“சார்” என்று அதிர்ந்து போய் இருக்கையில் இருந்து எழுந்து நின்று விட்டார் அவர்.
“என்ன ஆச்சு டாக்டர்? ஸ்பெர்ம் சேபா தானே இருக்கு..” கண்கள் இடுங்க யோசனையாக கேட்டவனை கண்டு நெஞ்சில் நீர் வற்றிப் போனது அவருக்கு.
“சார் அது வந்து” என்று அவர் பேச்சு வராமல் தடுமாறிப் போனார்.
அவரின் தடுமாற்றத்தை கூர்ந்து கவனித்த தீரனுக்கு அடக்கமாட்டாமல் கோவம் வந்து விட்டது.
“மௌனமா இருந்தா எப்படி டாக்டர்.. என்ன ஆச்சு? என் ஸ்பெர்மை பத்தி கேட்டா எதுக்காக இப்படி வியர்த்து வடியிறீங்க? டெல் தன் ரீசன்” அடக்கப்பட்ட கோவத்துடன் கேட்டவனை கண்டு நடுங்கிப் போன மருத்துவர்,
“சார் ப்ளீஸ்.. தயவு செஞ்சு கோவப்படாதீங்க..” சொன்னவருக்கு மேற்கொண்டு சொல்ல வார்த்தையே வரவில்லை.
ஆனால் குத்திட்டீயாய் தன்னை துளைத்து பார்வையால் குத்திக் கொண்டு இருக்கும் தீரனிடம் எல்லாவற்றையும் சொல்லி தானே ஆகவேண்டும். எனவே நீண்ட மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவர், ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.
“நீங்க கோமாவுல இருந்ததுனால உங்க அம்மா உங்க வாரிசை பார்க்க ஆசை பட்டாங்க சார். அதுவும் இனி நீங்க பிழைக்க மாட்டீங்கன்னு நூறு சதவீதம் உறுதியா தெரிஞ்சு பிறகே உங்களுக்கு இறுதி கட்டம் நெருங்கவே உங்க குடும்பத்தார்கள் இந்த முடிவை எடுத்தார்கள்”
“அதாவது நீங்க சேகரித்து வச்சு இருந்த ஸ்பெர்மை வச்சு ஐவிஎப் மூலமா பேபி உருவாக்க எல்லா ஏற்படும் செஞ்சோம்.. அதுக்காக ஒரு பெண்ணை உங்க தம்பி கூட்டிட்டு வந்தாங்க.. அவங்களுக்கு எல்லா சிகிச்சையும் குடுத்து தியேட்டர் கூட்டிட்டு போயிட்டோம். ஆனா கடைசி நேரத்துல உங்களை காப்பாற்ற முடியும்னு வெளிநாட்டு டாக்டர் நம்ம ஹாஸ்பிட்டலுக்கு கருத்தரங்குக்கு வந்து இருந்தவர் சொல்ல உடனே உங்களை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போனாங்க சார்.. அதோட உங்க தம்பியும் ஐவிஎப் பிராஸசை நிறுத்த சொல்லி விட்டார்” என்றார் மருத்துவர்.
எல்லாவற்றையும் கேட்ட தீரன், மருத்துவர் சொன்னதை முழுமையாக கேட்டான். அதோடு அவரின் முகத்தில் இருக்கும் தவிப்பு இன்னும் குறையாமல் இருப்பதை பார்த்து இன்னும் என்னவோ இருக்கிறது என்று புரிந்துக் கொண்டவனுக்கு ஏனோ நெஞ்சின் ஓரம் வலி எடுத்தது.
அவன் விரும்பத்தகாத ஏதோ ஒரு விசயம் மேலும் நடந்து இருக்கிறது என்று புரிந்துக் கொண்டான். தன் தம்பியின் மீதும் தாயின் மீதும் அடக்க முடியாமல் கோவம் வந்தது.
பொறுமை முற்றிலும் பறந்து போய், “இன்னும் என்ன நடந்துச்சு? முழுசா சொல்லி முடிங்க” பற்களை கடித்துக் சொன்னான்.
அவனின் கோவத்தை பார்த்த மருத்துவருக்கு வாய் தந்தி அடித்தது. இதயம் வெளியே வந்து குதித்து விடும் போல இருந்தது. “சார்...” என்று அவர் தயங்க,
“ஜஸ்ட் சபீக் அவுட்” மேசையை தட்டி அவன் கத்த, அதில் பயந்துப் போன மருத்துவர்,
கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தார். சொல்லி முடித்த பிறகு தீரனை பார்க்க அவனோ நெருப்பில் நிற்பது போல தகதகவென்று காய்ந்து நின்றான்.
“நான் ப்ராஸசை கம்ப்ளீட்டா முடிச்ச பிறகு தான் உங்க தம்பி ஸ்டாப் பண்ண சொன்னாங்க சார். அதற்குள் எல்லாமே கை மீறி போயிடுச்சு. அந்த பெண் யூட்ரேஸ் குள்ள உங்க ஸ்பெர்ம் போய் செட்டில் ஆகிடுச்சு சார்” என்று அவர் பயந்துக் கொண்டு சொல்ல,
அதை கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை தீரன். கட்டுக்கடங்காத கோவம் முகிழ்த்தது.
