Notifications
Clear all

அத்தியாயம் 25

 
Admin
(@ramya-devi)
Member Admin

காரில் ஏறிப்போனவனை கடுப்புடன் பார்த்த வேரலுக்கு புன்னகை முகமாக கையை ஆட்டினான் சாம்..

சட்டென்று தன் முகத்தில் புன்னகையை கொண்டு வந்து நிறுத்தியவள்,

“எல்லாம் உனக்காக தான் கண்ணா” என்று அவனை பார்த்து நேசமாக சிரித்து கையை ஆட்டினாள்.

“போதும்டா” கங்குவன் பல்லைக் கடித்தான்.

அதில் தகப்பனை ஒரு முறை முறைத்து விட்டு வேரல் பக்கம் திரும்பி தன்னுடைய எல்லா பற்களையும் காட்டி சிரித்து பறக்கும் முத்தத்தை வேறு அவன் கொடுக்க, கங்குவன் காதில் அதிக அளவு புகை வந்தது.

அவன் காண்டவதை பார்த்த வேரலுக்கு,

“நல்லா வேணும்” என்று கறுவியவள்,

“பாய்டா கண்ணா.. மத்தியம் பார்க்கலாம்..” என்று கையை ஆட்டி விட்டு கிளம்பி விட்டாள்.

“எங்கடா போறீங்க மத்தியம்” மகனை உலுக்கினான்.

“தெய்யாது” ஒரே நிலையில் நின்று விட்டான் அவனின் மகன்.

“அழுத்தம் அழுத்தம்.. அப்படியே டிட்டோவா என்னை கொண்டு பிறந்து இருக்கான்.. புள்ளையாடா நீயெல்லாம்.. என் கழுத்தை சுத்தின பாம்பு நீ” என்று மகனுக்கும் மண்டக படி விழுந்தது.

ஆனால் மகன் எதையும் சட்டை செய்யாமல் சிரித்துக் கொண்டே வந்தான்.

“ஏன்டா நான் இங்க இவ்வளவு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடா எதையோ கேட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க.. காதுல என்ன ப்ளூடூத்” ஒரு காதில் இருப்பதை பிடுங்கி தன் காதில் வைத்து கேட்க, அங்கே ஒலித்தது என்னவோ வேரலின் குரல் தான்.

அதை கேட்டு இன்னும் கடுப்பானவன் வேகமாய் தன் காதில் இருந்த டிவைசை தூக்கி கீழே போட்டு ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

“எங்க போனாலும் சுத்தி சுத்தி வர்றா.. என்னை சாவடிக்கிரா” வாய் விட்டு புலம்பியவனை புரியாமல் திரும்பி பார்த்தான் அவனின் மகன்.

“இங்க என்னடா பார்வை.. இனி அந்த பிசாசு கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருடா.. அவள்ளாம் பொண்ணே இல்லை.. ராட்ச்சசி..”

“ஹாங்” என்று பிள்ளை விழிக்க,

“உன்கிட்ட போய் சொல்றேன் பாரு. நீ அவளுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ” அதற்கும் எரிந்து விழுந்தவன் வீட்டில் போய் பிள்ளையை இறக்கி விட்டுட்டு கிளம்பி ஸ்கூலுக்கு போய் விட்டான்.

ஸ்கூலில் வேலையே ஓடவில்லை. எந்த கிளாசா இருக்கும் என்று ஒரே யோசனை. வேரலிடமே போன் பண்ணி கேட்கலாம் என்று ஒரு மனம் எண்ணினாலும் இன்னொரு மனம் தடுத்து விட்டது.

“நான் இறங்கிப் போனா இன்னும் தலை மேல ஏறி உட்கார்ந்துக்குவா..” எண்ணியவன் தன் வீடு இருக்கும் முக்கில் வண்டியை நிறுத்தி விட்டு காத்திருந்தான்.

வேரல் தன்னுடைய காரில் வந்து பிள்ளையை அழைத்துக் கொண்டு அடுத்த வகுப்புக்கு சென்றாள்.

அது பெயிண்டிங் கிளாஸ்.. இருவரும் உள்ளே நுழைய அவர்களுக்கே தெரியாமல் இவனும் உள்ளே நுழைந்தான்.

வகுப்பு எடுப்பவரிடம் எல்லா தகவல்களையும் உரிய முறையில் கேட்டு தெரிந்துக் கொண்டவள், சாமுடன் இவளும் இணைந்து பெயிண்டிங் வகுப்பை கவனித்தாள்.

க்ரையான்ஸ் குடுத்து முதலில் பழக விட்டார்கள். பிள்ளைகளுக்கு எடுத்த உடனே ஆர்வத்தை ஊட்டவே இந்த முறை. அதன் பிறகு பென்சில் ட்ராயிங் என ஓவியத்தின் ஒவ்வொரு பரிமாணமும் விரியும் என்று சொல்லி முதல் அடியை பழகி விட்டார்கள்.

