Notifications
Clear all

அத்தியாயம் 24

 
Admin
(@ramya-devi)
Member Admin

 

அடுத்த நாள் காலையில் எழுந்த கங்குவனுக்கு நேற்றைக்கு இருந்த சோகமும் வெறுமையும் சற்றே மட்டுப்பட்டு இருந்தது.

சோம்பல் முறித்துக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தான். மழை லேசாக தூறிக் கொண்டு இருந்தது.

மழை வாசம் அடிக்க, கண்களை மூடி ஆழ்ந்து அனுபவித்தவனின் காதுக்குள் வேரலின் குரல் கேட்டது.

“இந்த காலையில் இவ இங்க என்ன பண்றா?” யோசனையுடன் குரல் வந்த திசையை பார்த்தான். வேரல் அவனின் மகனை வயிற்றில் வைத்து மூக்கோடு மூக்குரசிக் கொண்டு இருந்தாள்.

அவளை தன் வீட்டில் பார்க்கவும் ஏனோ சொல்லறியாத கோவம் முணுக்கென்று முகிழ்த்தது.

“என் மகனை மயக்கவே அலையிறா” வார்த்தையை கடித்து துப்பியவன், விறுவிறுவென்று கீழே இறங்கி அவர்களிடம் வந்து நின்றான்.

அவ்வளவு வேகமாக அவன் வந்து நிற்பதை பார்த்து என்ன என்பது போல வேரல் அவனை பார்த்தாள்.

“இப்ப எதுக்காக என் வீட்டுக்கு வந்த?” எடுத்த உடனே ஏக கடுப்பில் கேட்டான். வந்தவர்களை வரவேற்க வேண்டாம். அட்லீஸ்ட் முகத்தில் அடிப்பது போல பேசாமலாவாது இருந்து இருக்கலாம்.

இவனுக்கு தான் வாயில் சனி நர்த்தனம் ஆடுகிறதே.. பிறகு அவன் பேசாமல் இருப்பானா..

அவனது இந்த பேச்சில் கோவம் வந்தாலும், சமரனை எண்ணி அமைதியாக போக முடிவெடுத்தவள்,

“உங்க வீட்டுக்குள்ள ஒன்னும் வரல சார்.. நான் ஜஸ்ட் கார்டன்ல தான் இருக்கேன்.. எனக்கும் தெரியும் ஒரு மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதருக்கு ஒரு சொல்.. எப்பவும் எந்த காரணத்தை கொண்டும் உங்க வீட்டுக்குள்ள நுழைய மாட்டேன்..” பதிலடி கொடுத்தவள்,

“நானும் சாமும் எவ்ரி மார்னிங் இனி யோகா கிளாஸ் போகலாம்னு இருக்கோம்.. அவனுக்கு ஓகே. உங்கக்கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது. ஜஸ்ட் இன்பார்ம் பண்ண தான் நானும் என் சாமும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. வர்ட்டா..” என்று பிள்ளையை  அவன் கண் முன்னாடியே தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.

“எவ்வளவு கொழுப்பு இவளுக்கு.. பெர்மிஷன் கேட்க மாட்டாளாம். ஜஸ்ட் இன்பார்மாம்” வாய்க்குள் முணகியவன், இளந்திரையனுக்கு போனை போட்டான்.

“ஏன்டா உன் தங்கச்சி எப்பவுமே இப்படி தானா? இல்ல இப்படி தான் எப்பவுமேவா?” பொரிந்தான்.

“ஹஹஹா...” என்று அந்த பக்கம் சிரித்த திரையன்,

“என்ன உன் கிட்ட பெர்மிஷன் கேட்காம சாமை தூக்கிட்டு யோகா கிளாஸ் போயிட்டாளா?” ஜாகிங் பண்ணிக்கொண்டே பேசினான்.

“ஆமாம்டா கடுப்பாகுது. சமரனுக்கு அப்பன்காரன் தானே நானு.. ர்ரோட்டுல போற எவனோ மாதிரி பட்டுதோ படலையோன்னு சொல்லிட்டு போறா உன் தங்கச்சி..”

“நீ கேட்க வேண்டியது தானேடா”

“எங்கடா கேக்க விட்டாங்க ரெண்டு பேரும்..”

“நீ கேட்காம விட்டது உன் தப்புடா..”

