Notifications
Clear all

அத்தியாயம் 40

 
Admin
(@ramya-devi)
Member Admin

“உனக்கு வைக்கிறேன் முத்தல்ல” என்று கருவியவன் தன் போனை எடுத்து பார்த்தான். நீண்ட நேரம் அவன் போனையே பார்த்துக்கொண்டு இருக்க... சீதாவின் மனதில் அலாரம் அடிக்க சற்றே எட்டி பார்த்தார் அவனது போனை.

அவரை ஏமாற்றாமல் அங்கே அவனும் மயூவும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதி.

அதை பார்த்தவருக்கு நெஞ்சை அடைக்காத குறைதான். “அடப்பாவி, வந்தவங்கல்ல யாராவது ஒருத்தருடைய கண்ணுல இந்த போட்டா பட்டாலும் போதுமே. மொத்த சோழியும் முடுஞ்சுடுமே...” தவித்தவர், தோட்டத்தை எட்டி பார்த்தார்.

அங்கே மாப்பிள்ளை பையன் பேசிக்கொண்டு இருக்க... மயுவோ ஒன்றும் சொல்லாமல் தூரத்தில் தெரிந்த ஆதியின் காரையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளது கவனம் தன்னிடம் இல்லை என்று தெரிந்தாலும் அவன் விடாமல் பேசிக்கொண்டே இருக்க... பொறுமை இழந்த மயூ

“உள்ள போகலாம்...” என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திருக்க கூட இல்லாமல் உடனடியாத உள்ளே நுழைந்துவிட்டாள்.

அவளது வேகத்தை பார்த்த ஆதிக்கு இன்னும் சிரிப்பு வர, அதை அடக்கிக்கொண்டு முகத்தை கடினமாக வைத்துக்கொண்டான்.

“அதுக்குள்ள பேசி முடிச்சுட்டீங்களா...?”  என்று கடிகாரத்தை பார்த்தான் வியந்து போய்.

“ம்ம்ம் பரவால அஞ்சு நிமிசத்துல வாழ்க்கை துணையை தேர்ந்து எடுத்துடீங்க ரெண்டு பெரும்.” என்று ஏளனாமாக சொல்வது போல குத்தி காட்டினான் ஆதி.

அதை உணராமல் “சார் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தனியா பேசுறது...” என்று அவன் மிகவும் பம்ம... அதை அளவிட்ட படி ஆதி லேசாய் நகைத்து வைத்தான்.

“அதுவும் சரி தான். கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பேசி முடுச்சுட்டா அப்புறம் கல்யாணத்துக்கு பின்னாடி என்னத்தை பேசுவது...” என்று இளநகை பூத்தவன்,

அனைவரையும் சாப்பிட அழைத்தான்.

அவனது உபசரிப்பில் சீதாவிற்கு உறுதியாக தெரிந்துவிட்டது இன்றைக்கு சிறப்பான சம்பவங்கள் இருக்க போகிறது என்று...

அதுவும் மயூராவுக்கும் தனக்கும் அதிகமாகவே இருக்க போகிறது என்று எண்ணி பயந்து போனார். விருந்தினர்களுக்கு என்று தனியாக உள்ள உணவு அறையிலிருந்த மேசையில் அவர்கள் உண்ண... வீட்டு ஆட்களுக்கு என்று தனியாக இருந்த உணவு உண்ணும் அறையில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்து இருந்தான் ஆதி.

அவனை நெருங்கவே பயமாய் இருந்தது மயூராவிற்கு. சீதா வந்தவர்களை கவனிக்க வேண்டும் என்று தந்திரமாக நழுவி விட, அரக்கனின் கொடிய வலையில் தனியாக வந்து விழுந்தாள் மயூ...

கேசவன் உடன் இருந்ததால் எதுவும் சொல்லவில்லை ஆதி. ஆனால் உள்ளுக்குள் அவனுக்கு எரிமலை அதி பயங்கரமாக சீறிக்கொண்டு இருந்தது.

ரேணு ரோகிணி, மனு முகிலன் நால்வரும் வெளியே சாப்பிட்டுக்கொள்வதாக சொல்லி வெளியே கிளம்பிவிட, கேசவனுக்கும், ஆதிக்கும் கைகள் நடுங்க பயத்துடன் பரிமாறினாள் மயூ.

அவளது நடுக்கத்தை கண்ட கேசவன்

“என்ன ஆச்சு பாப்பா... ஏன் இப்படி நேவேர்சா இருக்க... எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடுச்சு இருக்கு. மாப்பிள்ளைக்கும் உன்னை ரொம்ப பிடுச்சி இருக்கு போல. அவரு பேசுறத வச்சே கவனிச்சேன். அதனால நீ எதுக்கும் கவலை படாத... இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். மாமா எதுக்கு இருக்கேன். உனக்கு பிடுச்சதை செஞ்சு குடுக்கத்தானே...?” என்று அவளது பயம் வேறு மாதிரியாக எண்ணிக்கொண்டு சொல்ல... மயூவிற்கு இன்னும் பயமாய் போனது.

