Notifications
Clear all

அத்தியாயம் 13

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவளை மழை துளி தொட்ட இடமெல்லாம் அவனும் தொட்டு தீண்ட வேண்டும் என்று ஆசை பிறக்க அதை செயல் படுத்த முனைந்தவனின் தொடுகையில் பட்டென்று கண்களை திறந்தவள், வேகமாய் அவனிடமிருந்து விலகி, அவனை நீருக்குள் தள்ளிவிட்டவள், நடை படியில் ஏறி வீட்டிற்க்குள் புகுந்து தன் அறைக்குள் சென்று கதவை அடைத்து அதன் மீது சாய்ந்துக்கொண்டாள்...

வேகமாய் வந்ததில் அவளது மார்பு மூச்சுக் காற்றிர்க்காக ஏறி இறங்கியது... களைந்த தோற்றத்தில் இருந்தவளை காணும் போது கோவில் சிலையின் உடைகள் ஆங்காங்கே நெகிழ்ந்து கூடல் முடித்து வந்தால் எப்படி இருக்குமோ அது போல இருந்தாள் மயூ...

அவளை பின் தொடர்ந்து வந்தவன், இதழ்களில் சின்ன புன்னகையுடன் தன்னை தானே தட்டிக்கொண்டவன், அவனது அறைக்கு சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்து மயூவின் கதவை தட்டினான்.

கதவு திறந்துக்கொண்டது... உள்ளே நுழைந்தவன் அவளை தேடினான்...

அப்பொழுது தான் அவள் தன் உடைகளை அணிந்துக்கொண்டு இருந்தாள்.. சோலியில் உள்ள கயிறை எட்டி முடி போட்டுக்கொண்டு இருந்தாள்.

மிக மெலிதானா நெட் வைத்த லாங் ஸ்கட்டும், கையில்லா ரவிக்கையும், கழுத்து பகுதி நன்றாக கீழிறங்கி முன் பக்கமும் பின் பக்கமும் அவளது வனப்பை காட்டிக்கொண்டு இருந்தது.. இருபக்கமும் தொங்கிக்கொண்டு இருந்த கயிறை எட்டி பிடித்து போட முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தவளின் அருகே சென்றவன்

கயிறை தன் கையில் வாங்கிக்கொண்டு தன் முகத்தை அவளின் முதுகில் பதித்து முத்தமிட்டவனின் கைகள் அங்கிருந்து கீழிறங்கி மின்னல் போல தெரிந்துக்கொண்டு இருந்த அவளது இடையின் அழகை சோதித்து பார்க்க...

“ஆதி...” மிக மெலிதாய் அவனை கலைத்தாள்..

“ம்ம்ம்...” என்றவனோ கண்களை மூடி அவளது மென்மையான இடையை வருடி கொடுத்து, நேர் மாறாய் கொத்தாய் பற்றிக்கொண்டான்..

அதில் உடல் சிலிர்த்து போனாள்.

“ஆதி...” என்றவளாள் அவனை கலைக்க முடியாமல் திணறி போனாள்.

“பசிக்கிது ஆதி... இன்னும் சாப்பிடல...” மெல்ல முனகியவளின் குரலில் உணர்வுக்கு வந்தவன் வேகமாய் அவளை தன் புறம் திருப்பி..

“நீ சாப்பிட்டு இருப்பன்னு நினைச்சேன்...” என்றான் நக்கலாக... அது வரை இருந்த மாய திரை மறைய ஆதியின் கோவ முகம் வெளிவந்தது.

“நீங்க சாப்பிடாம நான் என்னைக்கு சாப்பிட்டு இருக்கேன்...” என்று எண்ணியவள்,

“சாப்பாடு எடுத்து வைக்கவா...?” கேள்வியுடன் அவனை பார்த்தாள்.

அவள் வருவாள் என்று அறிந்து தானே அவன் இந்த இடத்திற்கு வந்தான்... வந்த உடனே அவனது ஹோட்டலுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டான். அதும் வந்துவிட... அதை தான் கேட்டாள் மயூ..

அவனை பற்றி முழுவதும் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும் தான். ஆனால் அதை கூட இருந்து வாழ்ந்து அனுபவிக்க முடியாமல் செய்தவளை காணும் ஒவ்வொரு முறையும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத கோவம் எழுந்தது. தன்னை மொத்தமாக யாரோ ஒருத்திக்கு தூக்கி குடுக்க எப்படி இவளுக்கு மனம் வந்தது என்று ஆத்தாத்து போனான்.

அதை அவளிடம் முழுவதுமாக கூட காண்பிக்க முடியாமல் பல நேரம் தன்னை தானே வருத்திக்கொண்டும் இருக்கிறான்.

ஆதியை பொறுத்தவரை அவனுடைய வாழ்வில் மயூவுக்கு மட்டும் தான் அவ்வளவு முக்கியத்துவம் தருவான். அலுவலகம், குடும்பம், படிப்பு, ஸ்போட்ஸ் இது எல்லாமே மயூவுக்கு பின் தான்.

அப்படி தான் இப்பொழுது வரை அவன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். அந்த அழகான வாழ்க்கையை கலைக்க தான் மயூ முயன்றுக்கொண்டு இருக்கிறாள்.

அவன் ஆசை பட்ட கனவு வாழ்க்கையே கை வசமிருக்கும் போது, அதை களவாடிக்கொண்டு மனம் ஒப்பாத ஒரு வாழ்க்கையை திணிக்க நினைக்கிறாள் மனம் கவர்ந்தவளே...