“விளக்கெண்ண மவனே”

“ம்கும் நீ ரொம்ப ஒழுங்கு.. போடா பட்டர் சன்”

“எங்க போய் தொலைஞ்சதுங்க ரெண்டும்”

“அட்ரஸ் தரேன் போய் பாரு”

“குடுத்து தொலை” அவனிடம் இருந்து லொக்கேஷனை வாங்கிக் கொண்டவன் இருவரும் போன இடத்துக்கு சென்றான்.

மிகப்பெரிய இடம். இடத்தை சுற்றி பெரிய புல்வெளி. நடுவில் ஒரு மண்டபம். அங்கே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அமைதியாக யோகா செய்துக் கொண்டு இருந்தார்கள்.

குரு ஒருவர் மூச்சு பயிற்சி பற்றி தெளிவாக விவரித்து சொல்லியபடி செய்தும் காட்டிக் கொண்டு இருந்தார்.

உடலை வளைக்கும் முறையையும் அவர் செய்துக் காட்டிக் கொண்டு இருந்தார். அதை  உள்வாங்கி வேரல் செய்துக் கொண்டு இருக்க, சமரனோ ஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான்.

உதவிக்கு சிலர் அங்கே பணியாற்றிக் கொண்டு இருக்க, அவர்களின் ஒருவர் அவனுக்கு ட்ரைனிங் குடுத்தார்கள். அவனும் ஈடு பாட்டுடன் செய்ய தொடங்கினான்.

அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தவனின் கால்கள் அவனையும் அறியாமல் யோகா சாலைக்குள் நுழைய,

“யார் சார் நீங்க?” என்று அவனை மடக்கிப் பிடித்து, முழு பீசையும் கட்ட வைத்த பிறகே உள்ளே அனுமதித்தார்கள்.

“இதென்னடா பகல் கொள்ளையா இருக்கு.. நான் வாங்குறதை விட அதிகமா கொள்ளை அடிக்கிறாய்ங்க.. இதெல்லாம் இவளுக்கு தெரியாது. என்னவோ நான் மட்டும் தான் உலகத்துலையே அதிக பீஸ் வாங்குற மாதிரி பேசுவா” வேரலை திட்டிக் கொண்டே மற்றவர்களுடன் போய் இவனும் அமர்ந்துக் கொண்டான்.

குரு சொல்ல சொல்ல எல்லோரும் செய்ய இவனும் செய்ய தொடங்கினான். செம்ம கடுப்பாக வந்தது. இது போல ஒரே இடத்தில் அடங்கி ஒடுங்கி உட்காரும் ரகம் இவன் இல்லையே.. காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு அல்லவா பறப்பான்.

இன்றைக்கு ஒரே இடத்தில் கட்டி வைத்தது போல கட்டி வைத்து விட்டாள் வேரல். அதற்கும் அவள் மீது தான் கோவம் பொங்கியது. என்னவோ அவனை வலுக்கட்டாயமாக அவளே கொண்டு வந்து சேர்த்து விட்டது போல கோவம் வந்தது அந்த எருமைக்கு.

மேற்கொண்டு அரை மணி நேரம் ஆகியது. கண்களை மூடி தியானத்தில் பத்து நிமிடம் இருக்க சொல்ல, எல்லோரும் இருந்தார்கள்.

ஆனால் அப்பனும் மவனும் மட்டும் சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். சமரன் முன் வரிசையில் இருக்க, வேரல் நடு வரிசையில் அமர்ந்து இருக்க, கங்குவன் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்தான்.

அதனால் யாரும் யாரையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் கங்குவனால் மட்டும் இருவரையும் பார்க்க முடிந்தது.

ஈடுபாட்டோடு வேரல் தியானத்தில் மூழ்குவதை கண்டு பெருமூச்சு விட்டவன், மகனை பார்க்க, அவன் திருட்டு முழியோடு அங்கும் இங்குமாய் தலையை திருப்பி பார்த்துக் கொண்டு இருந்தான்.

“அப்படியே என்னை மாதிரியே பண்றான்.. சேட்டை” முணுமுணுத்துக் கொண்டவன் கண்களை மூடி தியானத்தில் ஈடுபட முயற்சி செய்தான்.

வகுப்பு முடிய வேகமாய் வேரலிடம் ஓடினான் சமரன்.

“எப்படி கண்ணா இருந்தது. உனக்கு ஓகேயா?” தூக்கிக் கொண்டாள் அவனை.

“போர் அடிக்கிது” என்று சிணுங்கினான்.

