“நீங்க இப்படி கிண்டல் பண்றது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சா போதும்.. ஒரு மாசத்துக்கு பட்டினி தான் டாடி நீங்க.. நான் வேணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா? ஈசியா சந்நியாசம் கிடைக்க” என்று கமுக்கமாக சொன்ன மகளை முறைத்துப் பார்த்தவர்,
“டேடி மேல ரொம்ப தான் மகளுக்கு பாசம்” நொடித்துக் கொண்டார்.
“ரொம்ப ரொம்ப டேடி.. ஓவர் பிலோ ஆகுது. அது தான் மம்மிட்ட கொட்டி கவிழ்க்கலாம்னு பார்க்கிறேன்” என்றாள் நமட்டு சிரிப்புடன்.
“உன் பாசத்துல எனக்கு இப்பவே நெஞ்சை அடைச்சுக்கிட்டு வருது டாட்டர். அதனால உன் பாசத்தை கொஞ்சம் அடக்கியே வை. அப்பா பாடி தாங்காதுடா” என்றவர், மனைவி அருகில் வரவும்,
“உன் அம்மா வரா.. எதா இருந்தாலும் நாம ரெண்டு பேத்துக்குள்ளையே வச்சுக்கலாம். எட்டப்பனா மாறிடாத தாரா” கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
“சரி பொழைச்சு போங்க.. ஆனா இதுக்கு கண்டிப்பா எனக்கு ரிட்டேர்ன் கிப்ட் வேணும் டேடி” டீல் போட்டுக் கொண்டாள்.
“நேரம் பார்த்து சாதிச்கிக்குற தாரா. இட்ஸ் வெரி பேட் பிகேவியர்” நொந்துக் கொண்டார்.
“காற்று உள்ள பொழுதே தூத்திக்கணும் நீங்க தானே டேடி பழமொழி சொல்லி எல்லாம் வளர்த்தீங்க. அப்போ அனுபவிங்க” சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னவள்,
“திருட்டு முழி முழிக்கமா சாமி கும்பிடுங்க டேடி. அப்புறம் அம்மா கிட்ட இருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது” சிரித்து விட்டு சாமி கும்பிட ஆரம்பித்தாள். ஆளவந்தானும் வேறு வழியில்லாது சாமி கும்பிட ஆரம்பித்தார்.
“தீத்திரள் தீரன் பெயருக்கு அர்ச்சனை செய்ங்க” என்று பூஜை கூடையை நீட்டினார் தேவகி.
“ஏம்ப்பா நாமல்லாம் இந்த குடும்பத்துல பிறக்கலையா?” சந்தேகம் கேட்ட தாராவை பார்த்த ஆளவந்தான்,
“உன் அம்மா கிட்ட கேட்டு சொல்லவா” என்றார்.
“ப்ச் ரொம்ப தான்” என்று முணகியவள் சிரிப்புடன் அம்மா தன் அண்ணன் மீது வைத்து இருக்கும் பாசத்தை பார்த்து நின்றாள்.
“கஷ்ட்டமா இருக்காடா” ஏனோ தேவகி பிள்ளைகளிடம் பாராபட்ச்ச்சமாக இருப்பதை ஆளவந்தானால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனாலே மற்ற பிள்ளைகளை அவர் எப்பொழுதும் ஸ்பெஷலாக கவனிப்பார்.
“ப்பா அம்மாவை இன்னைக்கு நேத்திக்கா பார்க்கிறேன்.. நான் பிறந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன். அவங்களை மாத்தவே முடியாது. மாத்த நாங்க நினைச்சதும் இல்ல.. ஏன்னா எங்க அண்ணன் எங்களை அப்படி பார்த்துக்குறாரு” என்றாள் உண்மையான நேசத்தோடு.
அவளின் தலையை வாஞ்சையாக தடவி விட்டவர்,
“சாமி கும்பிடுடா” இறைவனை கை காட்டினார். குடும்பமாக நால்வரும் சாமி கும்பிட்டார்கள்.
அந்த நேரம், அவர்களின் எதிர் திசையில் நின்று கடவுளை வணங்கிக்கொண்டு இருந்த நேத்ராவின் இடுப்பில் இருந்த அதிரலின் மகன் அவளின் முகத்தை நிமிர்த்தி,
“ம்மு.. ம்மா காச்சு..” விழிகளால் தேடித் பார்த்து உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்து விட்டான் பொடியன்.
“அழதாடா செல்லம் அம்மா இப்ப வந்திடுவாங்க.. நாளைக்கு உனக்கு பிறந்த நாள் வருது இல்லையா? அதனால அம்மா பொங்கல் வச்சு சாமி கும்பிட கேட்க போய் இருக்காங்க. இப்போ வந்திடுவாங்க” சமாதனம் செய்தாள்.
“ல்ல.. ஈ பொய்யி சொல்லுற்ற” என்றவனின் கண்களில் கண்ணீர் தேங்கி விட,
“இல்ல செல்லம் அம்மா எங்கயும் போகல.. இதோ கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க.. நாம சாமி பார்க்கலாம்.. இங்க பாரு சாமி” என்று அவனை திசை திருப்ப பார்த்தாள். ஆனால் குட்டி தீரனோ அடங்குவேனா பார் என்று நின்றான்.
