Notifications
Clear all

அத்தியாயம் 41

 
Admin
(@ramya-devi)
Member Admin

“இப்போ என்ன ஆச்சுன்னு அழுதுகிட்டு இருக்க... முதல்ல எழுந்திரி... இன்னைக்கு மும்பை ப்ராஞ் காலேஜ் எல்லாத்துலையும் இன்ஸ்பெக்சன் இருக்குன்னு உன்னோட பியே சொல்ல சொன்னா... போ அதை போய் என்னன்னு பாரு. ஏதோ பீஸ் அதிகமா வாங்குறதா புகார் போய் இருக்காம்...” என்று அவளை திசை திருப்பி விட அப்பொழுது தான் அவளுக்கு அது நினைவுக்கு வந்தது.

அதன் பின் ஆதியின் உதாசீனம் பின்னுக்கு போக வேகமாய் கல்லூரிக்கு விரைந்து சென்றாள்.

ஆனால் அங்கே அவள் வருவதற்கு முன்பே இன்ஸ்பெக்சன் ஆரம்பித்து விட்டது. மும்பையில் மட்டும் அவளுக்கு முப்பது காலேஜ் இருந்தது. அந்த முப்பது கல்லூரியிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தேறியது.

எல்லாமே சரியாக முறையாக கடைபிடிக்கப்பட்டு இருந்ததால் மயூரா தேவி எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. இயல்பாகவே இருந்தாள். இது எல்லாமே அந்த செய்தி வரும் வரை மட்டுமே.

எல்லா கல்லூரியிலும் ஒழுங்காக தான் இன்ஸ்பெக்சன் நடந்துக்கொண்டு இருந்தது. நகரின் முக்கிய இடத்தில் இருந்த ஒரு கல்லூரியில் மட்டும் மாணவர்கள் திடிரென்று ஸ்ட்ரைக்கில் இறங்கிவிட்டனர்.

எதுக்கு என்னன்னே தெரியாமல் திகைத்த பேராசிரியர்கள் கரஸ்க்கு இன்பாம் பண்ண வேகமாய் அங்கே விரைந்து வந்தாள். ஆனால் அதற்குள்ளாகவே அங்கு அடி தடி ஆரம்பமாகி இருந்தது.

இன்ஸ்பெக்சன் வந்தவர்களுக்கு எல்லா மாணவர்களும் திடிரென்று ஸ்ட்ரைக்கில் இறங்க அவர்களது வேலை சற்று இழுப்பரித்துக்கொண்டு போனது.

மயூரா வந்து மாணவர்களை தடுக்க பார்க்க, அவர்கள் எதற்கும் அசையாமல் அப்படியே இருந்தார்கள்.

சட்டென்று மைக் ஒன்றை ஏற்படுத்தி மாணவர்கள் மத்தியில் பேச ஆரம்பித்தாள்.

“எதுக்கு இப்படி சண்டை போடுறீங்க.. முதல்ல உங்க பிரச்சனை என்னன்னு சொல்லுங்க... அதுக்கு பிறகு ஸ்ட்ரைக் பண்ணலாம்...” என்று கேட்க...

அவர்களோ எதுவும் சொல்லாமல் மேலும் மேலும் தங்களுக்கு அடித்துக்கொண்டு இன்னும் இன்னும் கலவரத்தை தூண்டிவிட அவளுக்கு என்ன செய்வது என்றே தெரிவில்லை.

அதோடு இன்னொரு கல்லூரியில் கட்டணம் வசூல் செய்த பொழுது கொடுக்கப்படும் ரசீது புத்தகம் ஒன்று கிடைத்தது இருப்பதாகவும் அதில் பீஸ் அதிகமாக வாங்கி இருப்பது போல ரசீதுக்குரிய காப்பி இருப்பதாகவும் தகவல் வர திகைத்து தான் போனாள்.

அதிக பீஸ் அவள் என்றைக்கு வாங்கியதே கிடையாது. அப்படி இருக்கையில் இதெப்படி சாத்தியம் என்று கண்களை மூடி யோசித்தவள், ‘இது யாரோ செய்யும் சதி திட்டம்’ என்பது நன்கு புரிய, மயூரா தேவி தன்னுடைய அவதாரத்தை எடுத்தாள்.

அந்த கல்லூரிக்கு போன் செய்து செக் பண்ணவந்தவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க சொன்னவள், யாரும் எந்த எதிர்ப்பும் செய்ய வேண்டாம் என்பதையும், எதையும் மறுக்க வேண்டாம் என்பதையும் சொன்னாள். குறிப்பாக அவர்கள் கேட்கும் கேள்விக்கு கோவப்படாமல் பதிலை சொல்ல சொன்னாள்.

இங்கு திரும்பி மைதானத்தை பார்த்தவள் கல்லூரியில் இருக்கும் முக்கால் வாசி மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள். மற்றவர்கள் எதற்கு வம்பு என்பது போல ஒதுங்கி இருந்தார்கள்.

சண்டையைக் கூர்ந்து பார்த்தவள் அதில் பாதி பேர் மாணவர்கள் இல்லை என்பது பார்த்தவுடனே புரிந்து போனது. உடனே போனை கையில் எடுத்தவள் தன் பவுன்சர்ஸ்க்கு கால் பண்ணி அதிக பேரை வர செய்தாள்.

