அவளின் விரல்கள் மெல்லிய நடுக்கத்துடன் கணினியில் நடனம் ஆடுவதை பார்த்தான். அந்த நீள் விரல்களில் அணிந்து இருந்த தங்க மோதிரம் அவளின் விரல்களுக்கு கிரீடம் வைத்தது போல அழகாக இருந்தது. அதோடு அந்த டிசைன் அவனை வெகுவாக ஈர்த்தது.
ஒரு பெரிய மரத்தின் அடியியில், புடவை கட்டிய ஒரு பெண் மடியில் ஒரு குழந்தை அமர்த்திக் கொண்டு குழந்தையை விளையாட விட்டுக் கொண்டு இருப்பது போல அந்த மோதிரம் இருந்தது. நேர்த்தியான டிசைன்.. பெண்ணின் முகத்தில் வழிந்து இருந்த வாஞ்சை நன்றாகவே தெரிந்தது.
அவனால் அந்த மோதிரத்தில் இருந்து பார்வையயை சிறிது நேரம் வரை விலக்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்த மோதிரத்தில் இருந்து மெல்ல அவனின் பார்வை அவளின் கைக்கு சென்றது.
கையில் அணிந்து இருந்த ப்ரேஸ்லெட்டும் அவனின் கவனத்தை ஈர்த்தது. அதில் சின்னதாய் ஒரு கொடி ஓட, இலைகளும் பூக்களும் மலர்ந்து இருந்தது. அதன் இடையில் ஒரு பெயர் பின்னி பிணைந்து இருந்தது. அந்த பெயரை கூர்ந்துப் பார்த்தான்.
அதிதீரா என்று இருந்தது. புருவம் சுறுக்கி அந்த பெயரை மீண்டும் மீண்டும் படித்தான். படித்த உடனே ஏனோ எரிச்சல் மண்டியது.
அதை விடுத்து அவளின் மீது பார்வையை ஓட்டினான். அவனது கண்ட்ரோலையும் மீறி அவளின் மீது பார்வை ஓடியது. கட்டி இருந்த கருப்பு நிற காட்டேன் புடவை அவளுக்கு மிகவும் பொருந்தி இருந்தது. ஊட்டியில் எல்லோரும் ஸ்வெட்டர் அணிந்து இருப்பார்கள். ஆனால் இவள் அதெல்லாம் அணியவில்லை.
அதனால் அவள் அணிந்து இருந்த சேலையின் வனப்பு அவனின் விழிகளுக்கு நன்கு புலனானது. யாரையும் இதுவரை கூர்ந்து பார்க்காத அவனது விழிகள் ஏகத்துக்கும் அவளை அளந்து ஆராய்ந்துப் பார்த்தது.
அவனின் விழி பார்வையில் இவளுக்கு இன்னும் நடுக்கம் அதிகமானது.
‘என்ன இவரு இப்படி பார்க்கிறாரு.. இதுக்கு முன்னாடி பெண்களை பார்த்ததே இல்லையா?’ நெஞ்சுக்குள் புழுங்கிப் போனாள்.
ஆனால் அவனின் பார்வை மொத்தமும் அவளின் மீது தான் இருந்தது. அவளின் வனப்பில் அவனின் பார்வை சில நொடிகள் தேங்கி நின்றது. கழுத்தை ஆராய்ந்து விட்டு மீண்டும் அவளின் நெஞ்சில் பார்வையை நிலைக் கொண்டவனுக்குள் ஆராய்ச்சி அதிகமானது.
பிள்ளை பெற்றவளின் வனப்பு எப்படி இருக்குமோ அப்படி இருந்தாள்.. ஆனால் கழுத்தில் தாலி இல்லையே.. அதனால மீண்டும் அவனின் பார்வை கழுத்தை ஆராய்ந்து விட்டு அவளின் மார்புக்கு வந்தது. அவனின் இடைவிடாத பார்வையில் அதிரலுக்கு அவஸ்த்தையாய் போக,
“சார் முடிச்சுட்டேன்” என்று அவனின் கவனத்தை கலைத்தாள்.
“ம்ம்” என்றவன் சட்டென்று தன் பார்வையை அவளின் முகத்துக்கு கொண்டு வந்தான்.
“பினிஷ்டு சார்” என்றாள்.
“ம்ம்” என்றவன் அவள் டைப் பண்ணதை ஒரு முறை பார்த்தவன்,
“ஓகே” என்று சொல்லி அதை டெண்டர் விடும் கம்பெனி ஈமெயில் அட்ரஸ்க்கு அனுப்பி விட சொன்னான்.
அனுப்பியவள், “சார் இதுவும் நம்ம கம்பெனி, அதுவும் நம்ம கம்பெனி. ஆனா எதுக்காக டெண்டர் விட்டு அதை எதுக்கு நாமலே எடுக்கணும்” என்று புரியாமல் கேட்டவளை கூர்ந்துப் பார்த்தவன், சிறு எரிச்சலுடன்
“டெண்டர் எல்லாம் கண் துடைப்புக்காக நடத்துவது. கவர்மெண்டுக்கு கணக்கு காட்டனும். நானே பல ஊர்ல பல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சுக்கிட்டு வெளில வேற ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு டெண்டர் விட நான் என்ன லூசா. அப்படியே வெளில குடுக்கணும்னாலும் நம்ம கம்பெனியோடு சப் கம்பெனிக்கு தான் போகும். நாம் டீல் வச்சு இருக்குற கம்பெனிக்கு கூட அதை குடுக்க மாட்டேன்” என்றவனின் வியாபார தந்திரத்தை கண்டு கொண்டாள்.