காதலியே காதலை உதறி தன் மனம் கவர்ந்தவனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்க்கிறாள் என்றால் அதை எந்த காதலனால் தான் தாங்கிக்கொள்ள முடியும்..

மயூவின் ஒவ்வொரு செயலிலும் சிதைந்துக்கொண்டு இருக்கிறான் ஆதி... மறுக்க முடியாத இடத்தில் வைத்து ஆதியிடம் சம்மதம் வாங்கியவள், அதன் பின் ரஞ்சனியை பேசி முடிக்க சொல்லி கேசவனையும் சீதாவையும் பணித்து அந்த வேலையை வெற்றி கரமாக முடித்தாள்.

கேசவனுக்கு மயூவும் ஆதியும் காதலிப்பது தெரியாது. ஆனால் சீதாவுக்கு எல்லாமே அத்து படி.. அதனால் தான் இந்த கல்யாணத்தை நிறுத்த மயூவிடம் போராடிக்கொண்டு இருக்கிறார்.

எல்லாவற்றையும் எண்ணி பார்த்தவனுக்கு மயூவின் செயல் மீது ஆத்திரமே மிஞ்சியது... இவ்வளவு நேரம் இருந்த இதம் காணாமல் போய் தனது மகிழ்வை கொல்ல வந்த எதிரியை போலவே பார்த்தான் மயூவை..

“அதுல அப்படியே விஷத்தையும் சேர்த்து பிசைந்து குடு.. ஒரேடியா போய்டுறேன்..” என்றான் சீறலாய்..

அவனது வார்த்தையிலிருந்து உதிர்ந்த வன்மத்தை கண்டு மனம் நொந்து போனவள் கேவல் வெடிக்க, வேகமாய் அவ்விடம் விட்டு விலகி குறுங்கண்ணோரம் சென்று நின்றாள்.

மனம் கவர்ந்தவனின் வாயிலிருந்து கேட்க கூடாதா வார்த்தைகள் எல்லாம் கேட்டுக்குக்கொண்டு இருக்கும் பெண்ணவளின் மனம் நைந்து நொந்து போனது.

அவளுக்கு மட்டும் இதெல்லாம் நடக்கணும்னு ஆசையா...? விதி அவளை செலுத்துகிறது... நூல் பொம்மையாய் இருக்க வேண்டிய நிலை...

இதில் யாரை சொல்லி நோவது... நடக்கும் செயல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் அவளும் இருக்கிறாள்...

விழிகளில் வலிந்த கண்ணீரை துடைக்க கூட இயலாமல் சுவரில் சாய்ந்து நின்றவள்... ஆதி தன்னிடம் கொஞ்சி பேசிய நிகழ்வுகளை நினைத்து பார்த்தாள்.

அவளுக்கு விவரம் தெரிந்த வரையில் ஆதி கொஞ்சியோ கெஞ்சியோ அவளிடம் நின்றது இல்லை... அவனுக்கு என்ன வேண்டுமோ அதை தான் அவளிடம் நடத்திக்கொள்ளுவான்... அவளுக்கு ஒரு உணர்வு இருக்கும் என்று இதுவரை எண்ணியது கிடையாது...

ஆனால் அவளுக்கும் சேர்த்து அவனே யோசிப்பதால் அவளுக்கு அது பெரிய விசயமாக இருந்ததே கிடையாது. ஏனெனில் அவனது உலகம் முழுவதும் அவள் தான்.. அவள் மட்டும் தான். அதனால் அது இன்று வரையிலும் கருத்தில் கூட பதிந்தது இல்லை...

இருவரையும் இருவரும் பிரித்து பார்த்ததே கிடையாது... ஆதி என்றால் மயூ.. மயூ என்றால் ஆதி... தேவனுக்கு ஏற்ற தேவி... தேவிக்கு ஏற்ற தேவன்...

குறை சொல்லவே முடியாத அளவுக்கு இருவரும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து அவ்வளவு பொருத்தமாய் இருப்பார்கள் காண்பவர்களின் கண்களுக்கு...

உருவ பொருத்தமே காண்பவர்களை கவர்ந்துவிடும்... இதில் இருவருக்கும் இடையில் இருக்கும் சித்த பொருத்தத்தை கண்டால், காணும் கண்கள் முழுவதும் இவர்களிடம் தான் இருக்கும்.. இவர்களை விட்டு விலகி வேறு ஒரு கருத்தை பதிவு செய்யாது.

அந்த அளவு இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி இருக்கும்...

ஆதியின் கொஞ்சல் மொழிகளை அவள் கேட்டதே இல்லை. ஏன் அவளிடம் எதற்கும் கெஞ்சியது கூட கிடையாது... ஆனால் இருவரிடமும் கொள்ளை காதல் கொட்டி கிடக்கிறது...

ஆதியின் முரட்டு தனமான காதலை தான் மயூ இன்று வரையிலும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறாள். ஆதியின் தேடலிலே அவளது மனம் நிறைந்து விடும்...

இதோ இப்பொழுது கூட தன்னை தேடி தவிப்பவனின் காதலை உணர்வு பூர்வமாக உணர்ந்தவள் அவனை விலக்கிவிட்டு செல்ல முடியாமல் தான் அவன் முன்பு ஆயுதம் இல்லாதவளாய் நின்றுக்கொண்டு இருக்கிறாள். இது இவளது காதல்...

Loading spinner

Quote
Topic starter Posted : September 26, 2026 10:13 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top