ஆல் ரைட்...?” சந்தேகமாய் கேட்டான்.

“ம்ம்ம் யா டா.... ஐ ஆம் ஆல் ரைட். யூ நோ...” என்றவள் தொடர்ந்து “மாம்ஸ்... மாம்ஸ்...” என்று ஆதியை கூப்பாடு போட்டாள்.

“என்னடி...” என்றபடியே “மயூ கதவை லேசா திறடா...” என்றான் பதட்டமான குரலில்.

“ஹே மாமா நீ பக்கத்துலையா இருக்க...?” என்று கீழே குனிந்து தேடினாள். அவளது செயலை பார்த்துக்கொண்டு வெளியே இருந்த ஆதிக்கோ நேரம் ஆக ஆக பயமாய் போனது.

மயூவின் கார் கல்லூரியை விட்டு வெளியே வர... மறைவாய் காரை நிறுத்தி இருந்த ஆதி அவளது செயலை தன் தொலை பேசி வழியாக பார்த்துக்கொண்டு இருந்தவன், கடைசியாய் அவள் கண்ணீர் விட்டு கதறும் காட்சியையும் கண்ட பின் அவனால் மறைந்து இருக்க முடியவில்லை.

அவள் வளாகத்தை விட்டு வெளியே வரும் முன் அவளது வண்டி முன்நோக்கி சீறி பாய... ஆதி அவளை பின்னிருந்து தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான்.

அதனாலே மயூவின் விபத்தை தடுக்க முடியாமல் போனது. ஆனால் விபத்து நடந்த அடுத்த நொடி தன் காரை நிறுத்திவிட்டு வேகமாய் அவளது காரின் அருகே வந்து கதவை திறந்து பார்த்தான். திறக்கவே முடியவில்லை. வேறு எதாவது வழியில் முயல அதுவும் தோல்வியில் முடிந்தது.

கண்ணாடியை உடைக்க வேண்டும் என்றால் கண்ணாடி சில்கள் எல்லாம் அவளின் மீது விழும் என்பதால் அவன் அதை செய்யவில்லை. அதனாலே மயூவிற்கு அவன் போன் செய்தான்.

போன் வந்த உடன் யாரு என்ன என்பதெல்லாம் அவள் பார்க்காமல் எடுத்த உடன் முத்த மழை பொழிந்தவளை கண்டு அவனுக்கு கண்ணீன் ஓரம் நீர் சுரந்தது.

“எப்படிடி யாருன்னு தெரியாமலே...” தடுமாறினான் அவளது தூய்மையான அன்பில்.

“எனக்கு ஒண்ணுன்னா நீ தான் மாமா முன்னாடி நிர்ப்ப. இப்பவும் அப்படி தான்.” என்றவள்,

“மாமா நீயும் எனக்கு ஒன்னு குடேன்...” என்று கன்னத்தை காட்டியபடி சிறு பிள்ளையாய் கெஞ்சியவளை கண்டு புன்னகை எழுந்தது.

“நீ முதல்ல கதவை திற. அப்புறம் மொத்தமும் தரேன்.” என்று டீல் பேசினான்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 12:32 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top