அதற்க்கு அடுத்த நொடி மைக்கை கையில் எடுத்தவள்

“நீங்க இப்படியே அடிச்சு பிடிச்சுக்கிட்டு இருந்தா இன்னையோட நான் எடுக்கும் அட்டிட்டியுட் கிளாஸ் இனி யாருக்கும் எடுக்கவே மாட்டேன்... நான் கிளாஸ் எடுக்கணுமா..? எடுக்க வேண்டாமான்னு நீங்க தான் முடிவெடுக்கணும்.”

“நான் கிளாஸ் எடுக்கனும்னு நினைக்கிறவங்க மட்டும் அவங்கவங்க கிளாஸ் ல போய் இருங்க. நான் மத்தியம் உங்களை வந்து சந்திக்கிறேன். நான் வகுப்பு எடுக்க கூடாதுன்னு நினைக்கிறவங்க இந்த மைதானத்துலயே இருங்க... உங்க கருத்துக்கு நான் மதிப்பு தரேன்...” என்று சொல்ல, அவளது பேச்சை கேட்ட மாணவர்கள்

“என்ன மேடம் இப்படி சொல்றாங்க... அவங்க பாடம் படிக்கிரமோ இல்லையோ அவங்களை பார்க்கவும், அவங்க  பேச்சை கேக்கவுமே கட்டடிக்காம க்ளாசை அட்டென் பண்ணுவோம். அதுக்கே ஆபத்து வருதா...? நோ நெவெர்... அடிதடியாவது ஒண்ணாவது... தூக்கி பிடிங்கடா வெள்ளை கொடியை...” என்று மாணவர்கள் விட்டார்கள் ஜூட்.

கல்லூரி மாணவர்கள் முற்றிலும் களைந்து வகுப்பறை போய்விட, மற்றையவர்கள் மட்டும் தில்லாக கிரவுண்டில் இருப்பதை கண்டு சிரித்த மயூ தன் மெய் காப்பாளர்களுக்கு கண்ணை காட்டினாள்.

அவர்கள் விசாரித்த விசாரிப்பில் அவர்கள் மாணவர்கள் இல்லை என்பதும், ஒரு கட்சியை சார்ந்த அடியாட்கள் என்பதும் வெளிச்சமானது.

அதை வந்த செக்கிங் ஆபிசர்ஸ் அனைவருக்கும் புரியவைத்து சுமுகமாக்கினாள். அவர்களும் உண்மையை உணர்ந்து, மயூவின் புத்திசாலி தனத்தை பாராட்டிவிட்டு தங்களது வேலைகளை தொடர்ந்தார்கள்.

இதுவும் கல்லூரிக்கு ஒரு கெட்ட பெயராய் வந்துவிடுமோ என்று அஞ்சிய தலைமை ஆசிரியர் மயூ அதை ஒண்ணுமே இல்லாமல் ஆக்கியதை கண்டு நிம்மதி பிறந்தது.

அதன் பின் மாணவர்களிடம் சிறிது நேரம் பேசினாள்.

“என்னோட பேச்சை மதித்து வகுப்புக்குள் வந்த உங்க அத்தனை பேருக்கும் என்னோட நன்றிகள்... இந்த ப்ராப்ளம் உங்களால தான் சால்வ் ஆனது. உங்க ஒத்துழைப்புக்கு எனது அன்புகள் மாணவர்களே... கண்டிப்பா என்னோட வகுப்பை நிருத்த மாட்டேன். தொடர்ந்து எடுத்துக்கொண்டே தான் இருப்பேன்.” என்று மகிழ்வுடன் பேசிவிட்டு அந்த கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.

அவளுடைய பியே தான் மிக டென்சனாய் இருந்தாள்.

“எதுக்கு இவ்வளவு டென்சன்... கவலை விடு அதையும் சால்வ் பண்ணிடலாம்.” என்று சிரித்தாள்.

“உங்களால எப்படி மேடம் இப்படி நிதானமா இருக்க முடியுது. நிஜமா அந்த கலவரத்தை எப்படி அடக்குவதுன்னு தெரியாம நாங்க எல்லாம் திண்டாடிக்கொண்டு இருந்தோம். ஆனா நீங்க வந்த அடுத்தட நிமிசமே அடக்கிட்டீங்க... வெரி கிரேட் மேடம். ஆனா  இந்த பிரச்சனையை நினைச்சா தான்...” என்று சொல்ல

“விடு பார்த்துக்கலாம்.” என்றவளின் சிந்தனை காலையில் கோவமாய் சென்ற ஆதியிடமே இருந்தது. ஓரளவு பரபரப்பு குறைந்தவுடன் மனம் தன் மன்னவனை நாடியது.

எவ்வளவு கோவத்துடன் போனான். அதை பற்றி விசாரிக்கவே இல்லையே...? என்று தவித்தவள் வேகமாய் கிளாங்கிற்கு போன் பண்ணி கேட்டாள்.

“கிளாங், ஆதி சார் வந்துட்டாங்களா...? எப்போ வந்தாங்க...”

“மேடம் சார் வந்துட்டாங்க. ஆனா...” என்று பெரிதும் தடுமாறினான்.

“ஆனா என்ன... கிளாங்.”

“அது நீங்க போன் பண்ணுணீங்களான்னு இவ்வளவு நேரம் கேட்டுக்கிட்டு இருந்தாரு.” என்று தயக்கமாய் சொல்ல மயூ சீட்டின் பின் புறம் அப்படியே சரிந்தாள்.

“என்ன கிளாங் சொல்றீங்க...” பதை பதைத்து போனாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 5, 2026 12:30 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top