“அந்த பெண் யாருன்னு தெரியுமா?” கேட்டான்.
“இல்ல சார் எதுவும் தெரியாது. உங்க தம்பி தான் அழைச்சுக்கிட்டு வந்தாரு.. எனக்கு எதுவும் தெரியாது..” என்று அவர் சொல்ல, வந்த ஆத்திரத்தை அவனால் கொஞ்சமும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
“கேட் அவுட்” என்று கர்ஜித்தான். அவர் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார்.
இருக்கையில் தளர்ந்துப் போய் அமர்ந்த தீரனுக்கோ ஆத்திரம் ஆத்திரம். கட்டுக்கடங்காமல் அப்படி ஒரு ஆத்திரம் வந்தது. எனக்கு தெரியாமலே என் பிள்ளையை உருவாக்க இவங்க எல்லாம் யாரு.. அதுவும் இப்படியாப்பாட்ட சிக்கலில் இதெல்லாம் தேவையா?
இப்போ எங்கன்னு அந்த பெண்ணை தேடி கண்டு பிடிக்க, அவளுக்கு குழந்தை உருவானதா இல்லை உருவாகலையா? சப்போஸ் அப்படி உருவாகி இருந்தா அந்த குழந்தையை அவள் என்ன செய்து இருப்பாள்.
மூன்றாவது மாதத்திலே கலைத்து விட்டு இருப்பாளா? இல்லை குழந்தையை முழுமையாக பெற்று எங்காவது ஆசிரமத்தில், அனாதை விடுதியிலோ இல்லை குப்பையிலோ வீசி இருப்பாளா என்று தீரனின் மனது கிடந்து தவியாய் தவித்துப் போனது.
அனைத்துக்கும் காரணமான தம்பியை தூக்கிப் போட்டு நாலு மிதி விடத் தோன்றியது.
வெளிநாட்டில் இருக்கும் அவனை உடனடியாக வரச்செய்து அவனின் கன்னத்திலே ஓங்கி ஒரு அரை விட்டான் தீத்திரள் தீரன்.
“அண்ணா” என்று அவன் அதிர்ந்து கன்னத்தை பற்றிக் கொண்டு மிரண்டு போய் அண்ணனை பார்த்தான்.
--
“பேசாதடா.. வாயை திறந்த உன்னை கொன்னே போட்டுடுவேன். அந்த அளவுக்கு உன் மேல கொலை வெறில இருக்கேன். என்ன காரியம்டா பண்ணி வச்சு இருக்க..” என்று கர்ஜித்தவனின் கோவம் எதற்கு என்று தெரியாமல் மொத்த குடும்பமும் தீத்திரள் தீரனை பயந்துப் போய் பார்த்தது.
“அண்ணா நீங்க அடிங்க ஆனா எதுக்குன்னு சொல்லிட்டு அடிங்க. எனக்கு ஒன்னும் புரியல” என்று கேட்ட தம்பியின் கன்னத்தில் இன்னொரு அரை விட்டவன்,
“என் ஸ்பெர்மை எடுத்து ஐவிஎப் மூலமா குழந்தை உருவாக்க நினைச்சியா?” கேட்டான்.
அண்ணன் விட்ட அறையில் ஒரு பக்க கன்னம் தீயாய் எரிய, அதை தடவி விட்டுக் கொண்டே பயத்துடன், “ஆமாண்ணா அம்மா தான் உங்க குழந்தையை பார்க்கணும்னு சொன்னங்க. அவங்க ஒரு வாய் சோறு கூட சாப்பிடாம அவங்களை ரொம்ப வருத்திக்கிட்டு இருந்தாங்க. உங்களை கண்சிடர் பண்ணலாம்னா நீங்க இறுதி தருவாயில இருந்தீங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியில. எங்களுக்கும் உங்க குழந்தையாவது எங்களோட இருக்கட்டுமேன்னு நினைச்சு தான் ஏற்பாடு செய்தோம். ஆனா உங்களை பிழைக்க வைக்க முடியும்னு வெளிநாட்டு டாக்டர் சொல்லவும் அந்த பிராஸசை கேன்சல் பண்ண சொல்லிட்டேன் அண்ணா” என்றான்.
“கிழிச்ச.. நீ ப்ராஸசை கேன்சல் பண்ணிட்டு வெளிநாட்டு வந்துட்ட, ஆனா அங்க ஐவிஎப் ப்ராசஸ் நடந்தே முடிஞ்சிடுச்சு..” என்றான் கோவமாக.
“அண்ணா” என்று ஒருபக்கம் வெற்றி அதிர, இன்னொரு பக்கம் தேவகியும் அதிர்ந்துப் போனார்.