“ல்ல.. னா போய்ய்யி தேறேன்..” என்று அவளின் இடுப்பில் இருந்து நழுவி அவன் ஓடப் பார்க்க, நேத்ரா அவனை பிடிக்க வருவதற்குள் சில்வண்டாய் அவன் பறக்க,
பட்டென்று தீத்திரள் தீரன் அவனை பிடித்து தூக்கி விட்டான்.
தேவகியே அதிர்ந்து போய் விட்டார் அவன் அப்படி யாரோ ஒருத்தரின் பிள்ளையை தூக்குவதை கண்டு.
“தீரா” என்று அவனின் தோளை பிடித்தார் தேவகி.
“இல்லம்மா அங்க விளக்கு எல்லாம் எரியுது.. சுட்டுக்கிட்டா போச்சு” என்றான் விளக்கமாய்.
தேவகிக்கு இன்னும் அதிர்வாய் போனது மகன் முதன் முதலாக தன்னிலை விளக்கம் சொல்வதை கேட்டு. தங்கை பிள்ளையை கூட அவன் தூக்கியது கிடையாது. எட்ட நின்றே எல்லோரிடமும் பழகுவான். ஆனால் முதல் முறை யாரோ தெரியாத ஒரு சிறுவனை தூக்கி தோளில் வைத்து இருப்பதை கண்டு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“தேங்க்ஸ் சார்” என்று குழந்தைக்காக நேத்ரா கையை அவன்னிடம் நீட்ட,
“இட்ஸ் ஓகே.. உன்னால குழந்தையை மேனேஜ் பண்ண முடியலன்னா எதுக்கு தூக்கிட்டு வர்ற” நேத்ராவை அதட்டினான்.
“சார்” என்று அவள் அதிர்ந்துப் போனாள். அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. முன்ன பின்ன தெரியாத ஆளை இப்படி தான் இவர் பேசுவாரா என்று இருந்தது.
“ம்மா.. ம்மா” என்று அதுவரை துள்ளிக் கொண்டு இருந்த வாண்டோ, புதிதாய் தன்னை ஒருவர் தூக்கி வைத்து இருப்பதை பார்த்து கொஞ்சமும் மிரளாமல், “பிக் மேன்” என்றான்.
அதை கேட்டு சிரிப்பு வந்தது தீரனுக்கு. அதை யாருக்கும் காட்டாமல் அடர்ந்த மீசைக்கு அடியில் மறைத்துக் கொண்டவன்,
“சொல்லுங்க ஸ்மால் மேன்” என்றான் அவனுக்கு இணையாக.
“ஈ பேர் ன்னா” என்று தீத்திரள் தீரனின் முகத்தி அடர்ந்து இருந்த கற்றை மீசையை இழுத்து பிடித்துக் கேட்டான். அதோடு தன் முகத்தை தடவி பார்த்து
“ஏக்கு இல்ல” சந்தேகம் கேட்டான்.
“நீயும் என்னை மாதிரி பிக் மேனா வந்த பிறகு இது வரும்” என்று விளக்கம் குடுத்தான்.
“தாரா.. என்னை கொஞ்சம் பிடிச்சுக்கோயேன்” ஆளவந்தான் மகளிடம் அளப்பரையை கூட்டினார்.
“சும்மா இருங்கப்பா நீங்க வேற, அம்மாவே ஆடிப்போய் இருக்காங்க..” என்றவள்,
“ம்மா” என்று அதிர்ந்து போய் நின்றவரை கலைத்து விட்டாள்.
“ஹாங்” என்று அவர் விழிக்க, தாராவுக்கு பாவமாய் போனது அண்ணனின் புது அவதராத்தில் மிரண்டு போய் நின்று இருந்த தாயை காணுகையில்.
“அண்ணா வெளில போயிட்டாங்க” என்றாள்.
வேகமாய் மகன் போகும் திசையை பார்த்தார். அவனது கையில் அந்த குழந்தை அவ்வளவு பாந்தமாக பொருந்தி இருந்தான்.
“நம்ம மகனுக்கு சீக்கிரமா கல்யாணம் செய்யணும்ங்க” ஆளவந்தானிடம் தேவகி சொன்னார்.
“ம்ம் நீ தான் சல்லடை போட்டு சலிச்சுக்கிட்டு இருக்கியே.. சீக்கிரமா நல்லதா பார்த்து முடிவு பண்ணு தேவகி. அவனும் குடும்பம் குழந்தைன்னு வாழட்டும்” என்றார். தலையை ஆட்டியவர் மகனோடு பின்னே போக, அவரின் கையை தடுத்து நிறுத்தியவர்,
“முதல்ல நிம்மதியா சாமி கும்பிடு. அப்புறம் போய் மகனை பாரு” என்று நிறுத்தி விட்டார்.
வெளியே சின்ன வாண்டோடு வந்த தீரன்,
“எங்க உங்க அம்மா” என்று கேட்டான்.
“தெல்ல..” உதட்டை அழகாக பிதுக்கி காட்டினான் குட்டி.
“ம்மா.. ம்மா” என்று பிள்ளை சத்தம் குடுக்க, அவனது சின்ன குரல் மலைகளில் பட்டு மீண்டும் எதிரொலிக்க,
அவனின் குரலை கேட்டு அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்தாள் அதிரல்.
வந்தவளை ஒரு கணம் கூர்ந்துப் பார்த்துவிட்டு அடுத்த நொடி முறைத்தான் தீரன்.