“இந்த கிளாஸ் கரெக்டா பண்ணா அடுத்து இன்ரெஸ்ட்டா ஒரு கிளாஸ் கூட்டிட்டுப் போவேனாம்.. ஓகே” என்றவளை கழுத்தில் கையை போட்டு கட்டிக் கொண்டவன்,

“நேனாம்” என்றான் சிணுங்கி.

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுடா கண்ணா. என்னோட சாம் ரொம்ப குட் பாய் தானே..” செல்லம் கொஞ்சிக் கொண்டே மண்டபத்தை விட்டு வெளியே வர,

அவர்களை எதிர்நோக்கி நின்று இருந்தான் கங்குவன்.

“இங்க என்ன பண்றீங்க?” புருவம் சுருக்கி அவள் கேட்க, அவன் பதில் சொல்லாமல் அவளையும் அவளின் கையில் இருக்கும் மகனையும் முறைத்துப் பார்த்தான்.

தகப்பனின் பார்வையை கண்டு உதட்டை சுழித்து வேரலின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.

அப்படியே அவனின் தலையில் கொட்ட வேண்டும் போல வந்தது கங்குவனுக்கு.

“அப்பன்காரன் நான் இருக்கேன் என் கூட ஒட்டுறானா பாரேன். அவ யாருடா உனக்கு.. அவளை முன்ன பின்ன பார்த்து இருக்கியா? இதுக்கு முன்னாடி அவளை பார்த்து இருக்கியா? அவ எப்படி பட்டவன்னு எதாச்சும் தெரியுமா.. என்னவோ அவ தான் உன்னை வலிக்க பத்து மாதம் சுமந்து பெத்தவ மாதிரி அவ மடியில் ஏறி உட்க்கார்றது என்ன? மேல ஏறி விளையாடுறது என்ன? அவ தோள்ள சாஞ்சுக்குறது என்ன? அவ கழுத்துல முகத்தை வச்சு அழுத்திக்கிறது என்ன? அவ சேலை முந்தானையை பிடிச்சு வச்சுக்குறது என்ன? அவ மார்புல ...” என்னவோ ஒரு புலோவில் மனதுக்குள் எண்ணிக் கொண்டே வந்தவன் அந்த வார்த்தையில் திகைத்து தடுமாறிப் போய் விட்டான் கங்குவன்..

நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டவனுக்கு முதல் தடுமாற்றம் வந்தது.. “என்னடா பண்ணிட்டு இருக்க?” தனக்குள் கேள்விக் கொண்டு கடிந்துக் கொண்டவனை விசித்திரமாக பார்த்தார்கள் வேரலும் சமரும்.

“உங்க அப்பாவுக்கு என்ன கண்ணா ஆச்சு? நின்னுக்கிட்டே  தூங்குறாரு” அவளது பேச்சில் தன்னிலை அடைந்தவன், அவளை முறைத்துப் பார்த்தான்.

அந்த நேரம் ரிஷப்ஷனிஸ்ட் வந்து,

“சாரி சார், ரெசிப்ட் தர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. இந்தாங்க சார் உங்க அட்மிஷன் பீஸ் ரெசிப்ட்.. வாரத்துல எல்லா நாளும் கிளாஸ் நடக்கும். இன்னைக்கு அட்டென் பண்ண மாதிரி எல்லா கிளாசும் அட்டென் பண்ணிடுங்க. ஒரு நாள் ப்ரேக்.. தேவைப்பட்டா எடுத்துக்கலாம். இல்லன்னா அந்த ஒரு நாளும் நீங்க வரலாம். உங்க விருப்பம் தான்” என்று அந்த பெண் சொல்லிவிட்டு போக,

“இது எப்ப?” என்ற வேரலை முறைத்துப் பார்த்தவன்,

“இனி நானே அவனை கூட்டிட்டு வந்துக்குறேன். நீ ஒன்னும் எங்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம்” அவளின் மூக்கை உடைத்தான் கங்குவன்.

அவனை முறைத்துப் பார்த்த வேரல்,

“நீங்க ரொம்ப ஓவரா போறீங்க மிஸ்டர் கங்குவன்.. அதென்ன எப்ப பார்த்தாலும் என்னை தள்ளியே வச்சுக்கிட்டு இருக்கீங்க..?” கோவமாக கேட்டவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் அவள் கையில் இருந்த பிள்ளையை வாங்கிக்கொண்டு தன் காரில் ஏறி போய் விட்டான்.

வேரலுக்கு புசுபுசுவென்று அத்தனை கோவம் வந்தது.

 

Loading spinner

Quote
Topic starter Posted : September 22, 2026 2:44 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top