சிறிது நேரத்திலே தீரன் வந்து விட்டான் காரோடு. அதிரலிடம் ஒரு தலையசைப்புடன் விடை பெற்றுக் கொண்டான். தாராவும் தேவகியும் அப்படியே விடைபெற்றுக் கொள்ள, ஆளவந்தான் தான் வாய் திறந்து “போயிட்டு வரேன் ம்மா” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.
மகனின் அருகில் ஏறி அமர்ந்த ஆளவந்தான் அதிரலை பற்றி பேசிக் கொண்டே வந்தார்.
“அந்த பொண்ணு நம்ம ஆபிஸ்ல தான் வேலை பார்க்குதா தீரா” கேட்டார்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி. இப்போ இல்ல” என்றான்.
“ஏன்ப்பா என்ன ஆச்சு?” என்று அவர் கேட்க, தீரன் நடந்ததை சொல்ல,
“ரொம்ப நல்ல பொண்ணு தீரா.. அவளுக்கு இன்னொரு வாய்ப்பு குடுத்து பாரேன்” என்றார் இறைஞ்சலாக.
“ப்ச் அவ ரொம்ப ஓவரா போறாப்பா. அதோட இந்த விசயத்துல நீங்க தலையிடாதீங்க.. இது பிசினெஸ். எனக்கு கீழே இருக்க எம்ப்ளாயி என்னை பகைச்சுக்கிட்டா என்ன ஆகும்னு நான் காண்பிக்க வேண்டாமா?” கேட்டவனின் ஆணவம் கண்டு தேவகிக்கு அப்படி என்று இருந்தது. நல்லவேளை என் மகனுக்கு அந்த பெண் மீது எந்த சலனமும் இல்லை என்று உறுதி எடுத்துக் கொண்டார்.
ஆனால் அவர் மகனின் கண் முன் அதிரலின் மகன் மட்டுமே வந்து போவதை அறியவில்லை. காரணம் தீரனுக்குமே தெரியவில்லை. தனக்குமே குழந்தை மீது ஆசை வந்து விட்டதா என்று எண்ணினான்.
அதனால் அவன் ஒரு முடிவு எடுக்க அந்த முடிவு எதில் கொண்டு போய் நிறுத்தும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.
ஊட்டியில் வெக்கேஷனை முடித்து விட்டு தன் குடும்பத்தை சென்னைக்கு அனுப்பியவன் மிச்சம் மீதி இருந்த வேலைகளை முடித்து விட்டு இவனும் கொஞ்ச நாள் கழித்து சென்னைக்கு கிளம்பிவிட்டான்.
இடைப்பட்ட நாளில் ஆளவந்தான் அதிரலை விருந்துக்கு அழைக்க,
“இல்ல சார் நான் டெல்லி கிளம்புறேன். என் ஹஸ்பென்ட் அங்க வர சொல்லி சொல்லி இருக்காங்க.. சாரி சார் இன்னொரு நாள் வரேன்” என்று ஆளவந்தானிடம் சொல்லியவள் வீட்டிலே இருந்துக் கொண்டாள்.
அவரும் அதற்கு மேல் கம்பெல் பண்ணாமல் கிளம்பி சென்னைக்கு வந்து விட்டார்.
சென்னைக்கு வந்த தீரனுக்கோ கண்ணை மூடினாலே குட்டி தீரா தான் கண் முன் வந்தான். அம்மா சொல்வது போல எனக்கு குழந்தை ஆசை எடுத்து விட்டது போல சிரித்துக் கொண்டவன், தங்களுடைய மருத்துவமனைக்கு சென்றான்.
தன் உயிரணுவை சேர்த்து வைத்து இருப்பதால் ஒரு வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்தான்.
அதை குடும்பத்தில் உள்ள யாரிடமும் சொல்லவில்லை. நேராக மகப்பேறு மருத்துவரிடம் வந்து தன் உயிரணுவை பற்றி கேட்க, அவர் மிரண்டு விழித்தார். மூச்சே அடைத்துப் போனது அவருக்கு.
--
ஊட்டியில் இருந்து நேராக சென்னைக்கு வந்த தீத்திரள் தீரனுக்கு குட்டி தீராவின் நினைவாகவே இருந்தது. அதிரலின் முகம் அவ்வப்பொழுது வந்து போனாலும் அவ்வளுக்கு கணவன் இருக்கிறான் என்று அறிந்த உடனே நெஞ்சுக்குள் சின்ன சறுக்கல் விழுந்தது. ஆனாலும் குழந்தை என்று இருந்தால் அதற்கு தகப்பன் என்று ஒருவன் இருப்பான் தானே என்று தன்னை தேற்றிக் கொண்டவனுக்கு குட்டி தீராவின் நினைவு மட்டும் அகலவே இல்லை.