கேசவன் பேச பேச ஆதி தேவன் தன் கைகளில் இருந்த போக் ஸ்பூனை தட்டில் குத்தி குத்தி தன் கோவத்தை மயூவிற்கு புரியவைத்துக்கொண்டு இருந்தான். அதிலே மயூவிற்கு முதுகு தண்டில் சில்லென்ற பயம் பரவி படர்ந்தது உடல் முழுவதும்.

பயமாய் இருந்தாலும் அவனது முகத்தை பெரும் தயக்கத்துடன் அவ்வப்பொழுது நிமிர்ந்து பார்த்தாள். அவனோ தலையை நிமிரவே இல்லை.

கேசவன் உண்டுவிட்டு எழ... அப்பொழுது தான் ஆதி சாப்பிடாமல் அப்படியே வைத்திருப்பதை பார்த்தார்.

“ஏன் ஆதி பிடிக்கலையா...?”

“ம்ம்ம் ஆமாப்பா சுத்தமா பிடிக்கல...” என்று மயூவை பார்த்துக்கொண்டே சொன்னான்.

“அப்பன்னா வேற எதாவது போட்டு சாப்பிட வேண்டியது தானே...? ஏன் மயூ ஆதிக்கு பிடிக்காதத வைக்கிற... பிடிக்கிறதா வை...” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல...

மயூரா தேவிக்கு அந்த தனிமை பெரும் அச்சத்தை கொடுத்தது. அதோடு புலியின் சீற்றத்தோடு, வேங்கையின் பாய்ச்சலோடு பார்த்துக்கொண்டு இருந்தவனை காண காண உடலெல்லாம் நடு நடுங்கி போனது. ஆனாலும் தயங்கி தயங்கி

“வேற உணவு வைக்கவாங்க...?” கேட்ட நொடி,

கண்கள் ஆத்திரத்தில் சிவக்க, உக்கிரமாய் இருந்த ஆதி தன் எதிரில் இருந்த தட்டை எடுத்து அறையின் சுவற்றில் வீசி எறிந்தான் கடும் சீற்றத்துடன்.

அதில் வெலவெலத்து போனவள் கண்களில் நீர் நிறைய தலை குனிந்து நின்றாள்.

ஆதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வேகமாய் விலகி செல்ல அவனை விட வேகமாய் அவனின் முன்பு வந்து வழியை மறைத்தாள்.

நிமிர்ந்து அவளை எரிப்பது போல பார்த்தவன் “அவுட்” ஒற்றை விரல் அசைத்து வெளியே போ என்று சொன்னான்.

ஆனால் அவளோ அதை செய்யாமல் “ஆதி கொஞ்சம் நான் பேசுறத கேளுங்களேன். நான் ஏன் இப்படி நடந்துக்கிட்டேன்னு உங்களுக்கே புரியும்...” என்று சொல்ல வந்தவளின் குரல் வலையை பிடித்து அப்படியே சுவற்றோடு சேர்த்து தூக்கியவன்,

அவளை கூர்ந்து பார்த்தவன் “நீ எதை நினைச்சு இதை செஞ்சியோ... ஆனா இதுக்கு உண்டான பலனை நீ அனுபவிப்ப...” என்றவன் அவளை அப்படியே தரையில் வீசிவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்.

அவனது உருத்ர தாண்டவத்தில் தரையில் வீழ்ந்து கிடந்தவள் தன் கால்களை கட்டிக்கொண்டு கதறினாள். அவனிடம் மறுபடியும் வெளிப்படும் முரட்டு தனத்தில் தோய்ந்து போனவள் ஆற்றுவார் தேற்றுவாரின்றி கண்ணீரில் கரைந்து போனாள்.

சீதாவின் காதில் ஆதி போட்ட சத்தம் மிக மெலிதாக விழுந்தது. ஆனாலும் வெளியே வரவில்லை. எப்படியும் மயூவிடம் தன் செயலையும் கோவத்தையும் காட்டி இருப்பான் என்று எண்ணியவரின் காதில் அவனது வண்டி வெளியே செல்லும் சத்தமும் கேட்டது. அடுத்த நொடி வந்தவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வேகமாய் மயூவிடம் விரைந்தார்.

வந்தவர் அவளின் கதறலை கேட்டு வேதனை கொண்டார். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல்

“இப்போ என்ன ஆச்சுன்னு அழுதுகிட்டு இருக்க... முதல்ல எழுந்திரி... இன்னைக்கு மும்பை ப்ராஞ் காலேஜ் எல்லாத்துலையும் இன்ஸ்பெக்சன் இருக்குன்னு உன்னோட பியே சொல்ல சொன்னா... போ அதை போய் என்னன்னு பாரு. ஏதோ பீஸ் அதிகமா வாங்குறதா புகார் போய் இருக்காம்...” என்று அவளை திசை திருப்பி விட அப்பொழுது தான் அவளுக்கு அது நினைவுக்கு வந்தது.

அதன் பின் ஆதியின் உதாசீனம் பின்னுக்கு போக வேகமாய் கல்லூரிக்கு விரைந்து சென்றாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 12:29 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top