அன்றைய நாள் அவனுடனே கழிந்தது. தங்கை இண்டெர்வியூவில் செலெக்ட் ஆனாளா இல்லையா என்று கூட தெரியவில்லை. போன் பேச தீரன் அனுமதிக்கவே இல்லை.
இவன் வந்தால் மட்டும் அதிரல் காலையில் சீக்கிரமாக அலுவலகம் வர வேண்டும். அதே போல ஊரே அடங்கிய பிறகு தான் வீட்டுக்கு போகணும். அந்த நேரம் மட்டும் நேத்திரா அதிரலின் பிள்ளையை பார்த்துக் கொள்வாள். மற்ற நேரம் என்றால் அதிரலே பார்த்துக் கொள்வாள்.
டையர்ட் ஆகி வந்த அக்காவுக்கு உணவு குடுத்து உபசரணை செய்தவளிடம்,
“இண்டெர்வியூ எப்படி போச்சுடி” கேட்டாள்.
“அக்கா இண்டெர்வியூல மூணு ரவுண்ட்ல செலக்ட் ஆகிட்டேன்.. அடுத்த வாரம் மெயின் இருக்கு. அதுல செலக்ட் னா அடுத்த மாசத்துல இருந்து வேலைக்கு வரலாம்னு சொல்லிட்டாங்க” மகிழ்ச்சியுடன் சொன்னவளை கட்டிக் கொண்டவள்,
“ரொம்ப மகிழ்ச்சி நேத்து.. உனக்கு ஒரு நல்லதை நடத்தி பாரத்துடனும்..” சொன்னவளின் கரங்கள் அவளின் மடியில் படுத்து இருந்த மகனை வருடி விட்டுக் கொண்டு இருந்தது.
பாதி தூக்கத்தில் இருந்தவனுக்கு அம்மாவின் குரல் கேட்க ஓடி வந்து அவளை கட்டிக் கொண்டான். அதிரளும் ஆசை தீர அவனை கொஞ்சி மடியில் போட்டு தட்டிக் கொடுத்தாள். அவனும் தூக்கத்தில் சொக்கிக் கொண்டு இருந்தான்.
அடுத்த நாள் காலை எல்க் மலையில் அமைத்து இருந்த முருகன் கோயிலில் “தீரா.. தீரா..” என்று குரல் கேட்க, தீத்திரள் தீரன் சட்டென்று பார்வையை சுழல விட்டான்.
“ஏன்டா இப்படி ஓடுற.. கீழ விழுந்துட்டா என்ன செய்வ தீரா?” அதட்டியபடி ஒரு பெண் வர, சத்தம் வந்த திசையை பார்த்து திரும்பினான் தீத்திரள் தீரன்.
அங்கே அதிரல் கீழே முட்டியில் அமர்ந்து அவளுக்கு எதிரில் நின்று இருந்த சிறுவனிடம் கண்களில் போலி கோவத்துடன் பேசிக் கொண்டு இருந்தாள்.
அந்த சிறுவனின் முதுகு மட்டுமே நெடியவனுக்கு தெரிந்தது.
--
புருவம் சுருக்கி அதிரலை பார்த்து நின்றான் சில நொடிகள் தீத்திரள் தீரன்.
“தீரா இங்க என்னப்பா பண்ற? அங்க வா ஆராதனைக்கு நேரமாச்சு” அவனின் அம்மா தேவகி அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்.
“ம்ம்ம்” என்றவன் திரும்பி ஒரு முறை அதிரலை பார்த்து விட்டு அவளுக்கு எதிரில் இருந்த குட்டி சிறுவனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அகன்றான்.
அப்பொழுதும் அந்த சிறுவனின் முகம் அவனுக்கு தெரியவில்லை. ஏனோ அவனின் முகத்தை பார்க்க இவனுக்கு ஒரு உந்துதல் வந்து இருந்தது.
அதை அடக்கிக் கொண்டு தாயுடன் சென்றான்.
தோளுக்கு மேல் ஹல்க் மாதிரி வளர்ந்து இருந்த மகனின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வரும் மனைவியை கண்டு ஆளவந்தானுக்கு சிரிப்பு வந்தது.
“இவன் பறந்து பறந்து உலகம் முழுக்க வியாபாரம் பண்ணிட்டு இருக்கான்.. பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் கண் பார்வையாலே கட்டி போடுறவன். அவன் பாடியை பாரு பத்து பேரு ஒரே நேரத்துல வந்தாலும் அசால்ட்டா அடிச்சு வீழ்த்திடுவான்ற அளவுக்கு இருக்கான். ஆனா இவளுக்கு அவ முந்தானையை பிடிச்சுக்கிட்டு சுத்தும் மூணு வயசு பையன்னு நினைப்பு.. விட்டா கூட்டத்துல தொலைஞ்சிதுவான்ற கணக்குல கையை பிடிச்சு கூட்டிட்டு வர்றா பாரு..” என்று சின்ன மகளிடம் கமென்ட் பண்ணிக்கொண்டு இருந்தார் ஆளவந்தான்.