இடைவிடாத வேலை நேரத்தில் கூட அவனின் முகமும் மழலை மொழியும் பிக் மேன் என்று அவன் அழைக்கும் சொல் மட்டும் திரும்ப திரும்ப வந்துக் கொண்டே இருந்தது.
இது வேலைக்கு ஆகாது என்று தன் முதல் தங்கையின் குடும்பத்தை வரச்செய்து அவளின் பிள்ளைகளோடு நேரத்தை செலவிட்டான். ஆனாலும் குட்டி தீராவின் முகம் மறையவே மாட்டேன் என்று அடம் பிடித்தது மனம்.
அவன் கிட்ட அப்படி என்ன இருக்கு? என்று தன்னை தானே திட்டிக் கொண்ட தீரன் தங்கை பிள்ளைகளை கூட்டிக்கொண்டு என்றைக்கும் இல்லாத திருநாளாக வெளியே சென்றான்.
தேவகிக்கு நன்றாக புரிந்துப் போனது மகனின் மனது. “குழந்தைக்கு அவனின் மனம் ஏங்குகிறது. இந்த நேரம் திருமணத்தை பற்றி பேசலாம். சரியாக இருக்கும்” கணக்கு போட்டுக் கொண்டார் மகிழ்வுடன்.
ஆனால் தீத்திரள் தீரனோ தங்கையின் பிள்ளைகளை வெளியே அழைத்துச் சென்று அவர்களோடு நேரம் செலவு செய்ய மனம் என்னவோ ஓட்டவே மாட்டேன் என்று அடம் பிடித்தது. அவர்களை தூக்கக் கூட மனம் வரவில்லை.
குட்டி தீராவை எப்படி அவ்வளவு இலகுவாக தூக்கினானோ அதற்கு எதிர் பதமாய் அவனின் மனம் வரவே இல்லை மற்ற பிள்ளைகளை தூக்க.
பிள்ளைகள் மாமா மாமா என்று உயிரை விட்டது. ஆனால் இவனால் அவ்வளவு இலகுவாக பேசவே முடியவில்லை அவர்களோடு.
“இதென்ன வம்பா போச்சு” தலையை பிடித்துக் கொண்டவன், குழந்தைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்தவன் தன் அறையில் அடைந்துக் கொண்டான்.
“தீரா ஏன்டா இப்படி இம்சை பண்ற.. உன்னை தூக்கி வச்சுக்கிட்ட மாதிரி வேற யாரையும் என்னால தூக்கி வச்சுக்க முடியலடா. உன்கிட்ட பேசுன மாதிரி வேற யார்கிட்டயும் பேச முடியல.. என் பேரை உனக்கு வச்சதுனால உன் மேல எனக்கு தனி பிரியமா இல்ல இய்லபாவே உன் மேல எனக்கு பிரியமான்னு புரியலடா படவா” புலம்பியவனுக்கு,
“ஒரு வேளை என் பிள்ளையை மனசு எதிர் பார்க்குதோ.. அதனால தான் என்னால எதையும் பீல் பண்ண முடியலையோ” என்று யோசித்தவனுக்கு கொஞ்ச வருடங்களுக்கு முன்பு அவனின் உயிரணுவை சேகரித்து வைத்தது நினைவுக்கு வர, அதை வைத்து ஏன் நான் பிள்ளை பெற்றுக் கொள்ள கூடாது என்று யோசனை வந்தது.
“தட்ஸ் கிரேட் ஐடியா..” எண்ணிக் கொண்டவன் அடுத்த நாள் காலையில் தன் மருத்துவமனைக்கு சென்றான்.
தன் அறையில் அமர்ந்தவன், மகப்பேறு மருத்துவரை வரச்சொல்லி சொல்ல, அவரும் வந்தார் பதட்டத்தோடு.
“குட்மார்னிங் சார்” என்று விஷ் பண்ண,
“ம்ம்” என்று தலையை ஆட்டியவன், அவரின் வயதுக்கு மரியாதை குடுத்து அமரச் சொன்னான்.
“கூப்பிட்டீங்க சார்” என்று அவரே ஆரம்பிக்க,
“ஒரு முக்கியமான விசயம் பேச தான் உங்களை வரச்சொன்னேன்” என்று சொன்ன தீரன்,
“கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி என் ஸ்பாமை எடுத்து வச்சு இருந்தேன். அது உங்களுக்கு தெரிந்து இருக்கும்” என்று அவரை பார்த்தான்.
“ஆமாம் சார்” என்ற பொழுதே அவருக்கு வியர்த்து விட்டது.
“அதை வைத்து வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்கிறேன்” என்றான். அதை கேட்ட மருத்துவருக்கு தலையில் இடி விழுந்தது போல ஆனார்.
“சார்” என்று அதிர்ந்து போய் இருக்கையில் இருந்து எழுந்து நின்று விட்டார் அவர்.