ஆர்வத்துடன் அதை பிள்ளை பழகிக் கொள்ள வேரலுக்குள் இதம் பரவியது. அவனின் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தவள், அவனுக்கு இணையாக தானும் ஓவியத்திலும் வண்ணத்திலும் ஈடுபட்டாள்.

இருவரையும் மௌனமாக வெளியே இருந்து சன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்த கங்குவனின் போன் அழைத்தது.

“என்னடா எங்க இருக்க..?” இளந்திரையன் தான் அழைத்து இருந்தான்.

“ம்ம்ம் உன் தங்கச்சிக்கு செக்கியூரிட்டு கார்ட் வேலை பார்த்துட்டு இருக்கேன்”

“பார்ரா புது கம்பெனி ஸ்டார்ட் பண்ணி இருக்கியா? சொல்லவே இல்லடா” அவன் வாரினான்.

“வந்தேன்னு வை போலீஸ்னு கூட பார்க்க மாட்டேன். வாயை உடைச்சுடுவேன்டா”

“ஆஹாங்.. எங்க மேல கை வச்சு பாரு.. என் பிரெண்டு கங்குவன் கிட்ட சொல்லி உன் கையை காலை முறிச்சு போட்டுடுவேன்டா பட்டர் மண்டையா”

“ப்ச்” என்று சலித்தவன்,

“உன் தங்கச்சி வேண்டாத வேலை பார்த்துக்கிட்டு இருக்காடா”

அதுவரை இலகுவாக பேசிக்கொண்டு இருந்த திரையன்,

“அப்படி சொல்லாதடா.. வேரல் எது பண்ணாலும் அது சரியா தான் இருக்கும். உன் மகனை என்கேஜூடா வச்சுக்க என்ன பண்றதுன்னு நைட் எல்லாம் யோசிச்சு இருப்பா போல.. அது தான் விடிய விடிய சேர்ச் பண்ணி எல்லா வகுப்புலையும் சேர்த்து விட்டு இருக்கா..”

“ப்ச் புரியுதுடா” என்றவனின் குரல் உள்ளே சென்றது.

“என்னடா?” அவன் எதையோ போட்டு மறுகிறான் என்று புரிந்தது.

“எனக்கு ஏன்டா இதெல்லாம் தெரியாம போயிடுச்சு.. அப்போ நான் சரியான அப்பன் இல்லையாடா. நான் கடமைக்கு தான் என் பிள்ளையை பார்த்துக்குறனா? எனக்கு அப்பா ஆகுற தகுதியே இல்லையா.. என் பிள்ளையை நானே கேடுக்குறனா? அவனுக்கு ஒரு நல்லதை கூட நான் செய்யலடா மச்சான்” என்று கலங்கிப் போய் ஒலித்தது கங்குவனின் குரல்.

“மச்சான் என்னடா.. இப்படி போய் கலங்கி நிக்கிற” என்றவனுக்கு வேலையே ஓடவில்லை. ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பி கங்குவன் இருக்கும் இடத்துக்கு வந்து விட்டான்.

“நீ எங்கடா இங்க.. வேலையை விட்டுட்டு வந்துட்டியா?” கங்குவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சின்ன துயரத்துக்கு இவ்வளவு தூரம் வர வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால் இவன் வருகிறான் எனில் தன் மீது எவ்வளவு நட்பு கொண்டு இருப்பான் என்று வியந்துப் போனவன், அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டான்.

“ப்பா மூச்சு முட்டுதுடா” என்றவனும் திரையனின் முரட்டு தனமான அணைப்பில் அடங்கி தான் இருந்தான். எல்லாம் சில கணங்கள் தான். அடுத்த நிமிடம் அவனுக்கு போட்டியாக இவனும் இறுக்கி கட்டிப் பிடிக்க, அவர்களின் லூட்டி தொடங்கியது.

“இங்க என்ன நடக்குது” என்றபடி வெளியே வந்தாள் வேரல்.

“என்ன நடந்தா உனக்கு என்ன?” கங்குவன் தான் எதிர் கேள்வி கேட்டான்.

“அய்ய ரொம்ப தான்” என்றவள் பிள்ளையாய தூக்கிக் கொண்டு வெளியே போகப் பார்க்க,

“ப்ச் அவனை என்கிட்டே குடுடி” வலுக்காட்டாயமாக அவளிடம் இருந்த்து பிள்ளையை வாங்கிக்கொண்டவன், இருவரையும் நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான்.

வேரல் வெளியே எட்டி மழை வருகிறதா என்று வானத்தை பார்த்தாள்.

“உன் தங்கச்சியை சும்மா இருக்க சொல்லுடா... ரொம்ப பண்றா” கடுப்படித்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 23, 2026 9:53 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top